1.நாளைக்கான உன் நடனம்

கண்ணீரும் சந்தேகத்துடன்

பார்க்கப்படும் ஒரு காலத்தில்

யார் முன்னாலும் அழமுடியாது

உடையவோ எனக் கேட்காமல்

நிலை அழிந்தன குமிழிகள்

சகித்து சகித்து

நள்ளிரவில்

துயிலப்போகும்போது சொன்னார்கள்

‘நீ தேர்ந்ததல்ல யாவும் ‘

மேலும் சொன்னார்கள்

“சமயத்தில்

உனக்கு ஒரு வசனமும் இல்லை .

நீ ஒரு மேடை விளக்கு மட்டுமே ”

மேலும் மேலும் சொன்னார்கள்

” தூங்கி ஏழு

நாளைக்கான‌ உன் நடனத்தை

நாங்கள் தீர்மானித்துவிட்டோம் ”
.

 

2.உடலோரு நிமித்தம்

அவளும் அவளும் ஒரு சர்ப்பத்தை

விட கூடுதலாக பின்னிக்கிடந்தார்கள்

கடல் வாசனை அவர்களின்

தேகங்களிலிருந்து கசிந்து

திணைகளை குழம்ப வைத்தது

மனம் தீண்டி

அவள் தொட்ட உடல்

ஆணாயில்லை

பெண்ணாயில்லை

உடலாயிருந்தது

இச்சைக்கு உடலொரு சாக்கு

***

-சதீஷ்குமார் சீனிவாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *