“என்ன இளையவன் இது…?”
ஆச்சர்யத்தில் புருவம் உயர்ந்தது தக்குவாவுக்கு.
ஆரம்பித்தான்
* கொஞ்சம் பொறுங்க வாறன் என்றுவிட்டு வயலுக்குள்
இளையவன். ஒரு வரம்பில் நின்று கைதட்டி
ஊ…..ஊ….’
என்று காடு அதிர குரல் எழுப்பினான். . நெற்கதிர்களின் பால் உறுஞ்சி
நெற்கதிர்களை நாசம் செய்ய வந்த அந்த பறவையினம் அதே பேரிரைச்சலுடன் திரும்பிச்
சென்றதும் மீண்டும் பறன் நோக்கி வந்தான் கலந்தன்.
“என்ன கலந்தன் இது. இவ்வளவு குருவிகள்.. லச்சக் கணக்கில் இப்படி குருவிகள்
வந்ததெ நான் ஒரு நாளும் காணல…இதென்ன குருவி..”
ஆச்சர்யக்குறியில் ஆரம்பித்து கேள்விக் குற்றியில் நிறுத்தினாள் தக்குவா.
“இதுவா… இதுதான் நீங்க கேட்ட வயலாங்குருவி. வெள்ளாம வௌஞ்சி பால்
பருவமா இருக்ககுள்ள அத திங்குறத்துக்குத்தான் இதுகள் வாற. இதுல ஒரு பட்டாளம்
வந்து உழுந்திச்சிண்டா, பெறவு அந்த எடத்திட ஒண்டுமே இருக்கமாட்டா. இந்த ஏழு
வருசமா இந்தக் குருவிகளோட நான் பர்ற பாடு இரிக்கே… அது செல்லேலா”
அதுல
“ஆனா எண்ட கொரல கேட்டா போதும் ஒண்டில்லாம எல்லாம் பறந்திரும்.
ஒண்டுதான் இன்னா இந்த பறண்ல கூடு கட்டி இரிக்கி”
புருவம் உயர விவரம் கேட்டாள் தக்குவா.
“இத்த லெச்சக்கணக்கான குருவிகளுக்குள்ள இந்த ஒரு சோடி மட்டும் பிரிஞ்சி,
தனிச்சு வேறயா கூடு கட்டி குஞ்சு பொரித்து எவ்வளவு அன்பா வாழுதுகள். இது மாரி
நாமளும் வாழ்ந்தா என்ன எளயவன்…”
குருவிக் கூட்டை ரசித்தவாறே பேசி தன்னையறியாமலேயே தனது மன ஆதங்கத்தை
சொன்னதும் இளையவனுக்கு “பகீர்” என்றது. புருவம் சுருங்கி தக்குவாவை கூர்ந்து
நோக்கியவன்
“ராத்தா….’
“என்ன….. என்ன செல்றீங்க?”
ஒங்களுக்கென்ன பைத்தியமா…?”
நான் பொளயா கதச்சிருந்தா மன்னிச்சிக்க எளயவன் ஆனா நான் சென்னது எண்ட
மனசில கண்ணாக்குடி கெடந்த வெசயம். எனக்கு ஒனக்கிட்ட எப்பிடி செல்றண்டுதான்
தெரியல. நீ என்ன ராத்தா….. ராத்தா எண்டாலும் நான் ஒன்ன தம்பியா பாக்கல.
ஏனெண்டா, நான் கொமராகி இத்தின வருசத்திலயும் ஒன்ன தவிர வேறு ஆம்பள
ஒருத்தரயும் பாத்துமில்ல பழகயுமில்ல. ஒன்னயே பாத்து பாத்து பழகினதில எண்ட
மனசெல்லாம் நீ மட்டுந்தான் இரிக்காய். வாழ்ந்தா ஒன்னோடதான் வாழனும் எண்டு
எனக்கு தோணுது. ஒன்ன பிரிஞ்சா எனக்கு தாங்கேலா இளையவன். நான் ஒனக்கு
வயசில மூத்தவள்தான் இருந்தாலும் எண்ட அன்புக்கு வயசில்ல…”
“வாப்பா மாப்பிள தேடிக்கிட்டு இரிக்கா ஆன அவருகிட்டயோ உம்மாகிட்டயோ எப்பிடி
என்ர மனச செலறண்டுதான் எனக்கு தெரியல”
‘அதான் இன்டைக்கு மனச தைரியப்படுத்திக்கிட்டு என்ன ஆனாலும் பரவால்லண்டு
மொதல்ல உனக்கிட்ட செல்லி ஒரு முடிவு எடுக்கணும் என்டு வந்த நான்”
ஆயிரம் பேயறைந்தவனாய் வாய் பிளந்து தக்குவாவையே பார்த்தவனாய் உறைந்து
கிடந்தான் இளையவன்.
” ஒண்டும் அவசரமில்ல எளயவன், ஆறுதலா யோசிச்சி ஒண்ட முடிவ செல்லு. நீ
ஓமெண்டா ஒன்னோட சந்தோசமா வாழுவன் இல்லண்டா நம்முட மாடு கழுவுறது
ஆத்துலதான் நெறய மொதள கெடக்காமே……….. அந்த ஆத்துல எங்கயாவது மொதள
திண்டது போக எங்கயாவது எண்ட ஒடம்புட மிச்சம் மீதி கெடக்கும்”
தன் நீண்ட கால மனக் கிடக்கையை இறக்கி வைத்துவிட்டு பறனில் இருந்து இறங்கி
வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தக்குவா.
என்ன சொல்வதென்றே தெரியாமல் விறைத்து சிலையாகி இருந்தான் இளையவன்.
தலையின் ஒவ்வொரு மயிர்க்கணுக்களிலும் ஒவ்வொரு குண்டுசி ஏற்றுவது போல
இருந்தது இளையவனுக்கு.
காலில் நெருப்பு பற்றி எரிவதாய் உணர்ந்தான். நெஞ்சில் முள்ளிக் கொளத்து
மலையை பெயர்த்தெடுத்து பாரம் ஏற்றியது போல் இருந்ததுது.
இனி என்ன நடக்கும், நடக்கப் போகிறது இதன் விளைவுகள் எப்படி இருக்கும்..
மறுப்பதா… ஏற்பதா… பட்டி மன்றம் நடக்க ஆரம்பித்தது இளையவன் நெஞ்சில்
இதனால் போடியாருக்கும் இளையவனுக்கும் இடையிலான நம்பிக்கை……..
இப்படி ஒரு அதிர்ச்சியை இளையவன் எதிர் பார்த்திருக்கவில்லை. மனம் வாய்க்கால்
நீர் உருட்டும் இள நீர்க்குரும்பயைாக மாறிப்போனது. தன்னை எதுவுமே பேச
அனுமதிக்காது அவள் பக்க நியாயங்களை மட்டுமே கூட விட்டுச் சென்றன தக்குவாவை
நினைக்க நினைக்க கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் அவள் பேச்சில் ஒரு
நியாயம் இருப்பதாயும் மனசு சொன்னது.
பகலுணவுக்குப் போக மனமின்றி பைத்தியம் பிடித்து பறனில் படுத்துக் கிடந்தான்
இளையவன். ஆயிரம் புள்ளிகள் ஒன்றன் பின் ஒன்றாய் கவனமாய் வைத்து மிக அழகாய்
அற்புதமாய் போட்டிருந்த ஒரு கோலத்தை யாரே மாறி மாறி கலைத்து விட்டது போல்
மனது கலைந்து கிடந்தது இளையவனுக்கு.
பக்கத்து காடுகளில் ஒளிந்திருந்து நேரம் பார்த்துக் காத்திருந்த வயலான் குருவிக்
கூட்டம் நீண்ட நேரமாய் ஆளரவமோ, காடதிரும் ஓசைகளோ எதுவும் இல்லாமல்
போகவும் தனது சமூகத்துடன் வந்து நெல் வயல்களை ஆட்சி பிடித்தது.
“என்ன பிரச்சினை இது…?
* யார் போட்ட முடிச்சு இது..? இந்த புதிருக்கு விடை என்ன?..”
“இத்தனை வருடமாய் தன்னை ஒரு மகனாய் நினைத்து வளர்த்து வந்த போடியாருக்கு
இந்த விடயம் தெரிந்தால் என்ன ஆகும்…?”
“தக்குவாவின் காதலில் தப்பா இல்லை என் தலைவிதி இதுவா…?
“காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று சபதமிட்டுச் செல்லும்
தக்குவாவை வாழவைப்பதா…? இல்லை சாகவைப்பதா?”
“படிப்பில் சிறந்து விளங்கிய என்னை தலை எழுத்தையே மாற்ற சேனைக் காட்டில்
குருவிக்கு அனுப்பிய தன் தாயை விட அதிகமான பாசத்தையம் அன்பையும் தன்னில்
அள்ளி இறைத்த போடியாரின் நம்பிக்கையை நாசம் செய்வதா…..?”
மண்டையோட்டைக் துளைத்து, அதற்குள் கரிமருந்து கொட்டி திரி வைத்துக் கொழுத்தி
வெடிக்கச் செய்து, அதனால் தலையே சிதறிப் போனது போல் நிலை குலைந்து
தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான் இளையவன்.
வென்று
பாரமாயப் போனது இளையவனுக்கு யாரிடமாவது சொல்லி
அழனும்போலிருந்தது.
இந்த ழுவடத்தில் மனது பாரமாய்ப் போகும் பொழுதுகளிலெல்லாம் இளையவன்
அந்த ஆற்றங்கரையின் ஆற்றுக்கு மேலாய் சாய்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் மருத
மரத்துக்குத்தான் செல்வது வழக்கம். அந்த மரக்கிளையில் ஏறி அமர்ந்து சாய்ந்திருந்து
மனப்பாரம் தீரும்வரை அழுதுவிட்டு திரும்புவான். மனதின் பாரத்தை யாரிடமாவது
சொல்லித் தீர்க்கவேண்டும் அல்லது அழுது தீர்க்க வேண்டும். சொல்லித்தீர்க்கத்தான்
இளைவனுக்கு யாருமில்லயே அதனால் அவன் அழுதே தீர்ப்பது வழக்கம்.
வழமைபோல் அந்த மருத மரத்தை நோக்கி எட்டு வைக்க ஆரம்பித்தான் இளையவன்.
வயல் பரப்பில் இருந்த தவளை ஒன்று சேற்றில் பாய்ந்து மறைந்து கொண்டது.
அன்றைய ஒன்று கூடலுக்காக அந்த மலையடிவாரத்து மக்கள் எல்லோரும் ஒன்று
திரண்டு நின்றார்கள். எல்லோர் முகங்களிலும் வெறித்தனமான பார்வை. அரசாங்க
அதிபர் உட்பட அந்த கிராமத்து தலைவர்கள் எல்லோருமாய் கூடியிருந்தனர்.
ஊரே திரண்டிருப்பதைக் கண்டு போடியாருக்கும், வட்டாணைமார்களுக்கும் நெஞ்சு பட
படத்தாலும் சுதாகரித்துக் கொண்டு எல்லோருக்கும் வணக்கம் கூறி, இவர்களுக்காக
போடப்பட்டிருந்த தனியான வாங்குகளில் அமர்ந்து கொண்டார்கள்.
மக்கள் கூட்டம் குசுகுசுத்துக் கொண்டிருந்தது. ஊர்ப் பெரியவர்களும் அரசாங்க
அதிபரும் காதுக்குள் ஏதோ பேசிக் கொண்டு விட்டு. ஊர்த் தலைவர் எழுந்து நின்று
மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தார். போடியார் குழுவில்
பிறமொழி தெரிந்த ஒருவர் அதனை மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.
‘இன்று காலயில நம்மட கெராமத்தில இருந்து ஆரோ செலர் பொன்னம் வெளிக்கு
போய், அங்குள்ள காடுகளுக்குள்ளயும் வயல் நிலங்களுக்குள்ளும் எதையோ மறச்சி
வெச்சதாகவும் அதோட ராவு பொன்னம்வெளி ஆக்கள ஊர உட்டு எழும்பனும் எண்டு
ஆரோ நோட்டீசும் ஒட்டி இரிக்காங்க எண்டு பொன்னம்வெளி ஆக்கள்
குத்தம்
சாட்டுறாங்க. இது தொடர்பில ஊர் மக்கள் நீங்க என்ன செல்ல விரும்புகிறீர்கள்? இத
செஞ்சது யாரெண்டு எனக்கு தெரியணும்…? தலைவர் மக்களை நோக்கி கேள்வியை
முன்னிறுத்தினார்.
கூட்டத்தில் ஒருவர் எழுந்து சபைக்கு முன்னே வந்து சொன்னார்.
‘ஐயா நாங்க இன்று காலயில அவங்கட பகுதிக்கு போனது உண்மைதான். ஆனா
எதையும் நாங்க பொதைக்கப் போகல. மூலிக மருந்துச் செடி புடுங்கத்தான் அந்த
பகுதிக்குள்ள போனோம். அதோட நோட்டீசி ஒட்டினது ஆரெண்டு எங்களுக்கு தெரியாது”
இந்த கருத்தையே இன்னும் சிலரும் அரசாங்க அதிபரிடம் முன்மொழிந்த போது…
அரசாங்க அதிபர் போடியாரின் பக்கம் திரும்பிப் பார்த்து.
“இது தொடர்பில் நீங்க என்ன சொல்றீங்க?”
இது வரை போடியார் குழுவுக்கு மொழி பெயர்த்தவரே நேரடியாக விடயத்தை
அரசாங்க அதிபரிடம் பேசினார். ஏனென்றால் அவர்களின் மொழியில் போடியாருக்கு
அவ்வளவு பரிட்சயம் இருக்கவில்லை. ஆனால் அவர்களின் பேச்சை புரிந்து கொள்ள
அவரால் முடிந்திருந்தது.
‘ஐயா அரசாங்க அதிபர் அவர்களே இவங்க செல்றதில எந்த உண்மையுமில்லிங்க.
இவங்க வந்து எங்கள் நிலங்களுக்குள் பழைய சிலைகளையும், கல்வெட்டுக்களையும்
பொதச்சத நேரடியாக கண்ட பலர் இங்கு இருக்கிறார்கள். நான் கூட நேரடியாகப் பார்த்த
ஒரு சாட்சிதான். அவர்கள் புதைத்தவற்றில் சிலவற்றை தோண்டி எடுத்துக் கொண்டு
வந்திருக்கின்றோம் நீங்களே பாருங்கள் என்று விட்டு வட்டானை ஒருவரிடம் இருந்த
பொதியை வாங்கிச் சென்று அவரிடம் காண்பித்த போது
போது எல்லோரும் திகைத்து
முகம்வெழு வெழுத்து நின்றாலும் சில கணங்களுக்குள் சுகாதரித்துக் கொண்டார்கள்.
பொருட்களை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் மீண்டும் ஊர் மக்களை நோக்கி
“இதற்கு என்ன சொல்கிறீர்கள் …?” என்ற போது, ஒருவர் எழுந்து பேச ஆரம்பித்தார்.
“ஐயா இது நாங்க கொண்டு பொதைக்கல்ல. இந்த வெகாரைக்கு உரிய பூமி
மொத்தம் 600 ஏக்கர்.
. அந்த 600 ஏக்கருக்குள்ளும் இவ்வாறான தொல்பொருட்கள்
இருக்கத்தான் செய்யும். இதை நாங்கள் புதைக்க வேண்டிய அவசியமில்லை. இவை இந்த
பூமியில் கிடந்தவைகள்தான்.”
“பொன்னன் வெளி கூட நமது விகாரைக்குரிய பூமிதான். இதில் அவர்கள் அத்துமீறி
குடியேறி இருக்கிறார்கள்.
இருக்கிறார்கள். மொதலில் இவர்களை எங்கட புனித பூமியை விட்டு
அப்புறப்படுத்தி எங்கட பூமியை நீங்கள்தான் மீட்டெடுத்து தரனும்” உணர்வு பொங்க
பேசிவிட்டு அமர்ந்தார்.
இதைக் கேட்ட போடியாருக்கு கடுமையான கோபம் வந்தது எழுந்து நின்று
ஆவேசமாக பேச ஆரம்பித்தார். மொழி பெயர்பாளர் வேக வேகமாக மொழி பெயர்க
வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆளானார்.
ஐயா மன்னிக்கனும் நடந்த சம்பவங்களுக்கு கண்ணால் கண்ட சாட்சிகள் இருக்கும்
போது அதை மூடி மறைக்க பிரச்சினையை வேறு பக்கம் திசை
திசை திருப்புவது
நியாயமில்லை. விகாரைக்குரிய பூமி 600 ஏக்கர் என்று இவர்களாக எழுதிக் கொண்டால்
பரம்பரை பரம்பரையாக நாங்கள் வாழ்ந்த எங்கட பூர்வீ பூமி எங்கே?”
“ எங்களை இந்த பூமியை விட்டு வெரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கில இவர்கள்
அரங்கேத்தும் இந்த நாடகத்தை நாங்க நன்கு அறிவோம்.
அறிவோம். இருந்தாலும் இதை
நியாயமான வகையில நீதியான மொறையில பேசி தீர்த்துக் கொள்ளலாமென்றுதான்
நாங்கள் வந்தம் எனவே தீர விசாரித்துவிட்டு தீர்ப்பு சொல்லுங்கள்.”
என்று வேகமாகவும் ஆவேசமாகவும் பேசிவிட்டு அமர்ந்தார் போடியார்.
”சரியா கதச்சீங்க போடியார். நெலத்த புடிக்கணும் எங்கிரத்துக்காக எப்படி நாடகம்
ஆர்ராணுகள். மறுக்குளத்து வட்டாணை போடியார் காதில் மெதுவாக சொன்னார்.
அரசாங்க
அதிபர் பேச
இரு தரப்பு
தரப்பு வாதங்களையும் கவனமாக கேட்டுவிட்டு
ஆரம்பித்தார்.
சண்டை சச்சரவு இல்லாமல் இந்த விடயத்தை நாம தீர்த்துக்கணும். வாதப்
பிரதிவாதங்கள் செய்து யார் செய்தது தவறு யார் செய்தது பிழை என்று பார்ப்பததை
விட சமாதானமாய் போவதான் சிறந்தது என்று கருதுகிறேன்”
அவர் மேலும் தொடர்ந்தார். இறுதி முடிவு என்ன சொல்லப் போகிறார் என்பதை
எல்லோர் விழிகளும் கூர்மையுடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்க உசாரானது.
”இனி விகாரை மக்கள் யாரும் பொன்னன் வெளி பகுதிக்குள் போய் மூலிகை எடுக்க
விரும்பினால் அங்க சென்று அங்குள்ள பொதுமக்களிடம் சொல்லிவிட்டுத்தான் போக
வேண்டும். நினைத்த மாத்திரத்தில் அவர்களின் வயல்களுக்குள்ளும் பயிர்
நிலங்களுக்குள்ளும் செல்ல வேண்டாம். முடியுமானால் அங்குள்ள போடியார்,
வட்டாணைமார்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளும். இந்தப் பிரச்சினை இத்தோடு
முடித்துக் கொள்வோம்.” என்று அரசாங்க அதிபர் நியாயமான ஒரு முடிவினைக் கூறினார்.
ஊர் மக்கள் முகங்கள் கறுத்துப் போனாலும், அரசாங்க அதிபரின் உள்நோக்கத்தை
புரிந்து கொண்ட மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
தீர்ப்பில் திருப்தி கண்டாலும், சிலைகளைப் புதைத்தது பற்றி அரசாங்க அதிபர் எதுவும்
பேசவில்லையே என்று கவலைப்பட்டவர்களாக போடியாரின் சமாதானக்குழு பொன்னன்
வெளி நோக்கித் திரும்பியது.
வழியில்……
“போடியார், இந்த அரசாங்க அதிபரு கதச்சதில எனக்கு சச்தேகமா இருக்கு. கல்ல
பொதச்சதையும், செலய கொண்டாந்து பொதச்சதையம் பற்றி அந்தாள் ஒண்டுமே
கதைக்கலியே…?”
”வீனா சந்தேகப்படாதீங்க வட்டாண. பெரிய பதவியில இருக்கெறவங்க அப்படித்தான்
பேசுவாங்க”
‘ இல்ல போடியார்
போடியார் அந்த
அந்த ஆக்கள் கதச்சத பாக்கலியா. அவனுகள்ள அந்த
வெசாரைக்கு 600 ஏக்கர் சொந்தமாமே…? அப்ப நாம நம்மட வாப்பா, வாப்பாட வாப்பா,
அவர்ர வாப்பா காலத்திலிருந்து ஆறேழு தல மொறயா பரம்பரையாக நாம பயிரு பச்ச
செஞ்சி வாழ்ற நம்மிட பொன்னம் வெளி, மறுக்கொளம், முதிரையடி வட்ட,
தோட்டம், அடம்பன் கொளம், கத்தாள மல, காசங்கேணி, ஆள்சுட்டான், சாளம்பவெளி
பால்கேணி வட்டை, சூலா, பள்ளக்காடு, ஆலிமுடகாடு, முள்ளிக்கொளம் இதெல்லாம்
அவனுகள்ள பூமி எண்டுல்ல சொல்றானுகள்….?”
உரிமைக்கான கோபம் கொண்டு கொப்பளித்தார் பொன்னன் வெளி வட்டான.
”எப்பவோ ஒரு காலத்தில் திஸ்ஸ மன்னன் இந்த பகுதிய ஆட்சி செய்யக்குள்ள
முழிசா கட்டி முடிக்காம அரவாசிய போட்டு விட்டு கெடந்த வெகாரைக்கு அறுநூறு ஏக்கர்
சொந்தமாம். அந்த அரசண்ட காலத்தோட எல்லாம் அழிஞ்சி இந்த அறுநூறு வருசமா
வந்து உரிமை கொண்டாடாத ஆக்கள் இப்ப வந்து எங்கட பூமி எண்டா அப்ப
நாங்கெல்லாம் என்ன காதுல பூவா வெச்சிரிக்கம்…?”
பேச்சு உச்சக்கட்டமானது……..
போடியார் எதுவும்
கொண்டே வந்தார்.
பேசாமல் வட்டாணைமார்களின் விவாதத்தை செவி
மடுத்துக்
அப்ப நாட்டுல ஆயிரம் வெகாரை இருந்தா ஒவ்வொரு விகாரைக்கும் அறுநூறு
ஏக்கர், அறுநூறு எக்கரெண்டு பிரிச்சா கடசில இங்க வாழ்ற தமிழ் மக்கள் முஸ்லிம்
மக்களெல்லாம் கடல்லயா கொண்டு உழுற?
” இதுக்கெல்லாம் ஒரு படி மேலால பார்த்தா ஒரு பெரிய உண்மையே இருக்கு
அதயெல்லாம் செல்லப் போனா இவனுகள் எங்க போகணும்?
பிரயாணக் குழு திகைத்து திரும்பி, பேசியவரை உற்று நோக்கியது…
” என்ன உண்மை அது?”
‘ மஸ்கெலியாவில இருக்கிற நம்மிட பாவாத மலயில இரிக்கிற
இரிக்கிற கால் தடத்த
சிங்களாக்கள் புத்தர்ர கால்தடம் எங்கிறாங்க, தழிழாக்கள் சிவன்ட கால் தடம் எங்கிறாங்க, நம்மிடாக்கள் மொதல் மனிசரான ஆதம் நபிர கால் தடம் எங்கிறாங்க.
இதெல்லாம் இப்பிடி இருக்கக குள்ள ஒலக
மக்கள் எல்லாரும் ஒத்துக்
கொண்டிருக்காங்க அது மொதல் மனிசண்ட கால் தடம் என்டுதான். அப்பிடிப் பார்த்தா
புத்தர் வாழ்ந்தது எத்தினையாம் நூற்றாண்டு? அவர் வாழ்ந்த நூற்றாண்டு மக்கள்ள
ஒயரத்த பார்த்த அந்த காலடியில் புத்தருடையதாக இல்லையே? ரொம்ப ஒயரமான
ஓராள்ள காலடிதான் அவ்வளவு பெரிசா இருக்க முடியும்…? ஆகக் கொறஞ்சது ஒரு
நாப்பதடியாவது இருந்திருக்கணும். ஆனா புத்தர்ர காலத்தில இருந்தாக்கள் நாப்பதடி
ஒயராமானவர்களாக இருக்கவில்லையே…?”
எல்லோர் சிந்தனையும் கூர்மையானது.
“அது மட்டுமில்ல எல்லாரும் ஒவ்வொரு பேரு செல்லி அந்த மலய அழைக்கக்குள்ள
நம்மிடாக்கள் மட்டும்தானே அத “வாப்பாடமலை” அதாவது பாவாஆதம் மலை எங்கிறம்?
“வாப்பாட மல எண்டு உரிமயோட செல்றண்டா அத அவருக்குப் பொறந்த சொந்தப்
புள்ளயல்தானே செல்லலாம்? அப்ப அந்த சொந்த புள்ளயல் ஆரு… சிங்களாக்களா..?
“விஜயண்ட வருகைக்கு பொறவுதானே பௌத்தமே எலங்கைக்கு வந்தது…?”
“முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும்தான் எலங்கையில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள்.
இது நம்மட ஜென்ம பூமி. இத நேத்து வந்தாக்கள் உரிம கோர்ரண்டா சும்மா
உட்டுடுவமா….? இதுக்கு ஆதாரம் அவ்வட வரலாத்து பொத்தகத்திலயே இருக்கு”
வீராவேசமான உரையில் விழிகளைப் பிதுக்கி நின்ற சமாதானக்குழு, வயதில்
மிகவும்மூத்த வட்டாணையின் பேச்சில் லயித்து அவர்களை அறியாமலேயே எல்லோரும்
தலை அசைத்து அந்த உண்மையை ஒத்துக்கொண்டனர்.
-எழுத்தாளர் அஸீஸ் எம் பாயிஸ்