வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது

வெளியே சென்ற என்னவன் இன்னும் வரவில்லை

மூச்சுமுட்டக் குடித்துவிட்டு

எந்த வேலிக்கடியில் கிடக்கிறானோ

வயிறு கிள்ளுகிறது

வீட்டில் ஒருபிடி தானியமில்லை

எனக்கில்லை என்றாலும் பரவாயில்லை

குழந்தை தாய்ப்பாலுக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது,

ஏதும் புரியாமல்

வீட்டிற்கு வெளியே அலைந்தேன்

பிணந்தின்னிக் கழுகுகள் ஏனோ

என்னையே வெறித்துப் பார்க்கின்றன

உள்ளே வரும் நேரத்தில்

பறந்துவந்த கழுகு

பின்பக்கமாகப் பிடித்தது

அதற்கு வேண்டுமென்பதை எடுத்துக்கொண்டு

எதையோ விட்டுச் சென்றது

அவ்வளவுதான்

வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டேன்

குழந்தை அழுகிறது

வயிற்றில் நெருப்பு விழுந்ததைப் போல இருந்தது

மீண்டும் சில நொடிகளில்

மொத்த இயற்கையே நிர்வாணமாக இருக்கும்போது

எனக்கென்ன புகார்?

நடந்த சம்பவத்திற்குப் பிறகு

கடிபட்ட பாலூறும் முலைக்காம்புகள் எரிகின்றன

என் கணவன் போதையில்

பிணத்தைப் போல கிடக்கும்போது

என் யோனியிலிருந்து உமிழ்நீர்,

போதையிலவன்

சுவரில் துப்பிய எச்சிலைப் போல.

வந்தவன் எல்லாம் முடிந்த பிறகு

நோட்டு ஒன்றை வீசியெறிந்தான்,

எனக்கு அதுவோர் அசிங்கம்,

அவனுக்கு எப்படித் தோன்றியதோ

எனது தேவை, குழந்தைக்குப் பால்

அவ்வளவுதான்

மணலில் குடம் செய்து எடுத்து வர வேண்டியதில்லை,

நான்

நாய் வாய் வைத்த பாத்திரமும் அல்ல

தயவு செய்து மன்னிக்கவும் நான் வேசி அல்ல

 

***

 

ஹாரோஹள்ளி ரவீந்திரா (ஜனவரி 27, 1986)

மைசூருக்கு அருகில் இருக்கும் ஹாரோஹள்ளி என்றகிராமத்தில் பிறந்தவர். தாய் மஹதேவம்மா, தந்தை அந்தானி. சிறுவயது முதலே எழுத்தில் ஆர்வம் கொண்டவர். முதலாம்ஆண்டு எம்.ஏ படித்துக்கொண்டிருந்தபோதுஅகத்தின் அழகு வருடியபோது என்னும் கவிதைத் தொகுப்பை எழுதிவெளியிட்டார். இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகளில் ிஙிக்ஷிறிதீவிரவாதம் , ‘பிரபுத்துவமும் அடக்குமுறையும், ‘ஹிந்துஅல்லாத ஹிந்துக்கள் போன்ற புத்தகங்கள் முக்கியமானவைஎன்று கருதப்படுகின்றன. இவருடையழிஷீ ஸிணீனீ, யிணீவீஙிலீவீனீ உள்ளிட்ட சில கட்டுரைகள் ஆங்கிலத்தில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. போராட்டங்களில் கலந்து

கொண்டு தொடர்ந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்.அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்றதமிழ் தலித் சிந்தனையாளர்கள் குறித்து கன்னடத்தில்தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.

இவ்வருடத்திற்கான தலித் சாகித்ய பரிஷத் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார். அதையொட்டி இக்கவிதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

***

-தமிழில் : பாலசுப்ரமணி மூர்த்தி

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *