பிரபல அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வானகட்டின் (1922-2007) எழுத்துக்கள் அவல நகைச்சுவைக்கும் பகடிக்கும் பெயர் போனவை.

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் சார்பாக போரிட்டு ஜெர்மனியின் ட்ரெஸ்டனில் வானகட் சிறைபிடிக்கப்பட்டு இருந்தபோதுதான் 1945 இல் ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. குண்டுவெடிப்பின் விளைவுகளை வெகு எதிரில் காண நேர்ந்த வானகட், போர் மற்றும் அணு ஆயுதங்கள் நிஜமாகவே தேவைதானா, அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவிற்காக பயன்படுத்தப்படுவதை கையறு நிலையில் காண வேண்டி இருப்பதன் அவலம், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுகிற ஒரு இலட்சிய சமுதாயம் சாத்தியமா போன்ற விஷயங்களை தன் எழுத்துக்களின் மையமாக்கிக் கொண்டார்.

அவரது அறிவியல் புனை கதைகள் பலவும் நாடகங்கள் ஆகவும் படங்களாகவும் இயக்கப்பட்டு பெரு வெற்றி பெற்றுள்ளன.The last interview and other conversations என்னும் தொகுப்பில் இருந்து பின்வரும் பேட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்பேட்டி வானகட்டின் The Slaughter house five, Cat’s Cradle நூல்களை மையப்படுத்தியுள்ளது.

(கர்ட் வானகட்டிடம் ராபர்ட் கே. முஸில் மேற்கொண்ட நேர்காணல்

தி நேஷன் ஆகஸ்டு 2-9 , 1980 இதழில் முதலில் பிரசுரமானது.)

குறிப்பு;

(Kurt Vonnegut’s books referred in this interview:

The Slaughter house five, Cat’s Cradle)

1. ‘இறைச்சிக்கூடம் ஐந்து மாதிரியான ஒரு புத்தகத்தை   எழுதி முடிப்பது மிகக் கடினமானதாக இருந்திருக்கும். டிரஸ்டன்  போன்ற ஒரு அனுபவத்தை விவரிப்பதற்காக  நீங்கள் எவ்வளவு காலம் யோசித்தீர்கள்?

ஐரோப்பிய வரலாற்றிலேயே   மிகப்பெரிய படுகொலையாக இருந்தது டிரஸ்டன் குண்டுவெடிப்பு. ரோப்பின் பிரதிநிதியாக  அப்போது அங்கே இருந்நான் ஒரு எழுத்தாளனும்கூட என்பதால் டிரஸ்டன்  குறித்தும் டிரஸ்டன்  குண்டு வெடிப்பு குறித்தும் எழுதுவது   ஒரு தார்மீகக் கடமையென எனக்குத் தோன்றியது. இதற்கு நான் நீண்ட காலம் எடுத்துக் கொண்டதோடு அது வலி மிகுந்த அனுபவமாகவும் இருந்தது. நான் அதை மறந்து விட்டேன் என்பதுதான் அதிலிருந்த மிகப்பெரிய சிரமமாய் இருந்தது. பனிச்சரிவுகள், வெள்ளங்கள் பெருந்தீக்களில் தொடர்புடைய பலரிடம் பேசியதில் இருந்தும் டிரஸ்டன் குண்டு வெடிப்பில் இருந்தும் நான் பேரழிவுகளைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். நாம் பேரழிவுகள் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிந்திக்கும் போது நமது மூளையில் ஏதோ ஒரு கருவி செயலிழந்து அதைத் தடுத்து விடுகிறது. நமது நரம்பு மண்டலம் அத்தகைய வரம்புகளுக்கு உட்பட்டதா அல்லது உண்மையிலேயே ஒரு கருவி நம்மை  இப்படிக் காப்பாற்றுகிறதா என்பது குறித்து எனக்குத்தெரியவில்லை. நான் அங்கேதான் இருந்தேன் என்றபோதும்  உண்மையில் என்னால் ட்ரஸ்டன் குண்டு வெடிப்பைக் குறித்து எதையுமே நினைவு கூற முடியவில்லை.  இந்தத் தகவல்களை மீட்கொணர்வதற்காக ஒரு ஹிப்னாடிஸ நிபுணரைக்கூட வாடகைக்கு அமர்த்தினேன். என்னுடன் அதைக் கடந்த பலருக்கும் “நினைவுகூர உதவுங்கள்” எனக்  கடிதமும் எழுதினேன். ஒவ்வொரு முறையும் மறுப்புதான் – தட்டையான மறுப்புதான் – பதிலாக வந்தது. அவர்கள் அதனை நினைவு கூரவே விரும்பவில்லை. லைஃப் பத்திரிகையில் ஒரு எழுத்தாளர் – அவருக்கு முயல்கள் மற்றும் அவற்றின் நரம்பு மண்டலம் குறித்து எந்த அளவிற்குத் தெரியும் எனத் தெரியவில்லை – முயல்களுக்கு நினைவாற்றலே இல்லை என்றும் அது அவற்றின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் தான் எதிர்கொண்ட ஒவ்வொரு ஆபத்தையும் அது நினைவுகூரும் எனில் அதன் வாழ்க்கையே நிராதரவாகிவிடும். அதனால்தான் ஒரு டாபர்மேன் பின்சரிடம் இருந்து தப்பித்ததும்  அது அத்தனையையும் மறந்து விடுகிறது. அது குறித்து நினைத்துப் பார்க்கிற சொகுசையும் அவை அனுமதித்துக்கொள்ள முடியாது.

2. ட்ரஸ்டன்ட் குறித்து ஆராய்ந்த போதும் வேறு நபர்களுக்கு எழுதிய போதும் அதன் விவரங்கள் உங்களுக்கு தனிப்பட்ட ஞாபகங்களை தந்தனவா? அதனை மீண்டும் யோசித்த போது வலிமிக்கதாக இருந்ததாகச் சொன்னீர்களே!

அது ஒரு மிகப்பெரிய நகரம், நான் அதன் தரையில் இருக்கிறேன், அங்கே புகையும் தீயுமாக இருக்கிறதுஎன்னால் எட்டு அடி உயரத்தைக்கூடக் காண முடியவில்லைவிமானங்களில் இருந்த அழகான சாதனங்கள் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மட்டுமே அதைக் காண முடிந்தது. இறுதியாக பிரிட்டிஷ் ராணுவ வரலாற்று ஆசிரியர்கள்தான் இது குறித்த கூடுதல் தகவல்களையும் இறப்பு எண்ணிக்கை குறித்த கணக்கீட்டையும் தந்தனர்.கிழக்கு ஜெர்மனி எனது கேள்விகளைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்கு அந்தப் பிரச்சனையில் ஆர்வமே இல்லை. ட்ரஸ்டன் குண்டு வெடிப்பு குறித்து கவனம் செலுத்திய ஒரே ஒரு ஆள் நான்தான் என்பதுதான் யோசித்துப் பார்க்கையில் நான் கண்டறிந்த சுவாரஸ்யமான விஷயம்.  எந்த ஜெர்மனியனோ எந்த ஆங்கிலேயனோ அது குறித்துக் கவலை கொண்டதாகவே எனக்கு தெரியவில்லை. அந்தத் தாக்குதலை நிகழ்த்திய வெவ்வேறு விமானிகளைச் சந்தித்தேன், அவர்கள் எல்லோருமே அது குறித்து சங்கடம் கொண்டிருந்தனர், அவர்களிடம் பெருமிதம் எதுவுமில்லை. ஆனால் குண்டுவெடிப்புக்கு உள்ளானவர்கள் உட்பட யாருமே அது குறித்து குற்ற உணர்வு கொண்டதுபோல் தெரியவில்லை,அதில் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்காக வருந்துவார்கள்தான் என்றபோதும் ஒட்டுமொத்த நிலவரம்அப்படித்தான் இருந்தது. நான் எனது நண்பன் ஒருவனுடன் மீண்டும் அங்கே சென்றபோது, ”வரிசையான மரங்களால் ஆன வீதிகளும் பூங்காக்களுமாயோ இந்த இடம் எவ்வளவு அழகானதாக இருந்தது!” எனச் சொல்லக்கூடிய ஒரு ஜெர்மானியன் கூட அங்கு இல்லை. அவர்களுக்கு அது ஒரு பொருட்டே இல்லை. பிராங்கிளின் நூலகம் கொண்டு வந்த எனது புத்தகத்தின் ஒரு சிறப்புப் பதிப்பு இருக்கிறது. அதன் சந்தாதாரர்களுக்காக நான் ஒரு ப்ரத்யேக முன்னுரை எழுத வேண்டியிருந்தது. இறுதியாக, ட்ரஸ்டன் குண்டுவெடிப்பினால் பயனடைந்த ஒரே ஒரு ஆள் நான் மட்டும்தான் என்பதைக்கண்டுகொண்டேன். இறந்து போன ஒவ்வொரு மனிதனுக்கும் தலா நான்கு டாலர் நான் சம்பாதித்ததாக அச்சமயத்தில் கணக்கிட்டேன்.

3. இந்த நேர்முகம் காணும் வரிசையில் பெரிய குண்டுவெடிப்புகளைக் கண்ணுற்ற பலரை நான் பேட்டி எடுத்திருக்கிறேன். நீங்கள் குண்டு வீசவில்லை என்றாலும் உங்களுக்கு அதில் நேரடி அனுபவம் இருக்கிறது. டிரஸ்டினில் ஏற்பட்ட அனுபவம்  (இப்படிக் கேட்பது இரக்கமற்றதாகும்) ஹிரோஷிமா அல்லது அணு ஆயுதம் குறித்த விஷயங்களில்  ஏதேனும் சிறப்பான ஆர்வத்தை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறதா?  ‘பூனையின் தொட்டிலில் இருப்பது போல அதில் ஏதேனும் தொடர்பை உங்கள் மனம் கண்டுகொண்டதா?

அது எந்த நிகழ்வாயினும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும் என்றே கருதுகிறேன். ட்ரஸ்டன் அப்படி ஒன்றும் தூண்டுகோலாய் இல்லை. அது என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு தற்செயல். எப்படியாயினும் நான் இந்த வாழ்வில் ஒரு அமைதி விரும்பியாகத்தான் இருந்திருப்பேன் என நினைக்கிறேன். நான் தொழில்நுட்பம்தான் கற்றிருக்கிறேன், நான் வேதியலாளனாகத்தான் பட்டம் பெற்று இருக்கிறேன்,எழுத்தாளனாக அல்ல. பொருளாதார ந்த நிலையின் போது விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பொறுப்பிற்கு வர வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தால் ஒரு சொர்க்கம் சாத்தியமாக வாய்ப்புள்ளது என்றும் நாங்கள் நம்பினோம்என்னைவிட ஒன்பது வயது மூத்த என் சகோதரர் ஒரு பெயர் பெற்ற விஞ்ஞானி ஆவார். முனைவர் பெர்னாட் வானகட் ஆகிய அவர் மாஸசூஸட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சில்வர் அயோடைடைக் கொண்டு னியையும் மழையையும் பொழியவைக்க முடியும் என்பதுதான் அவர் கண்டறிந்த பரபரப்பான விஷயமாகும். அதற்கான காப்புரிமை அவருடையது. தற்போது முன்னணியில் உள்ள ஒரு சூழலில் வேதியலாளரும் ஆவார் அவர்.

ஆனால் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பி, கனவு வாகனங்களையும் கனவு விமானங்களையும் கனவு மனிதக்குடியிருப்புகளையும் விதவிதமாக வரைந்து பார்த்எனக்கு உண்மையில் அதே தொழில்நுட்பம் வாயிலாக ஒரு நகரத்தை அழித்து 135000 மக்களைக் கொல்தையும், அதைவிட உயர்ந்த தொழில்நுட்பம் ஜப்பான் மீதான அணு ஆயுதத்தாக்குதலில் உபயோகப்படுத்தப்படுவதையும் பார்ப்பது மிகப் பயங்கரமாக இருந்தது. நான் அவ்வளவு நம்பி வந்த தொழில்நுட்பம் இப்படிப் பயன்படுத்தப்பட்டது குறித்து நான் மிகுந்த கசப்படைந்தேன். எனவே நான் அதைக் குறித்து அஞ்சத்தொடங்கினேன். ஒரு தூய கிறிஸ்தவனாக இருந்துவிட்டு அதே கிறிஸ்தவர்களால் ஒரு வெற்றிக்கு பிறகு நிகழ்த்தப்படுகிற கொடூரமான கூட்டுக் கொலையை பார்ப்பது போலானது அது. நான் இதுவரையில் சுமப்பது அப்படியான ஆன்மீக ரீதியான ஒரு திகில் ஆகும்.

4. மதம் மற்றும் தத்துவம் சார்ந்த விழுமியங்கள் பற்றிச்சொன்னீர்கள்பூனையின் தொட்டில் கதையின் இறுதியில் மனித முட்டாள்தனத்தின் வரலாறு பற்றி எழுதுவது சார்ந்து போகோனன் (Bokonon) பேசும்போது….

உண்மையிலேயே அப்படி ஒரு புத்தகம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? வால்டர் பிட்கின் எழுதி 1930 களில் வெளியான அந்நூலின் பெயர் மனித முட்டாள்தனத்தின் வரலாற்றுக்கு ஒரு சிறிய அறிமுகம் என்பதாகும்வாழ்க்கையில் மத்தியில் இருக்கிற மிகப் பயங்கரமான பொய்மை அல்லது அச்சுறுத்தக் கூடிய பொய்மை அல்லது துன்பகரமான பொய்மை என்னவென நான் நினைக்கிறேன் என்றால் யாரும் சொல்ல விரும்பாதது அது மனிதர்கள் வாழ்வை விரும்பவில்லை. மனிதர்கள் இறப்பைக்காமுறுவதைக் குறித்துப் பேசும்போது பெர்னார்ட் ரஸலும் பல உளப்குப்பாளர்களும் கூட இது குறித்துச் சுட்டியுள்ளனர். ஆனால் உயிருடன் இருப்பவர்களில் பாதிப் பேராவது, பத்தில் ஒன்பது பேராவது உண்மையிலேயே இந்தக் கடும் சோதனையை வெறுக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு காலையும் அந்த நாளை வாழ்ந்து முடிப்பதற்காகவேஎப்படியோ அதைக் கடப்பதற்காகவே எழுந்து கொள்கிஅவர்கள்தை விரும்புவது போல் நடிக்கிறார்கள்அந்நியர்களை நோக்கிச் சிரிக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கை என்பது மிகக்கடுமையான சோதனையாகத்தான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், விரைவிலேயே, அவர்கள் அதை முடித்துக் கொள்வார்கள். பேராசையையும் ஆணாதிக்கத்தையும் அதைப்போன்ற வேறெதையும்விட துதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையின் இருண்டபகுதியைப் பற்றிப் பேசுகிறீர்கள் எனத் தெரிகிறதா: அதுதான் நிஜம். நிறைய மக்கள் உயிருடன் இருக்கவே விரும்பவில்லை.அவர்கள் மிகுந்த சங்கடத்தில் இருக்கிறார்கள், மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், மிகவும் பயந்திருக்கிறார்கள். தற்போதிருக்கிற அடிப்படை விஷயம் அதுதான் என நினைக்கிறேன். உங்களைப் போன்ற அமைதி விரும்பிகள் சிலர் மக்களையும் உங்களைப் போலவே தைரியமானவர்கள், உறுதி கொண்டவர்கள், வளம் மிக்கவர்கள், யோசனை மிக்கவர்கள் என்பதாகத்தான் எதிர்கொள்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் விளக்கை ஒட்டுமொத்தமாக அணைத்து விடுவதைத்தான் விரும்புகிறார்கள்.

5. எனவே நீங்கள் உங்களை விதியை ஏற்றுக்கொள்கிற ஒருவராக் கருதுவீர்களா? உங்களது புத்தகங்கள் அனைத்திலுமே ”(வாழ்க்கை அப்படித்தான்,) அது அப்படியே நகரும்என்கிற சொற்றொடர் வந்து கொண்டே இருக்கிறதுதிரும்பத் திரும்பச் சுட்டப்படுகிற அதன் மையக்கருத்து என்ன?, அணு ஆயுதங்களால் பலப்படுத்தப்பட்டுள்ள நாம் எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறோம் என்பது குறித்த உங்களது சிந்தனையாக அது ஒலிக்கிறதா?  

ஏதேனும் ஒரு செயலில் நான் ஈடுபட்டிருக்கும்போது என்னைச்சுற்றி இருக்கிற பெரும்பாலான மக்கள் அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பது பற்றிக் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. நிறைய மக்கள் வாழ்க்கையின் பாதுகாவலர்கள்தானா என்பது குறித்து எனக்குச் சந்தேகம் இருக்கிறது, அந்த விஷயத்தில் நான் அவநம்பிக்கைவாதிதான். வாழ்க்கை அப்படியே தொடர வேண்டும் என பெரும்பாலானவர்கள் நினைப்பதில்லை என்றுதான் நான் கருதுகிறேன். கெட்ட செய்திகளைக் கொணர்பவனாகமட்டுமே நான் இருக்கிறேன். என்ன செய்வது! நான் பிறக்க நேரிட்டது, ந்தக் குறிப்பிட்ட கிரகத்தில் எனக்கு இதுதான் கிடைத்திருக்கிறது. வாழ்க்கை இங்கே மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறது, ஒருவேளை அடுத்த கிரகத்தில் இது வேறு மாதிரியானதாக இருக்கும்.

6. பூனையின் தொட்டில் கதையின் கதை சொல்லி ஹிரோஷிமாவில் குண்டுவெடித்த தினத்தைப் பற்றி ஒரு கதை எழுதுவதற்காக மிகத் தீவிரமாக உழைக்கிறார். அணுகுண்டின் உங்களது கற்பனைத் தந்தையான ஃபெலிக்ஸ் ஹோனிக்கர் உள்ளிட்ட பெரிய விஞ்ஞானிகளும் மக்களும் அன்றைய தினத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை கண்டறிய முயல்கிறார். அந்த நாவலின் நோக்கம் என்னநீங்கள் ஏன் அப்படிப்பட்ட ஒரு கோணத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

 மிகவும் சுவாரஸ்யமான  ஒரு பொது மின் நிறுவன  ஆராய்ச்சிக்கூடத்தில் மக்கள் தொடர்பு நபராக நான் இருந்தேன்பொதுமின் நிறுவனத்தின் அனுபவத்தின்படி, நீங்கள் இனி எதையும் கற்பிக்கத் தேவையில்லை, நாள் முழுக்க ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம். உங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தருவோம் எனச் சொல்லி எம்..டியில் இருந்தோ ப்ரின்ஸ்டனிலிருந்தோ வேறு எங்கிருந்தோ விஞ்ஞானிகளை வாடகைக்கு எடுப்பது என்பது மிகவும் லாபகரமாக இருக்கிறது. அந்த விஞ்ஞானிகளை அடிக்கடி சந்தித்துப்பேசி அவர்கள் என்ன ஆராய்ச்சியில் இருக்கிறார்கள் எனக் கேட்பது என் வேலையின் ஒரு பகுதியாக இருந்தது. பெரும்பாலான சமயங்களில் அதிலிருந்து எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்துவிடும். இவர்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தபோது பழையவர்கள் என்னைத் தொந்தரவுக்கு உள்ளாக்கினார். இளையவர்கள் அல்ல, தங்களுடைய ஆராய்ச்சியின் விளைவாக என்ன நடந்தாலும் அஞ்சாமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என மூத்தவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.  நோபல் பரிசு வென்ற  இர்வின் லாங்மூர்தான் என் அண்ணன் அவரோடு பணி புரிந்திருக்கிறார் ஏறத்தாழ எனது பெலிக்ஸ் ஹோனிக்கர் கதாப்பாத்திரத்திற்கான மாதிரியாய் இருந்தார். பாறைகளில் இருந்து அவர் தோண்டி எடுத்த உண்மைகளை, சுற்றி இருக்கிற யாரிடமும் ஒப்படைப்பதால் அவற்றிலிருந்து என்ன மாதிரியான பலன்கள் அடையப்பெறலாம் என்பது குறித்து அவர் மிகுந்த அலட்சியம் கொண்டிருந்தார். ஆனால் அவர் கண்டறிந்த ஒவ்வொரு உண்மையுமே தன்னளவில் மிக அழகானது, அடுத்து அது யார் கைக்குச் செல்கிறது என்பது குறித்து அவர் கவலையே கொள்ளவில்லை.

இலக்கியங்களிலும் நாடகங்களிலும் உண்டாக்கிவைத்திருக்கும் வகைமாதிரிகளின் அடிப்படையில்தான் நாம் அதிகம் வாழ்கிறோம் என நான் நினைக்கிறேன், நாம் நினைப்பதைவிட அது அதிகம். மிக உயர்வான விஞ்ஞானிகளையும் அவர்களது கவனமின்மையையும், கவனமற்ற பேராசிரியர்கள் குறித்த நகைச்சுவைகளையும் அப்போது நாம் பலமுறை இலக்கியத்தில் கட்டமைத்ததில், நிறைய விஞ்ஞானிகள் மிக மகிழ்ச்சியாக இந்த அலட்சியத்தையும் கவனமின்மையையும் பண்பாகக் கொண்ட வகை மாதிரிகளுக்குள் தங்களைப்பொருத்திக் கொண்டனர். தங்களது கண்டுபிடிப்பால்  என்ன நிகழப்போகிறது என்பதிலும் கூட கவனமின்றி இருக்கும் அளவிற்கு அது சென்றது. அரசாங்கத்திற்கும் போர்த்துறைக்கும் ராணுவச் செயலருக்கும் அது போன்ற மற்றவர்களுக்கும் தாங்கள் அளிக்கின்ற தகவல் என்னவாய் மாறியது என்பது குறித்து அந்தத் தலைமுறை எச்சரிக்கை கொள்ளவே இல்லை. ஆனால் அந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாபட் வீனர் மட்டும்,  போர் முடிந்ததும் தி அட்லாண்டிக் இதழில் பிரசுரித்த ஒரு கட்டுரையில் நான் இனி என் அரசாங்கத்திடம் எதையும் சொல்லப்போவதில்லை என எழுதினார். அதன் பிறகு விஞ்ஞானிகள் கொஞ்சம் கொஞ்சமாக எச்சரிக்கையாகி விட்டார்கள் என நினைக்கிறேன்.  எனது சகோதரர் அப்படி ஆனார். வியட்நாம் மக்களை மண்டியிட வைக்கும் பொருட்டு அந்நாடு முழுவதும் சில்வர் அயோடைடு தூவப்பட்டதை அறிந்து அவர் மிக ஆழ்ந்த வருத்தம் கொண்டார். இது மிகவும் அபத்தமானது. எதிரிகள் மீது அதிபயங்கர விளைவை உண்டாக்கும் பொருட்டு அவர்கள் சிவப்பு மிளகினைக் கூடத் தூவி இருக்கலாம் என்கிறார் அவர். அவரது  கண்டுபிடிப்பினைக் கொண்டு ஏதேனும் அழிவுகளை நிகழ்த்தலாம் என அவர்களுக்கு தோன்றியதே அவரைச்சங்கடப்படுத்தியது. 

7. போருக்குப் பிறகு நீங்கள் கண்டறிந்த ஒரு பிரச்சினையாக தொழில் வல்லுநர்கள் சிந்தையற்றுப் போனதைச் சொல்கிறீர்கள். எனில் உங்கள் இலக்கியத்தில் அல்லது கோட்பாட்டில்  நீங்கள் இதற்கு மாற்றாக என்ன வைத்திருக்கிறீர்கள்? இந்த உலகில் ஃபெலிக்ஸ் ஹோனிக்கர்களுக்கு எதிராக அல்லது தீர்வாக நீங்கள் எதை முன் வைக்கிறீர்கள்?

நான் கட்டுப்பாட்டினை ஆதரிக்கிறேன். ட்ரெஸ்டனின் பிரச்சனையாக நான் கட்டுப்பாட்டையே கருதுகிறேன், அல்லது கட்டுப்பாடின்மையை. தொழில் வல்லுநர்கள் சிந்தையற்றுப் போய்விட்டதாய் நான் கருதவில்லை. அவ்வளவு அறிவுரைகளுக்குப் பிறகும் ட்ரஸ்டன் குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருந்தது வின்ஸ்டன் சர்ச்சில்தான். அது ஒரே ஒரு மனிதனின் திட்டமாகவும் ஒரே ஒரு மனிதனின் ஆத்திரமாகவும் ஒரே ஒரு மனிதனின் பெருமையாகவும் இருந்தது. இதற்கு நாம் விஞ்ஞானிகளைப் பொறுப்பாக்க முடியாது

8. ஆனால் நீங்கள் – அல்லது பூனையின் தொட்டில்புத்தகத்தின் கதாசிரியர்ஹோனிக்கர்தான் A குண்டின் தந்தை எனில் அவர் ஒன்றும் அவ்வளவு வெகுளியாக இருந்திருக்க மாட்டார் எனக் கூறுகிறாரே!

வாழ்வின் ஒரு அம்சம் குறித்து அனுமதிக்கப்படக்கூடிய அளவைத் தாண்டி மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்த அவர் அனுமதிக்கப்பட்டு விட்டார் என்பதுதான்  அவர் குறித்து எனக்கு இப்போது இருக்கும் எண்ணம். அதீதமாய் அதில் திறனை வளர்த்துக்கொண்ட அவர் அநீதிமானாகவும் ஆகிவிட்டார். ஓர் இசைக்கலைஞன் தன் உலகில் முழுவதுமாக மூழ்கிக் காணாமல் போவதென்பது மிகச் சரியானதாகத் தோன்றக்கூடும், ஆனால் அதையே ஒரு விஞ்ஞானி செய்தால்வேறு வழியே இன்றி, அவன் மிக ஆபத்தான நபராக மாறிவிடுவான்.

9. அணு ஆயுதப் போர் என்னும் அச்சுறுத்தலை நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்? அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் அது குறித்து வருந்துகிறீர்களா?

ஆமாம். நிச்சயமாக நான் வருந்துகிறேன், மக்களுக்கு அது குறித்து இருக்கிற அலட்சியம் பற்றியும் நான் வருந்துகிறேன். டாக்டர். ஸ்ரேஞ்ச் லவ் (Dr. Strangelove) படம் அளிக்கிற வெவ்வேறு புரிதல்களைப் பற்றி நாம் பேசலாம். உலகம் மிக அழகாக அழிவதாக காட்டப்பட்ட அதன் முடிவும் அப்போது ஒலிக்கப்பட்ட உணர்வுபூர்வமான பாடலும்தான் பார்வையாளர்களை திருப்திப்படுத்தியதென என்னால் சொல்ல முடியும். அது பகடிக்காகத் திட்டமிடப்பட்டது. ஆனால் பார்வையாளர்களில் இருந்த பலருக்கும், பல பார்வையாளர்களது மனஓட்டத்திற்கும்  அது அழகாகத் தோன்றியது. நான் எளிய மனிதர்களைப் பற்றிக்குறிப்பிடவில்லை, அது உணர்ச்சிவயப்படுத்துவதாகவும் இனிமையானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்ததால் யாரையுமே அதிலிருந்துபோரிலிருந்து மீண்டு வர அது தூண்டவில்லை.  போரில் இருந்து மீண்டு வரும்படி உங்களைத் தூண்டக்கூடிய வகையில் உலகின் முடிவைச் சித்தரித்த ஒரே ஒரு குண்டுவெடிப்புப் படம் தான் இப்போது இருக்கிறது:   போர்விளையாட்டு (Wargame). இது சிறப்பானதாகவும் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாததாகவும் இருந்தது. ஏனென்றால் இறப்பானது எவ்வளவு அணுஅணுவாக நிகழப்போகிறது என்பது குறித்தும் குழந்தைகளது அத்தகைய மரணங்கள் குறித்தும்  இது தெரிவித்தது. அது மக்களுக்குக் கெட்ட செய்தியாய் இருந்தது. ஆனால் அமைதியான வலியற்ற முடிவு மக்களுக்கு திருப்தி தருவதாக இருந்தது. பீட்டர் செல்லரின் வெற்றிகரமான நடிப்பையும் கீன்ன் வைனின் நகைச்சுவைகளையும் கொகோ கோலா இயந்திரத்திலிருந்து பைசாப்பெட்டியை சுட்டுவீழ்த்தியதையும்விட அப்படத்தின் அழகான முடிவுதான் அதன் வெற்றிக்குக் காரணமாய் இருந்திருக்கும் என நான் அஞ்சுகிறேன். யதார்த்தமாகவோ அல்லது வேண்டுமென்றோ, மக்களை மிகுந்த திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்புகிற ஒரு படத்தை குப்ரிக் எடுத்திருக்கிறார். அந்தப்படத்தைப் பார்க்கிற எவராயினும் இனி எதையும் செய்யத்தேவையில்லை என்கிற உணர்வுடன் மிக ஆழ்ந்து உறங்குவார் என்பது உறுதி.

10. உங்கள் புத்தகங்களைப் பற்றிச், குறிப்பாக இறைச்சிக்கூடம்ஐந்து பற்றுச் சொல்லுங்கள். அதில் விவரிக்கப்பட்டிருக்கும் அழிவிற்கு மக்கள் எப்படி எதிர்வினை புரிகிறார்கள்?

உண்மையில் அதைத் தெரிந்து கொள்ளும் வழிகளே எனக்கு இல்லை, அது குறித்து அதிக வாசகர்களிடம் நான் பேசவில்லை. என்றாலுமே “போர் அப்படியானதாகவே இல்லை என என் அப்பா சொல்கிறார்” எனச் சொல்கிற இளைஞர்கள் இருக்கிறார்கள். “இல்லை, இல்லை. போர் அப்படி இருக்கவில்லை” என்பது தான் ஜெர்மனியின் எதிர்வினையாக இருந்தது. நாசமாய்ப்போக! போர் எப்படி இருந்தது, ட்ரெஸ்டன் குண்டு வெடிப்பு எப்படி இருந்தது என்பது குறித்து நான் நிறைய ஆராய்ச்சிகள் செய்துதானே எழுதினேன். ஆனால் அது கிட்டத்தட்ட அவர்கள் உரிமம் பெற்றுவிட்ட போர் எனும் போது, நான் எப்படி அது குறித்து கருத்துச் சொல்லத் துணியலாம் என்பதாகவே ஜெர்மானியர்கள் எண்ணுகிறார்கள்.

11. எழுத்தாளர் என்பதைத் தாண்டி அணு ஆயுதப் போர் மற்றும் அவற்றின் குவிப்பு குறித்து நீங்கள் வேறு ஏதேனும் வகையில் கவனம் செலுத்தி வருகிறீர்களா?

ஒரு விஷயம் என்னவென்றால் நான் இனப்பெருக்கம் செய்திருக்கிறேன். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.  வாழ்வை அவர்கள் விரும்ப வேண்டுமென்று நினைக்கிறேன். அவர்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது எதற்காக யாருக்கும் தேவைப்படுகிறது! என் நாடு அதை வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. யாருமே அதை வைத்திருக்கக் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு நாடாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் அது எங்கே இருந்தாலும் ஒட்டுமொத்த கிரகத்தையும்தான் அது அச்சுறுத்துகிறது. எனவே என்  கிரகம் அதைக் கொண்டிருக்க வேண்டாம் என நினைக்கிறேன். தாங்கள் ஆபத்தில் இல்லை என நினைப்பவர்கள் ஒன்று முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது வேடதாரிகளாக இருக்க வேண்டும். இல்லாவிடில் வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கிற அளவிற்கு அவர்கள்  நோய்மையில் இருக்க வேண்டும்.

12. ஆனால் ஜான் எஃப் கென்னடி போன்ற ஒரு உயிரோட்டமான மனிதரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கியூபா ஏவுகணைப் பிரச்சனையின் போது நிதானமாக அமர்ந்தபடி, நாம் இதைச் செய்துதான் ஆகியிருக்க வேண்டும் எனச் சொல்கிற ஒருவரது நடவடிக்கை குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா

அதேதான், இந்த வேடத்தைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன். மலையேறுவதில் மிகுந்த வெறியும், ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வீரதீரச் செயல்கள் செய்தபடியும், பற்களைக் காட்டியபடியும் பற்களைக் கடித்தபடியும், உணவின் மீதான காதலும் பெண்கள் மீதான காதலும் மதுவின் மீதான காதலும் என எல்லாவற்றையும் ஒருவர் விரும்புகிறபோதுதான் நான் ஒரு மாதிரி எச்சரிக்கை அடைகிறேன். அதுதான் பொய்மையின் குறியீடு என நினைக்கிறேன். வாழ்க்கையை நேசிப்பதாக நடிக்கிற, அதனை அதீதமாக வெளிப்படுத்துகிற மனிதர்கள்தான் தங்களுக்குள் எதையோ மறைத்துக் கொள்கிறார்கள் எனச் சொல்கிறேன் நான்.

13. ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு போன்ற அணு நிகழ்வையும், ஐஸ் நைன் (Ice Nine) அல்லது அணுகுண்டுகளுக்கெல்லாம் மிஞ்சிய ஒன்றை உருவாக்க முடிகிற விஞ்ஞானிகளையும் புரிந்து கொள்வதில் பல ஆண்டுகளைக் கழித்திருக்கிறீர்கள். கொள்கைகளை உருவாக்குபவர்களையும், அணு ஆயுதங்களையும் குண்டுகளையும் பாதுகாப்பு அம்சமாகக்குறிப்பிடுகிறவர்களையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பொய் சொல்வதில் அவர்களுக்கு இருக்கும் விருப்பம் என்பது பொய் சொல்வது அரசியலின் இயல்பான அம்சம் என்பதிலிருந்து வருவது. போரின் போது என்னுடன் இருந்த நண்பன் ஒருவன் இருக்கிறான், நாங்கள்  உளவாளிகளாகவும் பிறகு போர்க் குற்றவாளிகளாக சிறையிலும் இருந்தோம். அதன் பிறகு அவன் பென்சில்வேனியாவின் மாவட்ட வழக்கறிஞராக ஆனான். அவனது பெயர் பெர்னி ஓஹேர். துருப்புக்கப்பலில் வீடு திரும்பிய நாங்கள் நியூபோர்ட் ந்யூஸில் இறங்கினோம். இரண்டாம் உலகப்போரை மனதில் வைத்தபடி, “சரி, இதிலிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்என வினவினேன். நாங்கள் கீழ்மட்டப் படைவீர்ர்கள். ஓர் நிமிடம் யோசித்த அவன், “நான் எனது அரசாங்கத்தை இனி ஒருபோதும் நம்பமாட்டேன்எனக் கூறினான்.

1930களில் நாங்கள் வளர்ந்தபோது, அரசாங்கத்தை மிகவும் நம்பினோம். பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்ததால்அதற்குப் பெரிய ஆதரவாளர்களாகவும் இருந்தோம். நாங்கள் எந்த அளவிற்கு அதற்குத் தீவிர ஒத்துழைப்பு நல்கினோம் எனில் அது பொய்சொல்லிவிட்டது என்கிற ஒரே ஒரு விஷயமே இனி நாங்கள் அதனை ஒருபோதும் நம்பப்போவதில்லை என முடிவுசெய்யப் போதுமானதாக இருந்தது. ஒரு அரசாங்கம் பொய்சொல்லுவதென்பது அப்போது அதிர்ச்சிக்குரியதாகத்தான் இருந்தது. எங்களது குண்டுபோடும் தொழில்நுட்பத்தைப் பற்றியதாக அந்தப்பொய்வஇருந்தது. வானில் பறந்தபடி ஒரு புகைபோக்கியினுள் துல்லியமாகக் குண்டுவீசுகிற அளவிற்குத் திறன்மிகுந்த கருவிகள் எங்களிடம் இருந்ததாகவும் அதுசார்ந்த ஆராய்ச்சிகள் நிலத்தில் நிகழ்ந்துவருவதாகவும் அது சொல்லியிருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்பதை நாங்கள் பிறகு கண்டுகொண்டோம். ஏராளமான வானூர்திகளை அனுப்பி எல்லாவற்றின் மீதும் குண்டை வீசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். குறிபார்க்கும் சாதங்களுக்கான பயன்பாடே அங்கு இல்லை, ஒட்டுமொத்தமாக் குண்டுபோடுவதே அங்கு நிகழ்ந்தது. இது அமெரிக்கர்களிடமிருந்து மறைத்துவைக்கப்பட்டிருந்தது: வானிலிருந்து நிகழ்த்தப்பட்ட சோதனைகளும், குத்துமதிப்பான குண்டுவீசல்களும் நகர்கிற எல்லாவற்றையும் சுட்டும் வெடித்தும் தகர்த்ததுவும் மறைக்கப்பட்டிருந்தது.

14. ஹிரோஷிமா குண்டுவெடிப்பு குறித்து ட்ரூமன்ஸ்டிம்ஸன் அளித்த அதிகாரபூர்வ விளக்கத்தை முதலில் நீங்கள் நம்பினீர்களா, அல்லது அது ஒரு அப்பட்டமான பொய் எனத் தோன்றியதா?

நான் ஏற்கனவே போரில் இருந்து விலகிவிட்டேன். மே மாதம் விடுவிக்கப்பட்ட நான் ஜூன் மத்திவரை வீட்டிற்குத் திரும்பவில்லை. ஆனால் ஆகஸ்டில் குண்டுவெடிக்கப்பட்டபோது நான் விடுமுறையில் வீட்டில்தான் இருந்தேன். அச்சமயத்தில் நான் குண்டுவெடிப்புகளை ஏற்கனவே அறிந்தவனாய் இருந்தேன். எனவே குண்டுபோடப்பட வேண்டிய இடங்களாக ளவாடமையங்களைப் பற்றியும் ராணுவமையங்களைப் பற்றியும் ட்ரூமன் பேசியபோது அது எப்படி ஒரு அயோக்கியத்தனம் என்பதை நான் அறிந்திருந்தேன். ஏனென்றால் எல்லாமே தளவாடமையங்கள்தான், எல்லாக் கட்டிடமுமே விதிமீறல்தான், இரண்டு கம்பங்களுக்கிடையே தொங்குகிற எந்தக்கம்பியாயினும் அதுவும் விதிமீறல்தான். ஆனால் அவற்றிற்கு இவர்கள் இதுபோன்ற எத்தனையோ பெயர்களை வைத்துக்கொள்ளலாம். ஹிரோஷிமாவில் நாம் குறிவைத்திருந்த இடங்கள் குறித்தும் ளவாடங்கள் தளவாடமையங்கள்தான் குறித்தும் ட்ரூமன் பேசியதுதான் என் மனதில் நிற்கிறது. நியூயார்க்கில் தளவாடமையங்கள் இருக்கின்றன, இண்டியானாபொலிஸில் தளவாடமையங்கள் இருக்கின்றன, சௌத் பெண்டிலும் கூட தளவாடமையங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்தானே. அவை வெறும் இருப்புப்பாதைத் தளவாடங்கள்தான் என நினைக்கிறேன், ஆனால் நீங்கள் அவற்றை ராணுவரீதியாக அணுகினால் மிகக்கொடூரமாகிவிடும்.

15. இக்காலத்திற்கு வந்தோமென்றால், ஜிம்மி கார்டர் தனது அறிமுக உரையில், “அணு ஆயுதங்களே அற்ற உன்னத லட்சியத்தை நோக்கி நகர முயல்வோம்என்று கூறியதைக்கேட்டபோது நீங்கள் இயல்பாகவே அதைப் புறக்கணித்தீர்களா?  அரசாங்கத்தின் தலைவர்களிடமிருந்து வருகிற நேர்மையற்ற வார்த்தைளுக்கு மக்கள் பழகிவிட்டார்களா?

கொஞ்சமும் முக்கியத்துவம் அளிக்கப்படாத கருத்துகள் ஆகும் அவை. மொழியைப்பற்றியும் வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் ஆர்வெல் மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஆனால் அவர் சொல்லியிருப்பதோ விரும்பத்தகாத உண்மையினை மறைக்க முயல்கிற ஒரு இடக்கரடக்கல் மட்டும்தான். அத்தகைய ஒரு மறைமொழியினை பொதுமக்களின் ஆங்கிலத்திற்கு எடுத்துச்சென்று பொருத்திப்பார்த்தால் உங்களால் தாராளமாக அதனைப் புரிந்துகொண்டுவிட முடியும். உடைத்துப்பார்த்தால் காயப்படுத்துகிற உண்மை ஒன்று அதில் இருக்கும். ஆனால் நான் வெறும் பொய்களைப்பற்றி மட்டும்தான் பேசுகிறேன். இடக்கரடக்கல்களுக்கு இனி அவசியமே இல்லை. அவற்றிற்கான நாட்கள் முடிந்துவிட்டன. இப்போது நாம் கேட்பதெல்லாம் முழுமையான பொய்கள். ஏமாற்றுவது அவர்களது நோக்கமாய் இருந்தது என சந்தேகிப்பதைத்தவிர, குறியீடுகளை உடைத்து உண்மையைப் பார்க்கும் வழிகளே இல்லை.

16. என்னுடைய இறுதிக்கேள்விக்கு வருகிறேன். மக்களை மனோரீதியாகச் சங்கடப்படுத்தாத வகையில், அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்தும் உலகம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பது குறித்தும் அவர்களுக்குத் தெரியப்படுத்த முடியுமா? அணு ஆயுதங்களின் இருப்பு குறித்து மக்களை எச்சரிக்கும் விதமாக கவிதைகள் எழுதவோ சொற்பொழிவுகள் ஆற்றவோ விரும்புவதாகக்கூறி நான் உங்களிடம் வந்தால் அதைச் சிறப்பாகச் செய்வதற்கான உங்களது அறிவுரை என்னவாக இருக்கும்?

சுற்றி இருக்கிற எல்லாமே கல்லாகவும் மரமாகவும் இருக்கிற சூழலில் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் பயனின்றிக் கத்திக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏற்கனவே நான் சொன்னதுபோல வெகுசிலரே வாழ்க்கையை ஆதரிக்கின்றனர். mah-jongg விளையாட்டின்மீது பித்தாய் இருப்பது போல்தான் அது. எல்லோருமே mah-jongg விளையாடினால் உங்களால் 1920களின் mah-jongg வெறியினைக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் கடவுளே, மற்ற யாருமே ஓடுகளைப் பார்க்கவோ கவனம் செலுத்தவோ இல்லை; அவர்களுக்கு அதுகுறித்துக் கவலையேயில்லை. அவர்கள் அந்தக் குறிப்பிட்ட விளையாட்டில் இப்போது ஈடுபடவில்லை, வாழ்வதுதான் இப்போதைய விளையாட்டு. இதுவும் இன்னொரு விளையாட்டுத்தான், பெரும்பாலானவர்களுக்கு அதனை விளையாடுவதில் விருப்பம் இல்லை.

17. அப்படி ஒரு முடிவிற்கு உங்களை வரத்தூண்டுவது எது? இரண்டாம் உலகப்போரில் உங்களது அனுபவத்தின்போதுஇருந்த வெறும் பனிரெண்டு கிலோடன்களாலான சிறிய அணுகுண்டுகளிலிருந்து மெகாடன் எடையுள்ள அணுகுண்டுகளுக்கு இப்போது வெற்றிநடைபோட்டிருக்கிறோம், உலகில் அதுபோன்ற அணுகுண்டுகள் கிட்டத்தட்ட 50000 இருக்கின்றன. ”நம்மால் ஒருபோதும் இதைக்கையாள முடியாதெனதனிப்பட்ட வகையில் உங்களுக்கு எப்போதேனும் தோன்றியிருக்கிறதா?

இல்லை, நாம் சமாளித்திருக்கிறோம். அதாவது இந்தநாள்வரை நாம் தப்பித்திருக்கிறோம். இப்போது நாம் உயிரோடுதான் இருக்கிறோம், இல்லையா? எவ்வளவு நாட்களுக்கு நாம் இதேபோல் தொடரவேண்டும் என எனக்குத்தெரியவில்லை. குடிபோதையிலிருந்து மீளமுயல்பவர்கள் போலத்தான் ஒட்டுமொத்த உலகமும் இருப்பதாகத்தோன்றுகிறது எனக்குஒரு நாள் கணக்கு. ஜனாதிபதிகார்டரும் கூட அப்படித்தான் வாழ்கிறார். ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்கிற போது, கடவுளின் ஆசியால் நாம் இன்னொரு நாளைக் கடந்துவிட்டோம். நான் ஒரு மோசமான ஜனாதிபதி என எல்லோரும் கூறுகிறார்கள், ஆனாலும் இன்னொரு நாளை நாம் கடந்துவிட்டோம். பரவாயில்லை.” என முணுமுணுத்துக்கொள்கிறார். நாம் ஒவ்வொரு நாளாகத்தான் வாழ்கிறோம். ஆனால் உலகில் எவ்விதக்கட்டுப்பாடும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருகுடிகாரன் ஒவ்வொரு நாளும் என்ன செய்வான்இன்றைக்குக் குடிக்கக்கூடாது, இன்றைக்கு ஒருநாள் மட்டும் குடிக்கக்கூடாது. போர் சார்ந்த செயல்பாடுகளில் என்னால் அப்படி எந்தக் கட்டுப்பாட்டையும் காணமுடியவில்லை. உண்மையிலேயே நாம் வாழ்வதில் ஆர்வமுடன் இருந்திருந்தால், ஒவ்வொரு நாளையும் கடந்ததற்காகவும் அந்தநாளில் போர் சார்ந்த எந்த சமிக்ஞைகளும் இல்லாமல் இருந்ததற்காகவும் நம்மை நாமே தினமும் பாராட்டிக்கொள்வோம். ஆனால் அப்படி எந்தக் கட்டுப்பாடும் இங்கே இல்லை. தினந்தோறும் புதிய ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன, புதிய விவாதங்கள்துவங்கப்படுகின்றன, பெரிய ஆபத்தான பொய்கள் சொல்லப்படுகின்றன. எனவே இங்கே எந்தக் கட்டுப்பாடும் இல்லை. குடிகாரர்களைப்போலவே, இன்னும் ஒரு நாளைக்கு மட்டும் நாம் எந்தப் போர்ச்சிந்தையும் இன்றி வாழ முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை. நாம் முழுவதுமாகப் போரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம், இன்றோ நாளையோ எதோ மோசமாக நடக்கப்போகிறது. இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கிற புத்தகம் ஒரு குழந்தையைப் பற்றியது, இப்போது வளர்ந்து நாற்பதுகளில் இருக்கிற அவனது அப்பா ஒரு துப்பாக்கிப் பைத்தியமாக இருந்தார். ஒரு டஜன் துப்பாக்கிகளைக் கொண்ட வீடாக இருந்தது அது. தனது பதினோரு வயதில் அந்தக்குழந்தை அப்பாவின் ஒரு துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறதுஅது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியது. ஒரு 30-06 துப்பாக்கியின் காட்ரிட்ஜை நிரப்புகிற அவன் மாடி ஜன்னலின் வழியாக பதினெட்டு கட்டிடங்கள் தாண்டி இருக்கிற ஒரு குடும்பத்தலைவியைக் கொன்றுவிடுகிறான். சரியாக அவளது இரண்டு கண்களுக்கும் மத்தியில் துளையிட்டிருக்கிறான் அவன். இது அவனது வாழ்க்கையின் நிறத்தையே மாற்றி அவனுக்குப் பெயர் பெற்றுக்கொடுத்துவிடுகிறது. முதலில் இப்படிப்பட்ட ஒரு ஆயுதமே இருந்திருக்கக்கூடாது. இப்படி ஒரு ஆபத்தான ஆயுதம் இருக்கிற கிரகத்தில் பிறக்க நேர்ந்த அவன் அதன் அருகில் வெறுமனே தும்மலிட மட்டுமே வேண்டியிருந்தது. அதாவது, அது வெடிக்க வேண்டியிருந்தது; அது வெடிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டிருந்தது. வெடிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத அந்த ஆபத்தான ஆயுதம் எந்த ஒரு மனிதனின் கை எல்லைக்குள் இருப்பதுமே சகிக்க முடியாததுதான்.

 

***

-தமிழில் :- இல. சுபத்ரா

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *