1) மலையாள இலக்கிய உலகம் தனக்கான பாதையினை மிக நேர்த்தியாக செப்பனிட்டிருக்கிறது. உங்கள் எழுத்துக்களும் இதற்கு சான்றாகிறது. எங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம்?
நான் ரொம்ப தாமதமாக இதை ஆரம்பித்தவன். எனது முதல் நாவல் அல்ஃபா 2003ல் வெளியாகும் போது எனக்கு வயது நாற்பத்தி மூன்று. எனது ஆரம்ப நாட்களில் இலக்கியம் முன்னுரிமையானதாக இருந்திருக்கவில்லை.கணிதம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நான் அதிக ஆர்வம் காட்டினேன். நான் இயற்பியலில் பட்டம் முடித்தேன். எனது இருபதாவது வயதில் ரயில்வேயில் சேர்ந்தேன். பொருளாதாரத்தில் எனது படிப்பைத் தொடர்ந்தேன். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எனது முதுகலைப்பட்டத்தை முடித்தேன். ரயில் போக்குவரத்து நிறுவனத்தில் போக்குவரத்து பொருளாதாரத்தில் ஒரு பாடத்தை முடித்தேன். நான் ஒரு டிக்கெட் சேகரிப்பாளராக டிக்கெட் பரிசோதகராக கிராண்ட் கன்ட்ரோலராக, துணை தலைமை கட்டுப்பாட்டாளராக, தலைமை கட்டுப்பாட்டாளராக பதவி உயர்வு பெற்றேன். எனது சேவையின் முதல் இருபது ஆண்டுகளில், நான் ரயில்வேயில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தேன், பொதுமக்களுக்கு ரயில் சேவைகளை மேம்படுத்தவும், ரயில்வேயின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் எனது உச்ச பங்களிப்பை வழங்கினேன். 2003ல் இந்தியாவின் சிறந்த ரயில்வே ஊழியருக்கான தேசிய விருதைப் பெற்றேன். ஆனால் ரயில்வேயில் உள்ள உள்ளக சிக்கல்களினால் எனது வழிமுறைகள் அல்லது எனது பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் எனக்கு விருது வழங்கியுள்ளனர், ஆனால் நான் சமர்ப்பித்த பரிந்துரைகள், அந்த மனப்பான்மையில் செயல்படுத்தப்படவில்லை. அதனால் நான் என்னுடைய ஆர்வத்தை இழந்தேன்.
இலக்கியத்திற்கான எனது பணியில் கவனம் செலுத்தினேன். போக்குவரத்து பொருளாதாரம் கற்றுக் கொண்ட பின், எனக்கு சில அரசியல் நலன்களும் உள்ளன. சீனாவில் பொருளாதாரம் பற்றி ஒரு ஆய்வையும், அவை எவ்வாறு பிழைத்தன என்பதையும் பற்றிய விரிவான ஆய்வையும் செய்துள்ளேன் .

2) பிரான்ஸிஸ் இட்டிகோரா – தமிழின் தீவிர வாசகர்களுக்கு தவிர்ந்து விட முடியாத படைப்பு. மலையாள சூழலிருந்து எப்படி உருவானது?
2003 இல் இலக்கியம் எழுதத் தொடங்கியிருந்தேன். என் முதல் நாவலான அல்ஃபா ஒரு anbanthropological நாவல். அல்ஃபாவை வெளியிட்ட பிறகு, இலக்கியம் தான் எனது இடம் என்பதை உணர்ந்தேன். இங்கே தான் நான் ஏதாவது செய்ய முடியும். அந்த நேரத்தில் தான் தெற்கு ரயில்வேயின் கால அட்டவணை கட்டுப்பாட்டாளராக நான் சென்னையில் பணிபுரிந்தேன். நான் தமிழை கொஞ்சம் கற்றுக்கொண்டேன். மேலும் தமிழில் உள்ள அறிவின் உதவியுடன் நான் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றினேன். பல எழுத்தாளர்கள், திரைப்பட பிரமுகர்கள், கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், பாரதிராஜா பாலு மகேந்திரா போன்ற திரைப்பட இயக்குநர்கள், இளையராஜா மற்றும் பல எழுத்தாளர்களை செவ்வி கண்டிருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, அகலியே பெரியவன், சல்மா, மனுஷ்யபுத்ரன் போன்ற எழுத்தாளர்களுடைய நேர்காணல்களை தமிழில் இருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்தேன். 2003 முதல் 2006 வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நான் இந்த இலக்கிய இதழியல் மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து கொண்டிருந்தேன். நான் கிட்டத்தட்ட அறுபது நேர்காணல்களைச் செய்துள்ளேன். மேலும் ஷோபா சக்தியின் “இம்” நாவலை மலையாளத்திற்கு மொழிபெயர்த்திருந்தேன். 2006 ஆம் ஆண்டில் நான் இந்த மொழிபெயர்ப்புகள், ஊடகத்துறை மற்றும் நேர்காணல் வகை படைப்புகள் அனைத்தையும் நிறுத்திவிட்டேன். ஏனென்றால் இது எனது எழுத்து வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கிறது என்று நினைத்திருந்தேன். ஏனென்றால், அந்த நேரத்தில் “பிரான்சிஸ் இட்டிகோரா” என்ற மற்றொரு நாவலை எழுத நான் திட்டமிட்டிருந்தேன். அந்த நாவலை எழுத, மற்ற எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டேன். அந்த நாவலை எழுத எனது முழு நேரத்தையும் அர்ப்பணித்தேன். பிரான்சிஸ் இட்டிகோரா என்பது உலக முதலாளித்துவத்தைப் பற்றிய ஒரு நாவல். இது போட்டி மற்றும் வன்முறையை வெட்டுகிறது. இட்டிகோராவை எழுத நான் மலையாளத்தில் வெளிப்பாடுகளைப் பயன்படுத்தினேன். கணிதம் மற்றும் உலக அரசியல் மூலம் கற்பனையுடனான எனது தொடர்பு இந்த நாவலில் பிரதிபலிக்கும். இதை தவிர இட்டிகோரா பற்றி நான் வேறு எதுவும் சொல்லவில்லை. உங்களைப் போன்றவர்கள் புத்தகத்தைப் படித்து ரசிக்க வேண்டும்.

3) பிரான்ஸிஸ் இட்டிகோரா உண்மையான வரலாற்றுடன் கலந்து போன புனைவிலக்கியம் என்கிறார்களே. இதன் உண்மை
கதையை கூற முடியுமா?
இட்டிகோரா ஒரு பரிசுத்தமான புனைகதை. அந்த நாவலில் வருகிற நம்பகமான கூற்றுக்கள் எல்லாம் வரலாற்று ரீதியானது அல்ல. ஆனால் வரலாற்று உண்மைகள் மற்றும் கதைகள், கற்பனைகள், அந்தக் கதையை வாசகருக்கு உறுதியுடன் சொல்ல நான் பயன்படுத்திய அனைத்தும் புனையப்பட்டவை. இட்டிகோரா என்பது ஒரு குறிப்பிட்ட உண்மையைப் பற்றியது. “பதினெட்டாம் கூற்றுக்கா”. குன்னங்குளம் எனது சொந்த இடம், இது வர்த்தகத்தில் மோசடிக்கு, பிரபலமான போலிகளுக்கு பிரபலமானது. சர்வதேச, பன்னாட்டு கூட்டுறவு வர்த்தக அரசியலை பரப்புவதற்கு அந்தக் கதையை ஒரு உருவகமாகப் பயன்படுத்தினேன். அந்த நோக்கத்திற்காக நான் உலகம் முழுவதும் பயணம் செய்யும் “பிரான்சிஸ் இட்டிகோரா” என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினேன். மிளகு விற்பதாக மற்றும் ஒரு வழிபாட்டு தளம் அந்த காலங்களில் கணிதத்தில், மற்ற எல்லா விஷயங்களிலும் நன்றாக வேலை செய்திருப்பார்கள்.

4) யதார்த்தங்களை விட்டு நவீன இலக்கியங்களின் புதுமையான பார்வைக்கு மலையாள உலகம் எந்த தருணத்தில் மாற்றம் பெற்றது?
மலையாள இலக்கியம் ஒரே நேரத்தில் யதார்த்தவாதம் மற்றும் கற்பனை வாதம் சார்ந்து முதன் முதலில் வருகிறது. எங்கள் முதலாவது நாவலாசிரியர் சி வி ராமன் பிள்ளை. அவரது வரலாற்று மற்றும் கற்பனைவாத பாணி மிகவும் திறம்பட “மாதந்தா வரமா”, “தர்மராஜா” போன்ற அவரது நாவல்களில் இருந்ததை போல அந்த பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது. எம்.டி. வாசுதேவா நாயர், எம். முகுந்தன், கே.ஆர். மீரா,தற்போதைய எழுத்தாளர்களான பென்யாமென், சுபாஷ் சந்திரன் போன்ற நாங்கள் எல்லோரும் வாழ்க்கையின் நவீன சிக்கல்களைப் பரப்புவதற்கு பயனுள்ள விதத்தில் கற்பனைவாத, மாய யதார்த்தவாதத்தைப் பயன்படுத்துகிறோம்.
தலித்தியம் பற்றி அல்லது பரவசங்கள் பற்றி எழுதுவது. வெளியூர்களுக்கு போய் குடியேறியவர்கள் பற்றி குறிப்பாக பென்யாமின் போன்றவர்கள் மத்தியகிழக்கு பற்றி எழுதியிருக்கிறார்கள். இதற்கு முன்னர் மத்திய கிழக்கில் இருந்தவர்கள் கேரளத்தை பற்றி தான் எழுதியிருந்தார்கள். அவர் ஆடு ஜீவிதம் நாவலினூடே மத்தியகிழக்கு வாழ்வின் கடினங்களை நன்றாக எழுதியிருந்தார். அந்த வகையில் நிறைய இளம் எழுத்தாளர்கள் மலையாளத்தில் இருக்கிறார்கள். இப்போது கூட மீஸானின் நாவலொன்று வந்தது. S. ஹரீஷ் கு இந்த முறை JCB விருது கிடைத்தது. இந்த JCB விருது பரிசுத்தொகை இருபத்தைந்து லட்சம். மூன்று வருடமாகிவிட்டது.இந்த இரண்டு தடவைகளும் மலையாளிகளுக்கே கிடைத்தது. முதலில் பென்யாமின் பிறகு ஹரீஷ். கே ஆர் மீராவின் நாவல் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. மனுஷ்யன்ன ஒரு ஆமுகம் தந்த சுபாஷ் சந்திரன் ஒரு முக்கியமான எழுத்தாளர். மனிதனைப் பற்றிய ஒரு அறிமுகம். பெரும்பாலான இளம் எழுத்தாளர்களினுடைய நூல்கள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. மீராவுடை ஆராச்சார் நாவல் ஹையர் வூமன் என்று மொழிபெயர்க்கப்பட்டது. பென்யாமினின் ஆடு ஜீவிதமும் முல்லை பூ நிறமுள்ள பகல்களும் ஆங்கிலத்தில் வந்துள்ளன. மலையாள இலக்கியம் முன்னோடியாக இருக்கிறது. எனது நாவல் சுகந்தி கடந்த ஆண்டு டி.எஸ்.சி சவுதசியன் பரிசின் பட்டியலில் இருந்தன.மலையாள எழுத்தாளர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் நன்றாக எழுதுகிறார்கள், அவர்களுக்கு உலக இலக்கியத்தின் தரம் தெரியும் மற்றும் மலையாள எழுத்தாளர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் உணர்கிறேன்.

5)உங்களுடைய படைப்புக்கள் தமிழில் பெரு கவனயீர்ப்பினை பெற்றிருக்கின்றன. இதனை எப்படி உணர்கிறீர்கள்?
என்னுடைய நாவல் தமிழில் படிக்கப்படுவது கேட்க சந்தோசமாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல, இலங்கை சிங்கள வாசகர்களிடமிருந்தும் சுகந்திக்கு சிறந்த பதிலைப் பெற்றேன். மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆங்கில வாசகர்கள் பாராட்டினர். எங்கள் எழுத்துக்கள் தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் போன்ற பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டால், அது ஒரு சிறந்த அடைவை பெறும். எனவே எனது புத்தகங்களை தமிழில் படித்து தமிழில் விவாதித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாவல்களில் நான் எழுப்பியுள்ள சிக்கல்களில் சில வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. ஆனால் அவை விவாதிக்கப்படுகின்றன. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

6) வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி. வாசுதேவன் நாயர் படைப்புக்கள் தமிழில் ஏற்படுத்திய தாக்கம் போன்று; தமிழ் இலக்கிங்களும் படைப்பாளிகளும் மலையாள உலகில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனரா?
வைக்கம் முகமது பஷீர் மற்றும் எம்.டி. வாசுதேவ நாயர் போன்றவர்கள் தமிழில் நன்கு படிக்கப்பட்டு அவர்களின் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தின. சக்கரியாவின் கதைகளும் தமிழில் நன்றாகப் படிக்கப்படுகின்றன. தமிழ் எழுத்தாளர்கள் பலரும் மலையாளத்தில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். மேலும் சுந்தர ராமசாமியின் புத்தகங்கள் மலையாளமாத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகிலனின் நாவல், நவீன எழுத்தாளர்களான ஜெயமோகன், மனுஷ்ய புத்ரான், சல்மா, பாமா, அகலிய பெரியவன், குட்டி ரேவதி மற்றும் அனைத்து எழுத்துக்களும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கு சுந்தர ராமசாமியின் எழுத்துக்கள் நன்கு விவாதிக்கப்பட்டன. மேலும் புதிய தலைமுறை எழுத்தாளர்களும் மலையாள இலக்கியங்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். சாரு நிவேதிதாவின் படைப்புகள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் மற்றும் ஜெயமோகனின் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அவை எல்லாமே மலையாள இலக்கியங்களையும் பாதிக்கும்.

7) பிரான்ஸிஸ் இட்டிகோராவிற்குப் பிறகான எழுத்து முயற்சிகளில் பின்நவீன இயங்குளதம் எப்படியெல்லாம் மாற்றமடைந்திருக்கிறது? இட்டிகோரா 2009 இல் வெளியிடப்பட்டது. தற்போதைய நிலைமைகள் நிறைய மாறிவிட்டன. இட்டிகோரா வெளியிடப்பட்டபோது பாலியல், அறநெறி போன்றவற்றைப் பற்றி விவாதிக்க நம் சமூகம் அவ்வளவு திறந்திருக்கவில்லை. தொழில்நுட்பத்தை குறிப்பாக தகவல்தொடர்புகளில் பயன்படுத்துவது அந்த நாட்களில் அதிகம் இருக்கவில்லை.. 2021 ஆம் ஆண்டில் எல்லாமே மிக விரைவாக மாறியதுடன், அறநெறி, பாலியல் போன்றவற்றைப் பற்றிய எங்கள் கருத்துக்கள் மாறிவிட்டன, நாங்கள் விவாதிக்கத் தயாராக உள்ளோம். நான் ஃபிரான்சிஸ் இட்டிகோராவை வெளியிட்டபோது கேரளாவில் உள்ள தார்மீகவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஏனென்றால், நாங்கள் பாலியல் வர்த்தகத்தை வேறு விதமாக பிரச்சாரம் செய்கிறோம் என எதிர்த்தனர். இப்போது அந்த விஷயங்கள் மிகவும் மாறிவிட்டன, சமூகம் இன்னும் திறந்திருக்கிறது. மேலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

8) எங்களது வனம் இதழ் மின்னிதழாக செயற்படுகிறது. நவீன தளத்தினில் மின்னிதழ் வாசிப்பினை எப்படி பார்க்கிறீர்கள்?
மின்- இதழ்கள் இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டன. அச்சு இயற்கையாகவே வழக்கற்றுப் போகும். மின் இதழ்கள் அது இன்னும் ஆதிக்கம் செலுத்துவதாக பலரை சென்றடையத்தக்கதாக இருக்கும்.
நாம் சுற்றுச்சூழலுக்கு நேசகரமாக இருக்க முடியும். மேலும் போக்குவரத்து நேரம் குறைவாக உள்ளது. அதுதான் மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன். உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் மக்கள் படிக்க முடியும். ஒரு நாளில் வெளியிடப்பட்ட ஒரு மலையாள பத்திரிகை மின் இதழில், உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்கு பதில் கிடைத்தது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க மக்கள் இதழை வெளியிட்டு சில நொடிகளில் பதிலளித்தனர். எனவே ஒரு குளோபல் ரீடர் இ-பத்திரிகையை உரையாற்றுவது இப்போது அவசியம். சமீபத்தில் மலையாளத்தில் இப்படியான முயற்சிகள் நடக்கின்றன. மற்றும் இவை இல்லாவிட்டாலும் இ- பத்திரிகை வெளியீட்டிலும் புதிய சிக்கல்களை நிவர்த்தி செய்கின்றன.

9) குடும்பத்தின் ஆதரவின் காரணமாக மட்டுமே, எனது இலக்கியப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. என் மனைவி ஆனந்த வள்ளி நன்றாக துணைபுரிகிறார். என் குழந்தைகள், என் மகன் விஷ்ணு மற்றும் மகள் சூர்யாவும் எனது இலக்கிய நடவடிக்கைகளில் எனக்கு ஆதரவளிக்கின்றனர். விஷ்ணு பஹ்ரைனில் இருக்கிறார். சூர்யா ஐ.ஐ.டி மெட்ராஸில் வேதியியல் பொறியியலில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். இன்னும் நாங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். இப்போதெல்லாம் இளைஞர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை என் மகன் மற்றும் மகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் முன்னுரிமைகள் மற்றும் அவர்கள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள். ஏனென்றால் எனக்கு வயது இப்போது அறுபது. எனது இலக்கு வாசகர் இருபது முதல் முப்பது வயது வரை உள்ளவர்கள். அந்த வாசகர்களை பேசவைக்க, இப்போதெல்லாம் இளைஞர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். என் மகள் மற்றும் என் மகன் அது குறித்து எனக்கு நிறைய உதவி செய்கிறார்கள்.

-எழுத்தாளர் ட்டி.டி.ராமகிருஷ்ணன்

நேர்காணல் மற்றும் மொழிபெயர்ப்பு-
சாஜித் அஹமட்
ஷாதிர் யாசீன்
சப்னாஸ் ஹாசிம்

Please follow and like us:

2 thoughts on “நவீன சிக்கல்களை பரப்புவதற்கு பயனுள்ள விதத்தில் கற்பனைவாத மாய யதார்த்தவாதத்தைப் பயன்படுத்துகிறோம்

  1. சிறந்த பதிவு இலக்கியம் சார்ந்த ஒவ்வொருவரும் அறியவேண்டியதொடக்க இலக்கியப்பதிவு,மகிழ்ச்சியுடன் நன்றிகள் இருவருக்கும்

  2. சிறப்பான நேர்காணல் அவருடைய நாவல்களின் உள்ளிருந்து கேள்விகள் கேட்டிருந்தால் மேலும் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *