மொழி மீதான நிகழ்த்துகைகள் யாவும் கவிதைகளின் பிறப்பில்கவனத்தினைத் திருப்பி விடுகின்றன. ஈழத்துச் சூழலில்கவிதைப் பிரதிகளின் வரவானது, வாசிப்புப் போக்கினை விடஅதிகரித்த நிலைப்பாடுகளிலே காணப்பட்டன. கவிதைகளுக்குள் பேசப்படும் கதைகளும், மொழிவிளையாட்டில் சிக்கித் தவிக்கும் கவிதைகளும் இரட்டிப்பானஅனுபவத்தினை வாசக மனதில் ஏற்படுத்தியிருக்கின்றன. கவிதைகளுக்குள் கதையினைத் தேடுகின்ற பணியில்இறங்கியிருக்கும் வாசிப்பின் மீது ஏராளமான கேள்விகளைமுன்வைத்து உரையாடல்களைத் தொடரலாம். இருப்பினும்இங்கு கவிதைகள் குறித்து எழுகின்ற பல்வகையானதோற்றப்பாடுகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய தேவைவிமர்சனப் பரப்பில் இயங்குகின்றவர்களுக்குமுக்கியமானதாகிறது. கவிதைகளில் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் கண்டடையாமல் கவிதைகளுக்கானபிரதியின்பத்தினைக் கண்டடைகின்ற விமர்சனப்பரப்பும், வாசிப்பு முறையும் இங்கு புதிய பிரதிபலிப்பினைஅடையாளப்பத்தியிருக்கின்றன. கவிதைகளுக்கான தனித்தஉரையாடலும், அவற்றினை முன்னோக்கி கொண்டுசெல்வதிலும் விமர்சனப்பரப்பு பின்னோக்கி நிற்பதாகவேஉணர முடிகிறது. ஈழத்தில் கவிதை சார்ந்து நிகழ்ந்தஉரையாடல்கள் யாவும் மொழி விiளாயாட்டுக்களாக மாத்திரம்சுருங்கிப் போனது துரதிஷ்டமானதுதான். ஆரோக்கியமானகவிதை வாசிப்போ, அவை குறித்த காத்திரமான விமர்சனப்பார்வைகளோ இங்கு நீட்சி பெறவில்லை. கவிதைகள் குறித்தஉரையாடல்களையும், எழுத்துக்களையும் முன்வைத்தவர்களில்பலர் ஒரே கருத்தினை மீண்டும் மீண்டும் பதிவு செய்துஅலுப்படிக்க வைத்தனர். நவீனம், பின்நவீனம் எனும்சொற்களை மாத்திரம் வைத்துக் கொண்டு கவிதைகளைஅளவிடச் செய்வதற்கான முயற்சிகள் இங்கு பெரும்தோல்விகளைச் சந்தித்தன. இத்துனை தடைகளையும் மீறிவீறிட்டெழுந்த கவிதைப் பரப்பில் இலகுவாகச்சிக்கியிருக்கிறார் மின்ஹா.

நாங்கூழ், கடல் காற்று கங்குல் எனும் இரு கவிதைப்பிரதிகளின் ஊடாக மின்ஹாவின் மொழி குறித்தும், அவற்றின்மீதெழும் கதைள் குறித்தும் நீண்ட வாசிப்பினை நிகழ்த்தவேண்டியிருக்கிறது. கவிதைகள் கொண்டிருக்கும் மரபார்ந்தசாயலினை மின்ஹா மீறியிருப்பது காலத்தின் வெளிக்குள்கட்டமைத்து விடப்படும் கேள்விகளுக்கான தேடல்களாகஅமைகின்றன. மின்ஹா தனக்கான மொழியினைகவிதைப்பரப்பில் உருவாக்கியிருக்கிறார். எல்லாக்கவிதைகளிலும் அவை சாத்தியப்படாமல் குறிப்பிட்டுஅடையாளப்படுத்தக் கூடிய கவிதைகளுக்கு மாத்திரம்வாய்த்திருப்பதை அவதானத்தில் கொள்ளலாம். பெண் வெளிச்செயற்பாட்டில் கவிதை குறித்து இயங்கிய எழுத்துக்கள் யாவும்பெண்ணிய உடல் கூறுகளில் மாத்திரமே கூடுதல்கவனத்தினைச் செலுத்தின. இதனை அடியொட்டி பலகோணங்களிலும் காணக்கிடைத்த பெண் அடையாளஎழுத்துக்கள் யாவும் உடல் கூறுகளின் மொழியில் வலிந்துஅகப்பட்டிருந்தன. இவ்வெளியினை விட்டு வெளியேறிதனக்கான மொழி அடையாளத்துடன் இயங்கியிருக்கும்மின்ஹாவின் கவிதைகள் கதைகளுக்கான அடிக்குறிப்பினைவிட்டுச் சென்றிருக்கின்றன.

நிராகரிப்புஏற்புடமை என்பவற்றுக்கு அப்பால் நகர்ந்துகவிதைகளுக்குள் அடங்கியிருக்கும் கதைகளையும், மொழியில் பின்பற்றப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும்மின்ஹாவின் இரு படைப்புக்களையும் முன்நிறுத்திஉரையாடலுக்கான தளத்தினை திறந்து விட முடியும். இங்குகவிதைகள் ஏற்படுத்தப்போகும் உரையாடல் போக்கேபடைப்பின் மீதான அதிகாரத்தினை கட்டுடைக்க முனைகிறது. உரையாடல்கள் அற்றுப் போன படைப்புக்களிடமிருந்தும், உரையாடல்களை வேண்டி நிற்காத படைப்புக்களிடமிருந்தும்மொழிக்கான நீட்சியினையும், தேடலினையும் கண்டறியமுடியாத அபகீர்த்தி நிலை வாசகனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. எல்லாவற்றையும் கவிதைகளாக அங்கீகரிக்க முடியாதநிலைக்கு இவ்வரைமுறைகளே சாட்சியமாக நிற்கின்றன. கவிதைகளுக்கான மொழியினை இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடிய வாசிப்பு முறைகளும் இங்கு பரவலாக்கம்செய்யப்படவில்லை. பின்தொடர்தல் செயற்பாடுகளிலும், பிறகவிஞர்களின் கவிதைகளை பிரதிசெய்தல்கள் மாத்திரமேகவிதைப் போக்கின் வீழ்ச்சியான நிலைக்கு முதற்காரணமாகவிருக்கின்றன. இந்நிலையிலிருந்து மாற்றுவழிப்பாதையினை மின்ஹா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதேஇங்கு நிறைவான கவிதைப் போக்கிற்குஆரோக்கியமானதாகிறது.

`கனவுகளுக்கு அவகாசம் வாங்கும்

எந்திரப்பட்சிகளின்

கண்களுக்குள்

புலன்களின் உணரிகள்

சரிந்திருக்கின்றன.

நகர மறுக்கும் கால்கள்

தொலைதூரத்தை

மிக அண்மையில்

சம்பவித்து விட்டதோ என

அஞ்சி அடியொற்ற மறுக்கின்றன.

மேகத்திரள் மறைந்த

விண்மீன் நகரம் முழுவதும்

வளைபாதைகளின் நீட்சி

திசைவிலகிய

அனிச்சைக்காற்றின் சுழலிகளின்

தீப்பந்தத்தின் செருகல்

ஓரங்கமாய்

இரையாகிறது

உலர்வும் புலர்வும்

விலகலும் ஒதுங்கலுமாகத்

தரித்து நிற்கும்

நாங்கூழின் நாட்குறிப்பில்

பின்தொடரும் காலச்சுவடு

இழுத்துவந்த காகிதக்குவியல்

காற்றுடன் கலைந்து

மழையோடு கரைகின்றன.

பனியின் ஈரம் உலருமுன்

விடியலின் வாசம்

இரவைத் துரத்துகிறது.

சொட்டிக் கொண்டே விடை பகரும்

வருடத்தின் தீர்ந்துபோன

நிமிடங்களின் ஓலம்

மணற் கடிகாரத்துள்

நிசப்தமாய் ஒலிக்கின்றது.’

கனவுகளுக்கு வாங்கப்படும் அவகாசம் விசித்திரமானது. அவைஎந்திரப்பட்சிகளின் கண்களுக்குள் புலன்களின் உணரிகளாகசரிந்திருக்கும் கதையினை மின்ஹா கூறுகிறார். எந்திரப்பட்சிஎனும் சொல் இவ்விடத்தில் உரையாடல் முறைமையினைஆரம்பிக்கிறது.

பட்சிகள் இயந்திரமாக்கப்படும் மாற்றுக் கோணத்திலிருந்துஇதற்கான பார்வை விரிவாக்கம் கொள்வதைஅவதானிக்கலாம். கனவுகளுக்காக வாங்கப்பட்ட அவகாசம்எந்திரப்பட்சிகளிடம் புலன்களாகவும், உணர்வாகவும்சரிந்திருக்கின்ற வினைச் செயற்பாடு நிஜங்களை மீறிச்செயற்படும் கனவுகளின் தேரோட்டமாக காட்சிப் பார்வைக்குள்உள்ளடக்கமாகிறது.  

நகர மறுக்கும் கால்கள் எப்படி தொலைதூரத்தை மிகஅண்மையாக்க முடியும்? எனும் கேள்வி வாசகனுக்குள்எழுப்பப்படுவதற்கான சாத்தியங்கள் மின்ஹாவின்கவிதைகளுக்கான முரண்களாக உள்ளன. ஒரே கவிதையில்நேர்த்தியினையும், முரணையும் ஒன்றித்து விடுகின்ற விமர்சனமுறைக்குள் தள்ளி விடும் கவிதைகள் வலிந்துஉருவாக்கப்படுவதற்கான சாத்தியங்களைகொண்டிருக்கவில்லை என்பதே மின்ஹாவின் அடையாளநிறுவலை உறுதி செய்கிறது.

மேகத்திரள் மறைந்த விண்மீகளின் நகரமும், வளைபாதைகளின் நீட்சியும் இயற்கையின் மீதான கவிதைப்போக்கின் மரபு வழிப் பாதையினை நினைவூட்டுகின்றன. சொற்களின் மாயைகளில் புகுத்தி விட எத்தணிக்கின்றபோக்கு மின்ஹாவின் கவிதைகளில் ஆங்காங்கேவெளிப்படாமலுமில்லை. கூடுதலான கவிதைகள் இவ்வகைப்போக்கில் சிக்கிக் கொள்ளவில்லை என்பதிலிருந்துமின்ஹாவிடம் கவிதைகளுக்கான கதைகள்இருந்திருக்கின்றன என்பதை இடைவெளிகளோடுசொல்லலாம்.

வருடத்தின் தீர்ந்துபோன நிமிடங்களின் ஓலம் இக்கவிதையில்வெளிப்படும் இடம் மிக முக்கியமானது. வருடத்தின் முடிவில்தீர்ந்து போவதற்கான எந்தக் காரணிகளும் இல்லாத சூழலில்அந்நிமிடங்கள் மணற் கடிகாரத்துள் நிசப்தமாய் ஒலிப்பதும்கவிதைக்கான முடிவாக இவை அமையப் பெற்றிருப்பதும்உரையாடல் வெளிக்கான வாய்ப்பினை கவிதையின்கதைக்குள்ளிருந்து தெரிந்தெடுக்க முடியுமாயிருப்பதற்கானஉறுதிப்பாட்டினை வெளிக்கொணர்கின்றன.

மின்ஹாவின் கவிதைக்குள் நிகழும் மொழி உடைவுகவிதைகளுக்கான மேலதிக பலத்தினை இழக்கச் செய்கிறது. தொடராகச் செல்கின்ற வரிகளின் இறுதிக்கூறுகள்செப்பனிடப்பட்டவைகளாக அன்றி மேம்போக்காககையாளப்பட்;டவையாக இருக்கின்றன. இம்மாதிரிப்பண்புகள் கவிதைகளுக்குள் இருக்கின்ற கதையினைமழுங்கடிக்கச் செய்வதும், வாசிப்பு நிலையில் இடையூற்றினைஏற்படுத்துவதுவதற்கும் நிகரற்ற வாய்ப்புகளாகிவிடுகின்றன. இதிலிருந்து மாற்றமாக உரையாடலை தோற்றுவிக்கக் கூடியஏராளமான கவிதைகள் நாங்கூழ் தொகுப்பில் இருப்பதைவாசித்து உரையாடலுக்கு முன்வரலாம். இவை பிரதி மீதானநேர்த்திச் செய்கைகளுக்கு முறையான பார்வையினைஉண்டாக்கக் கூடிய முறைகளின் விரிவான போக்குகள் எனக்கொள்ள முடியும்.

கவிதைகள் சக்தி வாய்ந்தவையாக இருந்து கொண்டுசாதாரணமான காரியங்களினை நிகழ்த்துவதில்லை. நேர்மையான கவிதைகளின்; மீது இந்த உலகம் பயம்கொண்டிருக்கும். இதில் மிக முக்கியமான இருப்பு யதொனில்கவிதைகள் கொண்டிருக்கின்ற அரசியல் முறைதான். காலத்தின் மிக இறுக்கமான சூழலில் இருந்து கொண்டு, அங்கு நிறைந்து கிடக்கின்ற அரசியலின் வெளிப்படையினைகவிதைகளில் பிரசவிப்பது பெரும் சவாலானதாகிறது. அதிகாரஅமைப்பியலுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கின்ற கவிதைமுறைகளின அதர்மம் வாசக மனதினை நிலை மாற்றுகிறது.  சமூக வெடிப்பிற்கு மத்தியில் விளைவினை சேமிக்கக் கூடியசீரிய கவிதைகளை உருவாக்குவதென்பது நேர்மையின்அடிப்படையில் கிடைப்பதாகும்.

பாரதியின் எழுத்துக்கள் வெள்ளையர்களுக்கு வெடிகுண்டாக்கப்பட்டது போல, மஃஹ்மூத் தர்வீஷின் எழுத்துக்கள்ஆக்கிரமிப்பாளர்களுக்கு தடையாக்கப்பட்டது போல அதிகாரவங்குரோத்து முறைகள்; கவிதைகளின் சாயலைஉசுப்பிவிட்டன. ஆயுதங்களுக்கு வளைந்து கொடுக்காதஎழுத்து முறையினை ஈழத்தில் பலர் தனதாக்கிக்கொண்டிருந்தனர். தன்னிறைவான அரசியல்சிந்தனையிலிருந்து மாற்றம் பெறாத கருத்துக்களின் செல்வம்அவர்களிடமிருந்தது. எழுத்துக்கள் மீதான தாக்கம்கவிதைகளுக்கான பொருளினை ஆட்டிவித்திருக்கிறது. அவ்வெழுத்துக்கள் கொண்டிருந்த அதிகாரம் பற்றி சிந்திப்பதுஇவ்விடத்தில் அவசியமாகிறது. அவ்வதிகாரம் நேர்மையானஅரசியல் சிந்தனையின் ஓட்டம் பற்றிய செயற்பாடாகஇயங்கியிருப்பதை அடையாளம் காண முடியும். நேர்மையானஎழுத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளாமல் மின்ஹாவின்கவிதைகள் சில இடங்களில் வெளிப்படையாகவும், சிலஇடங்களில் மறைந்தும் அதிகாரத்தின் மீதானஎண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஒவ்வொரு படைப்பும் அதன் தன்மையினைப் பொறுத்துஅதற்கான தனித்துவ மொழி அடையாளத்தினைகொண்டியங்குகிறது. இதனை விமர்சனப் பார்வையிலும், நுகர்வோனின் அபிப்பிராயத்திலும் எம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மின்ஹாவின் கவிதைகள் மனிதர்களின்முகங்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை. சூழலில்உலாவுகின்ற அனைத்து வகை ஜீவராசிகளையும் தன்னுடையஎழுத்திற்குள் உள்வாங்கி விடுகிறார். அப்படியானநிலையியலுக்கு ஏற்ப மொழியினை நகர்த்தியும், எழுத்துக்களின் வேகத்திற்கு ஏற்றவாரு ஜீவராசிகள்இயங்குகின்  ொழியினை உணரவைத்தும்செதுக்கப்படுகின்ற படைப்புக்கள் தன்னுடையநிலையாமையை உலகிற்கு சொல்ல முனைகின்றன. இவ்வாறான இயங்குதலைப  பற்றி புதிய அலைஇயக்குனரான லூயி மாலின் பார்வை முக்கியமானது.

ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப்பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால்மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர்சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளிஇருந்து கொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக்குறைப்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் முயலவேண்டியிருக்கிறதுஎன்கிறார். இக்கருத்தின் ஊடாகஎழுத்துக்கள் மீதான ஒரு ஆழமான பார்வையினைபதிந்திருக்கிறார் லூயி மால். மின்ஹாவின் கவிதைகள்இதற்கான சாத்தியங்களைத் தேடிஅலைபவையாகவேயிருக்கின்றன.

வாசலில் பிடியற்றுக் கிடக்கும்

பிரம்புக்கதிரைக்கு கால் ஊன்றிய

இடங்களில் எல்லாம்

பிளவுகள் பூத்திருந்தன

சுமத்தலின் இறுதிப்புன்னகை

கசிந்துருகி பூமி சிவந்து கொண்டது.”

உணர்வுகளின் வெளிப்பாடும், அவை கொண்டிருக்கின்றசட்டகங்களும் மின்ஹாவின் இவ்வரிகளில்உடைக்கப்பட்டிருப்பதை உணரலாம். சுமத்தலின்இறுதிப்புன்னகை வாழ்வின் முடிவான தேடலுக்குவிடைபெற்றுச் செல்லும் குரலின் பிரதிபலிப்பாக உள்ளது. அதனது சூட்டின் வாசம் எல்லா இடங்களிலும் பகிரப்பட்டுகசிந்துருகி பூமியின் சிவப்பிற்கு காரணமாகிவிட்டிருக்கிறது. இயலாமையின் இறுதி வடிவமாய் துயரத்தின் வெளிப்பாடாகக்கொள்ளப்படும் சிவப்பு நிறத்தின் வன்மத் துயரோடுநிறைவுற்றுப் போகிறது இக்கவிதை. மின்ஹா தயக்கமின்றிவெளிப்படும் இடங்களாக இவற்றை அடையாளப்படுத்தமுனையலாம்.

கவிதைகளின் முக்கிய பொறுப்பு மொழியுடன்கொண்டிருக்கும் இயல்பான சூழ்நிலையில் இரண்டறக்கலப்பதுதான். அந்த உணர்வு மின்ஹாவின் கவிதைகளின்வெளிப்பட்டிருக்கின்றன. மனதின்; சமவெளியில் மோதிச்சிதரும் மொழித் தொடர்களின் கவிதைப் போக்கினைஅடையாளம் கண்டிருக்கிறார் மின்ஹா. அவரது கவிதைவெளியிடுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் மொழிப் போக்கில்இயந்திர வாழ்க்கையின் பல் வேறு விசித்திரங்களும், பறவைகள், பாதசாரிகள் கூட்டமும் வாழ்வின்; துவர்ப்பும்எம்மைத்; திண்மைப்படுத்தியிருக்கிறது. ஆனால் இவைஎல்லாவற்றையும் விட வாழ்க்கையின் தகிப்பும் மகிழ்வும்கவிதைகளின் பிரதான இடத்தினை பிடித்துச் செல்கின்றன.  அன்பின் மொழியை கவிதைகளில் கண்டடையமுயற்சிக்கிறார். எல்லாக் கவிஞர்களாலும் இதைப் பகிர்ந்துகொள்வது சிரமமாக இருக்கலாம். ஆனால் இந்த அதிஷ்டம்வாய்ந்தவர்கள் யாரோ: அவர்கள் இதை கொண்டாடவேசெய்வார்கள். அவர்களின் ஒவ்வொரு படைப்பிலும் இதன்பிரதிபலிப்பு இருந்தபடியே இருக்கும். மின்ஹாவின் மொழியில்இவை வெளிப்படுவதைக் காணலாம். உரையாடல்களைஏற்படுத்தும் இவ்வாறான கவிதைகளும், அதனைக்கட்டமைத்த கவிஞர்களையும் தாண்டி இவ்விடயம் மற்றை கவிஞர்களின் மத்தியில் பெரும் அதிர்வினைஏற்படுத்தக்கூடியது. ஒரு கவிஞனின் எண்ணம், சிந்தனை, செயற்பாடு என்பன கவிதை மனம் சார்ந்த நீட்சியானகருத்தியல்களின் அடிப்படையினில் இயங்குகின்ற போதேஅது காத்திரமான படைப்பாகவும், உரையாடல்களின்பிரதிபலிப்பாகவும் வாசகர்களின் மனதினில் நீங்காதஇடத்தினை பெறுகின்ற நிலையாகவும் மாறிவிடுகிறது.

மின்ஹாவின் இரண்டாவது கவிதைப் பிரதியான கடல் காற்றுகங்குல் நிலையான கவிதைகளின் அமைப்பினைக்கொண்டிருக்கவில்லை. வலிந்து எழுதப்பட்ட கவிதைகளின்வாசிப்பாக உணரக் கூடிய சந்தர்ப்பங்கள் அப்பிரதியில்நிறையவே இருக்கின்றன. நாங்கூழில் வெளிப்பட்ட மொழிமற்றப் பிரதியில் தோல்வியினை அடைந்திருக்கிறது. இரண்டாவது பிரதியில் ஏற்படுகின்ற மாமூலானபிரச்சினைகளின் வடிவமாக இதனைக் கொள்ளலாம். நாங்கூழில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டடிருந்த கவிதைமொழி கடல் காற்று கங்குலில் சிதைவடைந்திருக்கின்றஇடங்கள் ஏராளமாக உள்ளன. மின்ஹா மிக அவதானமாகச்செல்ல வேண்டிய இடமாக இதனை அடையாளப்படுத்தலாம். முதல் பிரதியில் காணப்பட்ட அழகியல், வேட்கை, நம்பிக்கை, இழப்பினை மீளக் கட்டமைத்தல், உருவாக்கம் போன்றவைஇரண்டாம் பிரதியில் இருக்கவில்லை. வலுக்கட்டாயமாகஅவை இருக்க வேண்டுமென்பதல்ல இக்கருத்தின் பொருள். முதல் பிரதியில் தென்பட்ட கவிதை மொழி இரண்டாம்பிரதியில் உடைந்திருக்கிறது என்பதே பொருள். கவிதைமொழி, மாறுபட்ட கவிதைகளின் புதிய வடிவம், கவிதைக்குள்செலுத்தப்பட்டிருக்கும் கதைகளின்

உலமென்பன இரண்டாவது பிரதியில் தவிர்க்கப்பட்டுஎழுதப்பட்டிருப்பது இடைக்கால வாசிப்பினதும், கவிதைகள்மீதான உழைப்பினதும் போதாமையினைக் காட்டுகிறது.

கடல் காற்று கங்குல் தொகுப்பிலிருந்து பொருந்திக்கொள்ளக் கூடிய சில கவிதைகளை மாத்திரமே அடையாளம்காண முடியும். நாங்கூழில் கவிதைகளுக்கான நுண்ணியதொடர் விரிவுபட்டுக் கிடந்தது. அங்கு உரையாடலுக்கானதும், திறந்த வாசிப்புக்கானதுமான புதுவரவுகள் விசாலப்பட்டுக்கிடந்தன. எல்லாக் கவிதைகளையும் உச்சத்திற்கு கொண்டுசெல்ல முடியாது விட்டாலும், தேறக்கூடிய பல கவிதைகள்உச்சத்தினை அடைவதில் சலித்தவையல்லாமல்இயங்கியிருக்கின்றன. அதற்கான எந்நத சிலமன்களும்இல்லாத பிரதியாக கடல் காற்று கங்குல் வலிந்துஉருவாக்கப்பட்டிருக்கிறது.

மின்ஹா கவிதைக்கான உழைப்பினை தனது இரண்டாவதுதொகுப்பில் நேர்த்தியாகக் கொடுப்பதற்கு தவறியிருக்கிறார். நாங்கூழில் வெளிப்பட்ட கவிதை மனம் கடல் காற்று கங்குலில்இறப்பினைத் தழுவியிருக்கிறது. பெரும்பாலும் இவை ரசனைசம்பந்தப்பட்டதுதான். மொழியின் உச்ச வடிவத்தினைஅடிப்படையாக வைத்து நோக்கப்பட்ட நாங்கூழின் தாக்கம்கூட கடல் காற்று கங்குலில் இடம் பெற்றிருக்கவில்லை. கவிதைக்கான உழைப்பு அவசியமாக்கப்பட வேண்டியதன்கட்டாயத்தினை கடல் காற்று கங்குல் மின்ஹாவிற்குஉணர்த்தியிருக்கிறது. கவிதை எதற்காகஉருவாக்கப்பட்டிருக்கிறது? எனும் கேள்வியினை விட கவிதைஎதனை நோக்கி வாசகனை நகர்த்தியிருக்கிறது என்பது மிகமுக்கியமானது. காதலினையும், வாழ்வினையும், இயற்கையினையும் பேசிச் செல்வதற்கான எழுத்து வடிவமுறையினை கவிதை தனக்கான போக்குச் சாட்டாகசொல்லியிருந்தாலும், அவற்றினை எம்மாதிரியானமொழியினைக் கொண்டு நகர்த்தியிருக்கிறது என்பதில்அளப்பரிய கவனயீர்ப்பினை செலுத்த வேண்டியிருக்கிறது. எல்லோரும் பேசுகின்ற அடிப்படைகளைத்தான் மின்ஹாநாங்கூழில் பேசியிருக்கிறார். இதிலிருந்து நாம் உரையாடமுற்படுவதெல்லாம் அவற்றினை கவிதை மொழியில்எப்படியெல்லாம் நகர்த்தியிருக்கிறார் என்பதுதான். நாங்கூழில் அது வெற்றியாகவும், கடல் காற்று கங்குலில் அதுதோல்வியாகவும் முடிந்திருக்கிறது.

`மரத்தொடுப்பிலிருந்து

விடைபெற்றுவிடலாம் என

எண்ணும்போது

கிளையில் வந்தமர்கிறது

காற்று

கனிகளுடன் பழுத்து

நிறம் திரிந்து

உலர் சருகாகும்வரை

நெட்டிடைப் பயணமொன்றை

விண்ணப்பித்திருந்தது

இலை

நுட்பமான வரிகளிவை. யாதாகவிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும் எனும் கேள்வியில் சிக்கியிருக்கும் மொழி. மரத்தொடுப்பிலிருந்து யார் விடைபெற்றுச் செல்லப் போகிறார்என நினைக்கும் போது கிளையில் வந்தமர்ந்திருக்கும் காற்று, அவை கனிகளை பழுக்கவைத்து நிறத்தினை திரித்துசருகாகும்வரை நீண்ட பயணமொன்றினைவிண்ணப்பித்திருக்கிறது இலை என்கிறார். காற்றுக்கும்இலைக்குமான உரையாடலின் மௌனத் தொடர்புகள்கலைந்து நீண்டிருக்கும் காத்திருத்தலின் விண்ணப்பத்திற்காய்இலையினை பலிக்கடாவாக்கியிருக்கிறார். கடல் காற்றுகங்குலில் வந்திருக்கின்ற நுட்மான கவிதைகள் ஒருசிலவற்றில் இவ்வரிகள் அற்புதமானவை.

`தீர்ந்துபோகும் என்ற பின்னும்

பிரியாத உயிரின்

சொட்டுக்கள் போல்

இழை பின்னிக்கொண்டிருக்கிறது

காலம்

மின்ஹா படிமத்தினை நோக்கி நகர முயற்சித்த கவிதைகளின்பெருவிளையாட்டினை நாங்கூழில் நிகழ்த்தியிருக்கிறார். காலத்தின் மீதான அவரது ஏற்றுதல் இயலாமையின்வெளிப்பாட்டினை மறுத்து இழை பின்னிக்கொண்டிருக்கும்புதிய ஆற்றுகையின் ஆரம்பமாகப் உயிர்ப்பிக்கிறது. உயிரின்பிரிவில் காலம் மற்றுமொரு உயிரினைத் தயார் செய்கிறது. அவை பிரியாத உயிரின் சொட்டுக்கள் போல எங்கும்பரப்பிவிடப்பட்டிருக்கின்ற எனும் கதை இக்கவிதையில் மிகநேர்த்தியாய் சொல்லப்பட்டிருக்கிறது.

பிரதிகள் காலத்தின் போராட்டங்களோடுவினையாற்றுகின்றன. குறித்து ஒதுக்கப்பட்ட ஒருகாலத்தினுடைய குறியீடாக அன்றி, முழுக்காலத்தின்பிரதிபலிப்பினை சில பிரதிகளில் மாத்திரமே நாம்தரிசிக்கலாம். அவை எக்காலத்திலும் வினையாற்றுகின்றவல்லமை கொண்டது. தீவிரமான கவிதைப் பிரதிகளிலிருந்துஇதற்கான மாற்றத்தினை எம்மால் உணரமுடியும். அவ்வாறானபிரதிகளை கண்டு கொள்கின்ற வாசிப்பு மனோ நிலையே மிகமுக்கியமானது. அவற்றிலிருந்து நாம் உரையாடலுக்கானவாசலினை திறந்து விடலாம். அதுவே பின்பொரு யுகத்தில்அப்பிரதியின் பேச்சரசியலினை உருவாக்கி, தனது பயணத்தைதொடர்ந்து கொண்டிருக்கும். கவிதைகளின் சொற்களை மீள்பரிசீலனை செய்கின்ற போது அவை உள் மனதின்ஏக்கங்களாகவும், போராட்ட பகுதிகள் சார்ந்த குறியீடாகவும்பிரதிபலிக்கின்றன.

கவிதைகள் இயங்கிவந்த பாதை மிகக் கடினமானதுதான். வரலாற்றன் பெரும் போராட்டங்களின் மீதும், சுமைகளின்மீதும் கவிதைகளின் தாக்கம் பெருத்த அடையாளமாய்இயங்கியிருக்கிறது. மண்னை மீட்பதற்கானபேராட்டத்திலிருந்து, விடுதலையின் ரீங்காரம் வரைகவிதைகளின் அமைவியல் மிக விசாலமானதாகும். இலக்கியம்யாருக்கு சொந்தமானது எனும் கேள்வி எழுகின்றபோதுஅதற்கான பதில் காத்திரமான படைப்பாளிகளுக்குசொந்தமானது என்பதே. இன்றைய கால கட்டத்தின்இலக்கியச் சூழலில் கவிதைகள் கொண்டிருக்கும் பெருத்தஇடத்தில் மின்ஹாவின்; அடையாளம் மெல்லனஎட்டிப்பார்க்கிறது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்கானமொழி அவரிடமிருக்கிறது. ஆனால் அதனை எப்படி நகர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் அவர் பிழைத்திருக்குமிடம்சரிசெய்யப்படல் வேண்டும்.

கலையினைப் பாடுகின்ற கவிதைகள் எல்லா வகையானகுறியீடுகளையும் தாண்டி மனித உயிரின் உன்னததன்மையினைப் பேசியிருக்கின்றன. கவிதைகள் ஏற்படுத்தும்உணர்வுகள் என்பது கலையினைப் பொறுத்த வரை மிகமுக்கியமானது. போராட்டக் காலங்களில் கவிதைகள்; எல்லாம் மிகக் கொடிய ஆயுதங்களாகபிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. கவிதைகள்எல்லோரையும் கொன்றிருக்கிறது. கவிதைகளுக்குபெறுமதியானவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று எதுவுமேபுலப்படுவதில்லை. கவிதைகளின் மாய வித்தைகளைஅறிமுகப்படுத்திய பலர் மண்ணோடு மாய்த்திருக்கின்றனர்.  கலையும் பல் வகையான கவிதைகளைஉருவாக்கியிருக்கின்றன. நாகரிகங்களின் போராட்டமுடிவிற்குப் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தகவிதைகளின் வருகை மிக வேகமாக இயக்கம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை மட்டும் பாடுகின்றகலைகளாக இவற்றினை நோக்குகின்ற போதுதான் எமதுஅதிகாரத்தினை நினைத்து அஞ்ச வேண்டியுள்ளது. ஆரோக்கியமான கவிதைச்; சூழலானது கலைகளின்; மீதுதொடுக்கப்பட்டுள்ள உணர்வினாலேயே நிறைந்துள்ளது. அதுவே ஒரு கவிதைகயினை பிரிதொரு கவிதையுடன்; சேர்த்து வாசிப்பதற்கான அனைத்து வழி முறைகளையும்கற்றுத் தருகிறது.

நயமிக்க கலையினை எவ்வாறு மொழியாக்குவது? எனும்கேள்விக்கு பதில் சொல்ல முனைந்ததன் விளைவேகவிதைகளின் வெளிப்பாடு. கவிதைகளை வாசகர்கள் எவ்வாறுஉணர்ந்து கொள்கிறார்கள்? அதைப் பற்றிய கருத்திற்கும், உண்மையான செயலுக்கும் இடையே இருக்கின்ற பெருத்தஇடைவெளி எப்படிப்பட்டது? அப்படிச் செய்வதுவிகாரமாகவும், முறைகேடானதாகவும் இருக்குமா? கலையின்ரூபத்தினையும் கவிதைகள  உருவாக்க்க கூடியநதிகளையும் நம்மால் செப்பனிட முடியுமா? நதியிலிருந்து ஒருகலையினைப் பிடுங்கி எல்லாத் தேசங்களிலும் பரப்பிவிடகவிதைகளுக்கு முடியுமா? ஆம் கவிதைகள் நதிகளை பாடவைத்தன,; நதிகளை பேச வைத்தன, குளிர வைத்தன, ஆடவைத்தன. பல்லாயிரம் யுகங்கள் கடந்தும் நதிகள்பாடவில்லை. நதிகள் மலைகளில் வீழ்ந்து நொறுங்கும்போதும், மலைகளின் மேல் பரப்பில் கசியும் போதும்கவிதைகள் அவற்றினை இயக்கிக் கொண்டேயிருந்தன.

`நீ நான் எல்லாமே

வழிந்து கொள்ளும்

ஒரு துளியின்

மிகுதியான எச்சம்

****

 

-சாஜித்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *