அவள் பத்திரிகை நிருபர். ஒரு சிறப்பு செய்திக்காக போய் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு
பதினொன்றாகி இருந்தது. பிரதிபா வழக்கு மறு பரிசீலனைக்கு வந்த தருணம் அது. அவள்
டேப்பை அலுவலகத்தில் சேர்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப வேண்டும். கியாபில் அவள்
மற்றும் ஓட்டுனர் மட்டுமே. ‘என்ன செய்ய முடியும் மேடம், ட்ரைவர்கள் நாங்கள் வாரக்
கணக்காக வீட்டைவிட்டு வந்திருப்போம் நாங்களும் மனிதர்கள் தானே, எவ்வளவுதான்
பொறுத்துக் கொள்ளமுடியும்?’ என்று சொல்லிக்கொண்டே, அங்கே இருந்த வட்டத்தை
வேகமாகத் திரும்பிவிட்டான். அப்போதுதான் கேப் ட்ரைவரின் பக்கம் அவளுக்குக் கவனம்
போனது! அந்த இருட்டு, அந்தத் திருப்பம், அந்த வேகம், அந்த மனநிலை, அந்தப் பேச்சு,
அந்தத் தோரணை…..ஒரு நிமிடம் கதிகலங்கச் செய்தது. அவனுக்கு எந்த எதிர்வினையும்
செய்யாமல், மனதைத் திடப்படுத்திக்கொண்டு உட்கார்ந்த அவளுக்கு, அமைதியாக இருந்து,
அலுவலகம் போய் சேருவதுதான் அந்த நொடியின் அவசியமானது.
***
அவன் நேர்மையானவன், செயல்திறன் உள்ளவன் மற்றும் தகுதியுள்ள வேலைக்காரன். ஐந்து
ஆண்டுகள் அவன் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு வேலை செய்கிறான். ஒரு
வருடத்திற்கு முன்பு சேர்ந்த சக ஊழியர் ஒருவளுக்கு பதவி உயர்வு மற்றும் அவ்வப்போது
வெளிநாட்டுப் பயணம். சமீபத்தில் சேர்ந்த புது ஊழியனுக்கு அவனைவிட அதிக சம்பளம்.
பொறுக்க முடியாமல் மேலதிகாரியிடம் கேட்டபோது, மற்றொரு ஊருக்கு மாற்றல்!
***
இப்படியான பல நிகழ்வுகளுக்கு சமூக ஊடகங்களின் ஹேஷ் ட்யாக் பிரச்சாரம் மேலும்
உயிரூட்டி இருக்கிறது. பாலியல் வன்மத்திற்கு எதிராக கோடிக் கணக்கான மக்களை
விழிப்புறச்செய்து மற்றும் ஒரு தொடக்க நிலை சர்ச்சைக்கு வாய்ப்பை உருவாக்கிய நிலையில்
இது வரவேற்கத்தக்க ஒரு வளர்ச்சிதான்.
ஆனால், அநீதிக்கு எதிரான போராட்டம் இப்போது தொடங்கியது எதற்கு? அதுவும்
குறிப்பிட்ட வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்துவது போல? அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும்
வாய்ப்பு, சாமர்த்தியம் இருந்தவர்களே அமைதியாக இருந்து, இப்போது கூட்டத்தில்
கோவிந்தா என்பதைப்போல, எதற்கு குரல் கொடுக்கிறார்கள்? இது பிரச்சினையைக் குறித்து
கவனத்தை ஈர்க்கும் உண்மையான அக்கறையா அல்லது பிரச்சாரம் பெரும் தந்திரம் மட்டுமா?
மீ டூ கூக்குரல் இப்படிப் பல கேள்விகளை எழுப்பியது.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு செலெப்ரெட்டிகள் இதைப் பற்றிப் பேசுகிறார்கள்
என்றால், அங்கே ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாகத்தான் பொருள். சினிமா, தொலைகாட்சி,
அரசியல் ஊடகங்கள் போன்ற செல்வாக்குடைய துறைகளில் நுழையத் தகுதி, திறமை
மட்டுமே அளவுகோல் அல்ல என்ற உண்மை தெரிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நாம்
அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்றால் – ஒன்று மனசாட்சியை விற்கவேண்டும்
அல்லது, நிரந்தர சோதனைகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இறுதி முடிவாக

2

இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கு குரல் எழுப்ப வாய்ப்புண்டு. மற்றபடி
என்ன செய்தாலும் அது கேவலம் பிரச்சாரத் தந்திரம் மற்றும் தன் இருப்பைக்
தக்கவைத்துக்கொள்ள செய்வதற்கான வெற்றுச் சாகசம் என்று சொல்லவேண்டும்.
***
பாலியல் வன்மம் மட்டுமே வன்மம் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதி மட்டுமே அநீதி
என்பதைத்தான் தொலைகாட்சிக் கலந்துரையாடல்கள் வழியாக ஊடகங்கள் பிம்பிக்கின்றன.
செலெப்ரடிகள் அல்லாதவர்கள், பொருளாதார ரீதியாக நலிந்தவர்கள், தான் சார்ந்த சமூக
ஆதரவு இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிப்படுத்த ஏன் வாய்ப்பு
இல்லை? அப்படிப் பார்க்கப் போனால் வன்மம் என்பது மனநிலை. அதற்கு பால் வேறுபாடு,
சாதி-மத வேறுபாடு, உறவுகளின் வேறுபாடுகள் கிடையாது. வன்மம் எப்போதும் எதிர்
பால்களுக்கு இடையிலேயே நடக்கவேண்டும் என்பதுவும் இல்லை. அப்படி இருக்க, மீ டூ
பிரச்சாரம் கேவலம் குறுகிய விஷயத்தை வைத்துக்கொண்டு சர்ச்சையில் ஈடுபட்டதைப்
பார்த்தால் அடிப்படை நோக்கம் வேறாக இருக்கும் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
சமூக ஊடகங்களின் ட்ரெண்ட் மற்றும் செலெப்ரெடிகளின் பிரச்சாரத் தந்திரமாக
உருவெடுத்திருக்கும் இப்படியான பிரச்சாரங்களின் ஆயுள் எவ்வளவு? ஒருவகையில் இதுவும்
கூட வன்முறையை வெளிப்படுத்தும் பகட்டான வக்கிர மனநிலைதான். ஏன் என்றால்,
அநியாயத்திற்கு குறுகிய காலப் போராட்டம் என்பதே கிடையாது. அது நிரந்தரம், அதனால்
வன்முறைக்கு எதிராக தக்க தருணத்தில் போராடிக்கொண்டே இருக்கவேண்டும் மற்றும்
அதற்கொரு தர்க்க ரீதியான முடிவு இருக்கவேண்டும்.
ஆனால், யாரோ எழுப்பும் குரலுக்கு நம் குரலையும் எழுப்புவதென்றால், அதுவரை அநீதியை
சகித்துக்கொள்ளும் சூழ்நிலை இருந்தது என்பதே பொருள். இது அபாயகரமான வளர்ச்சி.
அதுமட்டுமல்லாமல் போராட்டம் என்பது பிரச்சார அளவிற்கே குறுகிவிட்டால் அது மற்றொரு
கொடுமை. அப்படியான கொடுமைகளின் முடிவின் லட்சணங்கள் எல்லாம் மீ டூ பிரச்சாரத்தில்
காண்டது பல கேள்விகளை உருவாக்குகிறது.
கேவலம் வாய்ப்பைப் பெறுவதுதான் முடிவான நோக்கம் என்ற பாதையில் அகலக் கால்
வைக்கும் பலரால் இப்படியான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.
ஆனால், இப்போது நடந்த பிரச்சாரத்தைப் பார்க்கும்போது யாரிடமும் உண்மையான துயரம்,
அக்கறை, தவிப்பு இல்லை. மக்கள் முழுப் பிரச்சாரத்தையும் பொழுதுப்போக்கு சரக்கைப்
போல பார்க்கிறார்கள். ஊடகங்களும் அவர்களைக் கிளர்ச்சியூட்டவே செய்திகளை
வெளியிடுகின்றன. சிலர் என்னமோ வெளிப்படையாக தங்களுக்கு ஏற்பட்ட வன்முறையின்
விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் இருப்பவர்கள்?
கற்ற, சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்ற அல்லது உத்தியோகத்தில் இருக்கும் ஆண்
– பெண் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எளிதாக போராட்டத்தில் இறங்கலாம் மற்றும்
பிரச்சாரத் தந்திரத்தை வடிவமைக்கலாம். ஆனால் மற்றவர்கள்? உண்மை நிலையில் இப்படி
வன்முறைக்கு ஆளானவர்களைப் பற்றி எந்த செலெப்ரெடிகளும் மற்றும் ஹேஷ் ட்யாக் களும்
உதவி செய்யாது? தெருவில் இறங்கிப் போராடும் அங்கணவாடி பெண்கள் மனிதர்கள்
அல்லவா? குறைந்தபட்சக் கூலி கொடுக்கவேண்டும் என்பதை இன்னும் ஏன் தீர்மானிக்க

3

முடியவில்லை? சமையல் உதவியாள்களுக்கு எப்போது சரியான சம்பளம் கிடைக்கும்?
உங்கள் தலூகாவின் பெண் பிள்ளைகளை தொலைவில் இருக்கும் ஒரு மாவட்டத்தில் வேலை
செய்ய ஆணையிடுவது எவ்வளவு சரியானது? பல அலுவலகங்களில் ஒருவர் திறமைக்கும்,
விருப்பத்திற்கும் சம்பந்தமில்லாமல் வேலை கொடுத்து அழுத்தம் கொடுப்பது நாகரிகமா?
இப்படியான கேள்விகளை மீ டூ எழுப்பவில்லையே ஏன்? அது வெறும் செலெப்ரெடிகளின்
ஃப்ளாஷ் பேக்காக மட்டுமே ஆனது எதற்கு?
வன்முறையை எதிர்க்கும் செயல் சமூகத்தின் எல்லா வர்க்கத்தையும் உள்ளடக்கி
இருக்கவேண்டும். ஆண்களுக்கும் அநீதி நடந்திருக்கிறது. பெண்களுக்கும் நடந்திருக்கிறது.
செலெப்ரெடிகள் சொன்ன காரணத்திற்காக இது சர்ச்சையாகத் தேவை இல்லை. பால்
சம்பந்தப்பட்ட காரணத்திற்கான அநீதி மட்டுமே அநீதி அல்ல. உடல், மன ரீதியான வன்மம்,
வாய்ப்புகளை நிராகரிப்பதும் வன்மம்தான். எந்த உருவத்தில் எந்தத் தருணத்தில் நடந்தாலும்
அது வன்மம்தான். இப்படி இருக்க அப்போதைய பிரச்சாரம் வெறும் ஹேஷ் ட்யாகுக்கு
மட்டுமே நின்றுவிட்டால் இது ஒரு குறுகிய நோக்குடைய போராட்டம் என்று சொல்லப்படும்.
வன்மம் எப்போதும் நடந்துகொண்டே வந்திருக்கிறது. உடனுக்குடனே அதைக்
கண்டித்துக்கொண்டு வரவேண்டும். அப்படியான சூழ்நிலையை பெண்கள் குழு, சங்கங்கள் –
நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் உருவாக்க வேண்டும். செய்த
வன்முறைக்கு இப்படியான தண்டனை என்ற முன்மாதிரியைக் காட்டவேண்டும். அவை
எதையும் செய்யாமல் இருப்பதால்தான், வெறும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் தந்திரம் போலத்
தோன்றியது மீ டூ பிரச்சாரம். இங்கே வெளிப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளைக் குறித்து
அரசாங்க சமபந்தப்பட்ட நிறுவனங்கள் தன்னார்வத்துடன் காரியத்தில் ஈடுபடுவதைப்
பார்த்தால் முழுப் பிரச்சாரம் வெறும் வேடிக்கை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அப்படி நடக்காமல் இருக்கவேண்டும் என்றால், தற்போதைய பிரச்சாரம் தனது எல்லையை
எல்லாத் துறை, பால் மற்றும் வர்க்கங்களுக்கு விரிவாக்கவேண்டும். வீடு, பள்ளி, அலுவலகம்,
கிராமம், ஊர்களில் நடக்கும் எல்லா வன்மங்களை ஒழிக்கவும் அநீதி இழைத்தவர்களுக்கு
தண்டனையும் அளிக்கவேண்டும். அப்போது மட்டுமே பிரச்சார வேகத்திற்கு தத்துவார்த்தம்
கிடைக்கும்.
இல்லை என்றால் இது ஊடகத்தின் மற்றொரு வேடிக்கையாக மட்டுமே இருக்கும்.

கன்னடத்தில்: ஸ்ரீதேவி களசத் – தமிழில்: கே.நல்லதம்பி – நன்றி: உதயவாணி நாளிதழ்

கே.நல்லதம்பி

-ஸ்ரீதேவி கலசத்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *