“இப்ப அப்பா எப்படி இருக்கிறார்?”

“இங்கே வந்தால் நீயே பார்க்கலாம்.”

“இன்னைக்கு என்ன ப்ராப்ளம்?”

“இதை லண்டனிலிருந்து சொல்வதற்கு வெட்கமாக இல்லை?”

“கமான், சுதா வாட் ஹாப்பண்ட் டு யு?”

“நீ தான்.”

“நாம் இதை முன்னமே பேசி விட்டோம்.”

“நீ சொல்லும் கதைகளையா?”

“அவை இங்கு என்னுடைய நிலைமை.”

“அதைத் தான் பத்து வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறாயே!”

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

“அவரை வந்து பார்.”

“நான் வந்து என்ன செய்துவிடப் போகிறேன்?”

“ஒரு மகனாக அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை.”

“எனக்கும் சேர்த்துத் தான் நீ இருக்கிறாயே அவருக்கு, அவரின் செல்ல மகள்.”

“இல்லை, அவருக்கு இப்போது நீ தான் வேண்டும்.”

அது நடக்கப் போவதில்லை, இங்கே நிலைமை மோசமாக உள்ளது.”

“இதை விடவா?”

“ஆம்.”

“இத்தனை வருடமாகியும் உன் நிலைமையில் மாற்றமே இல்லையே.”

“எல்லாம் உன் அப்பாவினால், நான் இங்கே வர நினைத்த போது வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

“உன் திமையின்மைக்கு அப்பாவை குத்தம் சொல்லாதே.

“பின் யார் காரணம் இதற்கெல்லாம்?

“வேறு யார், நீ தான்.

“உங்களுக்கு என்னை மட்டம் தட்டாமல் இருக்க முடியாதே.

“சரி இப்போது எதற்கு இந்த வீண் விவாதம்?

“அதைத் தான் நானும் கேட்கிறேன்.

“தென் கம் இயர்.

“நான் வந்து என்ன செய்யப்போகிறேன்?

“அவர் அருகில் இரு.

“இருந்தால்?

“அதைத் தான் அவர் ஆத்மா கேட்டுக்கொண்டிருக்கிறது. பின்,அவரே சென்று விடுவார்.

“இத்தனை வருடத்திற்குப் பின் அவர் ஆத்மா என்னை ஏன் தேடுகிறது?

“அவர் உன்னை நினைத்துக்கொண்டு தான் இருந்தார்.

“பின் ஏன் அவர் பேசவில்லை?

“நீ அவர் கைமீறி சென்றுவிட்டாய்.

“இல்லை, நான் வீட்டை விட்டுத்தான் வந்தேன், அவ்வளவு தான்.

“வெறுங்கையுடன் வரவில்லை. எங்கள் உயிரையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாய்.

“அதில் எனக்கும் பங்குண்டு.

“ஏன்?

“அவருக்கு தானே நானும் பிறந்தேன்? அவர் உனக்கே எல்லாத்தையும் செலவு செய்துவிட்டிருந்தால், நான் எங்கே செல்லுவேன்?

“அப்போது எங்கள் நிலைமை?

“இப்போது எல்லாம் சரியாகி விட்டதே.

“அப்போது உன் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிந்தாயோ?

“அவர் என்னை மகனாக நினைக்கவில்லை.

“முட்டாள்தனமாகப் பேசுகிறாய்.

“ஐ செட் ட்ரூ.

“அதற்காக நீ செய்தது சரியாகிடுமா?

“நான் தான் வட்டியும் முதலுமாக் கொடுத்துவிட்டேனே!

“நீ எடுத்துக்கொண்டு சென்றது என் நகையும் பணத்தையும் மட்டும் அல்ல.

“எனக்குக் வுகள் இருந்தன.

“ஆம், மனிதர்கள் இல்லாத உலகத்தில்!

“இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? அங்கே வருவதைத் தவிர வேறு என்ன வேண்டும் கேள். அவரின் மருத்துச் செலவு முழுக்க நானே பார்த்துக்கொள்கிறேன்.

“அது மட்டும் எதற்கு? அதையும் நாங்களே செய்து கொள்கிறோம்.

“பின் என்ன பேச்சு?

“எல்லாம் அவருக்காகக் தான்.  உன்னால் தான் அவர் இன்னும் தன்னை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

“ஏன்? அவருக்கு நான் என்றும் வேண்டாம் தானே? இரண்டாம் இடம்தானே?

“அதெல்லாம் நீயாக நினைத்துக்கொள்வது.

“பின், அவர் என்னிடம் கடைசியாக நன்றாகப் பேசியது என் பதினாறு வயதில்.

“அவருக்குள் பயம் இருந்தது.

“எதைப் பற்றி?

“உன்னைப் பற்றி.

“என்னைப் பற்றியா?

“உன்னைப் பற்றிக் கூட இல்லை, உன் மேல்.

“நான் என்ன செய்துவிடப் போகிறேன்?

“அவர் மனதில் நினைத்துக்கொண்டிருந்ததை யார் தெரிந்துகொள்ள முடியும்?

“இதை மட்டும் எப்படிச் சொல்கிறாய்?

“உன் விஷ்யங்களில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறையும், பதட்டமும் உனக்குத் தெரியாது.

“ஏன் என்னிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை?

“நீயும் இப்போது தந்தை தானே? உனக்கு சொல்ல வேண்டுமா!

“நீ என்னைக் குழப்புகிறாய்.

“இல்லை, தெளிவுபடுத்துகிறேன்.

“இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

“அவர் நீ சந்தோஷமாக இருந்தால் போதும் என்று சொல்லி விட்டார்.

“நீ இப்போது அவரை ரீக்ரியேட் செய்கிறாய்.

“அதெல்லாம் இல்லை.

“இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்? அவர் நல்லவர், நான் கெட்டவன்.

“இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லை.

“பின் எப்போது நேரம் வரும்?

“அதற்குண்டான தேவை இல்லை. இப்போது நீ நன்றாக இருப்பதில் எங்களுக்கும் சந்தோஷம் தான்.

“நான் நாசமாகப் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

“அப்படியாக அவர் விட்டிருக்க மாட்டார். உனக்கான அனைத்தையும் செய்துவைத்திருந்தார் அவர். அதற்குள் நீ அவசரப்பட்டுவிட்டாய்.

“எது? அவரைப் போல் என்னையும் அடுப்பில் வேகச்சொல்லியதையா?

“இல்லை, நீ ஆசைப்பட்டதையே செய்து கொடுத்திருப்பார்.

“அவர் செய்து முடிப்பதற்குள் அனைத்தும் முடிந்தே போயிருக்கும்.

“நம்முடைய நிலைமை அப்போது எப்படி இருந்தது என்று உனக்குத் தெரியாதா?

“ஆம். உனக்கு பத்து சவரன் நகை செய்து, பத்து லட்சம் செலவழித்து கல்யாணம் செய்து வைக்கும் நிலைமை!

“இங்கே அப்படித்தானே எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன?அதுக்கு அவர் என்ன செய்வார்?

“அதில் பாதி எனக்கு செலவழித்திருக்கலாம் தானே?

“அவர் அதையும் தான் செய்தாரே!

“இது சுத்தப்பொய்.

“அவர் ரத்தத்தைப் பிழிந்து அவர் சம்பாரித்தது எல்லாம்?

“இப்போது என்னை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்க ஆசைப் படுகிறார்.

“அதெல்லாம் இல்லை. நீ அவர் அருகில் சென்று நின்றவுடன் அவர் மனம் அதை அறிந்து கொள்ளும். பின், தானே விடையும் பெற்றுக்கொள்ளும்.

“அது எப்படி உனக்குத் தெரியும், இத்தனை வருடத்திற்குப் பின்னும் அவர் என்னை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறாறென்று?

“ஏனென்றால் அவர் என்றும் உன்னை துறக்கவில்லை. நீ சென்ற பின்பும் அவர் உன்னை நினைத்துக்கொண்டு தான் இருந்தார். நான் பேச் சொல்லிச் சொல்லும் போதும், நீயாக எப்போது பேசுகிறாயோ அப்போது பேசிக்கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார்.

“இதெல்லாம் எதற்கு இப்போது?

“என்னால் அவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை.

“நான் வந்தால் எல்லாம் சரியாகி விடுமா?

”ஆம். உன்னால் நம்ப முடியாது. ஏனென்றால், அப்போதும் இப்போதும் உனக்கு ஒன்றும் தெரியாது அவரைப் பற்றி.

“நான் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டு ஆகப்போகிற காரியம் ஒன்றுமில்லை.

“இது சரியில்லை தாமு.

“என்ன சரியில்லை?

“உனக்கு இது நன்மையைக் கொடுக்காது.

“என்னால் அவரை மீண்டும் பார்க்க முடியாது.

“அதெல்லாம் முடியும். நீ உன் கற்பனையிலிருந்து வெளியே வந்தால் முடியும்.

“என்ன சொல்கிறாய்? அப்பா எனக்கு நல்லது தான் செய்தார், நான் அவரைப் புரிந்துகொள்ளவேயில்லை என்றா?

“அது தான் உண்மை, நீ ஏத்துக்கொண்டாலும் இல்லையென்றாலும்.

“இல்லை. அவர் கடைசி வரை அவருக்குக் கீழேயே நான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இப்போது நானே சம்பாதித்து மேலே வந்தவுடன் இப்படி சொல்கிறீர்கள்.

“இல்வே இல்லை.

“எஸ். என்னுடைய அப்பாவின் மகளே!

“நீ எல்லை மீறுகிறாய்.

“என்ன செய்துவிடுவாய்?

ண்மையைச் சொல்லுவேன். அதன் பின் நீ நிம்மதியாக இருக்க முடியாது. பின், வருத்தப்படுவாய், சொன்னால் தாங்க மாட்டாய்.

“சொல்லுடி.

“அவர் அன்றைக்கு இரவு முழித்துக்கொண்டு தான் இருந்தார். நீ அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றதைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். மாமாவுக்கு போலிஸில் நல்ல நண்பர்கள்இருக்கிறார்களே! உன்னை மறுநாளே  ட்றேஸ் பண்ணியாச்சு. அப்பா தான் உன்னை விட்டுடச் சொன்னார். பின், உனக்கு உதவிய கணேசன், அதுவும் அப்பா மாமா வெச்சு ஏற்படுத்திக்கொடுத்த ஆளு தான். மாமா அப்பாவை மீறி எதையும் செய்யமுடியாதவர் என்பதால்  பொழச்சு போன்னு உன்ன விட்டுட்டார்.

“இதைத் தான் உன் அப்பா உன்னிடம் சொன்னாரா?  ஏன், என்னை ட்றேஸ் பண்ணி வந்திருக்க வேண்டியது தானே, நான் அவரை அறைந்து கிழே தள்ளிவிட்டுத்தான் வந்தேன். என் காலில் விழுந்து கெஞ்சினார், மானக்கேடு வந்து விடும்ன்னு சொல்லவில்லை போல!

“……………….”

“சொல், இப்போது உன் அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

“சீ, இனி உன் வாழ் நாளில் என் அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை பேசினால், நீ புழுபுழுத்துச் செத்துவிடுவாய், நரகத்திற்கு கூட செல்லத் தகுதியற்றவன் நீ, தூ…..”

 

***

-அனங்கன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *