எங்களைப் பற்றி

காலம் எம்மை நிறையவும் பேச வைத்திருக்கிறது. மனிதர்களின் வனம் தொட்டு இயற்கையின் வனம் பற்றி ஏராளமாக பேசியிருக்கிறோம். இதன் தொடர்ச்சியிலிருந்துதான் வனம் பற்றிய உரையாடல் தொடரவிருக்கிறது. உரையாடல்களின் வழியாக நிமிர்ந்து கொண்ட உலகின் பன்முக தோற்றத்திலிருந்து படைப்பாக்கங்கள் தங்களுக்கான அடையாளங்களை நிறுத்தியிருக்கின்றன.

 படைப்புக்களும், அவை சார்ந்து எழுப்பப்படுகின்ற கேள்விகளும் வனத்தின் பெரும் இடைவினையினை செயற்பாட்டாளர்கள் மத்தியில் இயங்க உதவியிருக்கிறது என்பதை காலம் எமக்கு உணர்த்தியிருக்கிறது.

 காத்திரமான விடயங்களின் பக்கம் நகர்ந்து செல்வதும், அதன் தோற்றுவாயிலிருந்து உரையாடல்களை உருவாக்குவதும், கசிந்து செல்லும் நீரூற்றினை உடைத்து பெரும் ஆற்றினை உருவாக்கும் படைப்புக்களை வனம் தாங்க நினைக்கிறது.

வனம் என்பது உரையாடல்களின் வெளியாக மாத்திரமன்றி; உடைப்புக்களின் தொனியாகவும் இயங்கும் என செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இந்த நம்பிக்கையிலிருந்தே வனத்தின் புகுவதற்கு உங்களையும் சேர்த்துக் கொள்கிறோம்.

நன்றி.