ஷெஹர்ஸாத்தின் இரவுகள்
திராட்சை ரசத்தின் அற்புதத்தினால்
உயிர்தெழுந்த
ஷெஹர்ஸாத்தின் இரவுகள்
உதிர்ந்து விடுகின்றன
பாலை வனமெங்கும் மின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் வீசிக்கொண்டிருந்தன
அப்போதே
ஆயிரத்து இரண்டாவது இரவிலிருந்து
ஷெஹர்ஸாத் ஆதிராவாக
பெயர் மாற்றிக் கொள்கிறாள்
இந்தக்கதையில் உனது
வருகையை அறிந்த நிலவு
பதினைந்து நாட்களுக்கு முன்னரே நஞ்சுண்டிருந்தது
அதுவும் ஒருவகையில் நல்லது தானே
ஆதிரா
உன் வருகைக்குப்பின்னர் நிலவுக்கு ஏது வேலை?
*****
பருவம் மாறி ஒரு நூற்றாண்டு
இரண்டு பருவங்களுக்கு நடுவில்
ஒரேயொரு தனிமை தியானித்திருந்தது
அதன் நிர்வாணம்
சில ஆதி ராத்திரிகளை பந்தாடிக்கொண்டிருக்கும் போது
வடுக்கள் நிறைந்த வார்த்தைகளில்
ஈரம் இருந்ததாகவும் அதற்குள் சில மீன்குஞ்சுகள் நீந்துவதற்குப் பதிலாக காற்றில் பறக்கக் கற்றுக்கொண்டிருந்ததாகவும் இன்றுவரை நம்பப்படுகிறது
ஆனால் பருவம் மாறி இன்றோடு ஒரு நூற்றாண்டுகள் கடந்துவிடுகின்றன.
***
-முர்ஷித்
Please follow and like us:

1 thought on “இலக்கியன் முர்ஷித் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *