தமிழில்- கணேஷ் வெங்கட்ராமன்

 

 

A Book

 

“He ate and drank the precious words,

His spirit grew robust;

He knew no more that he was poor,

Nor that his frame was dust.

He danced along the dingy days,

And this bequest of wings

Was but a book. What liberty

A loosened spirit brings!”

 

(XXI)

 

புத்தகம்

 

மதிப்பு வாய்ந்த சொற்களை தின்று குடித்துவிட்டான்

அவனின் ஆன்மவுணர்வு பெருக்கெடுத்து வளர்ந்தது

அதற்குப்பின், தான் ஏழை என்பதை மறந்துவிட்டான்

அவனின் தேகம் உடைந்துவிழுவது என்பதையும்

மங்கலான நாட்களை ஆடிக்கழிக்க முடிந்தது

பெற்ற இறக்கைகள் புத்தகமன்றி வேறில்லை

இறுக்கம் களைந்த ஆன்மா கொணரும்

சுதந்திரமே சுதந்திரம்!

 

***

 

“I had no time to hate, because

The grave would hinder me,

And life was not so ample I

Could finish enmity.

 

Nor had I time to love; but since

Some industry must be,

The little toil of love, I thought,

Was large enough for me.”

 

 

வெறுக்க நேரமில்லை என்னிடம், ஏனெனில்

கல்லறை என்னைத் தடுக்கும்

வாழ்க்கையும் மிதமிஞ்சியதாக இல்லை

என் பகையைத்  தீர்த்துக்கொள்ளுமளவிற்கு.

 

நேசிக்கவோ நேரமே போதவில்லை, ஆனால்

கொஞ்சம் மெனக்கெடல் அவசியமென்பதால்

அன்பிற்கான சிறு உழைப்பு மட்டும்

எனக்கு போதுமானதாய் இருந்தது என்றெண்ணினேன்

 

(XXII)

***

 

Unreturning

 

‘T was such a little, little boat

That toddled down the bay!

‘T was such a gallant, gallant sea

That beckoned it away!

 

‘T was such a greedy, greedy wave

That licked it from the coast;

Nor ever guessed the stately sails

My little craft was lost!”

 

(XXIII)

 

திரும்பாதிருத்தல்

 

குடாக்கரையில் தள்ளாடும்

இது மிக மிகச் சிறிய படகு

தள்ளிப்போகச் சைகை காட்டும்

அது மகத்தான பெருங்கடல்

 

கரையிலிருந்து தீண்டியது

பொறாமை மிகுந்த ஓர் அலை

கம்பீரமிக்க கப்பல்களாலும் கண்டுபிடிக்கவியலாமல்

தொலைந்துபோனது என் மரக்கலம்

 

(XXIII)

 

***

 

 

“Whether my bark went down at sea,

Whether she met with gales,

Whether to isles enchanted

She bent her docile sails;

 

By what mystic mooring

She is held to-day, —

This is the errand of the eye

Out upon the bay.”

 

(XXIV)

 

என் சிறு நாவாய் கடலில் இறங்கிச் சென்றது

அது புயலைச் சந்தித்ததா

அல்லது தனது பணிவான பாய்மரத்தை கீழிறக்கி

மயங்கவைக்கும் தீவுகளை அடைந்ததா

 

எத்தகைய புதிர்நங்கூரப் பிணைப்பில்

அது இன்று பூட்டப்பட்டிருக்கிறது,-

கண்கள் விடுக்கும் செய்தி இது

கடற்கரைக்கு அருகிருந்து

 

(XXIV)

***

 

“Belshazzar had a letter, —

He never had but one;

Belshazzar’s correspondent

Concluded and begun

In that immortal copy

The conscience of us all

Can read without its glasses

On revelation’s wall.”

 

(XXV)

 

பெல்ஷஸாரிடம் ஒரு கடிதம்

ஒரே ஒரு கடிதம்

பெல்ஷஸாரின் செய்தியாளர்

அந்த அழியாப் பிரதியில்

தொடங்கி முடித்த

அனைவரின் மனசாட்சியை

நம்மால் வாசிக்க முடியும்

அதன் கோப்பைகளில்லா

வெளிப்படுத்தும் சுவரில்

***

 

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிறான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

 

מנא מנא תקל ופרסין

Mede Mede Tekel Upharsin

“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

 

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

 

வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.

***

கணேஷ் வெங்கட்ராமன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *