ஆங்கிலத்தில்: Dr. பிரசன்ன கூரே

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்

இலக்கியத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறதா? “ஆம்“, நான்உறுதியாக நம்புகிறேன். பொழுதுபோக்கை வழங்குவதைத்தவிர, புதிய, பயனுள்ள விசயங்களோடு புத்தகம் வாங்கியபணத்திற்கான மதிப்பை வழங்குவதும் எழுத்தாளனின்பொறுப்பாகும். கடைசிவரை தன் நேரத்தை அந்தப்படைப்போடு செலவழிக்கும் வாசகன் எழுத்தாளரிடம்எதிர்பார்க்கும் நியாயம் அது. ஒரு படி மேலே சென்று, என்சிந்தனையைத் தூண்டக்கூடிய புதிய நுண்ணறிவுகளைஎனக்கு வழங்குவதை நான் விரும்புகிறேன். மேலும், வாசகனைத் தனிமைத் தீவிற்குள் அழைத்துச் செல்லமுடிந்தால், ஆசிரியர் வாசகனுக்கு இறுதிவரை நியாயம்செய்திருக்கிறார்.

அதை இளம் எழுத்தாளரான சுரத் டி மெல் தனது சமீபத்திய நாவலா C+ இல் மீண்டும் செய்திருக்கிறார். அவரது முந்தையபுத்தகமான Thee ha tha போலவே, C+ ம் வாசகனுக்குத்தேவையானதை உள்ளடக்கியுள்ள ஒரு படைப்பாகும். 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை பதிப்பாளர் சங்கத்தின்ஸ்வர்ண புஸ்தக விருதின் இறுதிப் பட்டியலின் ஐந்துநூல்களுள் ஒன்றாக தீ ஹா தா இடம்பெற்றிருந்தது. தவிர,20,000 பிரதிகள் விற்பனையானது. இது  சிங்கள புத்தகவிற்பனையின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

வலுவான டி மெல்கள் பரம்பரையின் மூன்றாம்தலைமுறையைச் சேர்ந்தவர் சுரத். சின்னஞ்சிறு குழந்தையாகசுரத் இருந்தபோதே சிறுவயது பொம்மைகளுக்கு முன்பேனாவை எடுத்ததில் ஆச்சரியமில்லை.

C+ சில காரணங்களுக்காக தனித்துவமானதாகவிளங்குகிறது. முதலாவதாக, இது பளபளப்பும், துடிப்பும் மிக்கதொழிலுகத்தின் உண்மைத்தன்மையை நமக்குஅறிமுகப்படுத்துகிறது. இரண்டாவதாக, இது தொழில்துறையின் கசப்பானஎதார்த்தங்களைநமக்குஅம்பலப்படுத்துகிறது. மூன்றாவதாக, சந்தேகத்திற்குஇடமில்லாது ஊடகத் துறைத் தந்திரத்தின் முன் சமூகத்தைவெறும் வாத்து (duck) போல் பார்க்க வைக்கிறது.

C+ படிக்கும் போது ஒரே மாதிரியான இரண்டு புத்தகங்கள்என் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, 1977 இல் அதிகூடியபிரதிகள் விற்பனையான புத்தகமான ஹரோல்ட் ரொபின்ஸின்the lonely lady, மற்றையது குணதாச லியனகேயின் Dona Kamalawathi. இவை இரண்டும் StarBiz தொழில் துறையில்நட்சத்திரமாக வேண்டும் என விரும்பும் ஒரு இளம் பெண்ணின்அபிலாஷைகளைச் சுற்றி சுழல்கிறது, இரண்டிலுமே கதைநிகழிடமும், காலமும் தவிர காட்சிகள் மாறவில்லை.

பாலாதிக்கவாதம் (Sexism)

சுருங்கச் சொன்னால், ஆணாதிக்க உலகில் ஓர் இளம்பெண்ணுக்கு தன் லட்சியங்களை அடைந்து கொள்வதில்பாலின பாகுபாடும், சுரண்டலும் இன்னும் தடையாகவேஇருக்கின்றன. அவர்களின் வெற்றிக்கான எலிப் பந்தயத்தில், இலங்கையில் அறுபதுகளில் கமலாவதியும் அல்லதுஎழுபதுகளில் அமெரிக்காவில் ஜெரிலியும் அனுபவித்தது அரைநூற்றாண்டுக்குப் பின்னர், உலகமயமாக்கப்பட்டஇலங்கையில் தில் (Dil) அனுபவித்ததிலிருந்துவேறுபட்டதல்ல.

சுரத்தின் எளிமையானதும், கட்டுப்பாடற்றதுமானமொழிப்பாவனை அவரது படைப்பாற்றலின் மற்றொருகுறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. பரந்த அளவிலானசொற்களஞ்சியத்தைக் கொண்டுள்ள அவர், கட்டுப்பாடற்றஎளிமையுடன் மொழியைத் தனது நோக்கத்தை நோக்கித்திருப்புகிறார்.

கதை கூறலுக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் அவர் மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறார். அவரது உருவக பயன்பாடுவாசகரை ஆழந்து சிந்திக்க அழைக்கிறது. “பணம்வாழ்க்கையின் எடையைக் குறைக்கிறது, அதன் வேகத்தைஅதிகரிக்கிறது, செய்யாத பாவத்தை ஒப்புக்கொள்வதற்கும்மற்றவரின் கடனைப் பற்றி கவலைப்படுவதற்குமிடையில்வித்தியாசம் எதுவுமில்லை”, “ஒரு புத்தகத்தை இரண்டு பேரால்படிக்க முடியாது ோன்ற நூற்றுக்கணக்கானசொற்றொடர்கள் புத்தகம் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. சுரத் கையாளும் இந்த மொழி பிரதிக்கு வண்ணத்தை/ அழகியலை மட்டுமன்றி, வழக்கமான இன்றைய சிங்களஇலக்கியத்தில் ஒரு தனிப்போக்கினையும் நிறுவுகிறது. சுரத்போன்ற இருமொழி வாசகர்/எழுத்தாளர்களால் மட்டுமேஇதனைச் சாதிக்க முடியும்.

சுரத் The New Internationalist இல் ஒரு பங்களிப்பாளராகவும்இருக்கிறார், இது ஓர் உள்ளூர் எழுத்தாளருக்கான அரியகௌரவமாகும். சி+ இன் கதை, கலைப் பீடத்தில் பயிலும்மூன்று இளங்கலைப் பெண்களானநகர்ப்புற நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மானசி, அவளது சகபாடியானகிராமப்புறத்தைச் சேர்ந்த தில் (பிரதான கதாபாத்திரம்) மற்றும்உயர் சமூகத்தைச் சேர்ந்த முத்து ஆகியோருக்கிடையேநெய்யப்பட்டது.

அவர்கள் காலாவதியான, சலிப்பூட்டக்கூடிய விரிவுரைகளைவிட சிறந்த எதையும் வழங்கத் தயாராக இல்லாத ஒருபல்கலைக்கழகத்தில் மனித நேயத்திலும், தங்களின் புத்தாக்கஆற்றலிலும்உயர் திறன்கொண்ட இளைஞர்களின் நான்குமுக்கிய ஆண்டுகளை வீணடிப்பதை மறுத்தோடுபவர்கள்.இலங்கைக் கல்வி முறை மீதான மிக முக்கிய விமர்சனப்பார்வையாக இது துலக்கம் பெறுகிறது.

களியாட்டம் (Extravagance)

இந்நாவல் பெரும்பாலும், அவர்களின் வாழ்க்கை உலகில்மலிந்து காணப்படும் ஊதாரித்தனத்தை/ஆடம்பரத்தைஆராய்கிறது. எனவே தில் ரு சூப்பர் ஸ்டார் போட்டியில்களமிறங்கும்போது, ​​அது அவளது நண்பர்களுக்கு அவர்களின்முதன்மையான ஆர்வங்களை கூர்மைப்படுத்துவதற்கான தகுதிஉணர்வை அளிக்கிறது. இவ்வாறு, மானசி தனது பாடல்புனையும் திறனை நன்றாக வளர்த்துக் கொள்கிறாள். மேலும்முத்து தில்லை அழகுபடுத்துவதில் மும்முரமாக ஈடுபடுகிறாள்.

நாவலின் கதையை சுரத் தன்மையில் (first-person) ஒருபெண்ணாக கதைசொல்கிறார். உயிரியல்ரீதியாக அது ஒருபெண் போலவே தோன்றுவது சுரத்தின் மிகப் பெரும்வெற்றியாகும். ஒரு இளம் பெண்ணின் சுறுசுறுப்பான பாலியல்வாழ்க்கையின் போது அவளது நுட்பமான பாலுறவுக்கட்டங்களுடன் இணைந்த உணர்ச்சிகளைப்புரிந்துகொள்வதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், அதுசுரத்தின் குல்லாவில் இன்னுமொரு இறகாக இருந்திருக்கும்.எப்படியிருந்தாலும், அவரதுCross dressingமுயற்சிதைரியமானது.

Showbiz துறையில் வெற்றிக்காக அசையாத அர்ப்பணிப்பும்இரத்தமும் சதையுமான நாட்டமும் கொண்ட ஒரு கிராமப்புறஇளம் பெண்ணின் பயணப்பாதையே நாடகத்தின் சாரமாகும்.எப்போதும் வெற்றிக்கான அவளுடைய வழியில் தன் பெயரைமாற்றிக் கொள்வதிலிருந்து எவருடைய படுக்கையிலும்சுண்டிவிழுவது வரை தில் உறுதியாக இருப்பது, கிரீடத்தைவிடக் குறைவான வேறு எதற்காகவும் அவள் தயாராகஇல்லை என்பதை உறுதியாகச் சொல்கிறது.

சிலர் அவளுடைய தீய ஆனால் இனிமையான தேடலுக்குஅடிபணியலாம். உதாரணமாக ஆஸன் செய்தது போல. அந்தஇளைஞன் பின் இருக்கையில் அமர்வதற்கு மட்டுமல்ல, அவளுக்காக தனது சொந்த பணத்தின் மூலம் பிரச்சாரம்செய்யவும் தயாராக இருந்தான்.

ஆனால் தில், அவளது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஏமாந்துபோன பார்வையாளர்கள் ஆகியோருக்கு ஒருவகையில்பார்த்தால் என்ன நிகழ்கிறது என்பது தெளிவில்லாமல்இருந்தது. தவிர, ஆண் மீடியா பெருமக்களின்தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் முக்கிய ரகசியம்என்னவென்றால், “கிட்டத்தட்டஎல்லாமே ஒருகட்டமைப்பாகும் என்பதுதான். எல்லாம் பணம், பாலினம்மற்றும் புகழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுமானம். மேலும் மனிதனாக இருப்பது என்பது விதிமுறைக்குவிதிவிலக்கானதல்ல. என்ற புரிதலின் நீட்சியாக கதைநிற்கிறது.

அதுதான் சி+ ல் சுரத் வகுத்த விளையாட்டின் விதி.

***

-ஜிஃப்ரி ஹாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *