தாத்தாவிடமிருந்த அந்தக் கற்பூரப் பெட்டகம் பற்றிய பிரமை என்னிடம் நீண்ட நாள்களுக்கு நீங்கவில்லைஎனக்குக்கற்பூர வாசத்தில் சிறு வயதிலிருந்தே ஒரு கிக்கம் இருந்தது. அந்த ஈர்ப்பு, திருவிழாக் காலத்துப்பங்குனித்திங்கள் நாளில் கற்பூரச்சட்டி எடுக்கும் பெண்களிலிருந்து எனக்குத் தொற்றியிருக்க வேண்டும்.கற்பூரத்தை எப்படிச் செய்கிறார்களென்பது என் மனதிலிருந்த பெருங் கேள்வி.

அக்கா கற்பனையில் கதையளப்பவள்.

கற்பூரம் எப்படிக் கிடைக்கிறது என்றால் அது மரத்தில் காய்க்குமென்று சொல்வாள்.

தாத்தாவுடைய கற்பூரப் பெட்டகத்தைத் தெரியுமல்லவா உனக்கு, அது கற்பூர மரத்தில் செய்ததாகத்தானே அவர் சொன்னார். ஆக, கற்பூரம் மரத்தில் தான் காய்க்கும்.

அவள் அதை நிறுவுவதற்கு தாத்தாவின் வார்த்தைகளை உதவிக்கு எடுத்துக் கொள்வாள்.

அப்படியென்றால்வில்லை வில்லையாகக் காய்த்துத்தொங்கும் போல, இல்லாவிட்டால், உருண்டையாகக்காய்க்கும் கற்பூரத்தை வில்லைகள் ஆக்குவார்களோ?

கற்பூரம், குங்குலியம்சாம்பிராணி இதெல்லாம் வகைவகையான வாசனையாய்த் திரண்டு கோவில்காலங்களில் என் மனதை மொய்க்கும்இந்த வாசனை மீதான என் பிரமையை எப்போதும் சீண்டிக் கொண்டிருப்பது அக்காவிற்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தாத்தா அந்தப்பெட்டகத்துள் சில அரிய நூல்களை வைத்திருந்தார்அவற்றை அவர் பொக்கிஷம் போல் பேணியிருந்தார்எங்களுடைய, அம்மா, மாமாக்களின் சாதகக் கட்டுக்கள், உறுதிகள் எல்லாம் அதற்குள் தான் இருந்தன. மெல்லிய பட்டிழை ஒன்றினால் அவற்றைப் பிணைத்து வைத்திருப்பார் தாத்தா. நாங்கள் சிறுவர்கள், அவரிடம் போய்,

தாத்தா, கற்பூரப் பெட்டியை ஒருக்கால் திறந்துகாட்டுங்கோ ” என்போம்.

அவரை நெருங்குவதிலிருந்த பயத்தை அந்தக்கற்பூரப்பெட்டியைத்   திறக்கும் நேரங்களில் தான் கொஞ்சம், கொஞ்சமாய் விலக்கிக் கொண்டோம். தாத்தா பெட்டியைத் திறக்கும் போது ஒவ்வொருவராய்க் குனிந்து அந்தப் பெட்டிக்குள்ளிருந்து வரும் கற்பூர வாசத்தை முகர்ந்து கொள்வோம். காலகாலமாய் எத்தனை தடவை திறந்தாலும் அந்தக் கற்பூரத்தின் வாசம் கரைந்து போயிருக்காது. புத்தம் புதுக் கற்பூர வாசமாய் நாசியைத்தீண்டும். நான் இரகசியமாய் அந்தப் பெட்டிக்குள் எங்கேனும் மூலைக்குள் தாத்தா ஏதேனும் கற்பூர வில்லைகளை உடைத்துப் போட்டிருக்கிறாரோ என்று கண்களைச் சுழல விட்டுச் சோதனை போட்டதுண்டு. ஆனால் அப்படியொருசிறு துண்டு கற்பூர வில்லையும் ஒரு போதும் என்கண்களுக்குத் தென்பட்டதில்லை.

தாத்தாவின் அப்பாவிற்கு, நீண்ட வருடங்களாகப்பிள்ளைகள் பிறக்கவில்லையாம். மயில் வாகனம் ஒன்றை ஊரிலுள்ள கந்தசுவாமி கோயிலுக்கு நேர்ந்து கொடுத்தபிறகு தான் ஒவ்வொருவராக எல்லாரும் பிறந்ததாகப் பாட்டி சொல்லுவாள். அந்தக் கோவிலில் கந்தசஷ்டி கடைசி நாளின் தீ மிதிப்பின் போது அங்கு செல்வது நினைவிலுண்டு.அந்தக் கோவிலுக்கு முன்னால் இருக்கின்ற மரத்திலிருந்து விழுகின்ற ஒரு வித காய்களை மடக்கி டிக்,டிக் கெனும் ஒலிகளை உருவாக்கி மகிழ்வோம்.

கற்பூரப் பெட்டகத்துக்குள் வேறென்ன இருக்கிறது என்பதில் அப்போது நாங்கள் அக்கறை காட்டாது விட்டாலும் அதில் அக்கறைப்படுகிற காலத்தில் அப்பெட்டகம் தாத்தாவிடமிருந்து மாமா வீட்டு உள்ளறைக்குப் போய்விட்டது. தாத்தாவும் இல்லாமலாகிவிட்ட பிறகு, நாங்களும் கொழும்புக்குப் போய் விட்டோம்.

இடையில் ஊருக்கு ஒரு தடவை போன போது மாமாவிடம் அதை பற்றிக் கேட்டோம்.

இடம் பெயர்ந்த வேளை பங்கருக்குள் அதை வைத்துப் பாதுகாத்ததாகவும், சிறிய சிறிய இடம்பெயர்வுகளுக்குப் பின்திரும்பி   வந்த போது அது பத்திரமாய் இருந்ததாகவும், ஒரு  தடவை இடம்பெயர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்பிவந்த போது அந்தப் பெட்டகம் பங்கருக்குள்இருக்கவில்லையென்றும் மாமா சொன்னார்.

ஊருக்குள் கற்பூரப் பெட்டி தாத்தாவிடம் இருந்த விடயம் ஊர் முழுக்கப் பிரசித்தம். அந்தப் பெட்டகம் யாரிடமிருந்தாலும், அது எங்களுடையதென்று சொல்ல நிறையப் பேர் சாட்சிக்கிருப்பார்கள் என்றாள் அம்மா.

அம்மா ந்தக் காலத்திலை இருக்கிறீங்கள், அதை எடுத்தவன் திருப்பிக் குடுப்பானோ?” என நானும் அக்காவும் அம்மாவின் அறியாமையை நினைத்து வெம்புவோம்.

எங்கேனும், ஏதேனும் சில புதிய பொருள்களைப் பார்க்கையில்,அலுமாரிகள், தளபாடங்கள் அவற்றின் புதியமோஸ்தர்கள் பற்றிப் பேசுகையில் எங்களுக்குத் தாத்தாவின் கற்பூரப் பெட்டியின் நினைவு வந்து விடும். அதிலும் எனக்கு அப்படி அதிகம் ஞாபகம் வரக் காரணம், நான் வேலைக்குச்சேர்ந்து கொண்டது ரத் தளபாடங்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் என்பதனால். புத்தம் புதிதான, மரத்தளபாடங்கள் ஷோ ரூமிற்கு வந்து சேர்கிற போதுகாற்றில் மெல்லக் கசிந்து பரவுகின்ற அந்தப் புது வாசத்தை நாம் நுகர்வோம். அந்த வாசம், எங்களின் கற்பூரப்பெட்டியின் ஒரு துளி வாசத்திற்குக் கூட ஈடாகியிருக்காது.

எங்கள் முதலாளி ஒரு சிங்களவர். அவர் அந்தத்தளபாடங்களுக்கு விலை குறித்து நாங்கள் வாடிக்கையாளருடன் அவற்றுக்காகப் பேரம்பேசும்போதுஎன்னையறியாமலே அந்தக் கற்பூரப் பெட்டி பற்றி நினைத்துக் கொள்வேன்.

அந்தக் கற்பூரப் பெட்டியைத்   தன்னுடைய தாத்தா மலேஷியாவிலிருந்து கொண்டு வந்ததாகத் தாத்தா சொல்லக் கேட்டிருந்தேன். அந்தக் கற்பூர மரம் பற்றி அறிவதற்காக நான் மாறி, மாறி கூகிளில் தேடிய போதும் கற்பூர மரமென்பது எதுவென்று என்னால் உறுதி செய்ய இயலவில்லை.

அப்படி ஒரு மரம் இருந்தால், அந்த மரத்திலிருந்து கற்பூரவாசனை கசியுமோ என்பதுவும் எனக்கும், அக்காவுக்குமிருந்த நெடுநாள் கேள்விகள். அப்படியொரு பெட்கத்தை இனியொரு காலத்தில் என்னால், வாங்கிக்கொள்ள முடியுமோ என்பது எல்லாவற்றையும் விடப் பெரியகேள்வி. ஆனால், நான் விரும்பியோ, விரும்பாமலோ மரத்தளபாடங்கள் காட்சியறைக்குள் நுழைந்த பிறகு, அந்த நினைப்பு என்னைச் சூழ்வதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை.  

நாட்டின் பல்வேறு கிராமப் புறங்களிலிருந்தும், பல தொடர்புகள் எங்கள் முதலாளிக்குக் கிடைத்தன. பழையமரச் சாமான்கள் கிடைக்கிற போது அவற்றை மிக மலிந்தவிலைக்குக் கொள்வனவு செய்வார். அவை அவரது வேலைத்தலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சீர்செய்யப்பட்டு, தேவையானவற்றுக்கு, வார்னிஷும், வர்ணங்களும் அடிக்கப்பட்டு, காட்சியறைக்கு  வரும் போது, அவற்றின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதைக்கண்டு நானே அசந்திருக்கிறேன்.

அதைக் கண்டபிறகு தான்தாத்தாவின் கற்பூரப் பெட்டகம் பற்றிய தேடல், என் மூளையில் முளை விடத்தொடங்கியிருந்தது.

ஒரு தரம் என் முதலாளிக்கு வந்திருந்தவட்ஸ் அப்படங்களில் நான் எங்களது கற்பூரப் பெட்டியைக் கண்டேன்.அது யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவரின் இலக்கம். அது பலலட்சங்கள் பெறுமதியானதெனவும் அதன் விலை எத்தனை லட்சமாயிருந்தாலும் அதனைத் தவற விட்டு விடக்கூடாதென்றும் முதலாளி அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அதன் புறத் தோற்றத்தைப் பார்த்துத் தான்அவர் விலை மதிப்பிடுகிறார். ஆனால், அதன் வாசம், அதைஇவர் அறிந்தால்…?

நான் ஊருக்கு யாருக்கும் சொல்லாமலே வந்து சேர்ந்தேன்.அந்த இலக்கத்தைத் தேடிப்பிடித்து அந்த நபரைத்தொடர்பு கொண்டு அவருக்குத் தகவல் கொடுத்தவர்களைத்தேடிச் சென்றும் அந்தப் பெட்டகத்தின் இருப்பிடத்தைஅறிய முடியவில்லை.  யாழ்ப்பாணத்தவன் ஒருவன் அப்பெட்கம் பற்றிய தகவலை அறிவதை அவர்கள் விரும்பாதிருக்கலாம் எனவும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கான பேரத்தில் பெரிய தொகையைப் புரட்டிவிடுவதற்கான எத்தனிப்பு அதுவென்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது.

அம்முறை ஊரில் நிறைய நாள்களை செலவிட்டேன்.ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் பழையமரச்சாமான்களை அறியும் ஆர்வமும், அக்கறையும் இப்போது என்னில் திகரித்திருந்தன. கோவிலுக்குப் போய் மரச்சிற்பங்களை பார்த்தேன். வாகனங்கள் எல்லாம் வரிசையில் நின்றன. புத்தம்புதி , கடவுளர் மட்டும் அமர்வதற்கென அனுமதிக்கப்பட்ட வாகனங்கள். எனினும் சிலவற்றில் புறாக்களும், பூனைகளும் தம்மிஷ்டப்படி ஏறி அமர்ந்திருந்தன. மயில், எருது, ஆட்டுக்கடா, சிம்மம், அன்னம் என. ஆனால்,  தாத்தாவுக்கான நேர்த்திக்காகக் கொடுக்கப்பட்ட மயிலைக் காணவில்லைஅது நிறங்கள் மங்கி இருந்தாலும் தோகை விரித்துப் பறக்க ஆயத்தமாகிய நிலையிலிருந்த மயில். இப்போதிருக்கிற மயில் வர்ணங்கள் பளிச்சிட்டாலும், நிலத்தில் சரியும் ஒடுங்கிய தோகையுடனிருந்தது.அந்த மயிலின் கண்களிலிருந்த தீர்க்கம் இப்போதுள்ள மயிலிடம் இல்லை.

முந்தி இஞ்சை இருந்த மயில் வாகனம் எங்கை அப்பு?”

கோவில் தர்மகர்த்தாவிடம் கேட்டேன்.

அது ஒரு கால் டிக் கொண்டு கிடந்தது தம்பி, ஷெல்லடியிலை அம்பிட்டு ரெண்டு மூண்டு இடத்திலசிராய்ப்புகளும் கிடந்தது. நிறமும் மங்கிப் போச்சுதுதானை.இஞ்சை கிடந்து இழுபட்டது. பழையசாமான்களோட சேர்த்து இரும்புச்சாமான் சேர்க்கிறவங்களுக்குப் போட்டாச்சுது, பிறகு தான் இந்தப்புது மயில் செய்வீச்சது

என் மனம் நொருங்குண்டது. தாத்தாவுக்கான நேர்த்திவைத்துக் கொடுத்தது அந்த மயில். தாத்தா காலத்துக்குப்பிறகு அப்படி நேர்ந்து கொடுத்த பொருள் அர்த்தமிழந்துபோகுமோ? ஆண்டவனுக்கென்று நேர்ந்த பொருள்.அதனைச் செப்பனிட்டு ஆலயத்தில் வைக்காமல், அதற்கான பெறுமதியோடு அது அப்புறப்படுத்தப்பட்டு விடுமோ? அந்தமயிலின் கூரிய கண்கள் சிறு வயதில் திருவிழாக்காலங்களில் முருகனோடு வலம் வருகையில் மனதைஅசைத்த நினைவுகள் உலுப்பக் கலைந்து தெளிந்தேன்.

யாரைக் குற்றம் சொல்லுவது. நாங்கள் ஊரில் இல்லைஅப்படி, அப்படியே ங்கள் சுயநல நோக்கில் புலம்பெயர்ந்தபிறகும், எங்கள் ஊரில் உள்ள ஆலயத்திற்கும், எங்கள் பரம்பரைப் பொருள்களுக்கும், யாரும் காவல் இருக்கவேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்? எங்களுடைய இளமைப் பருவம் திளைத்த விடயங்களை மீள நினைத்துப்பரவசப்படலாம்ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், நினைவுக்குமான விலையை நாங்கள் செலுத்தத் தவறிவிட்டோமா?

கற்பூரப்பெட்டகத்தை எவ்வளவு தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

***************

 

நண்பனொருவன் சுவிஸிலிருந்து வந்திருந்தான். தன்னோடு வெள்ளைக்கார நண்பன் ஒருவனையும் அழைத்து வந்திருந்தான். அவர்கள் யாழ்ப்பாணப் பயணச்சுற்றினை முடித்து விட்டுக் கண்டி நகரத்திற்குச் செல்லும்போது என்னையும் கூட வருமாறு அழைத்திருந்தான் நண்பன். இதுவரை கண்டி நகரம் செல்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்காததால் மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

தங்குவதற்குரிய சிறந்த ஹோட்டல் ஒன்றினை நண்பனே தெரிவு செய்து முன்பதிவு செய்திருந்தான். எனவே அந்தப்பகல் முழுவதும் பேராதனைப் பூங்காவைச் சுற்றி விட்டுவந்தோம்.

நான் என்ன செய்கிறேன் என்று லூக்காஸ் கேட்டான்.

மரத்  தளபா நிறுவனம் பற்றிச் சொன்னேன்.

பழங்காலப் பொருள்களுக்குத் தங்கள் நாட்டில் வழங்கப்படும் அபூர்வ மதிப்பைப் பற்றி அவன் கூறிக்கொண்டே வந்தான்.

ஒரு பொருள் கீழே விழுந்திருந்தால் கூட அதனை மற்றவன் எடுக்க அச்சப்படும் வகையிலான சட்ட திட்டங்கள் பற்றிப்பிரணவன் சொன்னான்.

இங்கு தெருவுக்குத் தெரு குப்பை தான் கிடக்கும்அப்படியிருக்க எங்கள் நாடென்ற பொறுப்புணர்வு எப்படிவரும் என எனக்குள் சலித்துக் கொண்டேன்அந்தப்பொறுப்புணர்வு எப்படி வரும்? இத்தனை ஆண்டுகாலமும்நானா, நீயா என்று இரு இனங்கள் தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்து விட்டு, அந்தச் சண்டையிலேயே அபிவிருத்தி அடைய வேண்டிய காலமெல்லாம் போய்விட்டதே. இதை நாங்கள் தனியே நாட்டிற்கும்  மட்டும்சொல்ல முடியாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் இது தானே நடக்கிறது.

பிரணவன் பரவாயில்லை. தப்பித்துப் போய் விட்டான்தன்னை நிலைநிறுத்தித் தனது குடும்பத்தைச் சரியான திசையில் ஆக்கிக் கொண்டான்.

என் மனதுக்குள் தர்க்கங்கள் சுழித்தோடின.

இங்கே கொஞ்சக் காலத்திற்கு முன் துட்டகைமுனுவின் வாள் பற்றிப் பேசிக் கொண்டார்களே என்னவாயிற்று “என்றான் பிரணவன்.

அது ஒன்றுமில்லை, அப்படியேதானிருக்கிறது. இன்னும் சற்றுக் காலத்தில் வேறு யாராவது அரசியல்வாதிகள் குரல் எழுப்பலாம். அதை பற்றிக் கதைத்தால் குருதி நிலத்தில் ஊறத் தொடங்கி விடுகிறதுஎன்றேன்.

அது என்ன வாளின் கதை…?” என்று குறுக்கிட்டான் லூக்காஸ்.

பிரணவன்  துட்டகைமுனுவின் கதையை லூக்காசுக்குச் சொன்னான். தொடர்ந்து

மூன்று வாள்கள் இருந்தன. ஒன்று கொழும்பு மியூசியத்தில்இருக்க வேண்டும்என்றான்.

நாங்கள் இந்தக் கதையை இத்தோடு நிறுத்துவது நல்லதுஎன்றேன். விளங்கிக் கொண்டவன் போல,

நீங்கள் உங்களுடை புராதனப் பொருள்களைப் பத்திரப்படுத்துவதில்லையா?” என்றான் லூக்காஸ்.

என் மனது குறுகிப் போனது.

என்னுடைய சிங்கள முதலாளி, எங்கிருந்தோ வந்திருக்கிற இந்த லூக்காஸ் இவர்களுக்கிடையில் நானும், பிராணவனும் மட்டும் சுயத்தைத் தொலைத்து நிற்பவர்களாக உணர்ந்தேன்.

அபூர்வம் என்பது உண்மையில் என்ன? சில பொருள்கள் வர, வர அரிதாகிக் கொண்டு வருகின்றன. மனித நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க சில பழைய பொருள்கள் காலப்போக்கில் நவீன உற்பத்திகளுக்கிடையில் காணாமல்போகின்றன. அவற்றை நாம் சேமித்து இளைய சந்ததிக்குக்காட்ட வேண்டாமா?”

நான் திகைத்து நின்றேன்.

நீ பழைய நாணயங்கள் எத்தனை வைத்திருக்கிறாய்…?, உன்னுடைய அறிவிற்கு எட்டிய வரை, இலங்கையில் ஆகக் குறைந்த நாணயம் எவ்வாறாக இருந்தது?”

லூக்காஸ் என்னைப் பார்த்துத் தான் இந்தக் கேள்விகளைக்கேட்டான்.

எனக்குத் தெரியவில்லை. 5ரூபா, 2ரூபா, 1ரூபா தாள்களில் கண்ட நினைவு இல்லை. சில்லறைகளில் ஒரு தம் கண்டிருக்கிறேன். கை விசேடங்களில் அப்போது தாத்தா தருவது 5ரூபா. அப்போது அது ஒரு பெரிய தொகை.இப்போது சிறு பிள்ளைகளுக்கு 100 ரூபாவிற்குக்குறைவாகக் கொடுக்க முடியாதே.

அது என்ன கைவிசேடம்…?” என்று லூக்காஸ் கேட்ட போது பிரணவன் விளக்கத் தொடங்கினான்.

நான் மௌனமாக வந்தேன்.

 

***************

 

ஹோட்டல் பிரமாண்டமாகவிருந்தது. கூடுதலாக வெளிநாட்டுப் பயணிகளின் வரவை எதிர் நோக்கிக்கட்டப்பட்ட கட்டடம் போலிருந்தது. கீழ்த்தளம் வட்டவடிவில் விசாலமான விறாந்தையொன்றைக்கொண்டிருந்தது. ஒரு புறத்தே பெரிய சோபாக்கள் இளைப்பாலுக்கு ஏற்ற வகையிலோ, விருந்தினர்களுக்காகவோ வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருதூணுக்கருகிலும், சிறிய கண்ணாடிப் பெட்டிகள்பதிக்கப்பட்டு, அவற்றுக்குள்  அபூர்வமான பொருள்கள் இடப்பட்டுப் பெயரிடப்பட்டிருந்தன. அங்கு வந்திருந்த பயணிகள் ஒவ்வொரு தூணுக்கருகிலும் நீண்ட நேரம் நின்றுவியந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

லூக்காசும்ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்து வியப்பொலிகளைத் தந்து கொண்டிருந்தான்.

திடீரென்றுமார்வெலஸ்என்ற அவனின் ஆச்சரியத்தொனியைக் கேட்டு நான் அவனுக்கருகே சென்றேன்விறாந்தையின் மத்தியிலிருந்த பீடத்தில் மயில் ஒன்று நின்றது. சிறகுகள் விரித்த அந்த மயிலின் நிறச்   சேர்க்கை அற்புதமாகவிருந்தது. தோகை முழுவதும் பச்சையும், நீலமும்.

லூக்காஸ் வியந்தது அந்த மயிலின் அழகையும், நிறத்தையுமல்ல என்பது சற்றுப் பொறுத்து அவன் சொன்னசொற்களிலிருந்து எனக்கு விளங்கியது.

எவ்வளவு நுண்மையாக இந்த மயிலை வடிவமைத்திருக்கிறார்கள். இயற்கையில் மயில்கள் நாகத்தை உட்கொள்வதை இப்படி ஒரு கலைஞன் உருவாக்கியிருக்கிறானேஎன்றான் லூக்காஸ்.

நான் மயிலின் சொண்டை நோக்கினேன். அதன் சிவந்துகூர்ந்த அலகில் மெல்லிய கருநிற நாகமொன்றின் நெளிவு.

இ்தி் அப்படி என்ன ஆச்சரியம்? எங்கள் கோவில்களில் இருக்கின்ற பெரும்பாலான மயில் சிற்பங்களில் நாகம் இருப்பது தான் வழமை. நாகம் இல்லாமல் போனால் தான்ஆச்சரியம்.”

ஏதோ ஒன்று உறுத்தலாக இருக்க, நான் என் வார்த்தைகளை நிறுத்தினேன்.

அருகே போனேன்.

மயிலின் கண்கள் தீர்க்கமாய் என்னைப் பார்த்தபடியிருந்தன

மயிலின் மீது முருகன் அரோகணித்திருந்த அந்த நாள்கள் என் கண்களுக்குள் தடதடக்கத் தொடங்கின.

நெளிந்திருந்த பாம்பின் விஷத்தை உண்ட மயிலின் கண்களிலிருந்த அந்தத் தீர்க்கம் புதிய நிறங்களின் ஆலாபனையில் சற்று மங்கி விட்ட போதிலும் அவ்விழிகள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

சற்றுப் பொறுத்து அந்தக் கண்கள் என் தாத்தாவினுடையதாய் மாறின.

***

-தாட்சண்யம்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *