2022.03.27 ஆம் திகதி அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மொழி வழி கூடுகை நிகழ்வில் வாசிக்கப்பட்டது.

அறிமுகமும் குடும்பப் பின்னணியும்:

சம்மாந்துறை சேவுகப்பற்றின் பச்சைப்பசேல் என்ற வயல் வெளியையும் நெல்லுப்பிடி ஆற்றையும் முகம்பர்ர்த்த பிரதான வீதியில் 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த பங்களா ஒன்று இருந்தது. சம்மாந்துறையில் பிரதான வீதியின் முகவெற்றிலையாக அமைந்த அந்த பங்களா இவ்வூரின் பிரித்தானியர்கால வாடிவீட்டுக்கு (சநளவ hழரளந) சற்று தள்ளி அமைந்திருந்தது. மாடிவீடாக கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் கிட்டங்கி என்பதாகும். சம்மாந்துறையின் மிக முக்கியமான நிலச்சுவாந்தர் ஓருவருக்குச் சொந்தமான வீடு அது. அவரின் பெயர் கோஸ் முகைதீன் போடியார். அவருக்கு சம்மாந்துறையில் இருந்த நில புலன்களும் வயற்காணிகளும் ஏறக்குறைய 150 ஏக்கர் என மதிப்பிடப்பட்டிருந்தது. மிகச் செல்வந்தரான கோஸ் முகைதீன் போடியாருக்கு குழந்தை வரமானது ஓரேயொரு பெண்மகவு என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு கோசு முகைதீன் போடியார் இட்ட பெயர் பாத்திமா என்பதாகும். சிறுமி பாத்திமா இஸ்லாமிய மர்ர்க்கக் கல்வியைக் கற்க பக்கத்தில் இருந்த மத்ரசாவுக்கு அனுப்பப்பட்டார். பாடசாலைக் கல்வி அவவின் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்மாந்துறையில் பிரபல்யமாய் இருந்த தமிழ்ச்சமூகத்தைச் சார்ந்த ஒரு வாத்தியார் பாடசாலைக் கல்வியை வீட்டுக்கு வந்து கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். எண்ணும் எழுத்தும் பாட்டும் கற்பித்தல் அவரின் பிரதான பணி. அந்த நாட்களின் மேட்டுக்குடிப் பெண்மணிகள் பலர் எழுதவும் வாசிக்கவும் கற்றிருந்தனர்.
பாத்திமா பருவமடைந்ததும் கோசுப்போடியார் தன்னுடைய பணபலத்துக்கு ஈடுகொடுக்கும் செல்வாக்குள்ள குடும்பம் ஒன்றில் இருந்து ஆங்கிலம் கற்ற ஒரு மாப்பிள்ளைப் பையனைத் தேடிக்கொண்டிருந்தார். அவரின் நட்பு வட்டத்தினுள்ளே காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்களின் ஆலோசனைப்படி ஆங்கிலம் கற்றவரும் தற்போது நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபடுபவருமான சுபைர் காரியப்பர் என்ற இளைஞனை கோஸ் முகைதீன் போடியாரின் நண்பர்கள் பரிந்துரைத்தனர். சுபைர் காரியப்பரின் குடும்பத்துக்கு திருகோணமலை நகரிலும் பதுளை நகரிலும் இரண்டு நகைக்கடைகள் இருந்தன. இவை இரண்டையும் நிருவகிக்கும் பொறுப்பை சுபைர் காரியப்பரின் தந்தை அவருக்கு வழங்கியிருந்தர். நாளடைவில் இளைஞர் சுபைர் காரியப்பர் பாத்திமாவைக் கரம்பற்றினார். இந்தத் திருமணத்திற்கு பரிசாக கிட்டங்கி பங்களாவையும் மற்றும் 100 ஏக்கர் நெற்காணியையும் கோசுப்போடியார் தனது மகளுக்கு வழங்கினார் என்றும் அறியவருகின்றது.
சுபைர் காரியப்பருக்கு முதன் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு றெஜினா எனப்பெயரிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கமால்இ பஸீல்இ முனாஸ் ஆகிய ஆண் குழந்தைகளும் மேலும் ஒரு பெண் குழற்தையும் பிறந்தனர். 09.05.1940இல் பிறந்த ஆண் மகவுக்கு இடப்பட்ட பெயரே பஸீல் காரியப்பர் என்பதாகும். பஸீலின் குழந்தைப் பருவத்தில் அவர்களின் குடும்பம் பதுளை நகரில் வாழ்ந்தது. அதனால் பஸீல் ஆரம்பக் கல்விக்காக பதுளை கார்மல் கொன்வென்ற்றில் சேர்க்கப்பட்டார். அங்கே அப்போது ஆரம்ப வகுப்புக்களுக்கு ஆண் பிள்ளைகளும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் குடும்பம் மீளவும் சம்மாந்துறைக்கு வந்தபோது இப்போதைய மத்திய மகாவித்தியாலயமாக அழைக்கப்படும் ஆண்கள் பாடசாலையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் பின்னர் இடைநிலைக்கல்விக்காக அவர் அப்போதைய கல்முனை பாத்திமா கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது திருகோணமலையில் ஆகாய விமானங்கள் வீசிய குண்டுகளால் திருமலை நகர் முற்றாக அழிந்துவிட்டது. இதனால் அங்கிருந்த சுபைர் காரியப்பரின் நகை மாளிகையும் இடிபாடுகளுக்கு உள்ளானது. அந்த நகைமாளிகையில் இருந்த தங்க நகைகள் முற்றாக சூறையாடப்பட்டுவிட்டன. பதுளை நகைக்கடையுடன் ஒப்பிடும்போது அழிந்போன திருகோணமலை நகைமாளிகை பலமடங்கு பெரியதாகும். நகைக்கடை அழிந்துபோனதாலும் அதன் கணக்கேடுகள் எரிந்துபோனதாலும் கொடுக்கல் வாங்கல்களில் வரவேண்டிய கணக்குகள் வராமல்போனது. என்றாலும் கொடுக்க வேண்டிய கணக்குகளை தரவேண்டியவர்கள் கேட்டுத் தொல்லைப்படுத்தத் தவறவில்லை. இயல்பாகவே மானஸ்தர்களாகிய அந்தக் குடும்பத்திலுள்ளோர் பதுளை நகைக் கடையை விற்று கடன்களை அடைத்துவிடுமாறு ஆலோசனை கூறினர். எனினும் கடன்களை அடைக்க விற்றுக் கிடைத்த நிதியும் போதவில்லை. அதனால் நெற்காணிகள் சிலவும் விற்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. காலகெதியில் பொருளாதார ரீதியாக சுபைர் காரியப்பர் வங்குரோத்து நிலைக்கு வந்தார். இது அவரின் குழந்தைகளை தலைநகரின் உயர்ந்த கல்லூரிகளில் படிப்பிக்கும் அவரின் கனவுகளுக்குத் தடைபோட்டது.
பஸீல் சாதாரண தரம் பரீட்சையை சித்தியடைந்ததும் 1958இல் கல்வியமைச்சு அவரை ஆசிரியராக நியமித்து பாணந்துறைஇ தொட்டவத்தையிலுள்ள அல் பஹ்ரிய்யா மகாவித்தியாலயத்துக்குச் செல்லுமாறு கட்டளையிட்டது. குடும்ப நிலைமையைக் கருத்தில் கொண்ட பஸீல் அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். அதனால் பஸீலின் கற்றல் முயற்சி மேற்கொண்டு ஒழுங்குபடுத்தப்படவில்லை. அரும்பு மீசையை ஐப்றோ பென்சில் கொண்டு கருமை செய்துகொண்டு படிப்பிப்பதற்காக பாடசாலை சென்றதாக அவர் என்னிடம் ஒரு முறை கூறினார். ஆங்கிலத்தில் உயர் தகைமைகளையும் சிங்களத்தில் உரையாடும் ஆற்றலையும் இயல்பாகவே அவர் பெற்றுக்கொண்டார். விளையாட்டிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்ட பஸீல் ஆசிரியத்தொழில் மூலம் விடலை மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பிரகாசித்தார்.
இலக்கியப்பிரவேசம்:
கல்முனை பாத்திமாவில் அவர்கற்றுக் கொண்டிருக்கும்போது அவர் கடுமையான காய்ச்சலில் பீடிக்கப்பட்டிருந்தார். காய்ச்சலில் நொந்து படுத்துக்கொண்டிருந்த அவர்இ அறையின் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவரின் தாயார் ‘என்னடா என் செல்ல மகனே’ சத்தமிட்டு அழுது இருக்கின்றார். “ஒன்றும் இல்லை உம்மா” என்றவர் தொடந்து சுவரில் நிரையிட்டு வரிசையாக வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்த எறும்புகளின் நிரையைக் காட்டி எதிர் எதிராய் வரும் எறும்புகள் ஒன்றையொன்று சந்திக்கும்போது சலாம் சொல்லி முத்தமிட்டுச் செல்கின்றன என தன் தாயிடம் கூறியுள்ளார். தாயார் தன் கவலையெல்லாம் மறந்தவராக அவரை வாரி அணைத்து முத்தமிட்டாராம். சிறுவனாய் இருந்த காலத்தில் தனக்கு இவ்வாறு ஒரு சிந்தனை வந்தது. அன்றுதான் எனக்குள்ளே கவிதை மனம் பிறப்பெடுத்திருக்கவேண்டும் என்று நண்பர்களிடம் உரையாடும்போது சொல்லி மனம் மகிழ்வெய்துகின்றார்.
அனேகமான கவிஞர்களில் முதலாவதும் அதனைத் தொடர்ந்ததுமான கவிதைகள் காதல் வயப்பட்ட எதிர்ப்பாலினரின் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்டதாகவே இருப்பது வழமை. பாவலரும் மின்னல்இ தூரிகை முதலிய பல காதல் சொட்டும் கவிதைகளை எழுதியிருந்தார்தான். எனினும் பாவலர் தத்துவம் சார் ஈர்ப்பிலேயே தனது முதற்கவிiயை எழுதினார். அதற்கு அவர் ஆங்கில வாசிப்பும் அதன்மூலமாக அறிமுகமான பைரனும்இ n~ல்லியும்இ ரூமியும்இ ஆஸாத்தும்இ உமர் கையாமும்இ கலீல் ஜிப்ரானுமே காரணமாய் இருந்திருத்தல் கூடும். அவரின் கால சக படைப்பாளிகள் கல்கண்டையும் ஆனந்த விகடனையும் குமுதத்தையும் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் ஐடடரளவசயவநன றுநநமடல ஐயும் சு. செல்லப்பாவிக் ‘எழுத்’தையும் நா. வானமாமலையின் ஆராய்ச்சியையும் குசழவெடiநெ ஐயும் வாசித்துக் கொண்டிருந்தர். அதனைப்போல எல்லோரும் மு. வரதராசனையும்இ கல்கியையும் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் க.நா.சு.வையும்இ கிராவையும்இ வைக்கம் முஹம்மது ப~Pரையும்இ அல்லாமா இக்பாலின் ஜவாப் ஏ. ~pக்வாவையும்இ இமாம் கஸ்ஸாலியின் கீமியா ஏ. சாதாத்தையும் ரூமியின் மஸ்னவியையும்இ இமாம் ஸஅதியின் குலிஸ்தானையும் வாசித்துக்கொண்டிருந்தார்.
முதன்முதலாக அவர் மன்னாரில் கடமை ஆற்றிக்கொண்டு இருக்கின்றபோதே ‘உயிர்’ என்ற தன் முதலாவது கவிதையை எழுதி தினகரனுக்கு அனுப்பியுள்ளார். ஆனால்இ அப்போதிருந்த தினகரன் ஆசிரிய பீடத்துக்கு அந்த அரும்புமீசைத் தத்துவக் கவிஞனை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் இருக்கவில்லை. அந்தக் கவிதையாது இவ்வாறு இருந்தது.
உயிர்
எங்கு ஒழிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ

குச்சி அதன் பெட்டியுடன்
கூடி உரசியதால்
விச்செனவே சுடரொன்று
வீறிட்டெழுந்து
இங்கு நின்று சுழன்று சில
நொடியில் மறைந்தது காண்!
சென்றதுவும் எத்திசையோ
சேர்ந்ததுவும் எங்கேயோ

எங்கு ஒழிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ

வீணை நரம்புகளில்
விரல்கள் விளையாட
தேனாம் இசையுண்டாம்
சேர்ந்ததுவும் எங்கேயோ

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ

சுழன்ற சுடராமோ
சுவைத்த இசையாமோ
தளர்ந்த உயிர் உடலை
தவிர்த்த நிலை எதுவோ

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
(1962)

இந்தக் கவிதை பற்றி பேராசிரியா எம்.ஏ. நுஃமான் குறிப்பிடுகையில்இ “நான் எத்தனையோ முறை தீக்குச்சியைப் பற்ற வைத்திருக்கின்றேன். அது ஒரு கவிதையின் அதிர்வை எனக்குள் எழுப்பியதில்லை. நண்பருக்கு அதன் அதிர்வைத் தந்திருக்கின்றது. அதை ஒரு படிமமாக்கி அதற்குள் வாழ்வின் தத்துவத்தை சிறைப்பிடித்திருக்கின்றார்” என விதந்துரைத்துள்ளார்.

பேராசிரியரின் சிறைப்பிடித்திருக்கின்றார் என்ற கூற்று ஆழ்ந்து யோசிக்கத்தக்கது. எனது முதலாவது கவிதை ‘துணிவே துணை’ என்ற தலைப்பில் தினபதி கவிதாமண்டலத்தில் பிரசுரமாகியது. அதனை சிபாரிசு செய்வதற்காக முதன்முதலாக இலக்கிய முயற்சிக்காக எனது உறவினரான அவரை நான் சந்தித்தேன். அதனை வாங்கி வாசித்துப் பார்த்துவிட்டு “இதனை உண்மையில் நீங்கள்தான் எழுதினீர்களா” எனக்கேட்டு ஆச்சரியப்பட்டார். பின்னர் அதில் இருந்த அசை தொடர்பான பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்திவிட்டு தினபதியின் பிரசுரத்திற்காகச் சிபாரிசு செய்தார்.

அப்போது கவிதை என்றால் என்ன என்று என்னைக் கேட்டார். மொழியால் வரையும் ஓவியம் என்றேன். ச்சா…. என்றார். அவர் என்னை மீண்டும் பாராட்டியதாக நான் நினைக்கிறேன். மீண்டும் அவர் ‘கவிதை என்பது பெருகிய உணர்வின் இறுகிய சிறைப்பிடிப்பு’ என்று மிகப்பொருத்தமாகச் சொன்னார். பின்னாட்களில் ‘பெருகிய உணர்வின் இறுகிய இசையோட்டமான சித்திரச் சிறைப்பிடிப்பு’ என்று விரித்துக் கூறியதையும் நான் அறிவேன்.

பாவலர் பஸீல்காரியப்பர் ஏராளமான கவிதைகளை இயற்றியுள்ளார். இன்றைய விமர்சன உலகின் நியமங்களை அடிப்படையாகக்கொண்டு அவரின் கவிதைகளை நாம் உள்நுழைந்து பார்த்தால் அவை அத்தனையும் தத்துவங்களும் பொக்கி~ங்களும் ஆகும். இந்த சபையில் அதனை நான் ஒவ்வான்றாக எடுத்தாளுவது பொருத்தமாய் அமையப் போவதில்லை. ஏற்பாட்hளர்களுக்கும் உரையாற்றுவோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

1970களில் இலங்கையின் இலக்கியப் போக்கில் மார்க்ஸியம் செங்கோல் செலுத்தியது. கவிதையின் ஆக்கவியல் மற்றும் அழகியல் எல்லைக்கோடுகள் அபரிமிதமான நீட்சியைப் பெற்று கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரச்சாரங்கள் வரை இலக்கியம் அகன்று கொடுத்திருந்தது. இலங்கையின் முக்கிய கவிஞர்கள் பெரும்பாலானோர்கள் இலக்கியமும் கவிதையும் மக்களுக்காகவே படைக்கப்பட வேண்டும்; என்ற கோட்பாட்டின் வீச்சில் அள்ளுண்டுபோயினர். மேலும்இ அழகியல் பெறுமானம் பற்றிய பிரக்ஞையையும் கட்டமைத்தல்இ சிற்பமாக்குதல்இ செம்மை செய்தல் மற்றும் ஆய்வறிவுடன் நிர்மாணித்தல் முதலியனவற்றை முதன்மைப்படுத்தாமல் இருந்தனர். ஆனால் பாவலரோ இந்தச் சூறாவளிக்குள் அள்ளுண்டு போகாமல் கவிதைகளுக்கான அழகியல் பரிமாணத்தில் மிக இறுக்கமாக இருந்துள்ளார் என்பதற்கு அவரின் ஆத்மாவின் அலைகள் என்ற தொகுதி மிகப்பெரிய சாண்று.

அவரின் நட்டுமை பேகவில்லை என்ற கவிதை அக்காலத்தின் ஒரு கருத்தியலை அவர் எவ்வளவு செம்மையாக அழகியல் செய்துள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

நட்டுமை போகவில்லை
புள்ளட வாப்பா! நமக்கிந்தப்
போட்டியார்கிட்ட வெள்ளாமை வேணா
வெள்ளன சுபஹுல வந்தான்
உங்கள விசாரிச்சான் இல்ல எண்டன்
வள்ளென்று நம்மட நாயும் குலச்சிச்சி
வாசல்ல நிண்டவன் உஞ்சில்ல குந்திட்டான்
வெள்ளாமைக்கு ஒரு ஆள் வைக்கப் போறானாம்
விருப்பமாம் உங்கள்ள இஞ்சப் பாருங்க பிச்சைக்குப் போனாலும் நமக்கிந்தப்
போக்கிரிக் கிட்ட. வெள்ளாமை வேணா
கொச்சையாக அவன் என்னைப் பாத்தான்
குடலை எடுத்து மாலையாய்ப் போடணும்
இச்சைப் படுறான் போல என்னில இந்த
இளிச்சவாயன்; ஊர் ஊராய் சிரட்டை நீட்டி
பிச்சைக்குப் போனாலும் அவனுக்கிட்ட இனி
பொழப்பு ஒண்டும் நமக்கு வேணா.
கொள்ளையாக் கதைச்சங்கா அந்த ஆள்
கோபம் எண்டால் பத்திக்கு வந்திச்சு
பிள்ளை ஒண்டுக்கும் சுகமில்லையாம் – அவன்ர
பொண்டாட்டியும் அவட உம்மாட்ட போறாவாம்
வெள்ளிக்கிழமை அதுதான் நாளைக்கு மத்தியானம்
வீட்ட வரட்டாம் ஒரு வேல இருக்காம்
கள்ளச் சிரிப்பும் அவன்ர கால்ல ஒரு சப்பாத்தும்
வெள்ளாமைக்காரன் பொண்டாட்டி எண்டா
வேசி எண்டா இந்த நாய் நினைச்சான் ?
1976
இந்த கவிதையின் அமைப்பியல் பற்றியும் அழகியல் பற்றியும் சிற்பமாகச் செதுக்குதல் போன்ற தொழில்நுட்பம் பற்றியும் இடைச்செருகல்களின் அழகிய மற்றும் இறுக்கமான வியாக்கியானங்கள் பற்றியும் மிகவும் ஆறுதலாகவும் விபரமாகவும் இவ்வவையில் எடுத்துரைக்க முடியும். எனினும் சபை ஒழுக்கம் முக்கியம் என்று கருதுகின்றேன்.

அவரின் சிறுக்கி என்ற கவிதையை இவ்விடத்தில் நான்குறிப்பிடாமல் விடுவது அவருக்குச் செய்யும் துரோகமாகும். தன்னுடைய 50 வயதுகளில் பார்த்த ஒரு மங்கையைப் பற்றிய கவிதை இது. எத்தனை ஒழுக்கமான ஒரு வாலிபனின் தந்தைக்கே உரித்தான பார்வை.

முக்காட்டுத் தொங்கலோடு
முன் உசப்பில் கை இருத்தி
சொக்குகளில் மேயும்
சுடர்விழியைப் பாதி செய்து
வக்கா வரம்பில்
வடிவெடுத்து நடப்பது போல்
சேலை சிக்கி நடைபயிலும் சிறுக்கி
என் மூத்த மகன்
உன்னை விரும்புவதாய்
ஒரு வார்த்தை சொன்னால் நான்
இன்றே உன் வீடு வந்து
இணக்கத்தைக் கேட்டிடுவேன்.

இந்தக் கவிதையில் ஓர் அழகிய சிற்பத்தைக் கண்டுகொள்ளும் கண்கள் படும் ஆனந்தம் அலாதியானது.

மேலும் அவர் தங்கம்மா என்ற பெயரில் ஒரு குறுங்காவியத்தையே எழுதியிருந்தார். அதற்குள்ளே அச்சிம்மா என்ற சிறுகவிதையும் ஒரு முதிர் கர்ப்பவதியின் தோற்றம்போல முழுமையாக ஆற்றுப்படுத்தியிருந்தார்.

கவிதைத்துறையில் ஆர்மில்லாத பலரிடமும்கூட அவர் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு வானொலியில் இப்போதும் ஒலிபரப்பப்படும் அழகான ஒரு சோடிக் கண்கள் எ;ற அசைப்பாடல் காரணமாகும். அதற்கு எல்லோரும் குறிப்பிடுவதுபோல வெள்ளவத்தையில் நடபெற்ற தனியார் கல்வி நிலையத்தில் உயர்தரவகுப்பில் புவியியல் கற்பித்த அந்த அழகான ஒரு சோடிக் கண்கள் மாத்திரம் காரணம் அல்ல. பகல்நேரம் ஒன்றின் புகையிரதப் பயணத்தின்போது கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்த அந்த அழகிய பெண்ணும்தான் ஒரு காரணம். நீண்ட பிரயாணம் முடிவடைந்து இறங்கும்போது அந்தப்பெண் இறங்கத் தடுமாறியபோதுதான் அவள் பார்வைப் புலன் இல்லாத அழகி என்பது அவருக்குத் தெரிய வந்தது. அதன் தாக்கம் ரியூட்டறியில் புவியியல் டீச்சரின் அழகான அந்த புழடனநn நலந முரண்தொடையான ஒரு காரணமாயிற்று. இந்த இருவேறு கண்களிலும் அவர் பாதிக்கப்பட்டபோது புவியியில் வகுப்பிலே வைத்து அதனை எழுதினார்.

அழகான ஒரு சோடிக் கண்கள்
அதன் அம்புகள் பாய்ச்சி என் உளமெலாம் புண்கள்.

புவியியல் கற்றிடும் வேளை அங்கே
புகையுளே மின்னிச் சிரித்திடும்காலை
தவித்துத் துடிப்பதென் வேலை கல்வி
தங்குவதெங்கே மனம் ஒரு பாலை.

ஆட்சியியல் மறுபாடம்
நான் அங்கே இருக்க மனம் எங்கோ ஓடும்
ஆட்சி செயும் உனைச் சாடும் நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்

தாய் மொழிப்பாடம் நடக்கும் நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்
ஏய் என்றே என்னைப்பிடிக்கும் மனம்
ஏப்படிக் கண்ணே பாடம் படிக்கும்
தத்துவப்பாடம் நடக்கும் அங்கே
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்
வித்தையில் பித்துப் பிடிக்கும் நம்
வீட்டார் அறிந்தால் கன்னம் தடிக்கும்

என்று அவர் ஏ.எல்.இற்கு தயார் படுத்திய எல்லாப்பாடல்களுக்கும் ஒவ்வொரு அடியாக இந்த நான்கு அடிக்கவிதையை எழுதி முடிக்கவும் இவரை நோக்கி டீச்சர் வினா ஒன்றைத் தொடுக்கவும் சரியாக இருந்தது. டீச்சர் அவரின் பெயரை உச்சரித்துக் கேட்க இவர் மனம் கவிதையை இலயித்து எழுதியதால் பாடமும் கேள்வியும் இவருக்கு அறவே விளங்கவில்லை. இவரைவிட இரண்டொரு வயது குறைந்த அந்த இளம் ஆசிரியை இவரின் சங்கடத்தை இரசித்துக் கொண்டிருக்கையில் பக்கத்திலே இருந்த மாணவன் இவர் கவிதை எழுதியதை அம்பலப்படுத்தினான்.

ஆசிரியை சங்கடப்பட்டாலும் கவிதையை வாசித்துக் காட்டுங்கள் என்று ஒரே பிடியாய் நின்றுள்ளார். தவிர்க்க முடியாமல் அதை வாசித்துள்ளார். தன்னைப்பற்றித்தான் இந்தக் கவிதை எழுதப்பட்டமை சங்கடத்தைத் தந்தாலும் அவரும் அந்த சபையும் இந்தக் கவிதையை இரசித்தனர். இவரின் கவர்ச்சியான குரல் வளமும் கவிதையை உணர்ச்சியோடு சொல்லும் திறனும் ஆசிரியையின் கோபத்தைத் தீண்டவில்லை. ஆனாலும் என்ன அதன் பின்னர் டீச்சரின் கண்களைத் தரிசிக்க துணிவில்லாத காரணத்தால் வகுப்பைக் கட் பண்ணத்தொடங்கினார். அதன் பிறகு அவர் ஏஎல் படிப்பதையே நிறுத்திவிட்டார். உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் புகும் ஆர்வத்தில் இடமாற்றம் பெற்று கொழும்புக்கு வந்த பாவலர் இந்தக் கவிதையினால் படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டார். இதுதான் பின்னர் ஈழத்துப்பாடலாக இலங்கை வானொலியில் எஸ்கே. பரராஜசிங்கத்தால் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் றொக்சாமி.

இதனைப்போல முஸ்லிம் சிகழ்ச்சியிலும் இவரின் பாடல் ஒன்றுள்ளது. சுஜாத்தா அத்த நாயக்க இதனைப் பாடியுள்ளர். கயிற்றோசை கேள் மகளே தொட்டில் கயிற்றோசை கேள் மகளே என்ற பாடல் இன்னும் அடிக்கடி இசைக்கப்படுகின்றது.

பாவலர் சிறுகதை, வானொலி நாடகம் உருவகக்கதை ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தியுள்ளார். அவரைப் பற்றிய ஒரு முழுமையான இலக்கிய உரையை இங்கு நான் நிகழ்த்த ஆர்வப்பட்டாலும் இந்த சபையில் அது ஒழுக்கமாக இருக்கமாட்டாது என்பதால் அவரின் காட்டுங்கள் என் சிரிப்பை என்ற அற்புதமான கவிதையை மட்டும் வாசித்து அமைகின்றேன்.

பறந்து விட எந்தன் உயிர்
பழுதான யந்திரத்தை
கழுவுங்கள் கபனிடுங்கள்
காடடுங்கள் என் சிரிப்பை

தொட்டிலிடை வைத்திடுங்கள்
தோழமையாய் ஆட்டிடுங்கள்
வெட்டி வைத்த மணவறையுள்
வைத்திடுங்கள்
மீசான் கட்டைகளை நாட்டுங்கள்
கபுர் மண்ணைக் கூட்டிடுங்கள்
மண்மகளைக் கட்டிக் கலந்து
கனிந்து அயர்ந்து உறங்குகையில்
விட்டு விலகாத விதி பெறுவோம்
வியர்த்தும் போவோம்: காதல்
ஒட்டுறவால் சங்கமித்து நான்
அவளாகிப் போவேன்
பட்டந்தருவார்கள் எனக்கு
மண் என்று
ஒரு கட்டாந்தரையைக் காட்டி

அப்பொழுது அம்மண்ணை
வெட்டி எடுத்து விருந்திடுங்கள்
பயிர்களுக்கு

கண்ணடி மண் நெற்தாயின்
காலடியைச் சேர்ந்திடுமா
சின்னி விரல் மண்ணினை ஓர்
சிறு குரக்கன் ஏற்றிடுமா
என் உடம்பின் எல்லா
இழையங்களும் மனிதர்
உண்ணும் பயிர் செழிக்க
உதவிடுங்கள்: நன்றி சொல்வேன்

எந்த மனிதனுக்கு அந்த
உணவு என்று எனைக் கேட்டால்
நொந்து நலிவோரின்
நோவினைகள் மாய்க்க எழும்
அந்த மனிதனுக்கே
அணுவேனும் உதவி செய்ய
எந்தன் உடல் மண்ணை
எருவாக ஆக்கிடுங்கள்

நன்றி

***

-மன்சூர் ஏ காதர்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *