சாஜித் : எமது உரையாடல்களுக்கான தனித்த வெளியினை வனம் தீர்க்குமென்று நம்புகிறேன். நாம் பேச வேண்டிய விடயங்கள் ஏராளமிருக்கின்றன. இதனைப் பேச வேண்டும், இதனைப் பேசக் கூடாது என வனத்திற்கு எல்லைக் கோடுகளை போட்டு விட முடியாது. செயற்பாட்டாளர் என்ற வகையில் ஒருமித்த கருத்துக்களுடன் ஒத்துப் போன உங்களுக்கும் எனக்குமான உரையாடல் கூட காத்திரங்களை தகர்த்தெறியும் வைராக்கியம் கொண்டதுதான்.

ஷாதிர்: நாம் பேசத் தொடங்கும் வனத்தின் வெளியில் பொதுமைப்பட்ட நிலைப்பாடு என்று ஏதுமில்லை. படைப்புக்கள் பொதுமைப்பாட்டிலிருந்து எப்பொழுதும் விலகியிருப்பதாகவே பார்க்கிறேன். ஆனாலும் ஒரே பிரதியில் எல்லா வற்றையும் பேசிட முடியாது. ஒவ்வொரு வருகையின் போதும் வனத்தின் இறுதிப்பக்கம் எம் உரையாடல்களின் நேர்வெட்டாக இருக்கும். இங்கு கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் இலக்கியத்தின் பாடு பொருளைத் தாண்டி கருத்தாக்கங்களின் வெளி முகத்தினை பேச முன்வந்திருக்கிறது.

சாஜித்: இங்கு பலர் உண்டு. படைப்பிலக்கியம் எனும் போர்வையில் கொட்டித் தீர்க்கின்ற மசாலாக்களும் வாசிப்பு விரக்தையாக மாறியிருக்கிறது. ஒரு இதழினை பார்வைக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கலை நாம் நன்றாக உணர்ந்தோம். சிலரிடம் கவிதைகளை கேட்ட போது தர மறுப்பதற்கான பல காரணங்களை கூறினர். ஆனாலும் அடுத்த நொடி பேஸ்புக்கில் ஒரு கவிதை போட்டனர். இதுதான் இங்கிருக்கும் பிரச்சினை. இதனை கட்டுடைப்பதற்கான போக்கினை வனம் செயற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். முத்திப் பழுத்துப் போனதாக தங்களை நினைத்துக் கொள்ளும் ஓரிருவரிடமிருந்தே இந் நிலைகள் தோன்றுவதை உணர முடியும். தருவதற்கும் தர முடியாததற்குமான சூழ் நிலைக்கு அப்பால் புரட்டுச் சாட்சியம் என்பது அவலமானது.

ஷாதிர் : இதழ்கள் குறித்த நமது அனுபவங்கள் கடினமானதுதான். படைப்பாளர்களை அனுகுவதில் உள்ள பிரச்சினையின் வடிவமே இது. சிலர் மறுக்கின்றனர், சிலர் எழுதுவதை பிரசுரிப்பதில் எந்த தாக்கமும் ஏற்படுவதில்லை. தாக்கங்களை ஏற்படுத்தியதாகச் சொல்பவர்கள் உலகப் புகழ் இதழ்களின் பக்கமே தங்களது கவனங்களை செலுத்துகின்றனர். மின்னிதழ் என்பதால் நாம் தப்பித்துக் கொள்கிறோம். அச்சு வடிவில் எம்மால் நகர முடிவதற்கான சூழல் அரிதாகவே இருந்திருக்கும். தாக்கங்கள் பற்றி பேச தொடங்கியிருக்கிறோம். தாக்கங்கள் குறித்த எமது விம்பம் எம்மாதிரியானது என்பதுதான் புரியாமலிருக்கிறது. எதனை வைத்து ஒரு படைப்பாளனை மதிப்பிட முடிகிறது என்பதில் தாக்கங்கள் தங்களது முகங்களை வெளிப்படுத்துகின்றன என நினைக்கிறேன். ஒரு வகையில் இதுவும் ஒரு வெட்டு வடிவிலான சினிமா போன்றதுதான். கிராக்கி கூடிய பண்டப் பொருளை காட்டி மற்ற எல்லாவற்றையும் விற்கும் மோசமான நெருக்கடிக்குட்பட்ட வியாபாரியின் நிலை போன்றது.

சாஜித் : தாக்கங்கள் குறித்து பேசுகையில் எமக்கான எல்லா விம்பங்களையும் உதறித் தள்ளுவதே பொருத்தமாயிருக்கிறது. இங்கு யார் இயங்க வேண்டும் என்பதில் முட்டிக் கொள்ள ஏதுமில்லை. முதலாவது பிரவசமாக இருப்பதால் பலர் புரிந்து கொள்வதற்கான நுழைவு இல்லாமலிருக்கலாம். தொடர்ச்சியான எமது செயற்பாடுகள் மாமூலான தாக்கங்களை உதறித் தள்ளும். இங்கு எழுதுவதற்கு எல்லா வகையினரையும் இணைத்துக் கொள்ள முடியாது என்பதை நாம் வெளிப்படையாக பேசுகிறோம். ஆயினும் இதற்குள் அடங்கும் எல்லோரும் என்பது மிக நேர்த்தியான கருத்துருவாக்கங்களை கொண்ட எழுத்தாளர்களை விட்டு வைக்காது. எமக்கு வாசிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். இங்கு பிரதிகள் மீதான வாசிப்பு மனநிலை மிகக் குருகியது. வாசிக்காமல் நகர்ந்து விடக் கூடியவனின் எழுத்துக்களை கண்டே நாம் விலக வேண்டியிருக்கிறது. முகநூல் இன்று திறந்திருக்கும் படைப்புக்களின் ஓட்டையிலிருந்து பெருச்சாலிகள் வெளியிரங்குவதை நீங்கள் பார்க்காமலிருக்க வாய்ப்பில்லை.

Please follow and like us:

5 thoughts on “வனக்காரர்கள் பேசுகிறார்கள்-இதழ் 01

  1. வனம் வளரும், இன்னும் பெருவனமாகும்.
    அடுத்த வன அம்பாரிக்காக காத்திருக்கும் இவண் சஞ்சாரி.

    நல்லன செழித்திட பிரார்த்தனைகள்.

  2. இது ஒரு சிறு வனம் அல்ல பேரலை பெருங்கடல் போல் வளரும் என நம்புகிறோம்

Leave a Reply

Your email address will not be published.