அரபியில் – பேராசிரியர் உஸாமா செய்யித்
பீடாதிபதி உசூல் அத் தீன் பீடம்
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் – எகிப்து
மனித உரிமைகள் என்ற விடயத்தைத் தாண்டி மிருகங்களின் உரிமைகளுக்காக இன்று குரல் எழுதப்பப்பட்டு வருகிறது. இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு  முன்னரே உயிரினங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் பூனைகள் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக இமாம் ஷம்ஸ் இப்ன் துலுன் அல் ஹனபி தனது புத்தகத்தில் தனியொரு பகுதியை ஒதுக்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் உற்கார்ந்திருக்கும் போது ஒரு பூனை அவர்களிடம்; வரும். தன்னிடமிருக்கும் பாத்திரத்தில் நீரை அதற்கு குடிப்பதற்காக கொடுக்கும் பழக்கத்தை அவர்கள் வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “இவை உங்கள் மத்தியில் இருக்கின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் பூனைகளைப் பற்றி கூறுவார்கள். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் அபுல் பரகாத் அஹமட் அல்தர்தீர் அவர்கள் ஒரு நாள் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் உற்கார்ந்;திருக்கும் இரண்டு வரிசைகளுக்கு மத்தியில் ஒரு பூனை அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஒரு மாணவன் பூனையை அழுத்தமாக தள்ளிவிட்டான். இந்தக் காட்சி இமாம் அபுல் பரகாத் அஹமட் அல்தர்தீர் அவர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. பூனையை எடுத்து தனது கதிரைக்கு அருகில் வைத்தார்கள். தான் சாப்பிடும் உணவுவில் இருந்து ஒரு பகுதியை அந்தப் பூனைக்காக வழங்கினார்கள். பின்னர் இமாம் அவர்கள் அதனை தனது மடியில் வைத்துக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.
இதேவேளை, இமாம் அபுல் பரகாத் அவர்கள் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் போது இந்தப் பூனைக்காக ஏதாவது ஒன்றை சாப்பிடக் கொடுத்துவிட்டு செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டார்கள். சில நாட்களில் இமாம் அவர்கள் அல் அஸ்ஹருக்குள் நுழையும் போது அவரை 200 பூனைகள் புடை சூழ்ந்து கொண்டன. அவை அனைத்தும் இமாம் அவர்களின் பின்னாள் சுற்றித் திரிந்தன.
எனினும், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுவதை  நாம் அடிக்கடி கேட்கிறோம். ஆனால், மிருகங்களுக்குக் கூட அன்பு செலுத்துமாறு இஸ்லாம் எமக்குக் கட்டளையிடுகிறது, இந்த நம்பிக்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. உயிரினங்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும், மனித உரிமைகளை வழங்குவதிலும் முஸ்லிம்கள் பின் நிற்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
உயிரினங்களின் உரிமைகளை வழங்க வேண்டுமென்பது முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. உலகிலுள்ள அனைத்துப் படைப்பினங்களும் இறைவனின் மகத்துவத்துக்கு உரியவையாகும். இதனால் ஒவ்வொரு படைப்பினத்திற்கும் உரிமைகளும், மகத்துவமும் காணப்படுகின்றன. உயிரினங்களுக்கும், மனிதனுக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்த இது வழிவகுத்துள்ளது.
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் “உஹத் மலையை நோக்கி  “இது எம்மை நேசிக்கின்றது. இதனையும் நாம் நேசிக்கின்றோம்’’ என்று கூறினார்கள். “எவனுக்கும் பயனற்று வாழும் மனிதன் மரணிக்கும் போது வணக்கவாளிகளுக்கு நிம்மதி கிடைக்கிறது. மரங்களும், பூமியும், மிருகங்களும்; இதனால் நிம்மதியடைகின்றன. ஏனெனில் அவனது கரங்களினால் ஏற்படும் பாவங்களுக்காக வணக்கவாளிகளும், பூமியும், மரங்களும், உயிரினங்களும் கவலையடைகின்றன”.
“(அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை. (தப்பிச்செல்ல) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை” சூறா அத்துகான்: 29ம் வசனம்
இதனால் தான் சிறந்த மனிதனொருவன் உலகைவிட்டு பிரியும் போது பூமிகளும், வானங்களும் அவனது மறைவிற்காக கண்ணீர் சிந்துகின்றன என்று கூறப்படுகிறது.
கடந்த கால வரலாறுகளைப் பார்க்கும் போது மிருகங்களுக்காக நீர் அருந்தும் பகுதிகள் நகரங்களில் விஷேடமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. கெய்ரோ நகரிலும் சுத்தமான நீரை அருந்துவதற்காக சதுக்கமொன்று அமைக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் அருந்துவதற்காக மிக உயரமான பகுதியில் ஒரு நீர் தாங்கி அமைக்கப்பட்டிருந்தது. நீர்; கீழே வரும் போது அது மிருகங்களுக்கு அருந்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது படிமுறை பூனை போன்ற சிறு உயிரினங்களுக்கு இலகுவான முறையில் நீரை அருந்துவதற்கான வசதி அதில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நாய், பூனை போன்றவை நீர் அருந்தும் தடாகத்தை சுத்தம் செய்வதற்காக தனி நபரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு திறைசேரியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டது. இலைகள் போன்ற நீரை மாசுபடுத்தும் பொருட்களை சுத்தப்படுத்துவதற்காக விசேட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அல்-அஸ்ஹர் பலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ள முஹம்மத் அபு அல் தஹாப் பள்ளிவாசலின்; மினாராவின் உயரமான பகுதியில் பறவைகளுக்கு உணவு அருந்துவதற்கான விசேட பகுதியொன்று அமைக்கப்பட்டிருந்தது. உணவு உட்கொள்வதற்காக உரிமைகளை உயிரினங்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளமை இதற்கான காரணமாகும்.
(எனது ஆசிரியர்) பேராசிரியர் இமாம் முப்தி அலி ஜூம்மா முஹம்மத் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் தொடர்பான விளக்கங்களை எமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பூனையை கொடுமைப்படுத்தியமையினால் நரகம் சென்ற ஒரு பெண்ணைப் பற்றி அவர்கள் எடுத்துக் கூறுவார்கள்.
இந்த சம்பவம் மக்களின் அறிவிற்கு எட்டும் வகையில் விளங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இது காலம், இடம், நேரம், சந்தர்ப்பம், தனியாள் என்பனவற்றுக்கு ஏற்ற வகையில் பொருந்தக்கூடியதென்று இமாம் அல் கராபி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் பெண்களுக்கு மாத்திரம் பொருத்தமானதல்ல. தண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியே இந்த ஹதீஸ் கூறுகிறது. ஓர் ஆண் உயிரினத்தின் மீது அநீதி இழைத்தால் அவன் தண்டனைக்கு உள்ளாக மாட்டான்
தமிழாக்கம் – பஸ்ஹான் நவாஸ்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *