இந்தோனேசியா பாதாம் கப்பல் துறைமுகத்தில்பயணிகளின் கூட்டம் வழிந்துக்கொண்டிருந்தது. சிங்கப்பூரில் இருந்தும் ஜோகூரில் இருந்தும் ஒரு மணிநேரபிராயணத்தில் தொட்டுவிடும் தீவு. மணிக்கொருமுறைகப்பல்கள் வந்துப்போய் கொண்டிருந்தன. யாரேனும்தங்களை பின் தொடர்கிறார்களா என்று பார்ப்பதற்க்காகதுறைமுகத்தில் காதரதிருந்த ஆஷிக் மட்டும் மேலேயும்கீழேயும் இரண்டு அடுக்கு துறைமுகத்தின் கட்டிடத்தில்நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்

     வழமையான வெள்ளிகிழமை என்றால் இந்நேரம் ஆஷிக்சாங்கி விமான நிலையத்தில் தான் நின்றிருப்பான்.பெரியஅழகு என்று சொல்லா விட்டாலும் களையான முகம்அவனுக்கு. நகரின் நெரிசல் மிகுந்த இந்திய பொருட்களின்சந்தையில் அவனை அவ்வப்போது  பார்க்கலாம். கழுத்தில்இரண்டு பெரிய வெள்ளி சங்கிலி.கருப்பு கல் பதித்த வெள்ளிமோதிரம். ஒட்ட வெட்டிய தலையில் பின்புறத்திலிருந்துஅவனை பார்த்தால் ஒரு உடும்பு கோட்டை சுவரில்ஏறுவதுபோல் அவனது சிகையலங்காரம் தோற்றம் தரும். உடும்புடைய வால் அவனது பின்புற குஞ்சம், அவனதுசட்டை காலரில் தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு மலிவானஜீன்ஸ் அணிந்திருப்பான். அலட்டல் இல்லாத நடை. இடப்புறத்திலிருந்து வலப்புறமாக ஒரு தோல்பையைதொங்கவிட்டுக்கொண்டு அங்குமிங்குமாகவிமானநிலையத்தில் நடந்துக்கொண்டிருப்பான். அவனுடைய தோரணை அவன் செய்யும் வியாபாரத்திற்குஅப்படித்தான் இருக்கவேண்டும். பார்க்க படிச்சவன் மாதிரிஇருக்கணும் என்பதற்காக கையில் ஒரு ஆங்கில நாளிதழ்ஒன்றை சுருட்டி வைத்திருப்பான். பேப்பரைவிரித்துக்கொண்டு அங்கும் இங்குமாக நோட்டமிடுவான். விமானநிலையத்தில் பெரிதாக வேலை இல்லையென்றால்அந்த பேப்பரை அப்படியே விரித்து வாசலில் உறங்கஆரம்பித்துவிடுவான். அவன் அப்படியொன்றும் விமானநிலையத்தில் பெரிய அதிகாரியாக எல்லாம் இல்லை

திருச்சியாண்ணே..’

 ‘சென்னையா..’ 

 ‘மூவாயிரம் கமிஷன், சரக்க வெளில கொடுத்துட்டு கையிலபணத்த வாங்கிகலாம்.. ‘

 ‘இதுல பயப்பட என்னா இருக்கு.. கவர்மெண்ட சட்டப்படிஅஞ்சு பவுனு.. செக்கிங்ல சிக்குனா வரி என்னவோ அதகட்டப்போறீங்க ..’ இப்படி ஏர்போர்ட்டில் ஆஷிக் வீசும்வார்த்தைகளில் சிக்குபவர்களை அப்படியே விமானநிலையமுனையத்தின் கழிவறைக்கு அலேக்காக கொண்டுப்போய்மஞ்சளை எப்படி பார்ட்டீயிடம் சேர்ப்பது என்று பாடம்எடுப்பான். பெரும்பாலும் அவனிடம் சிக்கும்பயணிகள்,நாள்பட்டு விடுமுறைக்கு ஊர் திரும்பும்  கட்டடதொழிலாளர்களாக  அல்லது கப்பல் கட்டுமானதொழிலாளர்களாக இருப்பார்கள். கழிவறை பேப்பர் ரோல்சுருளுக்கு மத்தியில் நிற்கும் கண்ணாடிகளில் ஒன்றில்பயணிகளை நிறுத்தி, ஒரு தங்க சங்கிலியை கழுத்தில்மாட்டிக்கொண்டு எவ்வாறு செக்கிங்கில் கண்ணில்மண்ணை தூவிவிட்டு நகர்வது என்பதை தத்ரூபமாகநடித்துக்காட்டுவான் அல்லது ஆசனவாயிலில்ஒட்டிகொண்டிருக்கும் தங்கம் எப்படி ஸ்கேனரில்தப்புகின்றது என்பதை ஒரு ஆசிரியர் போல் விளக்கும்அவனது புலமை, அவன் தங்கும் கேம்பல் லேன்  அடுக்குபடுக்கை கொண்ட நெரிசலான அறையில் குவிந்துகிடக்கும் ஆங்கில தினசரிகளை  பார்த்தால் தெரிந்துவிடும். இவனை போன்று அவன் தங்கியிருக்கும் அறையிலிருந்துபோக்குவரத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளிலேயேஆங்கில நாளிதழ்  படிக்கும் வியாபாரி என்றால்  இவன்ஒருவனாக தான் இருக்கும்

‘.. நிறைய பொருளாதார கட்டுரைகளை படிச்ச வகையில்சொல்றன். பொருளாதாரம் எப்ப பண்டமாற்று முறைக்குமாறுதோ. அப்ப கடத்தல் யாவாரம் நின்றிடும்’ 

‘..இல்லனா மட்டும் நாம என்ன கடத்தாமலாஇருக்கபோறோம்.. பண்டமாற்றுல எது அதிக மதிப்புக்குபோகுதோ அத இறக்கமாட்டோமா’  என்று காரசாரமாகவியாபாரிகளுக்குள் கடத்தல் வியாபாரம் விவாதமாகபோனால், கையில் சுருட்டியிருக்கும் ஆங்கில பேப்பரைவிரித்துக்கொண்டே மெதுவாக அங்கிருந்துநகர்ந்துவிடுவான்.நாம் எதற்காக போராட வேண்டும். மனிதனுக்கு எது தேவையோ அதற்காக போராடுவதேஅறமும் தர்மமும். வெள்ளையன் காலத்தில் சுதந்திரம்தேவைப்பட்டது என்றால் நம் காலத்தில் இழிவைபோக்குவதற்கு பணம் மட்டுமே பிரதான தேவை என்றுநம்பினான்

   செந்தில், ‘ கட்டையன் போன எடுக்கலயா மாப்ள.. ‘  என்று கேட்டுவிட்டு, துறைமுகத்தின் வாசலில்எச்சிலைதுப்பியபின் அதன் படிகளிலே ஏறி  குத்து காலிட்டுஅமர்ந்துக்கொண்டான் . ‘ஆமாம்..’  என்று ஆஷிக் தலைமட்டும் ஆடியது. ஜோகூர் துறைமுகத்திலிருந்து காலையில்கப்பல் ஏறும் போது ஆங்கில நாளிதழ் கிடைக்காமல் , வாங்கி சுருட்டிய மலாய் தினசரி அவன் கையில் இருந்தது. அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனுடன்ஒரு பூனையும் சேர்ந்துக்கொண்டது. ‘சாப்பிடு ..’ என்றுகையில் இருந்த ஒரு ரொட்டியை பூனைக்குபிய்த்துப்போட்டான்நேரமாகிக்கொண்டே இருப்பதால்துறைமுக வாசலில் கிடந்த டாக்சியை எடுத்துக்கொண்டுநகோயாவுக்கு சென்று விடலாம் என்று அவனுக்குதோன்றியது. இறுதியாக சரக்கோடு போய் சேரவேண்டியஇடம்

     அவனுக்கு லேசாக கண்களில் கசிவு. காலையிலேயேஅவனுக்கு அத்தா ஞாபகம் வந்திருந்தது. வெளியில்காட்டிக்கொள்ளாமல் சமாளித்தான்ஏனென்றால்அவர்தான்  ’இன்னும் இறைவனின் மன்னிப்பு கதவு திறந்துதான் கிடக்கின்றது. இந்த தொழில் சகவாசம்எல்லாத்தையும் விட்டு திரும்பி வந்துடேன் .. இது நான்உனக்கு காட்டுன தொழில் இல்ல.. நீ நிக்கிற இடம் வேறஎன்று அவனிடம் வந்து ஒருமுறை கையை பிடித்தார்

  பாதாம் துறைமுகத்தை சுற்றியும் கடல் ,தூரத்தில் எங்கோபள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு. தான் தவறவிட்டபாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிசெல்கின்றது.அவனுடைய அத்தா பள்ளிவாசலின்உள்விதானம் நிழல் படியும் தரையில் , ஒரு விரிப்பில்முழங்காலிட்டு பிரார்த்திப்பவராக தெரிகின்றார். கடலின்ஓரத்தில் படகில் இருந்த மீனவன்வலையை தூக்கிகடலுக்குள் எறிகின்றான். வலை முக்காலத்திற்கும் அப்பால்போய் விழுகிறது. இனி என்றும் மீட்க முடியா தூரத்தில்போய் அவனுக்குள் விழுகின்றது. பாதை மெல்ல கடலுக்குள்சரிகின்றது. உண்மையில் மனிதனுக்குஇரக்கம்,அன்பு,கருணை அவனை தீண்டும்போது மனிதன்பலவீனமடைந்துவிடுகின்றான். அப்படித்தான் ஒருமுறைஆஷிக் செந்திலிடம் கேட்டான்.

அத்தா பேச்சை கேட்காம இந்த இடத்துக்கு வந்துட்டேன். கிடைக்கிற பணத்துல ஏதாவது  புண்ணியம் பண்ணிட்டு .. பேசாம ஊர் பக்கம் போய்டலாமா.. உனக்கு அப்படி ஏதும்எண்ணம் இல்லயா.. ‘ ஆனால் செந்தில் அதற்கு தந்தபதிலோ வித்தியாசமானது

ஊர்ல யார் இருக்கா ..இருந்தது ஒரு ஆத்தா கெழவி.. அதுவும் போய் சேந்துடுச்சு..இங்கின நான் லேபரா வந்துகுடிச்சிட்டு அடிதடி சண்டயில மாட்டினப்ப ஊர் காரன வந்துஉதவுனான்.?. சரவணன் தான் மீசுங்ட்ட சொல்லி ஜாமீன்எடுத்தான்.. புண்ணியம்னு ஒன்னு பண்ணா சரவணனுக்குபண்ணனும்.. ஆனா அவனும் இப்ப உள்ள இருக்கான்.. யாருக்கு நான் இப்ப புண்ணியம் பண்ணுறது..பாவம்புண்ணியம்லாம் வேலைக்கு ஆகாது ‘ 

   செந்தில் மன்னார்குடியிலிருந்து கன்ஷ்ட்ரக்சன்கம்பெனிக்கு டிரைவராக தான் வந்தான்.’..ஏம்ளே அவனுக்குசுழி .. ஓரெடத்துல தங்கமாட்டான். அவனுக்கு பர்மிட்எடுத்த தெண்டத்துக்கு எத்தன பேருக்கு நான் பதில்சொல்ல..அவனுக்கும் எனக்கும்  எந்த சம்மந்தமும்இல்ல..என்ன இதுலேர்ந்து எம்மி விட்டுக்குங்கஎன்று அவன்குடிசண்டையை விசாரிக்க வந்த போலீசிடம் சத்தம்போட்டார் ஏஜண்ட் ராமசாமி

      ஜாமினில் வெளியே எடுத்துகேஸ் முடியுறவரைக்கும்.. இங்கின வேல பாருஎன்று மீசுங்கிடம் சரவணன் தான்செந்திலை சேர்த்துவிட்டான். கிச்சனர் ரோட்டிலிருந்துபுக்கிட் திமா ரோடு வரை மீசுங் கட்டுப்பாட்டில் வரும். எவ்வளவு பெரிய தகராறாக இருந்தாலும் அவன் பேசியேதீர்த்து வைத்து விடுவான். அவனால் முடியாத காரியம் என்றுஎதுவும் இல்லை. மீறினால் மேலே தகவல் அனுப்பிவிடுவான். டன்லப் தெருவுக்கும் டிக்சன் தெருவுக்கும் நடுவில் ஒட்டியசந்துக்கு செந்தில் தான் பொறுப்பு. லைனில்அழகிகள்,திருநங்கைகள் என்று வியாபாரம் கனஜோர். ஜாமீனில் வெளிவந்தபோது செந்தில் மீசுங்கிடம்புகையிலை வியாபாரத்திற்கு தான் சேர்ந்தான். சந்துக்குசந்து நின்றுன்ஸ்..ன்ஸ்என்று புகையிலை விற்கவேண்டும். செந்தில் கொஞ்சம் முன்னேறி, ஊரிலிருந்து சினிமாநடிகைகள், டிக்டாக் பிரபலங்களை இறக்கி மீசுங்கிற்குஏற்பாடு செய்துகொடுத்தான்

    மேலிடம் யார் கீழிடம் யார் என்று தெரியாத இந்தஅடுக்குகள் நிறைந்த வியாபாரம் சிலந்தி வலை பின்னல்மாதிரி. யாருக்கும் ஒண்ணும் புரியாது. வெறும் தங்கம் மட்டும்இறக்கி வியாபாரம் பார்த்த ஆஷிக்கிற்கு இதெல்லாம் புதிது. அவரவர் வட்டத்திற்குரிய ஜோலியை சரியாக புரிந்துவைத்துக்கொள்ள வேண்டும் இப்படித்தான் ஆஷிக்கிற்குதொழில் சொல்லிக்கொடுத்தான் செந்தில். மீசுங்கிடம்செந்திலும் ஆஷிக்கையும் போல இருபது முப்பது லேபர்கள்தேறும். யாருக்கும் யாரையும் பெரிதாக அறிமுகம்செய்துவைக்கமாட்டார்கள் தேவையிருந்தாலொழிய. திடீர்திடீரென்று புதிதாக மனிதர்கள் நாய்குடைகள் போல்முளைப்பார்கள். ஒருநாளில் அவர்கள் எங்கிருப்பார்கள்என்று யாருக்கும் தெரியாது. அடுக்குகளில் ஒருவர் இடத்தைநிரப்புவதற்கு மற்றொரு வரிசை காத்திருக்குமே தவிரகாலியாக இருக்காது. எல்லாவற்றையும் தானாகநிரப்பிக்கொள்ளும் பேராற்றல் அந்த வலைக்கே உரியது

    செந்திலை, ஜெயிலுக்குள் இருந்து பிணையில் மீட்டுஎடுக்க சரவணன் மீசுங் உடன் ஒப்பந்தம் போட்டது போல். இப்போது சிறையிலிருக்கும் சரவணனை மீட்டெடுக்கும்செந்திலின் முறை இப்போது. ஆனால் ஆஷிக் விவகாரம்அப்படியல்லஅவன் தந்தை அவனை சென்னை பர்மாபஜாரில் கொண்டுபோய் விடும்போது அவனுக்கு வயது 19 இருக்கும் . அப்போது அவனுக்கு களங்கமில்லாத கைகள்தன் தந்தையை போலே, முதலில் அவன் பஜாரில்எலெக்ட்ரானிக் சாமான்கள் விற்பதாக தான் அவனது அத்தாநினைத்துக்கொண்டிருந்தார். அவர் அப்படி தான் சிறியஅளவில் வெளி நாட்டு சாமான்களை விற்பனை செய்துகொண்டிருந்தார். கொஞ்சம் அவர் தளர்ந்ததும் இவன்தந்தை கடையில் ஏறி அமர்ந்தான். இவன் பஜாரில் சேட்டுகூட உலா வருவது அவருக்கு ஏனோ பிடிப்பதில்லை. அவனை கண்டித்தார். . இத்தொழிலில் குறுக்கு வழியில்சம்பாதித்து பெரிய ஆளாகும் எண்ணம் எங்கோ ஒருமூலையில் துளிர் விட்டுவிடும். ஆஷிக் வலசை பறவைகளைஇறக்குவதுபோல் அவனுடைய ஆட்கள் கால்களில்மஞ்சளை கட்டி விமானத்தில் இறக்கிக்கொண்டேஇருந்தான். மீசுங் கொடுத்த சரக்கில் ஆஷிக்கும் சேட்டும்கடத்தல் தங்கத்தில் நன்றாக கல்லா கட்டினான். ஆஷிக்புதியதாக மானம்பு சாவடியில் புதியதாக வீடு கிரகபிரவேசம்செய்தான். அன்று இரவு அவனுக்காக ஒரு புதிய மஞ்சள் நிறஆல்டோ காரை வீட்டின் முகப்பில்  சேட்டுநிறுத்தியிருந்தான்.சேட்டு தலை வீட்டில் தெரிந்ததும்ஆஷிக்கின்  அத்தா , விசேஷத்திற்க்கு கூட நிற்காமல்வீட்டை விட்டும் போனதை அவனது  உம்மா ஒரு நல்லசமிஞை இல்லை என்று இன்றளவும் நம்புகிறாள். ஆனால்அவன் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் காலம்எல்லவற்றையும் சரிப்படுத்தும் என்று நம்பினான். ஆனால்காலம் அவனுக்கு வேறு ஒரு ஏற்ப்பாட்டை வைத்திருந்தது.

   திட்டமிட்டபடி என்றாலும் இந்நேரம் மீசுங் அனுப்பிவைத்த   பார்ட்டி பாதாம் துறைமுகம் வந்துஇருக்கவேண்டும். ஏதோ திட்டத்தில் குளறுபடி என்பதுமட்டும் அவனுக்கு தெரிந்தது. ஆனால் சீக்கிரம்சரியாகிவிடும் என்று ஆஷிக் நம்பினான். செந்தில் இப்போதுகையில் இருந்த பையுடன் ஒரு நாற்காலியில் தூக்கஅசதியில் அமர்ந்திருந்தான். ஆஷிக் ,அவனது நிழல்துறைமுகத்தின் வாசல் படியில் இரண்டாக மடித்து துண்டாகவிழுந்தது. மீசுங் போன் சுத்தமாக தொடர்பு எல்லைக்குஅப்பால் இருந்தது. மீசுங்  பிரச்சனைகள் என்று வரும்போதுதயங்காமல் எல்லோருக்கும் உதவுவான். ஆனால் எல்லாஉதவிகளையும் ஒரு ஒப்பந்ததிற்க்குள் கொண்டுவந்துவிடுவான்.அவனிடம் கையைழுத்திட்ட எத்தனைபத்திரங்கள் இருக்கின்றது. எல்லோருக்கும்  ஒரு ஒப்பந்தம்ஒரு முத்திரையிட்ட பத்திரம் மீசுங்கிடம் இருப்பதுபோல்ஆஷிக்கிற்கும், அவன் வாங்கிய கடனுக்கு இருந்தது. மீசுங்கின் ஒப்பந்தம் மீறினால் என்னவாகும் என்பதைதெரிந்தவர்கள் யாரும் உயிரோடிருப்பதாய் தெரியவில்லை

    சேட்டு, மஞ்சள் வியாபரத்தில் சிறிய அளவில்இறக்குவதை விட பெரிய அளவில் இறக்கி பார்க்கலாம்என்று ஆஷிக்கிடம் ஆசைகாட்டினான். மீசுங்கும்இங்கிருந்து சரக்கு அனுப்பி வைக்க ஒத்துக்கொண்டான். சுங்கத்துறை விமானநிலையத்தில் ஏக கெடுபிடியாய்இருந்த காலத்தில் ஆஷிக் புதிய யுத்திகளை கையாண்டான். இங்கிருந்து திருச்சி போய் நிறுத்தி மீண்டும் சென்னைசெல்லும் டிரான்சிட் விமானங்களில் தன்னுடைய ஆள்களைஏற்றினான். திருச்சியிலிருந்து அதே விமானத்தில் சென்னைசெல்பர்களிடத்தில் இங்கிருந்து மஞ்சள் எடுத்து செல்லும்பயணிகளின் டிக்கெட் மற்றும் இருக்கை விவரங்கள்தரப்படும். மிகசரியான நபர்களை சந்திப்பார்கள். மஞ்சள்கைமாறும். மற்றொரு முறை தங்கத்தை திரவம் போல்உருக்கி தேங்காய்ப்பூ டவலில் முங்கி எடுத்து கடத்தினான். மண்ணடியில் திரவத்தை வைத்து தங்கத்தை சேட்டிற்குபிரித்துக்கொடுத்தான். அவன் நினைத்ததுகொஞ்சகாலத்திலேயே புதிய எதிரிகளும் அவனுக்கு  முளைத்தார்கள். ஆஷிக்கின் குருவிகள் விமானநிலையத்தில் இறங்கும் போதெல்லாம் யாரோ கொடுத்ததுப்பில் சொல்லிவைத்தாற்போல் சரக்குகள்சுங்கத்துறையிடம் சிக்கியது. கடுமையான நஷ்டம். வீட்டைவிட்டு வெளியில் வரவே அவன் பயந்தான். பிடிபட்ட அவனதுசரக்குகள் வரிசையாக சுங்கத்துறை குடோனில் ஏறியது. நன்றாக இருக்கும் காலத்தில் இருந்த சேட்டும், பிரச்சனைவந்தவுடன் அவனுக்கு தெரிந்த சேட்டும் இரண்டும் வேறுவேறு மனிதர்களாக தெரிந்தார்கள். ஊரில் தனக்கு தெரிந்தலாயரை புழல் சிறைக்கே மீசுங் அனுப்பிவைத்தான். ஆஷிக்சிறையிலிருந்து வெளியாகியதும், ஏஜெண்ட்டிடம் கூறிவொர்க் பெர்மிட் ஏற்பாடு செய்துக்கொடுத்து இங்கு ஆஷிக்வாங்கிய கடனுக்கு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டான்.

 

   நகோயாவுக்கு செந்திலும் ஆஷிக்கும் டாக்சியில் ஏறிபுறப்பட்டனர், நகோயா பாதாம் தீவின் இன்னொரு ரகசியஉலகம். ஒரு வேளை கப்பலில் அவர்களுக்கான அடுத்தஉத்தரவு வரவில்லை என்றால் நகோயா மாலுக்கு அருகில்இருக்கும் கரோக்கி பப்புக்கு போக சொல்லி இருந்தான்மீசுங். ஆஷிக் கையில் துண்டுசீட்டு,புரியாத எழுத்துருவும்துரியன் பழம் படமும் ஒரு சங்கேத குறிப்பு மன்டரின்மொழியில் இருந்தது. அவர்களின் மாற்று திட்டம் அது. எதிர்பாராதவிதமாக மீசுங்கும் போனை எடுக்கவில்லைஎன்பதால் அவனுக்கு அடுத்த படியில் இருக்கும் கையில்இருந்த செல்போனில் ஒருமுறை கட்டயன் மாணிக்சர்காருக்கு ஆஷிக் போன் செய்தான் . ரிங் முழுவதுமாகபோய் நின்றது. இப்படி காலையிலிருந்து மட்டும் ஆறு முறைமாணிக் சர்காரின் போன் செய்திருப்பான்

     மாணிக் சர்க்காருக்கு ஆஷிக்கை முதன்முதலாக. பங்ளாபஜார் அவனது சிறிய பீடா கடையில் வைத்துஅறிமுகப்படுத்தி வைத்தான். பீடாகடைக்கு பின்னால்சரிந்து கிடக்கும் ஏணிப்பலகைகளில் ஏறினால் கோப்பிஅவுஸ் முதல் தளத்தில் அவனது உண்டியலும் மஞ்சள்வியாபரமும் அமோகமாக நடக்குமிடம் அது. மீசுங்கிடம்மஞ்சள் வாங்கி இங்கிருந்து டாக்கா , சிட்டகாங் பின்புநிலம் வழியாக கொல்கத்தாவுக்கு . இனிகொல்கத்தாவிலிருந்து சென்னை என்று கை மாற்றி விடஒரு தங்க வியாபாரத்திற்க்கு என்று தங்க முக்கோணத்தைமீசுங் உருவாக்கினான். மீசுங்கின் கனவு திட்டம் அது

   மாணிக் சர்க்காரிடம் எதை கேட்காமலும் மீசுங் முடிவுஎடுப்பதில்லை. மாணிக் சர்க்கார் பார்ப்பதற்க்குசித்திரகுள்ளனை போல் உயரமே தவிர எல்லவற்றையும்கணிப்பதில் ரொம்ப ஷார்ப்வார்த்தைகளை கச்சிதமாகஅளந்து பேசுவானே தவிர பார்வை மிக ஆழமாக இருக்கும். ஒப்பந்தம் முடிந்த கையாக, ஆஷிக்கை கட்டயனிடம் தான்போய் நிறுத்தினான் மீசுங். வாடிக்கையாளருக்குவெற்றிலையில் செர்ரி பழங்களை மடித்துக்கொண்டேமேலேயும் கீழேயும் ஒரு முறை ஆஷிக்கை பார்த்து விட்டுஏதோ மீசுங் காதில் கூறினான். மீசுங்கிடம் வேலைபார்க்கும் ஒவ்வொருவரும் மாணிக் சர்க்காரிடம்ஆசிர்வாதத்திற்கு செல்லாமல் இருக்கமாட்டார்கள். செந்திலையும் கட்டயன் அப்படித்தான் ஆசிர்வதித்தான்.

 ‘..கட்டயன் ..யாரும் அங்கின ஆள் இல்லனா .. டப்புனு நம்மஜிப்ப திறந்து ஆசிர்வாதம் செய்ய ஆரம்பிச்சுடுவான்.. பீடாமட்டும் இல்ல நல்லா வாபோடுவான்என்று ஆசிக்கிடம்செந்தில் சொல்லி சிரித்தான். செந்திலை பார்ப்பதற்க்கு ஆஷிக் போகும்போதெல்லாம் சந்துக்குள் நிற்க்கும் அழகிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு செல்வான். ஆனால் அதில் எல்லாம் அவனுக்கு உடன்பாடு இருந்ததில்லை. அவனுக்கு ஏதோ நெருப்புக்குள் நிற்ப்பது போல் இருக்கும்.

செந்திலுடன் கூட்டு , முதலில் போட் குயேயில் வரிசையாகஇருக்கும் ஒரு பாரில் தண்ணியடித்த நாளில். பின்பு புகித்பிந்தான் வெண்ணிலா பப்பில் ஒரு முறை நம்பர் கேங்கில்செந்தில் வம்பு வளர்க்க , நம்பர் கேங் ஆளுங்க மப்பில் நின்ற செந்திலுக்கு சுத்து போட ஆரம்பித்து விட்டனர். அன்று ஆஷிக் தான் முதன்முறையாக ஒரு சண்டை எப்படி ஆரம்பிக்கும்  என்பதை பார்த்தான். அவனுக்கு சண்டை எல்லாம் தெரியாது நம்பர் கேங்கில் காலில் விழுந்துசெந்திலை காப்பாற்றி அழைத்து வந்தான்.எல்லாம் சரியாகி வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையின் சிறு குண்டுமனியளவு ஒளி  அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே வந்தது. அவனுக்குள் இருக்கும் அத்தா , நீ நிக்கிற இடம்வேறஉளறிக்கொண்டே இருந்தார். அடுக்குகள் நிறைந்த நிழலுகத்தில் புதிதாக நண்பர்களும் எதிரிகளையும் எதிர்கொள்ளும் ஆஷிக், தன்னையே ஒருகட்டத்தில் எதிர்கொள்ளவெண்டிய கட்டாயதிற்கு ஆளானான்.

      மீசுங், ரோவல் தெருவும் ஜலான் பாசரும் சந்திக்கும்முக்கத்தில் ஒரு கோப்பி அவுஸின் மேலே தங்கியிருந்தான். இரண்டு பொமேரியன் நாய்கள் எப்போதும் அவன் வீட்டுக்ரில் கம்பிகளுக்கு முன்னால் கட்டி கிடக்கும். அதன்பின்னால் சிறிய நுழைவாயில் அதன் பின்பு ஏறும் படிகள். அவனுக்கு திருமணம் ,குடும்பம் என்றும் லெளகீகம் என்றே ஒன்று கிடையாதுஅவனது தந்தை முன்பிருந்த பழையபொருட்கள் சந்தை பீத்த பஜாரில் திருட்டு பொருட்களைவாங்கி விற்பவர். பீத்த பஜார் நிரந்தரமாக மூடிய பிறகுபழைய பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்குள்ளேஅடைத்து வைத்திருந்தார். புராதன பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்ட மியூசியம் போல் அவன் வீடு காட்சியளிக்கும் . மீசுங் குடும்பத்தை  சீனாவிலிருந்து இங்கே அழைத்து வந்தஅவனது அத்தையின் புகைப்படம் அவரது நினவாக வீட்டின்நடுவே இருந்தது. ஒரு வெங்கல சொம்பு அடிக்கடி கீழவிழுவதுபோல அவன் வீட்டிற்குள் எப்போதும் சீன வயாங்ஓபரா கெதாய் டேப்ரிக்கார்டரில் ஓடிக்கொண்டேஇருக்கும். தந்தையும் மகன் இருவரும் ஆளுக்கொருதிசையில்  சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள்.

    மீசுங் , கோப்பி அவுஸ் மாடிப்படிகளில் வரிசையிலேயேசில திருநங்கைகளை சீவி சிங்காரித்து அமரவைத்திருந்தான். பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண்களைபோலே காட்சியளிக்கும் திருநங்கைகளைதாய்லந்திலிருந்தும் வியட்நாமிலிருந்தும் வரவழைத்திருந்தான். இந்திய,பாகிஸ்தான்,பங்காளதேஷ்கிரிக்கெட் நாட்களில் பெரிய திரையில் தன் வீட்டு க்ரில்கம்பிகளுக்கு அருகே மேட்ச்களை ஓடவிடுவான். மேட்ச்பார்க்கவருபவர்களை வியாபாரத்திற்கு இழுத்து போடும்யுத்தியாக ஞாயிறுகளில் அவர்களை வரிசையாகஅலங்காரப்படுத்தி கோப்பி அவுஸ் மாடிப்படியில்வரிசையாக அமரவைத்திருப்பான். பெண்களை விடதிருநங்கைகள் பரமாரிப்பு செலவு கம்மி. அவர்களும் தருவதை ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொள்வார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆட்களைமாற்றிக்கொண்டே இருப்பான். வெளிநாட்டு ஊழியர்கள்பார்வைக்கு நிற்கும் அழகிகளை டோக்கன் தந்துவிட்டுபின்புறமாக போய் இருவரும் தங்கிக்கொள்ளும்விடுதிகளையும், ரோவல் தெருவுக்கு பின்புறமாக முட்டு சந்துதரைவீடுகளும்  அவனது கட்டுப்பாட்டிலேயே இருந்தது

  ‘ பையா.. want tiger can ? cheap price 50 dollar ? ..fresh piece..’

  ‘ஆய் தம்பே.. தாய்.. வோணுமா

     என்று வாசலில் வேடிக்கை பார்க்கும்தொழிலாளர்களிடம் இரண்டு விரலை வளையமாக்கி ஒருவிரலை அதற்குள் விட்டு காண்பித்து அவனே பேரமும்பேசுவான்.

      ஆஷிக் மஞ்சள் வியாபாரத்தையும், உண்டியலையும்மீசுங்கிற்கு காட்டிவிட்டான். மஞ்சள் வியாபாரம்இப்போதெல்லாம் கட்டி கட்டியாக இறக்காமல்சில்லறையாக ஆஷிக் இறக்கி கொண்டிருந்தான். ஊர்சுங்கதுறையில் ஜாக்கா படிந்தால் தான் கட்டிகளைஇறக்கலாம். அதற்காக மூன்று முறை பீச்ஸ்டேசனிலும் , மண்ணடியிலும் பழைய வியாபாரிகளை பார்த்துவந்தான். ஆட்டம் ஆடுவதற்கு முன்பு தெருவில் இருக்கும்கோணல்களை பார்த்து வருவது போல, மீசுங் தான் அவனைஅனுப்பிவைத்தான். அத்தாவை பார்ப்பதற்காக  ஆஷிக்போன போது வீட்டு வாசல் கதவை திறந்து விட யாரும் முன்வரவில்லை . அம்முறை நகொஞ்சம் பணம் எடுத்துவந்திருந்தான் . அந்த பணத்தை பெற குடும்பத்தில் இருந்துஒருவர் கூட முன்வரவில்லை. அவன் தட்டிய கதவுதிறக்கவில்லை. திரும்பி போன பின்பும் அந்த பணம் வீட்டுவாசலிலேயே இருந்தது.

     மீசுங் சிண்டிக்கேட்டிற்க்குள் நுழைந்துவிட்டசெந்திலுக்கும் ஆஷிக்கும் கழுத்து பிடரியில்  குத்தப்பட்டிற்க்கும்  இளஞ்சிவப்பு வண்ணத்துப்பூச்சிஅங்கும் இங்குமாக பறந்துக்கொண்டிருந்ததுகொரானாகாலத்தில் மொத்தமாக மீசுங் தொழில் நசிவுஅடைந்திருந்தது. முன்பு போல வெளிநாட்டுதொழிலாளர்கள் தேக்காவிற்கோ அல்லது செய்யது அல்விரோடுக்கோ வருவதில்லை. கையிருப்பில் இருந்ததிருநங்கைகளையும் கைசெலவிற்கு காசு கொடுத்துஊருக்கு அனுப்பிவைத்தான். உடலும் முன்பு போல்அவனுக்கு சுகமாக இல்லாமல் போயிருந்தது. எஞ்சி நின்றஒன்றிரண்டு சீன ஆண்மை விருத்தி ரகசிய மருந்துவியாபாரம் மட்டுமே. அவனது பெரிய பாஸ் நடத்தும்கேலாங் லோராங் சந்து அழகிகள்  வியாபாரமும் ஊரடங்குகாலத்தில் முடங்கியது. ஊரடங்கு தளர்வுக்கு பின்வெளிநாட்டினரும் இப்போது தான் இங்கே வர தொடங்கிஇருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக தொழில் மீண்டுவந்திருக்கின்றது. வெளிநாட்டு தொழிலாளர்கள் தேக்காவைநோக்கி வர ஆரம்பித்துள்ளார்கள். பழையபடி மீசுங் கோப்பிஅவுஸ் மாடிப்படி களை கட்டியது. வரிசையாகதிருநங்கைகளை சீவி சிங்காரித்து அமர்ந்திருந்தார்கள். உடல்நலமில்லாமல் போன பிறகு மீசுங் இடத்தில் இப்போதுசெந்தில் தான் கலக்ஷனில் நிற்கின்றான். மேலே புக்கிட்தீமா சாலை, பஃபலோ ரோடு அப்படியே கீழே கிளைவ் ரோடுஎன்று கலக்ஷனை அப்படியே மீசுங்கிடம் இரவுக்குள்சேர்க்க வேண்டும்.  

 

    அன்றைய இரவு, மீசுங் செந்திலையும் ஆஷிக்கையும்அவனது கோப்பி அவுஸிற்கு அழைத்திருந்தான். செம்பயாங்ஹந்து எனும் நீத்தார் சடங்கு நாள். தன் அத்தையின்நினைவாக ஆரஞ்சு பழங்களையும், அரிசி சோறோடுகொஞ்சம் பன்றி இறைச்சியும் வாங்கி வீட்டு வாசலில்படையலிட்டு இருந்தான். அதை தாண்டி செந்தில் கோப்பிஅவுஸ் மாடி படியேறிய போது அங்கிருந்த தாய்திருநங்கைகள் அவனது கையை பிடித்து இழுத்தார்கள். கையை உதறவிட்டு மாடிப்படிகளில் அதிர ஏறி வீட்டிற்குள்சென்றான். மீசுங் முக்கால் சட்டை அணிவதோடு சரி, சட்டை இல்லாது வெற்றுடம்பாகவே காட்சியளிப்பான்.வீட்டுவாசலில் அவனது அப்பா குத்துகாலிட்டு சாய்வுநாற்காலியில் அமர்ந்துக்கொண்டு பீடி புகைத்துக்கொண்டு  மீன் தொட்டிற்குள் கூடை வலையை விட்டு மீன் கழிவுகளைஅகற்றிக்கொண்டிருந்தார். ஆஷிக்,செந்தில் இருவரையும்கண்டதும் அவர் அங்கிருந்து எழுந்து சமையலறைக்குள்சென்றுவிட்டார். வீட்டிற்குள் மஞ்சள் ஒளியும் சீனர்களேஉரித்த சிவப்பு அதிர்ஷ்ட வண்ணமும் சேர்ந்து தகதகவெனவீட்டில் இருந்த பொருட்களெல்லாம் மஞ்சள் ஒளியால்தங்கம் போல் பழைய பொருட்கள் எல்லாம் மின்னியது. கொஞ்ச நேரத்திலேயே மீசுங் வீட்டில் இன்னும் இரண்டுபேர் வந்திருந்தனர். கட்டயனும் வந்து சேர்ந்திருந்தான். இப்போது எல்லோருடைய பிடரியிலும் ஒரு இளஞ்சிவப்பு  வண்ணத்துப்பூச்சி பறந்துக்கொண்டிருந்தது.

     துரியன் பழம் பெரிதாக விளைச்சல் இல்லாத காலம்தான் ஆனாலும் மீசுங் தான்   வாங்கிய  ஐந்தாறு பழங்களைமேசைக்கு கீழிலிருந்து எடுத்து அறுத்தான். அதற்குஎல்லோரையும் மேசைக்கு அழைத்தான். அவனிடம் ஒருதிட்டம் இருந்தது. குறிப்புகள் அடங்கிய ஒருவரைப்படத்தை எடுத்து மேசையில் விரித்தான். மறுபக்கம்கையுறைகளை மாட்டிக்கொண்டு கத்தியால் பிளவுபடுத்தியபழத்தை இரண்டு கையையும் விட்டு பிரித்து எடுத்தான். பழத்திலிருந்து பெரிய வெட்டுக்கிளிகள் இரண்டு வெளியேவந்தன. அவன் அதை எதிர்பார்க்கவில்லை.அவனுக்குமகிழ்ச்சியான அறிகுறியை அந்த தருணம் தரவில்லை. தூரத்தில் பழைய டேப்ரிக்கார்டரில் ஒலிக்கும் சீன ஓபராகசோகமாக இழுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதைசரியாக்கும் முயற்சியில் டேப்ரிக்கார்டர் தலையில் அவனதுதந்தை ஓங்கியடித்திக்கொண்டிருந்தார். வேகமாகக்ரீச்.. க்ரீச்என ஓட ஆரம்பித்தது. வெட்டுகிளியை தூரஎறிந்துவிட்டு மீண்டும் இன்னொரு துரியன் பழத்தை வெட்டிபிளந்தான். அதன் கனிந்து பருத்த சுளைகள் வாசனைபரப்பியது. கையில் எடுத்து சத்தமாக கத்தினான். பிறகுசந்தோசமாக அதன் சுளைகளை எடுத்துக்கொண்டுப்போய்நீத்தார் சடங்கு படையலில் வைத்துவிட்டு , ஹாலில்புகைப்படத்தில் தொங்கும் அவனது அத்தையை பார்த்துசாஷ்டாங்கமாக வணங்கினான்

 

    மீண்டும் தொழிலை தொடங்க பெரிய இடத்தில் இருந்துஅவனுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை. ஒருதங்க முக்கோணத்தை வரைய ஆசை. ஆனால் அதற்குபோதுமான அளவு அவனிடம் முதலீடு இல்லை. அதற்குமுன்பாக ஒரு சிறிய சம்பவத்தை செய்துபார்க்க தான்இளஞ்சிவப்பு வண்ணத்துபூச்சிகள் ஒன்று கூடி இருந்தன. அரசாங்க கணக்கில் வராத உண்டியல் பணம்  அது,அரபுஸ்திரீட் அருகிலுள்ள  நிறுவனத்தின் பணம் அது  .பணம்எங்கிருந்து வருகின்றது பார்ட்டி யார் என்று வரைஆஷிக்கிற்கு தெரியும். ஆனால் கப் சிப் என்றுஇருந்தான்.கார்பார்க்கில் வைத்து போலீஸ் வேடமிட்டுபணத்தை மீட்பது போல் திட்டம். கணக்கில் வராத பணம். திருட்டு சம்பவத்தை சரியாக செய்துவிட்டால் செட்டில் ஆகிவிடலாம் என்பது மீசுங் கின் கணக்கு. ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை செய்து பார்த்த அனுபவம்மீசுங்கிற்கு உண்டு. எல்லாம் சிறிய சம்பவங்கள் தான்என்றாலும் இம்முறை சம்பவம் பெரிது. எந்த ஒரு சம்பவம்என்றாலும் மீசுங்  துரியனுடன் தான் ஆரம்பிப்பான். வெண்ணை போல் திரளும் துரியன் சுளைகள் அவனுக்குஅதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று நம்பினான். இளஞ்சிவப்பு வண்ணத்துபூச்சிகள் ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு பொருப்பு. அவரவர் நிறுத்தங்களையும்பொருப்புகளையும் அறிந்து வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் மனப்பாடமாக திட்டம் ஒப்புவித்தனர். ஆஷிக்,செந்திலை தவிர வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும்காவலர் சீருடைகள் வழங்கப்பட்டது. கட்டையன் மாணிக்சர்க்கார் மட்டும் இதில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் ஒருஓரமாக நின்றுக்கொண்டிருந்தான்

  திட்டமிட்டது போல் ஆஷிக்கும் செந்திலும் உட்லண்ட்ஸ்செக்பாய்ண்ட் தாண்டி மலேசிய எல்லைக்குள் இரண்டுமோட்டர் சைக்கிளுக்காக காத்திருந்தார்கள். திருடிய பணம்சுடுசுட அதிகாலையிலேயே அவர்களிடம் கைமாறியது. பையை எடுத்துக்கொண்டு இருவரும் அவர்களுக்கான சிறியசரக்கு படகு வழியாக ஜோகூர் துறைமுகத்திலிருந்து பாதாம்சென்றார்கள். திட்டத்தில் ஒரு பகுதி தான்நிறைவேறியிருந்தது. யாரும் வரவில்லை என்றால் பணத்தைஎங்கே கொண்டு செல்லவேண்டும் என்பதற்கான மாற்றுதிட்ட குறிப்பு மட்டுமே அவர்களிடம் கையிருப்பு இருந்தது. அதனை நோக்கியே அவர்களின் டாக்சி  நகோயாபகுதியிலுள்ள கரோக்கி பாப்புக்குபோய்க்கொண்டிருந்தது

    அதிசயமாக நடுவில் மாணிக் சர்க்காரிடம் செந்திலுக்குபோன் வந்தது. கட்டயன் சொன்னதை மட்டும்ம்ம்..’ என்றுமட்டுமே குறித்துக்கொண்டானே தவிர வேறு எதையும் வாய்திறந்து பேசாமல் இருந்தான். அவனுடைய போக்குஆஷிக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. இடையில்இன்னொரு கார் அவர்களின் காரை வழிமிறித்தது. செந்தில்ஆஷிக் முகத்தில் ஒரு குத்துவிட்டான். எதிர்பாராததாக்குதலால் ஆஷிக் நிலைகுலைந்துப்போனான். வந்தவர்களும் அவனை தாக்கினார்கள். வந்த  காரிலிருந்துஇன்னொரு காருக்கு ஆஷிக் மாற்றப்பட்டான். அவர்களதுகார் ஒரு கல்லறை தோட்டத்திற்க்கு போனது. ஊருக்குஒதுக்குப்புறமாக இருக்கும்  இரண்டாம் உலகப்போரில்மாண்ட  ஜப்பானிய சிப்பந்திகளின் கல்லறை தோட்டம்அது.ஆஷிக் மயக்கமாக இருந்தான். அவனை செந்தில் ஒருமேட்டிலிருந்து தள்ளிவிட்டான். அவன் உருண்டு போய் ஒருசெம்மண் குழியில் விழுந்தான். ஏற்கனவெ வெட்டப்பட்டகுழி போல் இருந்தது. மழை பெய்து செவ்வக குழியில்செந்நீர் நிறைந்து கிடந்தது. எல்லோருக்கும் ஒரு முடிவுஇருப்பது போல், தனக்கும் ஒரு முடிவு வந்திருப்பதாகஆஷிக் மல்லாந்து படுத்திருந்தான். ஆனால் முடிவுஅதிர்ச்சியாக இருந்தது. செந்திலை மலைக்க மலைக்க  ஆஷிக் அரை மயக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தான்.

செந்தில், ‘..இனிமேல் நீ மீசுங்கை நம்பிபிரயோஜனமில்லை, நினைத்தால் கூட பார்க்கமுடியாது. உன் சோலிய கட்டயன் முடிச்சிவிட சொல்லிட்டான்.. மீசுங்சிறையில் இந்நேரம் கம்பிஎண்ணிக்கொண்டிருப்பான்..தனியா யாவரம்.. விடுவானுங்கள மேல..  இனி கட்டயனுக்கு தான் அந்தஏரியா.. மேல உள்ள பாஸ்க்கு கட்டயன் எல்லாவெவரத்தையும் தந்துட்டான்..’ 

   காலையில் ஆஷிக் பார்த்த படகு இப்போது நடுகடலுக்குள்வந்திருந்தது. ஒரு பெரிய திமிங்கலத்தின் மேல் கடலில்படகு போய் கொண்டிருக்கிறது. மீனவன் வலையை தூக்கிகடலுக்குள் எறிகின்றான். அது மாலை மங்கும் சூரியனின்மீது விழுகிறது. சூரியனை வலை இழுத்துக்கொண்டு போய்கடலுக்குள் மூழ்கடிக்கிறது. செம்மஞ்சள் மேகம் பிரிந்துவானம் இருளை அடைகின்றது. அவனது அத்தா இப்போதுதான் பள்ளிவாசல் உள்விதானத்தில் தொழுகை விரிப்பைவிரித்துள்ளார். செந்தில் ஏதோ நினைவு வந்தவனாய்அங்குமிங்குமாக சுற்றிகொண்டிருந்தான்.  ’.சரக்..சரக்..’ என்று மம்மட்டியில் மண் பறிக்கும்  சத்தம்கேட்டுக்கொண்டிருந்தது. முகம் எல்லாம் மண்ணும்இரத்தமும் ஒட்டியிருந்தது. மூச்சு குழாயில் இருந்த மிச்சம்மூச்சு, மூக்கில்  ஒட்டியிருந்த மிச்சம் மண்ணை வெளியில்தள்ளியது.அவனுக்கு போராட தோன்றவில்லை. துரோகதிற்க்கு தன்னை ஒப்புக்கொடுத்தவனை போல்  சவக்குழியில் தன் கண்களை மூடி இருந்தான்.

***

 

– முகம்மது றியாஸ்

 

 

 

   

 

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *