நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாமில்லை. இது வேறை சங்கதி. அவ வோட பெயர் லலிதகுமாரி. ஊரிலையெல்லாரும் ‘லலிதா’ எண்டுதான் கூப்பிடுவினம். ஆள் சரியான மூர்க்கை. ஆண்மூச்சுக்காறி. (எப்ப பாத் தாலும் சிடுசிடுத்த மூஞ்சையும் சிரியாச் சொத்தையுமாய்த் திரியிற பொம்பிளையளைத்தான் மூர்க்கையெண்டு சொல்லுவினம். வெளித் தோற்றமெல்லாம் பொம்பிளை, நடவடிக்கையெல்லாம் ஆம்பிளையா யிருக்கிறவையைத்தான் ஆண்மூச்சுக்காறி எண்டு சொல்லுவினம். மற்றது இவையளுக்குச் சாதுவாய் மீசையரும்பியிருக்கும். காலில அடர்த்தியாய் மயிர் படர்ந்திருக்கும்). அவவின்ர மனிசன் ஜெயராசா அவவுக்கு எதிர்மாறு. அந்தாளுக்குப் பெண்மூச்சு. சரியான சாந்தசொரூபி.
1991 இல ஜெயலலிதா தமிழக முதலமைச்சராய் வந்து பட்டிதொட்டி யெல்லாம் பேமசானதால எங்கட லலிதகுமாரியும் தன்ரபெயரை ஜெயலலிதா எண்டு எழுதத்தொடங்கிட்டா. அதுக்குப்பிறகு அவவுக்கு வாற கடிதங்களெல்லாம் ஜெயலலிதா எண்ட பெயரிலைதான் வரும். அவ யாரோடை கதைச்சாலும் எக்ஸ்பிரஸ் வேகத்திலதான் கதைப்பா. மற்றது அவவுக்குச் சாதுவான கொன்னையுமிருக்கு. அதால அவ கதைக்கிற தமிழை விளங்கிக்கொள்ளுறது கொஞ்சம் கஸ்ரம். இதன் மூலமாக அவவுக்கு ரைப்பிங்மெசின் எண்ட பட்டப்பெயரும் கிடைச்சுது. ஜெயலலிதா எண்ட பெயர் வாறதுக்குமுந்தி ரைப்பிங்மெசின் எண்ட பெயர்தான் கனகாலமாய்ப் பாவனையிலயிருந்தது.
லலிதகுமாரிக்கு அதுதான் எங்கட ஜெயலலிதாவுக்கு கலியாணம் நடந்து ஒரு பெடியன் பிறந்தகையோட அவவோட மனிசன், அதுதான் ஜெயராசா கனடாவுக்குப் போட்டார். அவர் அங்கையிருந்துகொண்டு மனிசிக்காறியையும் மகனையும் எடுக்கிறதுக்கு ட்றைபண்ண, ஜெயல லிதா அடியோட மறுத்திட்டா. மாதாமாதம் காசனுப்பிற வேலையை மட்டும் பார். வேறையொரு மயிரும் புடுங்கவேண்டாம் எண்டு அவருக்கு கடிதம் எழுதினா. அதுக்குப்பிறகு அந்தாள் கப்சிப். லலிதா குமாரியின்ர மோனும் உரிச்சுப் படைச்சு அவவைப்போலத்தான். கதைக் கிறதும் விளங்காது. அதுக்குள்ள கொன்னையும் சேர்ந்தால் எப்பிடி யிருக்கும்? இதால ஒரு நயமிருக்குது. பொடியனும் தாயைப்போலத் தான் சரளமாய்த் தூசணம் பேசுவான். வயது வித்தியாசமில்லாமல் ஆரைப் பாத்தாலும் பூனாச்சூனாச் சொல்லுவான். அதுகளுக்கு இவன் என்ன சொல்லுறானெண்டு விளங்காததால, சின்னப்பொடியன் மதலை கொஞ்சுறான் எண்டுநினைச்சுச் சிரிச்சிட்டுப் போகுங்கள்.
ஊருக்கு விலாசங்காட்டுறதெண்டால் அது எங்கட ஜெயலலிதாவைக் கேட்டுத்தான். எங்களைப் பெத்ததுகள் எங்கட பிறந்ததினங்களையெல் லாம் அடியோட மறந்துபோய்த் தங்கட அலுவலுகளைப் பாத்துக் கொண்டு திரியேக்குள்ள, ஜெயலலிதா தன்ர ஏகபுத்திரன் ஜெயக்குமா ருக்கு (தன்ர பெயரும் மனிசனின்ர பெயரும் சேர்ந்திருக்கிறமாதிரி இந்தப்பெயரை மகனுக்கு வைச்சதா அவா விளக்கந்தருவா) ஒவ்வொரு வரியமும் கோலாகலமாய் பிறந்தநாள் கொண்டாடுவா. பொடியனுக்குத் தகப்பன் விதவிதமாய் உடுப்புகள், விளையாட்டுச்சாமான்களெல்லாம் அனுப்பிக் குவிக்க, அந்த விளையாட்டுச்சாமான்களையெல்லாம் டிசைன் டிசைனா அடுக்கி, சந்தையில என்னென்ன பழமெல்லாம் விக்குதோ அதெல்லாம் வாங்கி (அப்பிள் உட்பட. அந்தநேரம் ஒரு அப்பிள் இருநூறுரூபா வித்தது. அதிலையே பத்துப்பழங்களுக்குக் குறையாமல் ஜெயலலிதா வாங்குவா), மூண்டடுக்கில கேக்கும் செய்விச்சு வைச்சு வயசுக்கேத்தமாதிரி மெழுகுதிரி கொளுத்தி, ஒவ்வொரு போட்டோவுக் கும் ஒவ்வொரு உடுப்பெண்டு போட்டுக் கோலாகலமாய்ப் பொடியன்ர பிறந்தநாளைக் கொண்டாடுவா. ஒரு கொழுத்த கிடாய் வெட்டி மத்தி யானச்சாப்பாடு. பிறகு இரவுக்கு இடியப்பமும் கோழிக்குழம்பும் எண்டு ஊரையே அமர்க்களப்படுத்திப் போடுவா. எங்களுக்கெல்லாம் அவவின்ர பொடியனோட பிறந்தநாள் எண்டுறது ஒருநாள் திருவிழா மாதிரித்தான்.
பிறகு இன்னொரு விசேசமுமிருக்கும். அதுதான் இரவிரவாய்ப் படமோ டுறது. அவவிட்ட மனிசன்காரன் அனுப்பின ரீவி, டெக் எல்லாமிருக்கு. அதால வெளியில வாடகைக்கு எடுக்கத்தேவையில்லை. படக்கொப்பிச் சிலவுமட்டுந்தான். ஜெயலலிதா ஆராவது இளந்தாரிப்பொடியளாக் கூப்பிட்டு, ‘ஓடிப்போய் நெல்லியடி சுப்பையா அன்சன்ஸ் கடையில நாலு நல்ல புதுப்படங்களாய் எடுத்துக்கொண்டோடியா!’ எண்டனுப்பி விடுவா. அவங்களுக்குத்தான் புதுப்படங்களைப்பற்றி முழுசாத் தெரியு மெண்டது அவவின்ர உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் குலைக்கிறதுக்கு ஆரும் முன்வரேல்லை. படமெடுத்து வரப்போற பொடியள் தங்கடை விருப்பத்துக்கு எடுத்துவருவாங்கள். அதிலை புதுப்படமுமிருக்கும். பத்துவரியத்துக்குமுந்தி வந்த பழைய படமுமிருக் கும். ஜெயலலிதா இதையெல்லாம் சீரியஸா எடுக்கமாட்டா. அவவுக்கு விடியவிடிய வீட்டுமுத்தத்தில படமோடினால் சரி. ஊர்ச்சனம் முழுக்கத் தன்ர வீட்டுமுத்தத்தில குவிஞ்சிருந்து படம் பாக்கிறதில அவவுக்கு ஒரு குஞ்சுப்புளுகு. தலைகனத்த பெருமை. அதுக்காக அவ எவ்வளவும் செலவழிப்பா.
அவ இன்னுமொரு வேலையும் செய்தவ. ஊரிலை ஒரு பொம்பிளை யும் அந்தவேலை செய்யமாட்டினம். அப்ப பருத்தித்துறையிலயிருந்து ‘ராஜன் வீடியோ மூவிசென்ரர்’ எண்ட பெயரில ஒரு வீடியோக்கடை இயங்கினது. அவங்கள் ஒவ்வொருநாள் பின்னேரமும் ஒவ்வொரு படம் ரெலிக்காஸ்ற் பண்ணுவாங்கள். அதை யாழ்ப்பாணம்முழுக்க ரீவி வைச்சிருக்கிறாக்கள் பாக்கக்கூடியதாயிருக்கும். ஜெயலலிதா அங்கை போய் அவங்களோட கதைச்சுக் காசுகட்டி தன்ர பொடியனின்ர பிறந்த நாளுக்குப் படம்போட வைச்சவ. அப்ப ஊருக்குள்ள இரண்டே இரண்டு வீட்டிலதான் சொந்தமாய் ரீவி இருந்தது. ஒண்டு ஜெயலலிதா வீடு. மற்றது பணக்காறக் கந்தசாமி வீடு. நாங்களெல்லாம் பணக்காறக்கந்த சாமி வீட்டைதான் ரீவி பாக்கப்போறனாங்கள். அண்டைக்கு நாங்கள் அங்க ரீவி பாக்கப்போய் நிக்கிறம். ஜெயலலிதா முயல்பாய்ச்சல்ல அங்க வந்தா. ‘என்னடியாத்தை இப்பிடி அரக்கப்பரக்க ஓடியாற? ஏதும் விசேசமே?’ அவவைக் கண்டிட்டுப் பணக்காறக்கந்தசாமியர் கேட்க, ‘ஓமோம்! சரியாய் நாலுமணிக்கு ரீவியைப்போட்டுப் பாருங்கோ’ எண்டு சொல்லிப்போட்டு அவ வந்தவேகத்திலேயே திரும்பிப்போனா. முதல்ல எங்களுக்கொண்டும் விளங்கேல்ல. பணக்காறக்கந்தசாமியர் சரியாய் நாலுமணிக்கு ரீவியைப் போட்டு ரியூன்பண்ணப் பட்டெண்டு ‘ராஜன் வீடியோ மூவிஸ் சென்ரர்’ விளம்பரம் தொடங்கிச்சுது. இன்றையதினம் தனது ஒன்பதாவது பிறந்ததினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டா டும் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த ஜெயராசா – லலிதகுமாரி தம்பதி களின் ஏகபுத்திரன் ஜெயக்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரை …….ஆகியோர் சகல செல்வங்களும் பெற்றுப் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின் றனர் (கீறிட்ட இடத்தில ஜெயலலிதா தன்ர சொந்தக்காரர் பதினாறு பேரைக் குறிப்பிட்டிருந்தா.) திருநிறைச்செல்வன் ஜெயக்குமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றையதினம் சிறப்புத் திரைப்படமாக மோகன், நதியா, விஜயகுமார், சுஜாதா ஆகியோர் நடித்த ‘உயிரே உனக்காக’ ஒளிபரப்பப்படுகிறது என ஓர் இனிய பெண்குரல் பின்னணியில் ஒலித்து ஓய்ந்ததும் திருநிறைச்செல்வன் ஜெயக்குமாரின் போட்டோ சுழண்டுகொண்டு வந்து முன்னுக்கு நிண்டுட்டுத் திரும்பச் சுழண்டு கொண்டு போய் மறைஞ்சதும் ‘உயிரே உனக்காக’ படந்தொடங்கிச்சுது.
அதையெல்லாம் பாத்துக்கொண்டிருந்த பணக்காறக்கந்தசாமிக்கு முக மோடிக் கறுத்துப்போச்சு. ‘எட இவ்வளவு காசிருந்தும் என்ன பிரியோ சனம்? இப்பிடியொரு வித்தைகாட்ட முடியேல்லையே!’ எண்டு உள்ளுக் குள்ள தவிச்சுப்போனார். அவருக்கு ஆகக் கவலையென்னெண்டா நேற்றுத்தான் அவரோட கடைசிப்பெட்டையின்ர பதினாறாவது பிறந்த நாள் முடிஞ்சது. ‘இது தெரிஞ்சிருந்தா அசத்து அசத்தெண்டு அசத்தியி ருப்பேனே!’ எண்டு வாயைவாயைப் போட்டடிச்சார். அப்பதான் நடுவில் பொடியனின்ர பிறந்தநாள் யூன்மாதம் பதினைஞ்சாந்திகதி எண்டது ஞாபகத்தில வந்தது. ஆளுக்கு வலு சந்தோசம். நல்லாக் காசைச் சில வழிச்சு ராஜன் வீடியோ ஒளிபரப்பில விலாசங்காட்ட வேணுமெண்டு பெருந்திட்டம் தீட்டினார். அடுத்தநாளே போய் ராஜன் வீடியோக்காற ரோட கதைச்சார். அவங்கள் பிறந்தநாளுக்கு ரண்டு நாளைக்கு முதல் வந்து கதைக்கச்சொன்னாங்கள். இவரும் சரியெண்டு வந்திட்டார். அவருக்கு ஜெயலலிதா காட்டினதைவிட டபிள்மடங்காய் விலாசங் காட்டவேணுமெண்ட எண்ணம் மேலோங்கிச்சுது. இல்லாட்டில் பணக் காறக்கந்தசாமி எண்ட பெயருக்கே அர்த்தமில்லாமல் போகிடுமே! அவரிலயும் பிழையில்லை. அவர் தன்ர ரேஞ்சுக்கு விலாசங்காட்ட வெளிக்கிட்டார். அது மனிச இயல்புதானே! அவரவர் தங்கட றேஞ்சுக் கேற்றமாதிரித்தானே விலாசங்காட்ட வெளிக்கிடுவினம். அந்தநேரத்தில சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்த்தனாவும் தன்ர றேஞ்சுக்கு விலாசங்காட்ட வெளிக்கிட்டு மேமாதத்தில ஒப்பரேசன் லிபரேசனைத் தொடக்கினார். அதோட எல்லாற்றை கதையும் அவுட். ஆமிக்காறன் ஊருக்குள்ள வாறான் எண்டதுமே சனம்முழுக்க தென்மராட்சிக்கும் வன்னிக்கும் பறந்திட்டுதுகள். ஆமிக்காறர் வந்து இளம்பொடியளையெல்லாம் பிடிச்சுக் கப்பலிலை ஏத்திப் பூஸாவுக்கு அனுப்பினாங்கள். ஊருக்குள்ள ஒரு சனமுமில்லை. மூண்டுமாதம் கழிச்சு இந்தியனாமி ஊருக்குள்ள வந்தாப்போலதான் சனமெல்லாம் திரும்பிவந்தது. இந்த ஜனாதிபதி பாத்த பேய்வேலையால பாதிக்கப்பட்டது பணக்காறக்கந்த சாமிதான். இல்லாட்டில் நடுவில் பொடியனின்ர பிறந்தநாளை என்னமாதிரியெல் லாம் ரெலிக்காஸ்ற்பண்ணிக் கொண்டாடி விலாசங்காட்டி யிருப்பார். இதிலை நயமடைஞ்சது நம்மட ஜெயலலிதாதான். ஊருக்குள்ள முதலும் கடைசியுமாய்ப் பொடியனின்ர பிறந்தநாளை ரெலிக்காஸ்ற் பண்ணிக் கொண்டாடின சாதனைப்பெண்மணி எண்ட பெயரை நிலை நாட்டியிட்டா.
ஆண்மூச்சுக்காறிக்கும் பெண்மூச்சுக்காறனுக்கும் குடும்பவாழ்க்கை சரிப் பட்டு வராதெண்டு சொல்லுவினம். அது எங்கட ஜெயலலிதாவின்ர விசயத்திலை மெய்யாப்போச்சு. பொதுவாய் ஆண்மூச்சுக்காறியள் மற்ற விசயத்திலையும் ஆம்பிளைமாதிரித்தான் இருப்பினம். அவையளைத் திருப்திப்படவைக்கிறதும் வலு கஸ்டம். நம்மட ஜெயலலிதாவும் இதுக்கு விதிவிலக்கில்லை. கலியாணங்கட்டின புதிசிலை பெரிசாப் பிரச்சினையேதுமிருக்கேல்ல. நல்லகாலம் அதால கலியாணம்முடிஞ்சு பத்துமாதத்துக்குள்ள ஒரு பொடியன் பிறந்திட்டான். மற்றது முதல்ல மனிசன்காறன் எப்பிடிக்கொத்த ஆளெண்டு தெரியாததால ஜெயலலிதா நல்லா அடக்கித்தான் வாசிச்சா. பிறகு அந்தாள் ஒரு பச்சைத்தண்ணிப் பாவியெண்டு தெரிஞ்சாப்போல தவிலடிக்கத்தொடங்கிட்டா. அதால மனிசன்காறன் ஜெயலலிதாவை நெருங்கிறேல்ல. ஏதோவொரு காரணங்காட்டி வீட்டால வெளிக்கிட்டு எங்கையும் போகிடும். முடிஞ் சால் போற இடத்தில சாப்பிட்டுப்போட்டு பொழுதுபடத்தான் வீட்டை திரும்பிவரும். ஜெயலலிதாவும் பொறுத்துப்பொறுத்துப் பாத்தா. சரி வரேல்ல. அண்டைக்குமவர் வெளிக்கிட ஆயத்தம். ஜெயலலிதா அவரைக் கூப்பிட்டு, ‘இப்ப எனக்கொருக்காச் செய்துவிடு’ எண்டு சொல்லிட்டு உடுப்பெல்லாத்தையும் கழட்டிப்போட்டுப் படுத்தா. அவர் இதை எதிர்பாக்கேல்ல. திகைச்சுப்போனார். ஆளுக்குக் கொழகொ ழெண்டு வியர்க்கத்தொடங்கிட்டுது. கொஞ்சம் பதகளிச்சுப்போனார். அந்தப் பதகளிப்பிலை ஆளுக்குக் கோசான் விறைக்கமாட்டன் எண்டு அடம்பிடிச்சுது. ‘என்ன வாய் பாத்துக்கொண்டு நிக்கிறாய்? இங்க வா! வந்து முதல்ல ஒண்டைச் சூப்பு! ஒண்டை முறுக்கு!’ எண்டுசொல்லி முலையளத் தூக்கிக் காட்டினா. அவவோட பாதங்களுக்கு மேலிருந்து தொடையிடுக்கு வரைக்குமான அடர்ந்திருந்த மயிர்ச்செறிவு ஆணொரு வன் நிர்வாணமாகப் படுத்திருப்பதாக அவருக்குத் தோன்ற அருவருப் பாகவிருந்தது. எண்டாலும் அவருக்கு வேறை வழியில்லை. அவ சொன்னதைச் செய்யத்தான்வேணும். சாரத்தைக் கழற்றிக் கட்டில் விளிம்பில போட்டார். போய் அவவுக்குப் பக்கத்திலயிருந்து அவ சொன்னபடி செய்ய வெளிக்கிட்டார்.
‘உப்பிடியிருந்து என்ன சொறியப்போறியே? எழும்பி எனக்குமேல படுத்திருந்து செய். உது உனக்கு வளமில்லை’ அவ உறுக்கினா. அந்தாள், ‘இண்டைக்கு முழுவியளம் சரியில்லை’ எண்டு நினைச்சுக் கொண்டு, அவ சொன்னமாதிரியே ஒண்டைச் சூப்பிக்கொண்டு ஒண்டை முறுக்க வெளிக்கிட்டுது. ‘உதென்ன சொறிஞ்சுகொண்டிருக்கிறாய்? வடிவாய்த் திருகி முறுக்கு. முந்தநாள் பிறந்த பிள்ளைமாதிரிப் பொச்சடிச்சுப் பால்குடிக்காமல் நல்லாக் கடிச்சுக் கடிச்சுச் சூப்பு’ அவ சொல்லச்சொல்ல அந்தாளும் வேர்த்தொழுக எல்லாத்தையும் செய்து கொண்டிருக்கு. ஆனால் அந்தாளுக்குக் கோசான் கொஞ்சமும் விறைக் கேல்ல. அவ கையை நீட்டிக் கோசானைப் பிடிச்சு உருவத்தொடங் கினா. அப்பவும் அது அசைஞ்சு குடுக்கேல்ல. அவவுக்குச் சலிப்பில கோவம் வந்திட்டுது. ‘பூழல்! உனக்கென்ன உணர்ச்சிநரம்பு அறுந்து போச்சே? சாமான் பழஞ்சீலைத் துண்டு மாதிரிக்கிடக்கு’ எண்டு புறு புறுத்தா. இதுக்கு என்ன பதில் சொல்லுறதெண்டு அந்தாளுக்குத் தெரி யேல்ல. கோசான் விறைக்காததுக்கு அந்தாள் என்னசெய்யிறது? இப்பிடியே கொஞ்சநேரம் போச்சுது.
‘ம்…ம்..! மேலை சொறிஞ்சது காணும். இனிக் கீழையிறங்கி விரலை விட்டுச்செய்!’ எண்டு முனகினா. அவ சொன்னால் மறுக்கேலுமே? அந்தாள் அதையும் செய்யத்தொடங்கிச்சுது. அவவுக்கெண்டாத் தண்ணி கழறுறமாதிரித் தெரியேல்ல. ‘விரலை எடுத்திட்டு நாக்கை உள்ளுக்கு விடு’ எண்டு அதட்டினா. நாய்வேசம் போட்டா நக்கத்தானே வேணும்?
‘உதென்ன சொறியிறாய்? வடிவாய் நாக்கை உள்ளுக்கை விடு’ அனுக்கத் தோட அதட்டினா. அந்தாளுக்கு வாய் வலிக்கத்தொடங்கிட்டுது. அதை யெல்லாம் அவவிட்டச் சொல்லமுடியுமே? “பூழல் என்ன செய்யிறாய்? உது சரிவராது. நாக்கோட விரலையும் விடு’ குண்டிய உயர்த்தி உயர்த்தி ஆட்டிக்கொண்டே அடுத்த ஓடறையும் போட்டா. அவ சொன்னபடி இரண்டையும் ஒரே நேரத்தில செய்யிறது அவருக்கு வலு சிரமமாயிருந்தது. ஒருபக்கம் விறைத்துக்கொண்டு வந்தது. எதிர்பாராத விதமாக அவவுக்குத் தண்ணி கழண்டு இளஞ்சூடான உப்பு ருசியோட அவற்றை மூக்கில தெறிச்சு வழிய, அவ ரண்டு கையாலயும் அவரோட தலையைப் பிடிச்சு அமத்தி, ‘வடிவா வெளியில கசியாமல் உறுஞ்சிக் குடி. தேகத்துக்கு நல்லது’ எண்டு அனுங்கினா. அந்தாளுக்கு மூச்சு முட்டிச்சுது. தலையை அழுத்திப் பிடிக்கிறதால அசையேலாமலிருந் தது. வேறவழியில்லாமல் ‘உவ்…உவ்…’ எண்டு உறுஞ்சி உறுஞ்சி விழுங்கினார். விழுங்க விழுங்கச் சுரந்துகொண்டேயிருந்தது. அவவும் கொஞ்சம் களைச்சமாதிரித் தெரிஞ்சுது. அழுத்தம் தளர்வதாக உணர்ந் ததும் தலையை வெளியே எடுத்து மூச்செறிந்தார்.
‘ம்…இப்ப செய்துவிடு பாப்பம்’ அவவும் விடுவதாயில்லை. இப்போது தான் அவரின்ர கோசான் கொஞ்சம் அசைந்துகுடுத்தது. பிறகு கோசான் சுருங்கினாலும் இந்த வேசையோட ஆடேலாது எண்டிட்டு, விறைச்சதும் விறைக்காததுமாய்க் கோசானை ஒருமாதிரிப் புகுத்திச் செய்யத் தொடங்கினார். இடைக்கிடை கோசான் மயக்கங்காட்டினாலும் சமாளிச் சுச்செய்தார். அவரின்ர நல்லகாலத்துக்குக் கோசான் முதிரைக்கொட்டன் மாதிரி விறைச்சிட்டுது. இப்பதான் ஆளுக்குக் கொஞ்சம் உசார் ஏறிச்சுது. எண்டாலும் அவவின்ர குணம் தெரியுந்தானே? ‘உதென்ன கிழவன்மாதிரி நடுங்கிச்செய்யிறாய்? உது சரிவராது. நீ வந்து படு. நான் மேலையிருந்து செய்யிறன்’ எண்டா. தலையழிவாள் என்ன இழவை யெண்டாலும் செய்யட்டும் எண்டிட்டு, அவர் விட்டுப்போட்டு வந்து நிமிர்ந்து படுத்தார். அவ எழும்பி அவருக்குமேல ஏறிக் குந்திக்கொண்டு கோசானைப் பிடிச்சு உருவிஉருவி ஆட்டிப்போட்டுத் தனக்குள்ள புகுத்தி குதிரையோட்டத்தொடங்கினா. அப்பவும் அவரை விட்டபாடில்லை. ‘என்ன பிராக்குப் பாத்துக்கொண்டு கிடக்கிறாய்? ரெண்டையும் பிடிச்சு வடிவாய் உருவு!’ எண்டு சொல்லி, அவரின்ர கையளைத் தூக்கி துள்ளிக்குதிக்கிற தன்ர முலையளில வைச்சா. அந்தாள் அவவில யிருந்த ஆத்திரத்தையெல்லாம் உருவிறதில காட்ட வெளிக்கிட்டுது. நல்லாப் போர்ஸ்பண்ணி முலையளப் புடுங்கிறமாதிரியான செற்றப்பில உருவத்தொடங்கிட்டுது. அவ எந்த ரியக்சனுங்காட்டாமல் இன்னுங் கொஞ்சம் வேகமாத் துள்ளினா. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கேலா மல் தன்ர கோசான் ஒடிஞ்சு விழுந்தாலும் விழுமெண்டு அவர் பயந்துகொண்டு கிடந்தார். எதிர்பாராதவிதமாக இரண்டொரு நிமிசத்தில உச்சந்தொட்டுட்டா. உடன அவரிலயிருந்து எழும்பிப் படுத்துக் கொண்டு, ‘ம்… எழும்பி ஒருக்கால் வடிவாச் செய்துவிடு. சுணங்காதை. எனக்குத் தலைக்குமேல வேலையிருக்கு’ எண்டு அந்தரப்படுத்தினா. அவரும், ‘எல்லாம் என்ர தலைவிதி’ எண்டு நொந்துகொண்டு எழும்பிச் செய்யத்தொடங்கினார். அப்பதான் எந்தவொரு பொம்பிளையும் இது வரைக்கும் செய்துபார்க்காத வேலையொன்றை வெகுலாவகமாச் செய்தா. குதிக்கால்கள் இரண்டையும் கொண்டுவந்து அவரின்ர குண்டியை அழுத்தி லொக்போட்டா. வழமைபோலவே இதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. இதுதான் தாயமெண்டு முலையள அந்த உருவு உருவியிருக்கக்கூடாதெண்டது இப்பதான் அவருக்குப் புரிஞ்சுது. அந்த உருவலுக்கு இந்த லொக்கிங்தான் அவவின்ர மறுத்தான் எண்டது அவருக்கு வடிவாய் விளங்கிச்சுது. லொக்போட்டாலும் பரவாயில்லை. ஆட்டியாட்டித் தள்ளிக்கொண்டேயிருந்தா. அவருக்குக் கோசான் பத்தி யெரியத்தொடங்கிட்டுது. ஆட்டமசைவுக்கு இடமில்லை. சரியான நரக வேதனையை அனுபவிச்சார். அவருக்குப் பிடிமானமேதுமில்லாத நிலை யில் அவவின்ர முலைகளில் தவிர்க்கமுடியாமல் கைகளை ஊன்றி னார். அதனால் அவவின்ர குதிக்கால்களின் அழுத்தம் தளர, இதுவரை அனுபவித்த வேதனையிலிருந்து சற்றே மீட்சிபெற்றார். அத்தருணம் அவரிடமிருந்து விந்து பீறிட்டுச் சொரிய, அவ துள்ளித்துள்ளித் தொடை களை விரித்துக்கொண்டே படிப்படியாக அடக்கநிலைக்கு வந்துசேர்ந்தா. ‘இனித் தொடர்ச்சியாக இதேமாதிரிச் செய்யோணும்’ எண்டு அவரைப் பாத்து முனகினா. ‘என்ர கடவுளே! நான் செத்தன்’ என அவரோட மனம் ஓலமிட்டது.
அடுத்தநாள் காலமை நவாலியிலயிருந்து – முன்னர் நான் குறிப்பிடாம லிருந்தா மன்னிக்கவும். ஜெயலலிதாவின் கணவரது சொந்த இடம் நவாலியாகும் – அவரது தம்பிக்காறன் வந்து, ‘அண்ணை, அப்பாவுக்குக் கொஞ்சம் சுகமில்லை. உன்னைக் கூட்டிக் கொண்டு வரட்டாம்’ எண்டு சொன்னாப்போல எல்லாத்தெய்வங்களுக்கும் மனதார நன்றி சொல்லி, இதுதான் தாயம் எண்டு அவர் தம்பியோட வெளிக்கிட்டார். ஜெயலலிதா தானும் வாறனெண்டு வெளிக்கிட்டா. அவரின்ர தம்பிக் காறன், ‘நீங்கள் இப்ப அவசரப்பட்டு வரவேண்டாம். நீங்கள் அந்தரப் படுகிற அளவுக்கு ஒண்டுமில்லை. அப்பிடியேதுமெண்டா ஆளனுப்புவம். அப்பருக்கு அண்ணரைப் பாக்கிற சோட்டை. வேறையொண்டுமில்லை. அண்ணரே நாளைக்குத் திரும்பி வந்திடுவார்’ எண்டுசொல்லி அவவைத் தடுத்துப்போட்டுத் தமையனைக் கையோட கூட்டிக்கொண்டு போனான்.
அவர் போய் ஒரு கிழமையால ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அவர்தான் எழுதியிருந்தார். ‘அன்புமனைவிக்கும் மகனுக்கும் நான் எழுதிக்கொள்வது. அப்பாவுக்கு இப்போது நல்ல சுகம். பிரச்சினை யொன்றுமில்லை. அதுநிற்க. முக்கியமாக நான் இந்தக் கடிதத்தை எழுதுவது ஏனென்றால், திடீரென்று கனடா செல்வதற்கான வாய்ப் பொன்று கைகூடியதால் அதை நழுவவிடாமல் நாளை காலை பயண மாகிறேன். மிகுதியைக் கனடாபோய்ச் சேர்ந்ததும் விபரமாக எழுது கிறேன்’ எனச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தை வாசிச்சிட்டு ‘பேய்ப்பூழல்!’ எண்டு சொல்லிச் சுக்குநூறாய்க் கிழிச்செறிஞ்சா. அதுக்குப் பிறகு அவரிலயிருந்த கோவத்தையெல்லாம் மகனில காட்ட வெளிக் கிட்டா. பொடியன் நிண்டால் குற்றம். நடந்தால் குற்றம். இருந்தால் குற்றம். கிடந்தால் குற்றம். எல்லாத்துக்கும் கண்மண்தெரியாமல் பொடியனை மொத்தத்தொடங்கிட்டா. பொடியனை சும்மா மொத்தி றேல்ல. நாயோத்துப் பிறந்தவனே! நரியோத்துப் பிறந்தவனே! காதுக் கட்டா! தொண்டையழுகி! எண்டு தனக்கு வாலாயமான தூசணத்தோட தான் மொத்துவா. பொடியனும் அத்தனை மொத்தலுக்கும் கல்லுளி மங்கன் கணக்காய் நிப்பான். கண்ணால ஒரு சொட்டுக் கண்ணீர் வராது.
1996 ஊருக்குள்ள ஆமி வரப்போறான் எண்டது திட்டவட்டமாய்த் தெரிஞ்சாப்போல ஜெயலலிதா தன்ர மகனை வன்னிக்கு அனுப்பிப் போட்டா. இதில பேரன்காறனுக்கு – அதுதான் ஜெயலலிதாவின்ர தகப்பனுக்குச் சரியான மனத்தாக்கம். அவர் சிறீலங்கா பொலிசில யிருந்து பென்சன் எடுத்தவர். கொக்கத்தடி வேலுப்பிள்ளையெண்டால் எல்லாருக்கும் தெரியும். ஆள் பென்சன் எடுத்திட்டு ஆடுவளர்ப்பில இறங்கிட்டார். எப்ப பார் கொக்கத்தடியுங் கையுமாய் அலைவார். எங்கை இலைகுழையளக் கண்டாலும் கொக்கத்தடிபோட்டு வெட்டிக் கொண்டுதான் போவார். அதாலதான் கொக்கத்தடி வேலுப்பிள்ளை யெண்டு சொல்லுறது. அந்தாள் சிங்களவனே தோத்துப்போறமாதிரிச் சிங்களங் கதைக்கும். ஆமி ஊருக்குள்ள வந்தாலும் பயமில்லை. அப்பிடியிருக்கப் பேரப்பொடியனை உவள் ஏன் வன்னிக்கு அனுப்பின வள்? எண்டு தனக்குள்ள ஆதங்கப்பட்டார். ஆனால் இதை ஜெயலலிதா விட்ட நேரை கேட்கேல்ல அவவிட்ட இதையெல்லாங் கேட்கேலுமே? அப்பிடிக் கேட்டால் கேட்டாளுக்குப் பச்சைத்தூசணந்தான் பதிலாய்க் கிடைக்கும். அவ தகப்பன் கிகப்பன் எண்டு ஒண்டும் பாக்கமாட்டா. பொடியன் மல்லாவியிலயிருந்த பெரியதாயின்ர – அதுதான் எங்கட ஜெயலலிதாவின்ர ஒண்டவிட்ட தமக்கை – வீட்டிலதான் நிண்டவன்.
விடுதலைப்புலிகள் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனும் இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2002 காலப்பகுதியில் கைச்சாத்திட்டு ஏநைன் பாதைதிறந்து அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் பாப்பா ஆக்கள் முக மாலையில காலடிவைக்கேக்குள்ளதான் அவையளோட ஜெயலலிதா வின்ர பொடியனும் திரும்பிவந்தவன். வன்னிக்குப் போகேக்க ஒரு தவ்வலாய்ப் போனவன் இப்ப தாடியும் மீசையும் அரும்பி, சிவத்து நெடுநெடுத்த ஆளாய்ப் புதுமாப்பிளைபோல வந்து நிண்டான். அவனைக் கொஞ்சம் உத்துப் பாத்தால் ஜெயலலிதாவுக்கு ஆம்பிளைவேசம் போட்ட மாதிரியுமிருந்தது. ஜெயலலிதா மகனைப் பாத்து மெய்மறந்து போய் நிண்டா. அவவுக்குக் கையுமோடேல்ல, காலுமோடேல்ல. தன்ர கண்ணே பட்டுடும் போலயிருந்தது. அவவுக்கு முலையள் பொங்கிப் பால் சுரக்கிறமாதிரியிருந்திச்சுது. ‘என்ர ராசா! என்ர செல்லம்!’ எண்டு கட்டிப்பிடிச்சுக் கொஞ்சத்தொடங்கிட்டா. அவன் ‘விடணை! விடணை! கூசுதணை!’ எண்டு நெளிஞ்சான். அவ இன்னும் இறுக்கமாய்க் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிக்கொண்டேயிருந்தா.
கொக்கத்தடி வேலுப்பிள்ளைக்குப் பேரப்பொடியன் ஊருக்குத் திரும்பி வந்ததில வலு சந்தோசம். ‘படிச்சிட்டு ஒருக்கால் ஏயெல் சோதினை யெடு. மூண்டு பாடத்தையும் பாஸ் பண்ணியிட்டால் ஏதேனுமொரு உத்தியோகமெடுக்க வசதியாயிருக்கும் மோனை’ எண்டு தொடர்ந்து அவனை நச்சரிக்கத்தொடங்கிட்டார். அந்த நச்சரிப்புத் தாங்கேலாமல் அவன் பிறைவேற் ரியூசனுகளுக்குப் போகத்தொடங்கினான். அதில யிருந்து இன்னொரு சங்கதி தொடங்கிச்சுது. அங்க பிறைவேற் ரியூசனுக்கு வாற பொடிபெட்டையெல்லாம் பல்சர், ஸ்கூட்டியெண்டு விதம்விதமாய் முறுக்கிக்கொண்டு திரியேக்குள்ள ஜெயலலிதாவின்ர பொடியன்மட்டும் புஸ்பைக்கில திரியிறது அவனுக்குச் சங்கையீன மாப்போச்சு. ‘எனக்கு பல்ஸர் பைக்கொண்டு எடுத்துத்தா!’ எண்டு ஜெயலலிதாவை நெருக்கத்தொடங்கிட்டான். அந்தநேரம் பல்ஸர்பைக் யாழ்ப்பாணத்தில எட்டு ஒன்பது லட்சத்துக்கு விலைப்பட்டுக்கொண் டிருந்தது. ஒரு வேகத்தில சும்மா கேக்கிறான், பிறகு இதை மறந்திடு வான் எண்டு தான் நினைச்சா நம்மடயாள். அவன் ஜெயலலிதாவின்ர மகனெல்லே? மூர்க்கைக்குப் பிறந்த மூர்க்கனெல்லே? லேசில விடு வானே?
அந்தநேரத்தில புலிகள் இயக்கம் திரும்பவும் சண்டையைத் தொடங்கப் போகுதெண்டு பரவலாக் கதையடிபட்டுது. அவங்கள் இளம்பொடியள் எல்லாத்தையும் தெட்டந்தெட்டமாய் வன்னிக்குக் கொண்டுபோய்ப் போர்ப்பயிற்சி குடுத்தாங்கள். இரகசியமாய் ஆட்சேர்ப்பும் நடந்தது. பொடியன் பாத்தான். இதுதான் சரியான நேரமெண்டிட்டுத் தாயிட்டச் சொன்னான், ‘நீயெனக்கு உடன மோட்டச்சைக்கிள் எடுத்துத் தரேல்லை யெண்டால் நான் கட்டாயம் இயக்கத்துக்குப் போவன்’ எண்டு. ஜெயலலிதாவுக்கு அஞ்சுங்கெட்டு அறிவுங் கெட்டுது. ‘நாயோத்துப் பிறந்தவன் இயக்கத்துக்குப் போனாலும் போவான்’ எண்ட பயம் தொட்ட தால எண்ணி இரண்டாம்நாள் யாழ்ப்பாணம் இரத்தினகோபால்ஸில ஒரு புத்தம் புதுப்பல்ஸரை எடுத்துக்குடுத்திட்டா. பொடியனுக்குத் தலை கால் தெரியாத புளுகம். தாயைத்தூக்கி ஒரு சுத்துச் சுத்திப்போட்டுக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினான். பிறகு மோட்டச்சைக்கிள்ள சினிமா ஹீரோமாதிரி ஏறிக்குந்தினான். முறுக்குமுறுக்கெண்டு முறுக்கிக் கொண்டு ஊரின்ர மூலைமுடுக்கெல்லாம் ஓடித்திரிஞ்சான். அதுக்குப் பிறகு அவன் எங்கை போறதெண்டாலும் மோட்டச்சைக்கிள்தான். அவனின்ர மோட்டச்சைக்கிள் சத்தம் கேட்டாலே ஊர்ச்சனங்கள் குழந்தைகுட்டியள இழுத்துக்கொண்டு வீட்டுக்குள்ள போகிடுங்கள். அந்தளவுக்கு மொக்கோட்டம் ஓடுவான். அவனுக்குப் படிக்கிற சிந்தனையே இல்லாமல்போச்சு.
கொக்கத்தடி வேலுப்பிள்ளைக்குப் பேரன் படிப்பைக் குழப்பினது சரியான மனக்கவலை. ஒருக்கால் பொறுக்கேலாமல் பேரனுக்குச் சொல்லிப்பாத்தார். ‘எட மோனை! உந்த மோட்டச்சைக்கிள்ள வட்ட மடிக்கிறதை விட்டுட்டு படிக்கிற வழியைப் பாரப்பு’ அவர் சொல்லி வாய்மூடேல்ல, அவனுக்குத் தாய்க்காறிமாதிரிக் கோவம் தலைக்கேறிட் டுது. ‘கிழட்டுப்பூழல்! வாயை மூடிக்கொண்டிரு! எனக்குப் புத்திசொல்ல வந்திட்டார். படிப்பும் மண்ணாங்கட்டியும்’ எண்டு பல்லை நெறுமிக் கொண்டு மூலையில கிடந்த றீப்பைக் கட்டையைத் தூக்கினான். அவரதை எதிர்பார்க்கேல்ல. ஏங்கிப்போனார். இனி அதில நிண்டால் மரியாதைக்கேடு எண்டிட்டுத் தன்ரபாட்டில போகிட்டார். இது நடக்கேக் குள்ள ஜெயலலிதா பக்கத்திலதான் நிண்டவ. பொடியனைக் கண்டிச்சு ஒரு வார்த்தை சொல்லேல்ல. பேசாமல் பாத்துக்கொண்டு நிண்டிட்டு உள்ளுக்க போகிட்டா. சிலநேரம் தான் பொடியனைக் கண்டிக்கப்போய்த் தனக்கும் அடிக்க வந்திட்டான் எண்டால் என்ன செய்யிறது? எண்டு நினைச்சுத்தான் பேசாமல் இருந்தாவோ என்னவோ?
இதோட தொல்லை தீர்ந்துது எண்டு பொடியன் நினைச்சான். ஆனால் கொக்கத்தடி வேலுப்பிள்ளை சும்மாயிருப்பாரே? ஊருக்குள்ள இப்பிடிக் கொத்த இளம்பொடியளுக்குப் புத்திமதி சொல்லுறதுக்கெண்டே ஒராளி ருக்கிறார். அவர்தான் திருவாளர் விவேகானந்தன். ஆள் தமிழ்வாத்தி யாராய் வேலை பாக்கிறார். பாட்ரைமாய் ஊர்சுத்தித் திரியிற பெடிய ளுக்குப் புத்திமதிசொல்லுவார். அதால அவரின்ர தலைக்கறுப்பைக் கண்டாலே இளம்பொடியள் எல்லாம் தலைதெறிக்க ஓடுவாங்கள். அவரிட்டத்தான் கொக்கத்தடி வேலுப்பிள்ளை உதவிகேட்டுப் போனார். இதுவரைக்கும் நடந்த அடிவாறெல்லாம் சொல்லி, தன்ர பேரப்பொடி யனுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லச்சொல்லிக் கேட்டார். அட்வைஸ் பண்ணுறதுக்கு ஆள் கிடைக்கேல்லயெண்டு ஆலாய்ப் பறந்துகொண்டு திரியிறவர், இந்த அரிய வாய்ப்பை மிஸ்பண்ணு வாரோ? ‘ஓக்கே! ஓக்கே! இதுக்கு நான் முழுப்பொறுப்பு’ எண்டு கொக்கத் தடியருக்கு உத்தரவாதங்கொடுத்தார்.
அண்டைக்குப் பின்னேரம் ஜெயலலிதாவின்ர பொடியன் வைரவர் கோவில் ஆலமரத்துக்குக்கீழை மோட்டச்சைக்கிளை விட்டுட்டு அதுக்கு மேல ஸ்ரைலாப் படுத்திருந்தான். இதைத் தன்ர வீட்டுக் கேற்றடியில நிண்டு பாத்துக்கொண்டிருந்த திருவாளர் விவேகானந்தனுக்கு பழம் நழுவிப் பாலில விழுந்தமாதிரியிருந்திச்சுது. பின்னுக்குக் கையைக் கட்டிக்கொண்டு ராசநடை நடந்து அவனுக்குக் கிட்டப் போனார். அவன் இவரை மைன்ட் பண்ணேல்ல. ‘என்ன தம்பி நல்ல ஆறுதலாப் படுத்தி ருக்கிறீர்? வகுப்பொண்டுமில்லையோ?’ எண்டு கேட்டார். அவன் இவரை ஒருக்கால் திரும்பிப் பாத்திட்டுப் பேசாமல் படுத்திருந்தான். இந்தாளும் ஒரு விடாக்கண்டன். ‘கலோ! உம்மோட தான் கதைக்கிறன். உப்பிடியே படுத்திருந்து காலத்தைக் கடத்திப்போட்டு என்ன செய்யப்போறீர்? படிச்சுக்கிடிச்சு முன்னுக்குவாற வழியைப் பாரும்’ எண்டவர் சொல்லி முடிக்கிறதுக்கிடையில பொடியன் மோட்டச்சைக்கிளால குதிச்சு அவரிட்ட வந்து தோளில போட்டிருந்த சால்வையை இழுத்துப் பிடிச்சுக்கொண்டு, ‘பேப்பூழல்! எனக்கு அட்வைஸ் பண்ணிறதுக்கு நீ ஆரடா?’ எண்டு கேட்டுப்போட்டுக் கன்னத்தைப்பொத்தி இரண்டு குடுக்க, ஆள் நிலைகுலைஞ்சு கீழை விழுந்திட்டார். பிறகு காலால உழக்கத் தொடங்கினான். அவரதை எதிர்பார்க்கேல்ல. அவருக்கு என்ன செய்யிற தெண்டு தெரியேல்ல. ‘ஐயோ! ஐயோ! என்னைக் கொல்லுறான்’ எண்டு கத்தினார். இந்தச் சத்தத்துக்கு அவரின்ர மனிசி பிள்ளையள் எல்லாம் குழறியடிச்சுக்கொண்டு ஓடிவந்தினம். கொஞ்சநேரத்துக்குள்ள சனம் குவிஞ்சிட்டுது. ஜெயலலிதா வந்துதான் விலக்குப்பிடிச்சுப் பொடியனை இழுத்துக்கொண்டு போனவ.
‘அவளைமாதிரியே பொடியனையும் வளத்து வைச்சிருக்கிறாள்’ எண்டு குவிஞ்சுநிண்ட சனம் கதைச்சுது. ‘உவளுக்கும் மோனுக்கும் நல்ல பாடம் படிப்பிக்கவேணும்’ எண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான ஊராக்கள் சிலர் அடிபட்டுக் கொழுக்கட்டை பிடிச்சமாதிரி முகம், முதுகு, கைகால் எல்லாம் வீங்கிப்போய் நிண்ட திருவாளர் விவேகானந்தனைக் கூட்டிக் கொண்டு அரசியல்துறைக்குப்போய் முறைப்பாடு குடுத்தினம். அரசியல் துறைப் பொறுப்பாளராயிருந்த பொடியன் திருவாளர் விவேகானந்தரிட் டப் படிச்சவன் எண்டதால இதைக்கொஞ்சம் சீரியஸாய் எடுத்திட்டான். ஜெயலலிதாவின்ர பொடியனைக்கூப்பிட்டு நல்ல வெளுவை குடுத்து அனுப்பினான். ஜெயலலிதாவோ பொடியனோ இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல. மற்றது கொக்கத்தடியர்தான் இதற்கெல்லாம் முழு முதற்காரணம் எண்டது இவையளுக்குத் தெரியாது. அவரும் நசுக்கிடா மல் வாயை மூடிக்கொண்டிருந்திட்டார். தெரிஞ்சிருந்தால் தாயும் மகனும் சேர்ந்து ஆளைத் துலைச்சிருப்பினம். நல்லகாலம் தப்பியிட் டார்.
இதுக்குள்ள பொடியன் தனக்கு அடிவிழுந்த கோவத்தில இயக்ககாற ரைப் போறவாற இடமெல்லாம் கண்டபாட்டுக்குப் பேசத்தொடங்கிட் டான். ஜெயலலிதா மனங்குழம்பிப் போனா. ‘குஞ்சு! அந்த மூதேசி யளைப்பற்றிக் கண்டபடி கதையாதை. அதுகள் நரகத்து முள்ளுகள். விலத்தி நடக்கிறதுதான் எங்களுக்கு நல்லது’ எண்டொருக்கால் பொடியனுக்குச் சொல்ல, ‘போடி எளியவேசை! உனக்கென்னதெரியும்? அடிவாங்கினது நானெல்லோ? நான் அப்பிடித்தான் கதைப்பன். நீ பொத்திக்கொண்டிரு. என்னை ஒரு கொம்பனும் ஒண்டும் பண்ணே லாது’ எண்டொரு பாட்டம் துவங்கினான். அதுக்குப்பிறகு ஜெயலலிதா வேறவிதமாய் யோசிச்சு ஒரு பிளான் பண்ணினா. ஜெயலலிதாவின்ர தாய்மாமன், அதுதான் அவவின்ர தாயின்ர தம்பிக்காறன் கனகாலமாய் இலண்டனில இருக்கிறார். குடும்பத்தோடதான். அந்தாள் ஜெயலலிதா வில நல்ல வாரப்பாடு. நல்லநாள் பெருநாள் எண்டால் இவவோட கோல் எடுத்துக் கதைப்பார். இடைக்கிடை காசும் அனுப்புவார். ‘ஏதும் உதவி தேவையெண்டால் கூச்சப்படாமல் கேள் பிள்ளை’ எண்டு ஒவ்வொருமுறையும் ரெலிபோனில கதைக்கேக்குள்ள சொல்லுவார். இவவுக்கு என்ன குறை? மனிசன்காறன் கனடாவுக்குப் போனதில யிருந்து மாதந்தவறாமல் காசனுப்பிக்கொண்டுதானிருக்கிறார். கடிதமும் போடுவார். இவ பதில் போடமாட்டா. ரெலிபோன் எடுத்தால்தான் கதைக்கமாட்டா. பொடியனிட்டக் குடுத்திடுவா. ஆனால் அந்தாள் அனுப்பிற காசை எடுத்துச் சிலவழிக்கிறதிலமட்டும் குறியாயிருப்பா.
ஜெயலலிதா தாய்மாமனுக்கு கோல் எடுத்து அழுவாரைப்போல விசயத் தைச்சொல்ல, ‘நீ ஒண்டுக்கும் யோசிக்காத பிள்ளை! உன்ரை பொடியனை எடுக்கிறது என்ரை பொறுப்பு’ எண்டு உத்தரவாதங் குடுத்திட்டு அலுவல் பாக்கத்தொடங்கினார். ஜெயலலிதாவும் இஞ்சை ஓடியோடி அலுவல்பாத்துப் பொடியனையும் ஒருமாதிரிப் பதப்படுத்தி 2006 ஓகஸ்ற்மாதம் பதினொராந்திகதி காலமை வெள்ளணப் பொடியனை நெற்றி, கன்னமெல்லாம் கொஞ்சி கயேஸ் வாகனத்தில பயணமனுப்பி வைச்சா. அண்டைக்குத்தான் காலமை பத்துப்பதினொரு மணிக்கு இலங்கையாமி ஏநைன் பாதையை மூடினது. பாதையை மூடுறதுக்கு ஒரு பத்துநிமிசத்துக்கு முந்தித்தான் ஜெயலலிதாவின்ர பொடியன் வெளிக்கிட்ட கயேஸ்வாகனம் அங்கால போனது. ஏநைன் பாதையை மூடியாச்சாம் எண்டு ஊருக்குள்ள சனமெல்லாம் பரபரப்பாக் கதைக்க, ‘இதென்ன கோதாரி?’ எண்டு ஜெயலலிதா பதகளிச்சுப்போய்ப் பொடியனுக்குக் கோல் எடுக்க, ‘நான் இப்ப வவுனியாவைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறன்’ எண்டு பொடியன் சொன்னாப் போலதான் அவவுக்கு நெஞ்சுக்குள்ள தண்ணி வந்தது.
ஜெயலலிதாவின்ர பொடியன் கொழும்புக்குப்போய் ஒரு மாதத்தில அவவின்ர தாய்மாமன் உத்தரவாதங் குடுத்தமாதிரியே அவனை இலண்டனுக்கு எடுத்திட்டார். இதால ஜெயலலிதாவுக்குப் பெரிய சுமை இறங்கினமாதிரியிருந்தது. எண்டாலும், ‘நாசமறுப்பான் அங்கையும் ஆரோடயாவது கொழுவுப்படுவானோ?’ எண்டு இடைக்கிடை பயப்பிட வும் செய்வா. தாய்மாமனோட கோல் எடுத்துக் கதைக்கேக்குள்ள, ‘மாமா! உவனொரு முன்கோபி. சுறுக்கன். நீங்கள்தான் ஆளை வடிவாக் கொன்றோல் பண்ணவேணும்’ எண்டு சொல்லுவா. ‘நீ சும்மா தேவை யில்லாமல் பயப்பிடாதை. அவன் நல்லபிள்ளை. நான் பாத்துக்கொள் ளுறன்’ எண்டவர் சொல்லுவார். அதென்னவோ தெரியாது. பொடியன் அங்கைபோய் நல்லபிள்ளையாய் நடந்துகொண்டான். பிரச்சினை யொண்டும் வரயில்லை. அங்கத்தயக் கிளைமேற் ஆளை மாத்திப் போட்டுதுபோல.
பொடியன் இலண்டனுக்குப் போய்ச் சேர்ந்தாப்பிறகு ஊருக்குள்ள ஜெயலலிதா தனிக்காட்டுராணியாகிட்டா. மனிசன் அனுப்பிற காசு மற்றது இடைக்கிடை பொடியன் அனுப்பிற காசெண்டு அவவின்ர கையில தண்ணிமாதிரிக் காசு புழங்கிச்சுது. கண்டவை, நிண்டவை, வந்தவை, போனவையெண்டு எல்லாருக்கும் வட்டிக்குக் கடன்குடுக்கத் தொடங்கிட்டா. இதால ஊருக்குள்ள பாதிக்கப்பட்ட ஒரேயாள் பணக்காறக்கந்தசாமிதான். கடுவட்டிக்குக் கடன்குடுத்துத் தவிச்சமுயல் அடிச்சுக்கொண்டிருந்தவரின்ரை தொழில் பக்கெண்டு படுத்திட்டுது. அவரைவிடப் பலமடங்கு குறைஞ்ச வட்டிக்கு ஜெயலலிதா கடன் குடுக் கேக்குள்ள அவரிட்டப்போய்க் கடன்கேட்க ஊர்ச்சனத்துக்கென்ன விசரே? அவர் மூக்குமுட்டக் கள்ளடிச்சிட்டு, ‘பேய்ப்பூனா! உவளின்ரை மயிர் முளைச்ச புதுப்பணம் எவ்வளவு நாளைக்கு விளையாடுதெண்டு நானும் பாக்கிறன்’ எண்டு புசத்தினதுதான் கண்டமிச்சம். ஜெயலலிதா புதுப்பணக்காறியாய் ஊருக்குள்ள கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தா. எப்பவும் கடன்வாங்கிறதுக்கும் வாங்கின கடனுக்கு வட்டியைக் குடுக் கிறதுக்கெண்டும் அவவின்ர வீட்டில ஜேஜே எண்டு ஒரே சனக்கூட்ட மாயிருக்கும். கிட்டத்தட்ட ஒரு பாளிமென்ற் மெம்பரின்ர வீடுமாதிரி வந்திட்டுது எண்டும் சொல்லலாம்.
ஊருக்குள்ள கொக்கத்தடி வேலுப்பிள்ளையர் இருந்தாப்போல மண்டை யைப் போட்டுட்டார். ஊருக்குள்ள இதுக்கு முந்தியொரு செத்தவீடு இப்படி நடக்கேல்ல எண்டளவுக்குச் சனங்குவிஞ்சிட்டுது. ஜெயலலிதா வும் என்ன லேசுப்பட்டாளே? றேடியோ, பேப்பருக்கெல்லாம் மரண அறிவித்தல் குடுத்தா. பேண்ட் வாத்தியம் ஒருபக்கம், பறை மறுபக்கம். ஹெர்சென்ன? பூந்தண்டிகையென்ன? ஒவ்வொரு முடக்கிலையும் கண்ணீர் அஞ்சலி பேனர் தொங்கிச்சு. மெயின்றோட்டில ஒரு மெகா பேனர். சவப்பெட்டி மட்டும் மூண்டுலட்சத்துக்கு எடுப்பிச்சவ. மற்றது அவ வட்டிக்குக் கடன்குடுத்த ஆக்களெல்லாம் மலர்வளையம் மலர் வளையமாக் கொணந்து அடுக்கிச்சினம். இன்னொரு பக்கத்தால கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிச்சுக்கொண்டுவந்து குடுத்தினம். கொக்கத்தடி வேலுப்பிள்ளையர் பொலிஸ் சேவிஸில இருக்கேக்குள்ள மண்டையைப் போட்டிருந்தால்கூட இவ்வளவு அமர்க்களமாயிருந் திருக்காது. இதுக்கை ஜெயலலிதா அண்டைக்கொரு வேலைசெய்தா. ஊர்ப்பெம்பிளையள் யாருமே செய்யத்துணியாத வேலை. ‘அப்புவுக்கு நான் ஒரேயொரு பிள்ளை. நான் கொள்ளிவைக்காமல் வேறை யார் வைக்கிறது?’ எண்டுசொல்லி அவவே சுடலைக்குப்போய்க் குடமுடைச் சுக் கொள்ளிவைச்சிட்டு வந்தா. அதிலயிருந்து இவவும் அந்த ஜெயல லிதாமாதிரிப் புரட்சித்தலைவியாகிட்டா.
அதெல்லாம்போக இதுக்குள்ள இன்னொரு புதினமும் நடந்திச்சுது. ஜெயலலிதாவின்ர மனிசன் செத்தவீட்டுக்கு வந்திட்டார். உண்மையில அவர் மாமன்ர செத்தவீட்டுக்கெண்டு வரேல்ல. அதுக்கொரு பத்து நாளைக்கு முன்னம் ஊருக்கு வந்திட்டார். பேப்பரில பாத்துத்தான் மாமன் செத்தது தெரியும். தெரிஞ்சாப்போலயும் வராமலிருக்கிறது சரியில்லைத்தானே எண்டிட்டு வந்தவர். மற்றது அந்தாள் மாமனில நல்ல மரியாதை. மாமனும் இவரில நல்ல வாரப்பாடு. வராமலிருக்க மனங்கேக்கேல்ல. அவருக்கு ஜெயலலிதாவின்ர குணந்தெரியும். இருந்தும் நடக்கிறது நடக்கட்டும் எண்டிட்டுத்தான் வந்தவர். அவர் எதிர்பாத்தமாதிரியே ஜெயலலிதா மூஞ்சையைத் தூக்கி வைச்சிருந்தா. அவரை ஏன் நாயெண்டுங் கேக்கேல்ல. பிறத்தியாள்மாதிரிதான் அந்தாள் நிண்டிச்சுது. இதைப் பாத்திட்டு மாமியார்க்காறி, அதுதான் ஜெயலலிதாவின்ர தாய் மருமகனுக்குச் சாப்பாடு குடுத்திட்டு, இரவு வெளியில பாய்போட்டுப் படுக்கவெளிக்கிட்ட மனிசனை, ‘உள்ளுக்கை வந்து படுங்கோ’ எண்டு கூப்பிட்டா. இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு ஏறியிட்டுது. ‘ஏன்ரி வேசை! புரியன் சுடலைக்குப்போன கையோட கள்ளப்புரியனைத் தேடுறியோ? வலு பாந்தமாய் உள்ளுக்கு வந்து படுக்கச்சொல்லுறாய். ஏன்ரி அவன் உனக்குக் கொட்டைதட்ட ஓக்கிறன் எண்டு சொன்னவனோ?’ எண்டு தாய்க்காறியைப் பாத்துக் கேட்டா. பாவம் அந்த மனிசி திகைச்சுப் போச்சுது. மனிசன்காறனுக்கு ஜெயலலிதாவின்ர குணம் தெரியுந்தானே? அந்தாள் வெளியில பாயைவிரிச்சுப் படுத்திட்டு இழவும் காக்காமல் அடுத்தநாள் நிலம் வெளிக்கமுதல் அங்கயிருந்து வெளிக்கிட்டுத் தன்ரை வீட்டுக்குப் போட்டுது. பிறகு, மாமன்ர அந்திரட்டிக்குத்தான் தலையைக் காட்டிச்சுது. இதுக்குள்ளதான் தம்பிராசு இழவு காக்க வெண்டு வந்து ஒட்டிக்கொண்டான்.
தம்பிராசு ஜெயலலிதாவுக்குச் சொந்த மச்சான். அதுதான் ஜெயலலிதா வின்ர தாயின்ர தம்பிக்காறன்ர பொடியன். முதல்ல ஜெயலலிதாவுக்குத் தம்பிராசுவைத்தான் கலியாணம் முடிக்கிறதெண்டிருந்தது. பிறகென்ன வோ தெரியேல்ல, அந்தக் கலியாணம் நடக்கேல்ல. தம்பிராசு கிளாக்கர் குமாரசாமியின்ர ஒரேயொரு மகள் சந்திரகுமாரியைத்தான் கலியா ணங்கட்டினது. சந்திரகுமாரியும் நல்ல எழுப்பமான பெம்பிளைதான். பாக்கிறதுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாய்த்தானிருப்பா. ஆனால் பிரச்சினையென்னெண்டா தம்பிராசு ஒரு முயல் சுண்ணியன். ஒரு நாளைக்கு மூண்டு நாலுதரம் செய்யிறதெண்டாலும் களைப்பில்லாமல் செய்வான். சுந்தரகுமாரி முற்றிலும் எதிர்மாறு. ஒரு நாளைக்கு ஒருக்கால் செய்யிறதே பெரியகாரியம். அதுகும் ஒருநாளைக்குச் செய்தால் மூண்டு நாளைக்கு அனுங்கிக்கொண்டு படுத்துக்கிடப்பா. கலியாணங்கட்டி ரண்டு வருசத்துக்குள்ள ஒரு பொடியன் பிறந்ததோட சரி. அதுக்குப்பிறகு தம்பிராசுவை மனிசிக்காறி நெருங்கவிடுறேல்ல. இந்தாள் கையைக்காலைப் போட்டாலுமெண்ட பயத்தில அவ தனியாப் படுக்காமல் பொடியனோடதான் இரவில படுப்பா. இந்தாளும் ஓக்கிறதுக் குப் போய் உவளிட்டக் கெஞ்சிறதைவிடக் கையிலபோடுறது பெற்றர் எண்ட கொள்கையோட திரிஞ்சுது. இப்ப மச்சாள்காறி ஜெயலலிதா வீட்டில இழவுகாக்கிறதுக்குப் படுக்க வந்தாப்போல தம்பிராசு தன்ரை கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தலாமோவெண்டு யோசிச்சான். மச்சாளும் பத்துப்பன்ரண்டு வரிசமாய்ப் புரியனில்லாமல் திரியிறா. ஒருக்கால் சாதுவாய்த் தட்டிப் பாப்பம் எண்டு வெளிக்கிட்டான். அண்டைக்கிரவு ஜெயலலிதா உடுப்பு மாத்திக்கொண்டிருக்கேக்குள்ள பூனைநடையில போய்ப் பின்வளத்தால கட்டிப்பிடிச்சுக் கழுத்ததாவடி யில கொஞ்சினான். அவ அந்தக் கூச்சத்தில கிறங்கிப்போனா. என்ன நடக்குமோவெண்டு நெஞ்சு படபடக்க நிண்டவனுக்கு அவ, ‘பொறு! ஏன் அவசரப்படுகிறாய்?’ எண்டு சொல்லிப்போட்டு, இரவுடுப்பைக் கழட்டிப் போட்டு மல்லாந்து படுத்திட்டு, ‘சரி இப்ப வந்து நடத்து’ எண்டு கூப்பிட்டது நம்பேலாத அதிசயமாயிருந்தது. அவவும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கத்தரிக்காயையும் கரட்டையும் வைச்சுத் தன்ரை அமரயடக்கிறது?
தம்பிராசு காஞ்சமாடுதான். ஆனா அவசரப்படேல்ல. வெகுநிதானமாய் அவவுக்கு வலப்பக்கமாய்ப் படுத்தான். தேகக்கலப்பில அவன் விண்ணன். இந்த நிலையில அவவுக்கு என்ன செய்யொணுமெண்டது அவனுக்கு விளங்கிச்சுது. அவவின்ர பக்கந்திரும்பி வலத்தொடையத் தூக்கிப்போட்டுக் கோசானை உருவிக் கிளிமூக்கில வைச்சுக் கொஞ்ச நேரத்துக்கு உரசினான். அவவுக்கு அப்பவே தண்ணி கழருமாப்போல விருந்திச்சுது. அவனையிழுத்துச் சொண்டைக் கவ்வினா. இப்ப அவன் மெல்ல மெல்லமாய்க் கோசானை அவவுக்குள்ள செலுத்தினான். பிறகு அவவிட்டயிருந்து சொண்டை விடுவிச்சுக்கொண்டு வலது முலையைச் சூப்பிக்கொண்டு இடது முலையைக் கசக்கிக்கொண்டு இயங்கத் தொடங்கினான். தேகக்கலப்பில இதைப் ‘புல் ரவுண்ட் அப்’ எண்டு அவன் சொல்லுவான். கட்டுக்கடங்காத காம உணர்ச்சிகொண்ட எந்தப் பெம்பிளையையும் இந்தப் ‘புல் றவுண்ட் அப்’ பில அடக்கிப்போடலாம் எண்டதுதான் தம்பிராசுவின்ர தியறி. இப்ப ஜெயலலிதாவில கொணந்து அந்தத் தியறியை அப்ளை பண்ணிப் புறூவாக்கிப்போட்டான். அவவின்ர வாயின்ரயும் கையின்ரயும் கொன்றோல்லயிருந்த முலையள் பலூன் மாதிரிப் பொங்கிக்கொண்டிருக்க, அவ குண்டியை உயர்த்தி உயர்த்தித் துள்ளினா. போதாக்குறைக்கு அவனின்ர தலையைப்பிடிச்சு அழுத்தினா. அவன் இயங்கிறதில வேகத்தைக் கூட்டினான். கொஞ்சநேரத்தில அவவுக்குத் தண்ணி சொரியத்தொடங்கிட்டுது. அவனை இழுத்துச் சொண்டைக் கவ்விக் கட்டிப்பிடிச்சா. அவவின்ர இதயத்துடிப்பை அவன் கேட்டான். அவனுக்கு உச்சம் வரைக்குள்ள கோசானை வெளியல எடுத்து அவவின்ர முலையள் வயிறெல்லாம் சொரிஞ்சிட்டு எழும்பிப் போனான். இப்பிடியே அந்தியேட்டிவரைக்கும் நடந்திச்சுது. சிரியாச் சொத்தையாத் திரிஞ்ச ஜெயலலிதாவின்ர முகத்தில ஒரு பூரிப்பையும் மலர்ச்சியையும் புன்னகையையும் பாத்துத் தாய்க்காறியுட்பட ஊர்க் காரர் பலரும் ஆச்சரியப்பட்டினம். ஏனென்றால் பகலில ஜெயலலிதா வீட்டில தம்பிராசுவின்ர தலைக்கறுப்பைக்கூடக் காணேலாது. இரவு ஊரடங்கினாப்போலதான் அவன் இழவுகாக்க வருவான்.
செத்தவீட்டைவிட அந்திரட்டி பெருமெடுப்பில நடந்திச்சுது. வீடு கொள்ளாத சனம். நாலு ட்ரிப் சமையல் நடந்தது. இப்பிடி ஊருக்குள்ள ஒரு சபையும் நடக்கேல்லையெண்டு பரவலாக் கதைச்சினம். அந்திரட் டிக்கு ஜெயலலிதாவின்ர மனிசன் வந்தவர். அவரை வாவெண்டு அவ வரவேற்கவுமில்லை. ஏன் வந்தனீயெண்டு கேட்கவுமில்லை. தம்பிராசு தான் ‘வாங்கோ அண்ணை!’ எண்டு வரவேற்றவன். அவன் அவரை வரவேற்பதைப் பாத்து ஜெயலலிதா கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டு போனா. அந்தாள் அந்திரட்டி முடிஞ்சகையோட மாமியார்க்காறியிட்டச் சொல்லிப்போட்டு வெளிக்கிட்டுப் போகிட்டுது.
ஜெயலலிதாவின்ர பொடியன் கடைசியாய் எழுதின கடிதத்தில, ‘உந்த வீடு சரியான பழசு. உதை இடிச்சுப்போட்டு நல்ல கொன்றாக்ரராப் பிடிச்சு இந்தப் பிளானுக்கு புல்லா மாபிள் பதிச்சு புதிசாக் கட்டு’ எண்டு எழுதி, வீட்டின்ர பிளானையும் அனுப்பியிருந்தான். பொடியன் சொன் னால் அவவுக்கு வேதவாக்கெல்லோ? கடிதம் வந்த அடுத்தநாளே வீட்டைத் தரைமட்டமாக்கி கொன்றாக்ரரரையும் பிடிச்சு வீட்டுப்பிளா னைக் கையில குடுத்திட்டா. ஊருக்குள்ள பெரிய கல்வீடு எண்டால் அது ஜெயலலிதாவின்ர வீடுதான். பணக்காரக்கந்தசாமியின்ர வீடுகூடச் சின்னன்தான். ஜெயலலிதா வீட்டை இடிச்சுக் கொட்டினதைக் கண்டு ஊர்ச்சனமெல்லாம், ‘விசரி! அருமந்த பெரிய கல்வீட்டை இடிச்சுக் கொட்டிக் கூத்தாடுறாள். ஆரும் குடியிருந்த வீட்டை இடிப்பினமே?’ எண்டு வாயை வாயைப் போட்டடிச்சுதுகள். ஆனால் பணக்காறக் கந்தசாமிக்கு வலு சந்தோசம். ‘இனி உவள் எங்க வீடு கட்டப்போறாள்? அது தரவையாத்தான் கிடக்கப்போகுது’ எண்டு அறிக்கைவிட்டார். ஜெயலலிதாவுக்கு இந்த வீட்டைச் சீதனமெழுதிக் குடுக்கேக்குள்ளயே கொக்கத்தடி வேலுப்பிள்ளையர் வளவின் ஒதுக்குப்புறமாய் ஓரறையும் விறாந்தையுமாய் சின்னக் கல்வீடொண்டைத் தானும் மனிசியும் படுத்தெழும்பிறதுக்கெண்டு கட்டி முன்னுக்கொரு ஒத்தாப்பும் இறக்கி யிருந்தார். தன்ர வீட்டை இடிச்சாப்போல ஜெயலலிதா தன்ர தாயோட அந்த வீட்டுக்குள்ளயிருந்துகொண்டு தான் புதுவீடு கட்டுற ஒழுங்கு களைப் பாத்துக்கொண்டிருந்தா. வீட்டுவேலையள் தொடங்கினாப்பிறகு ஜெயலலிதாவுக்கு ஆம்பிளைச் சிநேகிதங்கள் பெருத்துப்போச்சு. ஒவ்வொருநாளும் மோட்டச்சைக்கிள்ள, ஓட்டோவில, டிமோபட்டா விலயெண்டு ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஆம்பிளையளெல் லாம் வந்துபோச்சினம். இதுக்குள்ள அரசியல் கட்சியாக்களும் இருந்திச் சினம். ஜெயலலிதாவின்ர வீட்டுவேலையள் மும்முரமாய் நடந்ததால இப்பிடி வந்துபோற ஆக்களை ஊர்ச்சனம் பறவாய்ப்படுத்தேல்ல. மற்றது இப்பிடி ஆம்பிளையள் ஆரும் ஜெயலலிதாவிட்ட வந்திருக் கேக்குள்ள அயல்வீட்டுப் பெம்பிளையள் தற்செயலா அங்க போச்சின மெண்டால், ‘ஏன்ரி வேசையள்! என்னட்ட எத்தனை கள்ளப்புரியன்மார் வருகினமெண்டு புதினம்பாக்க வந்தனீங்களோ?’ எண்டு புளுத்தபாட்டில பேசிக் கலைப்பா. ஏன் ஜெயலலிதாவின்ர தாய்க்காறிகூட அந்த நேரங் களில வீட்டில நிக்கிறேல்ல. நைஸாக் கழண்டுபோகிடுவா. இதுக்குள்ள ஒருக்கால் ஜெயலலிதாவோட தேகக்கலப்புச் செய்யவேணுமெண்ட சோட்டையில அவவிட்ட வந்த தம்பிராசு வீட்டுக்கேற்றடியில் ஒரு ஸ்கூட்டி நிக்கிறதைக் கண்டான். உள்ளைபோய்ப் பாக்கேக்குள்ள ஒரு அரசியல்கட்சிப் பிரமுகரின்ர பொடியன் ஜெயலலிதாவோட தேகக்கலப் பில மூழ்கி முத்தெடுக்கிறதைத் தற்செயலாக் கண்டிட்டுத் திரும்பி வந்திட்டான். பிறகு அந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்கேல்லை. ஜெயலலிதாவுக்கு ‘புல் றவுண்டப்பில’ ஒரு சோட்டை வந்தாப்போல தம்பிராசுவுக்கு போனடிச்சு, ‘என்ன இங்காலப் பக்கம் காணேல்ல?’ எண்டு கேட்டா. ‘நான் வந்தனான். நீயுன்ர இளஞ்சிநேகிதனோட கடும் வேலை யிலயிருந்தாய். அதையேன் குழப்புவான் எண்டு திரும்பி வந்திட்டன். உனக்குத்தானே இப்ப சிநேகிதங்கள் வெகுத்துப்போய் ஓய்வொழிச்ச லில்லாமல் வேலைநடக்குது. பிறகு அதுக்குள்ள நான் என்னத்துக்கு?’ எண்டு தம்பிராசு சொல்ல, ஜெயலலிதாவுக்குச் சினம் உச்சியில ஏறிச்சுது. ‘பேப்பூழல்! களவாய் ஓக்கிறதுக்குக் கற்புப் பாக்கிறியோ? வெறுவாய்க்கெட்ட மூதேசி!’ எண்டு வாசாப்புக் குடுத்திட்டுப் போனைக் கட்பண்ணியிட்டா. அதுதான் இரண்டுபேரும் கடைசியாக் கதைச்சது.
உங்களுக்குப் பாவக்காய்க் கள்ளனை நல்லாத் தெரிஞ்சிருக்கும். அவன்ர பெயர் வந்து உதயசீலன். ஆள் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் பியொ னாய் வேலைபாக்கிறான். ஊர்த்தோட்டம் வழிய பாவக்காயளைக் கண்டால் கேட்டுக்கேள்வியில்லாமல் ஆய்ஞ்சுகொண்டு போகிடுவான். அதால ஊருக்குள்ள அவனுக்குப் பாவக்காய்க்கள்ளன் எண்டபெயர் நிலைச்சிட்டுது. அவன் கலியாணங்கட்டி ஒரு வரியத்துக்கை மனிசிக் காறியோட கோவிச்சுக்கொண்டு தாயோட வந்திருந்தான். பாவக்காய்க் கள்ளன்ர தாய்வீட்டுக்கும் ஜெயலலிதாவின்ர வீட்டுக்கும் ஒரு மதில் தான் எல்லை. இரண்டு வீட்டுக்கும் கனகாலமாய்க் கதைபேச்சில்லை.
அண்டைக்குக் காலமை பாவக்காய்க் கள்ளன்ர செல்லநாய் வந்து ஜெயலலிதாவின்ர வீட்டு கேற்றடியில பேண்டுட்டுப் போகிட்டுது. அதைப் பாத்தாப்போல அவவுக்குப் பத்திக்கொண்டு வந்திட்டுது. ‘கோத்தைக்கோளி! உன்ரை நாய் பேழுறதுக்கு என்ரை வீட்டுக் கேற்றடியோ கிடைச்சுது?’ எண்டு ஒரு துவக்கம் துவங்கினா. பாவக் காய்க்கள்ளனும் என்ன லேசுப்பட்டாளே? அவனும் பதிலுக்குத் துவங்கி னான். ‘என்னடி நாய்வேசை கதைக்கிறாய்? உன்னட்ட எத்தினை கடுவன் வருகுது. அதைவிட்டுட்டு என்ரை நாயைப் பற்றிக் கதைக்க வந்திட்டாய் பெரிய மகாராணிமாதிரி’ இப்பிடியே தொடங்கி, ‘உன்ரை சுண்ணியை வெட்டிச் சொதி வைப்பன்ரா கோத்தைக்கோளி!’ எண்டு ஜெயலலிதா மூச்செறிய, ‘உன்ரை சாமான்மயிரை அரிஞ்சு மன்னாருக்கு அனுப்புவன்ரி நாய்வேசை!’ எண்டு பாவக்காய்ககள்ளன் நாக்கைக் கடிச்சு முடிச்சுவைச்சான்.
இதுக்கை அண்டைக்கு ஒரு நெருங்கின சொந்தக்காறவீட்டில அந்திரட்டி. ஒரு கிழமைக்கு முன்னமே ஜெயலலிதாவுக்கும் தாய்க் காறிக்கும் சொல்லிப்போட்டுப் போனதுகள். இந்தச் சண்டையால எல்லாங் குழம்பிப்போச்சுது. தாய்க்காறி வெளிக்கிட்டு நிண்டா. ஜெயலலிதா அப்பதான் குளிக்க வெளிக்கிட்டா. தாய்க்காறி உடுத்துப் படுத்து நிக்கிறதைக் கண்டிட்டு, ‘நீ முதல்ல போ! நான் பின்னால வாறன்’ எண்டுசொன்னா. அது மனிசி இதுதான் தாயமெண்டு பறந்திட் டுது.
உங்களுக்குக் கல்முத்துவைத் தெரிஞ்சிருக்கும். முத்துக்குமார் எண்டது தான் அவன்ர முழுப்பெயர். ஊருக்குள்ள கொங்கிறீற் கல் அரிஞ்சு விக்கிறதால அவனைக் கல்முத்து எண்டு சொல்லுவினம். அவனுக்கு அண்டைக்குக் காலமை பத்துமணிபோல ஒரு கோல் வந்திச்சுது. பாத்தால் ஜெயலலிதா எடுக்கிறா. அவவிட்ட கல்முத்து ஒரு மூண்டு லட்சம் வட்டிக்கெடுத்திருந்தான். அவ கோலில, ‘முத்து, எனக்கிப்ப ஒரு லட்சம் அவசரமாத் தேவைப்படுகுது. உன்னைத்தான் முழுதாய் நம்பியிருக்கிறன். ஒருக்கால் வீட்டை கொணந்து தாறியோ நல்ல பிள்ளை?’ எண்டு கேட்டா. கல்முத்துவால மறுக்கமுடியேல்ல. இப்ப மறுத்தால் பிறகு அவசரத்துக்கு ஜெயலலிதாவிட்ட ஒருசதமும் வாங் கேலாது எண்டது அவனுக்கு நல்லாத்தெரியும். அதால, ‘ஓமோம் இப்ப கொண்டுவாறன்’ எண்டு சொல்லிக் கோலைக் கட் பண்ணியிட்டு, அங்கை இஞ்சையெண்டு பொறுக்கி ஒரு லட்சம் எடுத்துக்கொண்டு ஜெயலலிதா வீட்டையோடினான். அவவின்ர வீட்டடியில ஒரு சிவப்பு ஸ்கூட்டி நிண்டது. கல்முத்து உள்ளுக்கை போனான். அவனைக் கண்டிட்டு ஜெயலலிதா வீட்டுக்கு வெளியில வந்தா. இவன் காசை எடுத்துக் குடுத்தா. அவ காசை அவக்அவக்கெண்டு அவசரமாய் எண்ணினா. அப்பதான் ஒத்தாப்பு இடைவெளிக்குள்ளால வெள்ளை மாப்பிளைக்கோடன் சாறங்கட்டின ஒராள் கதிரையிலயிருக்கிறது தெரிஞ்சுது. அந்தாளுக்கு முன்னால நெக்ரோசோடாவும் வெபஸ் பிஸ்கற்றும் ஒரு ஸ்ரூல்ல வைச்சிருந்ததையும் பாத்தான். அந்தாள் சோடாவையெடுத்துக் குடிக்கிறதும் தெரிஞ்சுது. ஆனால் முகத்தைப் பாக்கமுடியேல்ல. ஜெயலலிதா மறைச்சுக்கொண்டு நிண்டா. இவனும் எட்டிப்பாக்க விரும்பேல்ல. அந்தாளைக் கல்முத்து பாத்திடக்கூடாது எண்டதில அவ கருத்தாயிருக்கிறா எண்டதும் அவனுக்கு விளங்கிச்சுது. ‘சரியப்பு! காசு சரியாயிருக்கு. சொன்ன உடனை கொணந்து தந்ததுக்கு தாங்ஸ்’ எண்டு இவனை அனுப்பிறதிலயே குறியாயிருந்தா. இவனும் எனக்கேன் தேவையில்லாத வேலை எண்டிட்டுத் திரும்பியிட்டான்.
அண்டைக்கு நடுமத்தியானம்போல கிடாயாடு கமறினமாதிரியொரு சத்தம் பொன்னம்மாவுக்குக் கேட்டது. பொன்னம்மா ஜெயலலிதாவின்ர வீட்டுக்குப் பின்வீட்டிலயிருக்கிறா. ஒரு வேலிதான் இரண்டு வீட்டுக் கும் எல்லை. முந்தி அந்த வேலிக்கிடையில ஒரு கடப்பு விட்டிருந்தது. அதுக்குள்ளாலதான் இரண்டுவீடும் போக்குவரத்துச்செய்யிறது. இரண்டு வீடும் நல்ல தேனும்பாலுமாய்ப் புழங்கினவை. அண்டைக்கொருநாள் ஜெயலலிதாவிட்ட ஆரோ ஆம்பிளைச்சிநேகிதம் வந்திருக்கேக்குள்ள பொன்னம்மா கடப்புக்கடந்து அவக்கெண்டு அங்கை போகிட்டா. அது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கல்ல. “ஏன்ரி வேசை! என்னிட்ட வந்திருக்கிற கள்ளப்புரியன் ஆரெண்டு புதினம்பாக்க விழுந்தடிச்சு வாறியோ?’ எண்டு பொன்னம்மாவைப் பேசினாப்போல இரண்டுவீட்டுக்கும் தெறிச்சுப் போச்சு. ஜெயலலிதா அந்தக் கடப்பையும் அடைச்சுப்போட்டா. இப்ப பொன்னம்மா வீட்டாக்கள் ஜெயலலிதாவீட்ட போறதெண்டால் றோட்டைச்சுத்தி முன்பக்கத்தால வந்துதான் போகவேணும். அப்ப அண்டைக்கு ஜெயலலிதா வீட்டுக்குள்ளயிருந்து கிடாயாடு கமறின மாதிரிச் சத்தம் கேட்டாப்போல பொன்னம்மாவும் மனங்கேக்காமல், ‘உது ஜெயலலிதாவின்ர குரல்மாதிரியெல்லோ கிடக்கு’ எண்டிட்டு நோட்டாலசுத்தி ஜெயலலிதா வீட்டுக்கு ஓடினா. வீட்டு கேற்றுக்குள்ள ஒரு சிவப்பு ஸ்கூட்டி நிக்கிறதைக் கண்டிட்டுப் போனவேகத்தில திரும்பிவந்து, ‘நாசமறுப்பாள் பிறகு தாறுமாறாப் பேசிப்போடுவாள். எனக்கேன் வீண்சோலி?’ எண்டிட்டுத் தன்ர அலுவலுகளைப் பாக்கத் தொடங்கிட்டா.
அந்திரட்டிக்குப் போன ஜெயலலிதாவின்ர தாய்க்காறி, ‘நாசமறுப்பாள் அந்திரட்டிக்கும் வரேல்ல. சமைச்சிருக்கவும் மாட்டாள். சாப்பாட்டுநேரம் தப்பிப்போனால் கேளாத கேள்வியெல்லாம் கேப்பாள். வேசையோட ஆடேலாது’ எண்டிட்டு, ஒரு கிண்ணத்துக்குள்ள சோறுகறி அப்பளம் மிளகாயெல்லாம் போட்டுக்கொண்டு கொளுத்துற வெயிலுக்குள்ளால ஆத்துப்பறந்து வீட்டை வந்து சேர்ந்தா. தன்ர தலைக்கறுப்பைக் கண்ட வுடனையே பேசப்போறாள் எண்டு எதிர்பாத்து வந்தவவுக்கு ஒரு சத்தஞ்சலார் இல்லாமலிருந்தது புதினமாயிருந்தது. வீட்டுக்கதவு ஓவெண்டு திறந்துகிடந்தது. ‘இதென்ன கோதாரி? கதவைத் திறந்து விட்டுட்டு இந்த மூதேசி எங்கபோட்டுது?’ எண்டிட்டு சாப்பாட்டை விறாந்தை மூலையில வைச்சிட்டு அறைக்குள்ள போனா. அந்த அறைக்கு யன்னல் வைக்காததால பகல்லயும் உள்ளை நல்ல இருட்டாய்த்தானிருக்கும். அறைக்குள்ள போன மனிசி என்னத்திலயோ தடக்கிவிழப் பாத்துது. ‘என்ன நாசமறுப்பைக் கொணந்து அறைக்குள்ள போட்டிருக்கிறாள் தரித்திரம் பிடிச்சவள்’ எண்டு மகளைக் கரிச்சுக் கொண்டு சுவரில தடவிக்கொண்டுபோய் லைற்சுவிச்சைப் போட்டா. பக்கெண்டு வெளிச்சம் பரவினவுடன என்னத்தில கால்தடக்கினதெண்டு நிலத்தைப் பாத்த மனிசி ஒருகணம் தலைவிறைச்சுத் திகைச்சுப் போச்சுது.
ஜெயலலிதா நிலத்தில மல்லாந்துபோய்க் கிடந்தா. கண் ரெண்டும் பிதுங்கி முழுசினபடியேயிருந்திச்சுது. கழுத்தில ஒரு வெள்ளைக்கேபிள் வயர் சுத்தி இறுக்கியிருந்தது. முலையிரண்டையும் சேத்து இன்னொரு கறுத்தக்கேபிள் வயர் சுத்தி இறுக்கிக்கிடந்தது. தொடை விரிஞ்சுபோய்க் கிடக்க, பீயும் மூத்திரமும் போயிருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில யும் தாய்மனிசி கொஞ்சம் யோசிச்சுது. கொடியில தொங்கின ஒரு சோட்டியை எடுத்து ஒருமாதிரித் தலைக்குள்ளால விட்டு இடுப்பு வரைக்கும் போட்டிட்டுத்தான் சேமங்கொள்ளத்தொடங்கினா. அயலட் டையெல்லாம் குவிஞ்சிட்டுது. ‘ஜெயலலிதாவை ஆரோ சாக்காட்டிப் போட்டினமாம்’ எண்ட தகவல் மூலைமுடுக்கெல்லாம் பரவிட்டுது. புதினம் பாக்கவெண்டு அடுத்தடுத்த ஏரியாக்களிலயிருந்தெல்லாம் சனங்கள் விழுந்தடிச்சு ஓடி வந்திச்சுதுகள். குச்சொழுங்கையள் றோட் டெல்லாம் ஒரே சனம். பொலிசும் நீதவானும் வந்திச்சினம். துரித விசாரணை நடந்திச்சுது. கல்முத்து ஜெயலலிதாவின்ர வீட்டை அண்டைக்கு வந்திட்டுப்போனதை ஒருத்தரும் காணேல்ல எண்டதால அவனிதைப்பற்றி மூச்சுங்காட்டேல்ல. ‘தனக்கேன் தேவையில்லாத வேலை?’ எண்டு பேசாமலிருந்திட்டான். பொன்னம்மாதான் விசாரணை யில சிவப்பு ஸ்கூட்டியைப்பற்றிச் சொன்னவ. ‘நம்பர் என்ன? ஞாபக மிருக்கோ?’ எண்டு நீதவான் கேட்டார். ‘நான் ஏன் ஐயா நம்பரைப் பாக்கிறன்? இப்பிடி நடக்குமெண்டு ஆருக்குத் தெரியும்?’ எண்டு அவ பதில் சொன்னா. பாவக்காய்க்கள்ளனையும் கூப்பிட்டு விசாரிக்கேக் குள்ள அவனும் இதே பதிலைத்தான் சொன்னவன். ஆனால் தம்பிராசு வுக்கு பாவக்காய்க்கள்ளன் முழுப்பொய் சொல்லுறான் எண்டது வடிவாத் தெரியும். ஏனெண்டால் இந்தப் பாவக்காய்க்கள்ளனுக்கு ஜெயலலிதா வீட்டுக்கு வந்துபோற மோட்டச்சைக்கிள் நம்பறுகள நோட் பண்ணி அதுகளெல்லாம் ஆராற்ற மோட்டச்சைக்கிளுகள், அந்தாக்க ளின்ர பின்னணியள், அரசியல் செல்வாக்குகளைப்பற்றியெல்லாம் வடிவாய் அறிஞ்சு பணக்காறக்கந்தசாமியாக்களோட டிஸ்கஸ் பண்ணு றதுதான் முக்கியமான வேலை. அப்ப அண்டைக்குக் காலமை பத்து மணியிலயிருந்து மத்தியானம் மதியந்திரும்பி இரண்டுமணிவரைக்கும் ஜெயலலிதாவின்ர வீட்டுக்கேற்றடியில நிண்ட சிவப்பு ஸ்கூட்டி நம்பறைமட்டும் பாவக்காய்க்கள்ளன் நோட்பண்ணாமல் விட்டிருப் பானோ? இதைத் தம்பிராசு ஜெயலலிதாவின்ர பொடியனோட கதைக் கேக்குள்ள அவனுக்குச் சொல்ல, ‘மாமா! இஞ்சை எனக்குச் சில பிசகுகள் இருக்கு. அதையெல்லாம் தீத்துப்போட்டு நிரந்தரமாய் உங்கை வரப்போறன். வந்து பாவக்காய்க் கள்ளனைப் பிடிச்சுக் கொட்டையை நசிச்சு நசிச்சுக் கேட்டு உண்மையைக் கக்கவைப்பன். அம்மாவை முடிச்சவன் எவ்வளவு பெரிய கொம்பனாயிருந்தாலுமிருக்கட்டும். முதல்ல குலையோட அவன்ர கோசானை வெட்டுவன். பிறகு கழுத்தை வெட்டுவன். வெட்டிப்போட்டு மறியலுக்குப் போனாலும் பறவாயில்ல’ எண்டு சொல்லியிருக்கிறான். அவன் செய்யக்கூடிய ஆள்தான். ஜெயலலிதாவின்ர பொடியனெல்லே? என்ன நடக்குதெண்டு பொறுத்திருந்து பாப்பம்.
ஜெயலலிதாவின்ர சவத்தை எரிக்காமல் தாழ்க்கச்சொல்லிக் கோட் உத்தரவுபோட்டது. செத்தவீட்டில ஜெயலலிதாவின்ர மனிசன்காறனை விடக் கூட அழுதது தம்பிராசுதான். கொஞ்சநாளெண்டாலும் தன்ர தாகத்தைத் தீத்த ஆகாயகங்கையாகத்தான் அவன் இப்பவும் ஜெயலலி தாவை நினைக்கிறான்.
இதெல்லாம் நடந்து பத்துவரியமாகுது. ஜெயலலிதாவைத் தாட்ட இடத்தில ஒரு புல்பூண்டு முளைக்காமல் மனிசன்காறன் சுத்தபத்த மாய் வைச்சிருக்கிறார். செத்தவீட்டுக்கு வந்த மனிசன் மாமிக்காறி தனிச்சுப்போனா எண்டு அவவோடயே தங்கிட்டார். பொடியனும் இப்ப தகப்பனோட ரெலிபோனில இடைக்கிடை கதைப்பான். ஜெயலலிதா கட்டத்தொடங்கின வீடு முடியிற நிலைக்கு வந்திட்டுது. அம்மாவை முடிச்சவனைத் தொலைச்சுப்போட்டுத்தான் புதுவீட்டில காலடியெடுத்து வைப்பன் எண்டு ஜெயலலிதாவின்ர பொடியன் கிட்டடியில தம்பிராசு வோட ரெலிபோனில கதைக்கேக்குள்ள சபதமெடுத்திருக்கிறான். இப்ப ஊருக்குள்ள வலு புளுகத்தோட திரியிற ஆள் ஆரெண்டால் அது பணக்காறக்கந்தசாமிதான். அவரின்ர வட்டித்தொழில் பழையபடி கொடி கட்டிப் பறக்குது.
***
–இராகவன்
இராவனின் பெரும்பாலான கதைகள் பரிசோதனைப்பாங்கான சிறுகதைகளே. ஆனால் இக்கதை ஒரு அசலான சிறுகதை. உண்மைச் சம்பவங்களை அடியொற்றி எழுதப்பட்டது. இதன் பொருள் கரடுமுரடானதாக பச்சை பச்சையாக இருந்தாலும் நல்ல கலையாக தேறுகிறது. வாழ்வின் கரடுமுரடான இருண்ட பக்கங்களையும் கலாபூந்வமாகப் பதிவதுதானே சிறுகதையும் கலையும்.