எல்லாமே வற்றிவிட்டது
விரிந்த மொக்குகளை
பசிய இலைகளை
தளும்பும் வெளியை
விரிசல்கள் விழுங்கிக்கொள்கின்றன
அறை காலியாகிவிட்டது
அதனுள்
எடுக்கவோ வைக்கவோ
வெறுமையின் அடர்த்தியன்றி
வேறொன்றுமில்லை
காலியாதலென்பது
கைவிடப்பட்ட வெற்றிடத்தின் மீது
தனிமையின் கனத்தைப் பொருத்துவது
மற்றும்
வார்த்தைகளல்லாத கவிதையொன்றினுள்
உங்களையே திணித்துக் கொள்வது
அனுதாபம் இரக்கம் ஆசை கோபம்
எல்லாம் காலிக் குப்பிகள்
எவரும் ஓரிடம்
காலிசெய்துகொண்டும்
நிரப்பிக்கொண்டும் தானிருக்கிறார்கள்
காலியாதலென்பது
ஒன்றை இறக்கி வைப்பது
அல்லது ஒன்றை ஏற்றிக்கொள்வது
2)
முன்னறிவிப்பில்லா
சில இடர்களையேனும்
இப்பளிங்குப் பாதையில்
புதைத்து வையுங்கள்
முடியுமானால்
உடன் சில
கண்ணிவெடிகள் நிர்ப்பந்தத்தின் தினங்கள்
மயிர்ப்பூச்சிகளின் கால்களால்
நடக்கின்றன
வழக்கமான என்னும் சொல்
இன்பினிட்டி லச்சினையாய்
தலை சுற்றி மொய்க்கிறது.
“வழக்கமான” என்னும் சொல்
வழக்கத்தைவிடவும் அதீதமாய்
இன்றில் இம்சிக்கிறது
***
மிகவும் அருமை
அருமை பூவன்னா