தன் யுகாந்திர மயங்குதல்களின் கதியில் அந்த ஜீவப் பரமாணு, இக்கணம் ஒரு மனித ஆகிருதியின் வெகு ஆழங்களில் கரிமத் துகளாகப் பிடிபட்டுள்ளது. வ் உயிர் திண்மத்தின் அனந்தமா அணுக்கள் ஒன்றினுள்  பன்னிரு  நீர்மூலங்களும் அறுஜீவ மூலங்களும் கோர்த்தபடி தன் அறுமணி ரூபத்தில்  ஒரு சக்கரைச் சாரமாக அது நகர்ந்து கொண்டிருக்கிறது. குருதியிழைகளின் வழித்தடங்களில் ஜீவக் காற்று ஓடி மோத, நீரும் சக்தியும் பிரிந்து இரு ஜீவமூலகம் கோர்த்து சுவாசத் தடங்களில் அக்கரிம அணு வளிமண்டலம் விடுபட்டுச் செல்லக் காத்திருக்கிறது. இக்கணம் அது சேதனத்தின் அசேதனம். உயிருப்பருமம் ரூபிக்கும் அல்லுயிர் மூலகம். ஓர் அறுமச்சக்கரம். உள்வயம்ரண்டும் வெளிவயம் நான்குமென மின்மேகச் சுழல்களின் சாத்தியப் பொதிவுகளின் சக்திப் பரப்பில், தொலைதூர மையத்துள் நொதுமங்கள் ஆறும் நேர்ங்கள்  ஆறும் ஈர்மக் குவிப்பில் கருக்கொண்ட ணுச்சக்கரம். அப்பரமாணு ஜனன மரணமற்ற திரிபுகளின் வழி  பல ஞாபகம் கடந்து, ரூபங்கள் கடந்து, பல உலகங்கள் திரிந்து, மயங்கும் காலங்களினூடாக இக்கணம் ஜீவ தசைக் கூட்டத்துள் நுண்மப்பட்டுள்ளது.   ங்கிருந்து தொடங்கியது காலத்தில் ஆதிமை திரும்பும் அதன் பின்முகப் பயணம்.

அது சக்கரைச் சாரத்திலிருந்து பிரிந்து பல வேதிமச் சுழல்களினூடாக , ஓர் உணவுப் பாதையில் இறங்கி நொதிமங்களில் நசியும் ஒரு தாவரப்பட்சினியின் திசுக்கூழ்மத்துள் திரும்புகிறது. அங்கிருந்து உயிர்ப்பருமமாய் புல் புசிக்கும் தாவரப் பட்சினியின்  அணுக்கூட்டம் ஒன்றில் மறைகிறது. பின் அதன் குடற்பாதையுள் திரும்பி அங்கு மசியும் புல்லின் சாரத்துள் புதைகிறது. பின் காற்று புரட்டும் புற்கூட்டத்தின் சிறு நா ஒன்றின் அணுவரிசையுள் சென்று பொதிகிறது. அங்கு ஒளித் துகள்களின் கோர்ப்பினூடாக கரிமமும் நீரும் பின்னிய தாவரச் சர்க்கரையின் வரிசையுள் அது ஒழுங்குபடுகிறது. வ்வரிசை அவிழ்ந்து,  ஒளிச்சேர்மான கதியின் பின்திரும்பலில் இரு ஜீவவளித் துகள் கோர்த்து அக்கரிம மணி காற்று மண்டலம் விடுபடுகிறது. அனந்தமானந்தம் அணுக்குவியல்களில் நெரிந்தும் விலகியும் அலைக்கழியும் அது வளிப் பெருமண்டலத்துள் திக்கற்றுப்புரள்கிறது. பரமண்டலங்களின் வெட்ட வெளிப் பொழிவுகளில் குளித்தும்  மாறும் ஒளியிலும் அந்தகாரத்திலும் கலைவுறும் அணுப்பெருவெளியில் அலைக்கழியும் அது மோதியும் விலகியும் காற்றக்கூளங்களின் கிறுக்கேறிய பின்னல்  வழிகளில்  தன் கடந்த காலங்களுக்குள் மயங்கிச் செல்கிறது.  பல சுழல்வுகளின் பாதையில் மனித உடல்களின் ஆழங்களில் வசப்படுகிறது. புவிக் கோளத்தின் உயிர் மண்டல வெளியில் அது அனந்த ரூபங்களுக்குள் புகுந்து புகுந்து மீள்கிறது. தன் பின்னல் வழிகளினூடாக  மீள மீள மிருகக் கூட்டங்கள், பட்சிகள், தாவர ராசிகளின் அணுக்களுள் ஊடுருவித் திரும்புகிறது. பல கோடி உயிராகிருதிகளுக்குள் துளிச்சக்தியை எச்சமிட்டு சுவாச கோளங்களில் சுழன்று நாசிகளில் ஏறியும், இலை மூச்சுகளின் அணுப்புழைகளில் குமிழிட்டும், இறந்து பலகோடிச் சாளரங்களில் அவிழும் சவக்கூடுகளிலிருந்து இறவா மணியாகவும் எழுந்து அது மீள மீள தன் அணுக்கோர்ப்புடன் திரும்ப வருகிறது. கடல் ஜீவிகளின் புரத வரிசைகளில் பிடிபட்டு அலையும் அது பின்னிறங்கி ஆழ்மடிக் கற்படிவுகளில் சாம்பல் மயக்கி தன் அணுக்குவியலுடன் அனாதிகாலம் பிடிபட்டுக் கிடக்கிறது. தன் மீள்விதியில் ஒரு மழைத்துளியுள் விசும்பேறும் அது அந்தரத்தில் பிரிந்து காற்றுக் கூளத்துள் விடுபட்டு சுற்றுகிறது. நுண்மிகளின் மரபுக்கோர்ப்பின் அணுச்சீரில் ஓர் எழுத்தாகிப் பொருந்துகிறது. உந்தும் பொறிகள் உமிழ்ந்தெறியும் புகைமூலக்கூறுகளில் அலைவுறும் ஓர் அணுவாகிப்  புவியின் அகாதங்களில் பச்சையப் புதைமங்கள் மசிந்து மசிந்து வடிந்த கரிமநெய்யுள்  திரும்பும் அது, யுகாந்திரங்களில் பின்னோடி, கடல்மடிகளில் ஒரு பாசியின் பேழையுள் மீள்கிறது.தனுள் சூர்யப் பின்னலின் ஒளிக்கோர்பு மீளவிழ, அது வந்தவழி விடுபட்டு ஜீவ அணுக்கோர்ப்புடன் வளிக்கோளம் திரும்பிச் சுழல்கிறது.

புவியீர்மப் பேழையுள் அனாதியாய் பிடிபட்டு சேதன அசேதனத் திரள்களின் பல்ரூப மயக்கங்களில் புகுந்து புகுந்து முடிவிலாக் கிறுக்குவழிகளில்  சுற்றித் திரியும் அது எரியும் கோளத்தின் குழவியுகச் சாம்பலுக்குத்  திரும்பி அதன் அக்னித் தணிவில் ஓர் அணுவாகிறது.    ஒரு மகா நக்‌ஷத்திர ஒளிவெடிப்பின் அணுக்கூள எச்சங்கள், ஒளிமேகச் சிதறல்களின் தூசுச் துணுக்குகள் ஈர்மத்துள் குவிந்து வார்ந்த அக்கோளுள் பிடிபட்ட அது தன் கருப் பாதைக்குத் திரும்புகிறது. அண்டமா கோளின் மூலகங்கள் அவிழ்ந்து பிரிந்த நக்‌த்திர மாவெடிப்பின் ஒளிக்கோல வெளியின் அணுக்கூளங்களில் பின்னோடி அது  காலாந்திரமாய் அலைகிறது. ண்டமா வெளியின் சிருஷ்டித் துகள்களில் கூடியும் மயங்கியும் உருவார்ந்தும் தன் ஜனனப் புள்ளிக்கு ஆவேசிக்கிறது. வெடித்து விரிந்த வாயுத்திரளும் ஒளிக்கூளமும் காலத்தின் பின்னடிப்பில் தன்  நக்‌ஷத்திர ரூபம் நோக்கி  குவிந்து சூழ்கையில், அது தன் மூலாந்திரப் புள்ளியுள் அனந்தமானந்தம் அணுப்பொழிவுடன் விழுகிறது. பின் அது ஒரு மகா நக்‌ஷத்திரத்தின் அணுக்கள் உள்நெரியும் கருக்கோள கொதிப்பில் கணத்த அணுக்களில் உருத்திரிந்து திரிந்து தன்  சிசுக்ம் நெருங்குகிறது. ஈர்ம ஒடுக்கத்தின் ஷ்ப் பெருங்கொதிப்பில் அணுக்கருக்களில் கருக்கள் நசியும் வெளியுள் வெளி ஒடுங்கும் மகா நெரிப்பின்  நட்சத்திரச்சினையுள் புணரும் ஹீலிய முக்கருக்கள் திருகித் திருகி அது ஜனித்தது. காலத்தின் திரும்புமுகத்தில் தன் ஜனனப் புள்ளியுள் வந்தடைந்த அக்கரிமம், பின்னோடும் கருப்பிணைவில் ஹீலிய மூவியங்களாகச் சிதறித் தன்  ஒருமையவிழ மும்மையுற்றது. பின்மீளவும் அறுமையுற்று ஹைட்ரஜன் அணுக்களாகப் பிரிந்து ற்றை மின்மம் சூழ் ஒற்றை நேர்மக்கரு என்னும் தன் மூலாந்திரத்துள் உருவார்ந்தது. கருப்பிணைவு கதியின் பெருங்கொதிப்பில் ஒளிப்பிரளயமாகிப் பிரகாசித்த அண்டமா மீனின் அணுப்பெருங் கூட்டத்தின் சக்திச் சூழுள் அது உக்கிரப்பட்டது.

பின் அந்த நட்சத்திரம் தன் மூல வடிவான அண்ட தூசுத்திரளாக ஒளிக்கூளமாக விரிந்து பரந்தபோது அது வெளியெங்கும் தன் ஹைட்ரஜன் மூலாந்திரத்தில் அலைந்து திரிந்தது. அது அண்டமா அணுக்கள் குவிந்து ரூபிக்கும் பல நக்‌ஷத்திர ஆகிருதிகளினூடாக , சிருஷ்டி  மூலாந்திரப் பொதிகளினூடாக, அணுத்திரள்களினூடாக, சக்திப் பிரகிருதிகளினூடக இன்னும் பல அந்தகாரக் கடல்களினூடாக பின்திரும்பும் காலத்துள் ஊடுருவிச் சென்றது. ஆதிமை அணுகும் ஓர் யுகத்தில்  தன் அணுரூபம் உரிந்து கரு தனித்துவிட அக்கருச்சூழினுள் அனாதியில் பிடிபட்ட மின்மம் தெறித்து அகன்றது. கதிர்க்கூச்சல்கள் ஆர்க்கும் சக்திப் பெருங்கணப்பில் சிருஷ்டித் துகளெல்லாம் மூலாந்திரங்களில் பின்னமுற்றுத் தெறிக்கும் வெளியில் அது கிறுகிறுக்கிறது.   சிருஷ்டிப் புழையுள் காலமாவெளி மீள்திரும்பும் பாதையின் சுழிப்பில் அது ண்டமா டக்கூட்டத்துடன் வீழ்கிறது. கால நெரிவின், வெளியுள் வெளி மடியும் ஆதிமை கணத்தின் மகா அணுக்கத்தில் த் தனிக்கருவின் உள்முகமாய் சுழலடித்த முக்கூறான மீத்துகள்கள் தனித்துத் தெறித்தன. உள்ளே வெறும் அதிர்வு வளையங்களாக அது ஆழத்துள் டமாகித் துடித்தது. யாதுமிருந்த யாதுமிலாப்புள்ளியுள் சூன்யித்த அது அதற்கும் அப்பாலான சொடுக்குதலில் சென்று நித்தியப்பட்டது. அநாதியுள் ஒருமை மூடுண்டது. அனந்தமா  நித்தியங்களின் மணல்வெளியில் ஒரு பரல் அவிந்தது . அப்பால் இன்மையின் அந்தகாரம். ப்பால் ஓர் ஒருமையுள்  கருத்துடிப்பு.

***

பிரவீண் பஃறுளி
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *