தமிழில் : பெரு விஷ்ணுகுமார்

 

 

ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், ஐரிஸின் மாகாணமான உல்ஸ்டரில்உள்ள வடக்கு மாவட்டமான கவுண்டி மோனகனின் கிராமப்புறப்பகுதியைச் சேர்ந்தவராவார். 12 வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறியகாவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையைஐரிஷ் இலக்கியமறுமலர்ச்சியின் இறுதி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். ஐரிஷ்-ன்மூத்த கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, ஐரிஸ் கவிதைப்போக்கினை மடைமாற்றியவர்களில் பேட்ரிக் கவனாஹ்குறிப்பிடத்தகுந்தவர். மரபை மீறுதல், எளிமையான வாழ்வினைகவிதைப்படுத்துதல் போன்றவை இவரது கவிதைகளுக்கேயானசிறப்பம்சங்களாகும். மேற்க்கண்ட இந்த கவிதைகள் யாவும் பெங்குவின்வெளியீடான “collected Poems of Patrick Kavanagh” edited by Antoinette Quinn என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்.  

***

1. சமூக மனசாட்சியற்ற

 

அவர் ஒரு சமூக மனசாட்சியற்ற அகங்காரவாதி,

யாரும் அவருக்கு ஆதரவு தராதபோதும் நான் அவரை விரும்பினேன்,

அவர்தான் எனக்கு நேர்மையானவர் என்று தோன்றியது,

அவர் தான் யாராக இருக்க விரும்பாவிட்டாலும்,

அவரே எனது மீட்பர்

 

தனது எளிய ஆத்மாவுக்கு அஞ்சிக்கிடக்கும்

இந்த கும்பல்களுக்கு எதிராக

ஒரேவிதமான மனிதனை வைத்து இயக்கும் பொதுமக்களின்

மூர்க்கத்தனமான கண்களை கண்டுகொண்டவர் அவர்  

உண்மையில் அவர் பொதுசேவை என்று எதுவும் செய்யவில்லை,

அவர் அவராக வாழ்ந்தார்

 

அவரது உற்சாகம் தீவிரங்களுக்கு எதிரானது,

எப்போதும் ஊர்வலம் போக விரும்பும்

அந்த ஆபத்தான மனிதர்களோ

கொலைசெய்யவோ அல்லது வழிபடவோ

யாரையாவது தேடிக்கொண்டிருக்கிறார்கள்

எனவேதான் இறுதிவரை அவர் இயக்குநர் பதவிக்கோ அல்லது

மாநில ஓய்வூதியத்திற்கோ ஒருபோதும் தகுதி பெறவில்லை.

***

2. ஏப்ரல் மாதத்தில் ஈரமான சாயுங்காலம்

 

ஈரமான மரங்களில் பறவைகள் பாடின

வை சொல்வதைக் கேட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஆகின்றன

மேலும் நான் இறந்துவிட்டேன், இப்போது வேறு யாரோ ஒருவர்

வைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனாலும் அவரின் மனச்சோர்வையும் சேர்த்து பதிவுசெய்ததில்

நான் மகிழ்ச்சிடைகிறேன்

 

***

3. றியாமை

 

நான் மட்டுமே நேசித்த ஒன்றை

பெரிய கோட்டையின்கீழ் தொங்கிக்கொண்டிருக்கும்

முக்கோண மலையைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள்

அந்த சிறிய பண்ணையில்

வெள்ளை முள்வேலிகளால் கட்டுண்டவன் என்றும்

எனக்கு உலகமே தெரியாதென்றும் கூறினர்

ஆனால் நான் அறிவேன்

வாழ்க்கையில் அன்பின் வாசலானது எல்லா இடங்களிலும்

ஒரேமாதிரிதான் ன்று.

 

நான் நேசித்ததைப் பற்றி வெட்கப்படுகிறேன்

என்னிடமிருந்து அவளை தூக்கியெறிந்த நான்

அவளை ஒரு படுகுழியாக பாவித்தேன்,

அப்போதுகூட அவள் ஊதா நிறத்தில் என்னைக் கண்டு சிரித்தாள்

 

இப்போது நான் மீண்டும் அவளது முட்கள்கொண்ட கரங்களில்தான்

கிடக்கிறேன்

இந்தியக் கோடைக்காலைப் பொழுதில்

பனியானது

வெளுத் உருளைக்கிழங்குத் தண்டுகளில்மீது படுகிறது.

என்ன வயதாகிறது எனக்கு ?

 

நான் அறியேன்

எனக்கு என்ன வயதென்று,

ஆனால் மரணமடையும் வயதில்லை எனக்கு;

பெண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது

நகரங்கள் பற்றியும்கூட,

மேலும் இந்த வெள்ளை முள்வேலிகளுக்கு வெளியே

நான் செல்லாத வரை

என்னால் இறக்கவும் முடியாது

***

4. ஒரு ஆலைக்கான இரங்கற்பா

 

அவர்கள் தண்ணீர் சக்கரத்தை எடுத்துச் சென்றனர்,

ந்த சோள ஆலையின் அனைத்து இரும்புக் குப்பைகளையும்;

உள்ளே சென்றுபார்க்கும் பார்வையாளர்கள் யாருமின்றி

தண்ணீர் இப்போது அருவியாக ஓடுகிறது

ஒரு சாதாரண காட்சி அனுபவமென.

.

குளிர்ந்த ஈரமான வெளுப்பான ஒரு குளிர்கால தினம்

நடப்பவை அனைத்தும் மனதில் உயிர்ப்புடன் இருக்க:

வாசலில் அலட்சியமாகக் கிடக்கும் ஒரு மனிதனை நோக்கி

இருண்ட நீர் பாய்ந்த புல்வெளிகளோ

ஒரு நித்தியத்தின் கதையைப் பேசுகின்றன

.

பொதிகூட்டப்பட்ட அந்த சிதிலங்கள் யாவும்

பழுதடைந்த, அந்த பழைய ஆலையின் நிலத்தை

எப்போதோ கைவிட்டுவிட்டன.

தனுள்ளே கொம்புகளற்ற விலங்குகளும், அதன் பின்னால்

ஒளிந்துகொண்டிருக்கும் உள்ளூரில் நிறமூட்டப்பட்ட பேய்களும்கூட,

அந்த வெறுமையான சுவர்களில் இருந்து

இப்போது அகன்றுவிட்ட.

மறுகால் மட்டும் இன்னமும் அதன் நீர்வீழ்ச்சிகளை வளைத்து

அந்த வடிதேக்கத்தில் வீழ்த்துகிறது

இந்த பழைய காட்டுத்தனமான வீரமற்ற நிலையை

இவ்வாறு குறிப்பிட்டதுடன்,

நாங்களும் விடைபெறுகிறோம்

தற்காலிக விதிகளின் மேலான விஷயங்களுக்காக.

***

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *