அவள் வாயிற்படியிலேயே நின்று வரவேற்புக் கொடுத்தாள். “இந்நேரம் வரிக்கும் சுத்திட்டுஇப்பத் தான் வர்ரீங்களா!”

அவன் உள்ளே நுழைந்து சட்டையைக் கழற்றினான். ”வரும் போதே ஆரம்பிச்சிட்டியாஅவள் சட்டையை வாங்கி ஆணியில் மாட்டினாள்.

பின்ன என்னா ஒண்டிக்காரி புள்ளைய வச்சிக்னு அவஸ்த

பட்டுக்னு கெடப்பாளேன்னு கொஞ்சம்கூட இல்லாம

சுத்திப்பட்டு வர்ரீங்களேஒரு நாளப் போல; தெனம் ஏழு

மணிக்கி.”

அவன் பேண்டைக் கழற்றி, லுங்கியை மாற்றினான். “ஆபீஸ் உட்டதும் நேரா ஊட்ல வந்துபூந்துக்கோடா ன்றியா.”

அவள் கை கால் அலம்ப தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தாள். “இல்ல இல்ல. நீங்கசுத்திப்டே வாங்க. ஒரு நாளைக்கி போட்டு வச்சாதான் தெரியும் சோறு ஆக்காத. நீங்கஎன்னாடாண்ணா எப்டியாவுது ஜாலியா பொழுத ஒட்டிட்டி வரணம்னு இருங்க. அது என்னாண்ணா எந்நேரமும் தூக்கி வச்சிக்னே இருடீன்னுது இடுப்ப உட்டு எறங்காம, நான்அதப்பாப்பனா, இல்ல சோத்த பாப்பனா‘.

அவன் செம்பை வாங்கிக் கொண்டு வாசல் பக்கம் போனான். “அடாடடா! என்னுமோரொம்ப காட்டிக் றியே ஒரேடியா, ஊர்ல இல்லாத விநோதம்போல. அங்கங்ககொழந்தைங்கள வச்சிக்னு ஆக்கல.’

அவள் கொடியை ஆராய்ந்தாள். “ஆமாமா, மத்த புள்ளங்களாட்டமா இருக்குது இது. கீழஏறங்குவனாண் ணுது. எறக்கி உட்டா வீல்வீல்னு கத்துது. இன்னிக்கு சோறு வடிக்க உடல. ஒரே சத்தம். ஆத்தரம் வந்துது. நாலு வச்சேன் நாலு. இந்நேரம் வரிக்கும் கத்திப்ட்டுஇப்பத்தான் தூங்குது.”

அவன் முகத்தை அலம்பிக் கொண்டு காலி செம்புடன் திரும்பினான். “கொழந்தய பதமாவச்சிக்னு இருக்கத் தெரியல. நாளைக் போட்டு அடி. என் எதிர்க்க பாக்கணம் ஒரு அதுஎன்னா பழக்கம் அது. போட்டு அடிக்கறது.”

அவள் டவல் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள், ‘’அக்கரையாயிருந்தா வந்து தூக்கிவச்சிக்னு இருக்கணம் அதுக்கு, எண்ணைக்காவது ஒரு நாளைக்காவது பொழு தோடேவந்து புள்ளைய தூக்கி வச்சிக்னு இருந்திருப்பீங் களா, புள்ளையாச்சேபொண்டாட்டியாச்சேன்னு ஒரு இது இருந்தாத்தான“.

அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். “ சும்மா கெட. நாங்க தூக்கி வச்சிக்னேஇருந்ததில்ல கொழந்தையா. என்னா வேற வேல வெட்டியில்லாமலா கெடக்கறம். எந்தநேரமும் தூக்கி வச்சிக்னு, ஊட்லேயே உக்காந்துக்னு இருக்க.”

அவள் டவலை வாங்கி கொடியில் போட்டாள். “என்னாதான் அப்டி ஆபீஸோ இரவத்திநாலுமணி நேரமும். அங்கங்க உங்களாட்டம் உத்தியோகம் பாக்கற வங்க பொழுதோடஊட்டுக்கு வரல்ல.”

அவன் லுங்கியை சரியாய் இழுத்துக் கட்டிக் கொண் டான். “எவன் அவன் ஆபீஸ் உட்டதும்நேரா ஊட்ல வந்து பூந்துகிறவன்?”

அவள் மணையை எடுத்துப் போட்டாள். “இல்ல இல்ல உங்களாட்டம் சுத்திப்புட்டுதான்வர்ராங்க. ஊடாச்சே வாசலாச்சேன்னு இல்லாம“.

அவன் மணையை சரிப்படுத்திக் கொண்டு உட்கார்ந் தான். ‘சே ஒங்கிட்ட யார் பேசுவா. ஒருவிஷயம்னா நீ உடமாட்டியே அதோட

அவள் தட்டு எடுத்து வைத்து சோறு தோண்டினாள். “பாவம் நல்லா அடிச்சிட்டேன். செவந்துகூடப்போச்சு முதுவு. பின்னா என்னா பின்ன. சும்மா கத்தனா. சோறு வேற வெந்து போச்சி. கொஞ்சம் உட்டா அழிஞ்சிடும் போல இருக்குது. கீழ உட்டா இது கத்துது. என்னாகத்துன்றிங்கப்பா?’

அவன் தட்டை இழுத்து வாகாய் வைத்துக்கொண் டான். “அதான் வடிச்சி வச்சிட்டியே. அப்பறம் சும்மா ஏன் அதையே பேசிக்ணு கெடப்ப தொண தொணன்னு“.

அவள் சோற்றை அள்ளி தட்டில் வைத்தாள். “நீங்க கொஞ்சம் பொழுதோடே வந்து கூடமாட ஒத்தாசையா கொழந்தைய தூக்கி வச்சிக்னு இருந்தீங்கன்னா எவ்வளோஇதுவாயிருக்கும். நானும் தெனந்தான் சொல்றேன். நீங்க என்னாடாண்ணா நீ யென்னடிசொல்றது, நான் என்னடி கேக்கறதுன்னு கெடந்துட்டு வர்ரீங்களே ஒரு நாளப் போல‘.

அவன் சோற்றில் நறநறத்த கல்லைத் தேய்த்துப் பொறுக்கினான்வாய்தான் இருக்குதேதவர ஒனக்கு காரியத்துல ஒண்ணுக் கெடையாது. எப்ப உக்காரேன் போடும் போதே கல்லு. இதக் கொஞ்சம் ஒழுங்கா கல்லு .

இல்லாம அரிச்சி போட்டுட்டின்னா அப்பறம் ஒன்ன புடிக்கவே முடியாது.

அவள் எவர்சில்வர் குண்டானை வைத்து விட்டு அன்ன வெட்டியை வழித்தாள். “தோ நீங்கபாத்து வச்சிருக் கிறீங்களா ஆளு. அதுங்க கிட்டதான் கொழந்தைய குடுத்துட்டு ஒக்காந்துஅரிக்கணம் ஆர அமர”.

அவன் கிளறிக் கிளறித் தேய்த்து சோற்றை உற்றுப்

பார்த்தான். “ஆமா! எதுக்கெடுத்தாலும் கொழந்தைய

எடுத்துக்கோ. அது ஒரு சாக்கு உனக்கு”.

அவளும் அவனோடு சேர்ந்து சோற்றைக் கிளறிக் கூடப் பொறுக்கினாள். “பின்னா என்னாநானு வேணும்னா ஆக்கிப்போடறேன். உங்களுக்கு கல்லோட போடணம்னு

அவன் அவளுக்கு இடம் விட்டு நிமிர்ந்தான். “இல்ல

இல்ல ரொம்ப பொறுப் போடதான் ஆக்கிடப் போடற நீ.

வெளில சொல்லிக்காத.”

அவள் சந்தேகமில்லாமல் கிளறிப் பார்த்து விட்டு

குழம்புக் கிண்ணத்தை எடுத்தாள். “இந்த நெட்டு எடுக்காதீங்க, அங்க எங்க எங்கனாஆபீஸ்ல சண்ட போட்டுக்னுவந்து காட்றீங்களா.”

சோத்து மேல் மொறப்பக்

அவன் குழம்பைப் பார்த்து முகத்தைச்சுளித்தான். “மத்யானமும் வெண்டக்கா இப்பவும்அதே வெண்டக் காயா ஒரே கொழ கொழன்னு சே. இத உட்டா ஒனக்கு வேற எதுவுமேபதார்த்தம் கிடைக்காது இல்ல,”

அவள் குழம்பு ஊற்றுவதைப் பாதியில் நிறுத்தினாள். “பதார்த்தம் ஒண்ணுமில்லன்னுஉங்ககிட்ட சொன்னதுக்கு தான் காதுல வாங்கிக்காத பூட்டீங்க. அப்பறம் என்னா பண்றது. தெருவுல இதாம் வித்தும் போச்சி.’

படிப்பகம்

www.padippakam.com

தற்செயல்

121

அவன் சோற்றைப் பிசைந்தான்ஏதாவது ஒரு சாக்கு சொல்லு. அப்பளம்னா நாலு வாங்கிவறுத்து வக்யறது. இதெல்லாம் கூடமா சொல்லணம் ஒனக்கு.

அவள் கையிலிருந்த கிண்ணத்தைக் கீழே வைத்தாள். ”உங்களுக்கென்னா வாய்க்கிசுளுவா சொல்லிட்டுப் போயிடறதுக்கு. யார உட்டு வாங்கறதாம்“.

அவன் அவளைப் பார்த்தான்எத்தினி பசங்க போவுது தெருவுல”.

அவள் அவனைப் பார்த்தாள். “ஆமா எல்லாம் நம்ப வந்துள்ளைங்க தான சொன்னதும்அப்படியே போய் ஊட்டுப் எல்லா புள்ளைங்களையும் ஊருல நம்ப ஊட்டுக்கு வேலசெய்ய தான் பெத்து போட்டு வச்சிருக் காங்களா எதுக்கெடுத்தாலும் டக்னு அனுப்ப

அவன் அவளை முறைத்தான்.

பாத்து

ஆமாமா உங் கொணத்துக்கு எதுவரும் கிட்ட, பாத்தாலே அது அது

பயப்புடுது“.

அவள் எழுந்து அறைக்குப் போனாள். “ இந்த மாதிரில்லாம் பேசாதீங்க. என்னாவாம்எனக்கு. எது ஒண்ணும் மனஸுல வக்யாத கேட்டா ஆவாதவளா“.

அவன் அறையைப் பார்த்தான்ரொம்ப ஆனவதான் போ. தோ தெரியுதே உன் லட்சணம். கொஞ்சம் நல்லெண்ணையாவது எடுத்தும் வா. அகட்டறா மாதிரி இருக்குது

அவள் பாட்டிலோடு வெளியே வந்தாள். “எங்கணா ஓட்டல்ல சாப்ட்டுட்டு வந்திருப்பீங்கஅதான் அகட்டுது. அவன் எண்ணெயை விட்டு பிசைந்தான், “ஆமா

எங்களுக்கு இதான் வேல; ஓட்டல்ல பூந்து தின்றது.

-8

பூந்து தின்றது.

சம்பாதன அதிகம் பாரு போயும் போயும் ஒனக்கு புத்தி போவுதே. ஒண்டியா ஒட்டல்ல பூந்துதின்றதாம்அவள் மீண்டும் அறைக்குப் போனாள்ரொம்ப

அக்கறைதான். போறதேயில்ல நீங்க ஓட்டலுக்குஅவன் அவளை பின்புறம் பார்த்தான். “உங்கிட்ட யார் பேசுவா; ரவன்னா மண்டையில இருந்தா பரவாயில்ல”.

அவள் மோர்க் கப்புடன்

வெளியே வந்தாள்.

மண்டையில இருக்கறவளா பாத்து கட்டிக்கறத்தான அதுக்கு. எங்களுக்குதான்ஒண்ணுமில்லியேஅவன் சோற்றை அளைந்தான். “நீ கொஞ்சம் சும்மாரு தாயே நீ. எதுக்கெடுத்தாலும் எதாவ

தொண்ணு சொல்லிக்னு.”

அவள் ஷெல்பிலிருந்த உப்பு பாட்டிலுக்காகத் தேடி னாள். “நீங்க எதுவும் ஏடா எதுனாகூடமா கேட்டுட்றது, திருப்பிக் கேட்டா பேசாம கெட்றீன்றதா. மத்தியானம அப்டிதான்பொடவகாரன் வந்தான். எங்கிட்ட பொடவகாசி குடுத்துட்டன்னுதான

சொன்னீங்க

அவன் சோற்றைப் பார்த்தான். “கொஞ்சம் கொழம்பு ஊத்து. ஒரே எண்ணெயா இருக்குது.”

அவள் கரண்டியில் கொஞ்சம் திட்டமாக அள்ளி ஊற் றினாள். ” அவனுக்கு 68 காசுகுடுத்துட்டன்னுதான சொன்னிங்க எங்கிட்ட. அப்புறம் ஏன் அவன் ஊட்டுக்கு வர்ரான்

அவன் குழம்போடு வந்த காய்களை ஓரமாய் ஒதுக் கினான். ”ஊட்டுக்கு வர்ரவனெல்லாம்கடன் காசி கேக்க தான் வர்ரான்னு அர்த்தமா

அவள் மீண்டும் உப்பு தேடினாள். “எனக்கு தெரி யாதா. பொடவகாரனுக்கு தர்ரேன்னுசொல்லி எடுத்து வேட்ட உட்டுப்டு அவனுக்கு குடுக்காத உட்டுட்டு இருப் பீங்க. அதான்வர்ரான். என்னதான் அப்பிடி செலவோ எனக்குத் தெரியாம, உங்களாட்டம் ஆம்பளைங்கஇப்படி தான் செலவு பண்றாங்களா

அவன் சோற்றை விழுங்கினான். “சும்மா கெட ஒனக்கு ஒண்ணும் தெரியாது

அவள் உப்பு பாட்டிலை எடுத்து பக்கத்தில் வைத் தாள். “ஆமாமா; ஆன்னா ஊன்னா இதுஒண்ணு கத்துக்கோங்க. எதுக்கெடுத்தாலும் உனக்கொண்ணும் ாங்க. தெரியாது. உனக்கொண்ணும் தெரியாதுன்னு. எங் குளுக்கு எதுனா தெரியும்ன்றீங்களா என்னா. திருட்டெல்லாம்உங்க

அவன் மோர் சாதம் தள்ளிக் கொண்டான்நீ இந்த மாதிரி தான் ஏதுனா பேசிக்னு இருப்பஅர்த்த மில்லாம

2 அவள் கப்பை எடுத்து வைத்தாள். ‘யாரு? நாங்க அர்த்தமில்லாம பேசறமா…? ஊறுகாகூடம் போச்சி. எப்டின்னா சாப்டுங்க ஒரு வேளை.” ஆய்ப்

அவன் மோரை ஊற்றிப் பிசைந்தான். “அதெல் லாம் பார்த்து கவனிச்சு வாங்கி போடாத. அவன் என்னா பண்றானோ……ஏது பண்றானோண்ணு ஆள மேய்க்கற திலியே இரு நீ.”

அவள் கால்களைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த் தாள். “இப்ப எங்க விக்யுதாம்எலுமிச்சம்பழம்

அவன் அவளைப் பார்த்தான். ”ஊடு தேடி எடுத்

தாந்து குடுப்பான் இரு

அவள் தண்ணீர் மொண்டு வைத்தாள். “இத சொல்ல வந்துட்டீங்களே பெருசா. கொழைந்தைக்கி ஒரு ஃபீடிங் பாட்டல் ரப்பர் வாங்கியாங்கண்ணு சொல்லி எவ்வளோநாளாவுது. பாலாடையில போட்டா குடிக்க மாட்டன் றான். மூக்கு சொம்புலியும் குடிக்கத்தெரியல. ரப்பர் மாட்டி உட்டா அவன் பாட்னு குடிப்பானில்லஅவன் தட்டை வழித்தான்நாளைக்கி போவும்

போது ஞாகப்படுத்து சொல்றேன்அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அப்டியேவாங்கியாந்துட்றாப் போலதான்மா

அவன் கையைக் கழுவினான். “எதுக்கும் வழி உட

மாட்டியே நீ

அவள் தண்ணீர் மொண்டாள்ஆமா அந்த பொடவகாரனுக்கு குடுத்துட்டீங்களாஇல்லியா, உண்மைய சொல்லுங்கசால்லுங்க

அவன் தண்ணீர் குடித்தான். “இப்ப அதப் பத்தி

என்னா ஒனக்கு

அவள் காலியான டம்ளரை வாங்கி தவலையில் ஊடு தேடி வர்றது மொண்டாள், “அவன்தேடி இருக்கா.” வர்றது நல்லா

அவள் வாங்கிக் காலியாக்கினான். அடுத்த மாசம் குடுத்துக்கலாம். உடு

எல்லாம்

அவள் குனிந்து அவன் சாப்பிட்ட தட்டைக் கழுவி னாள். “அதான கேட்டேன். நீங்களாவதுசொன்ன படி நடந்துக்கறதாவது.” R

அவன் கைகளைத் துடைத்துக் கொண்டு எழுந்தான். ‘போதும் அதோட நிறுத்து.”

அவள் தட்டை அலசி ஊற்றினாள். “ஒண்ணொன் னும் நீங்க இது மாதிரி பண்ணிட்டுஎங்கிட்ட வந்து பொய் சொல்றது

அப்புறம் எதுனா கேட்டா தொண தொணன்னு பேசாதறீன்றது. திட்றது

அவன் கொடியில் போட்டிருந்த பேன்டை துழாவி சிகரெட் பாக்கட்டை எடுத்தான். ‘”சும்மாகத்தாத. அடுத்த மாசம் குடுத்துக்கலாம்னா அதோட உடேன், என்னுமோ குடியேமுழுவிட்டாப் போல பேகிக்னுபே

அவள் தட்டு எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள், “எப்பிடியாவது போங்க. நீங்களாச்சி உங்க சம்பாதனையாச்சி. எங்க பூட்டிங்க. சோதனையா நானும் பாக்கறேன். நான் சாப்ட உக்காரும் போதுதான் இதுக்கு முழிப்பு வந்துடும். அதுங்காட்டியும் தெருவுக்குபூட்டீங்களா

அவன் கொளுத்திய சிகரெட்டுடன் திரும்பி வந்தான். “ ஏன் இப்டி கத்தற. இங்கதானஇருக்கறேன்.’ அவள் தூளியைக் காட்டினாள். “கொழந்தையப்

பாருங்க. முழுச் சிக்னான் போலருக்குது. ஒதச்சிக்றான்.’ வாயில் வைத்துக் கொண்டு அவன்சிகரட்டை வாயில் தூளியை நெருங்கினான். “ஒரு நிமிஷம் சும்மா உடாத9 சாப்டதும்எனக்கு இது ஒரு வேல. ஒரு சிகரட் கூட நிம்மதியா புடிக்க உடாம

அவள் கிண்ணத்தை வழித்தாள். “ம்..ம் வேணாம் வேணாம். தூக்காதீங்க. அப்டியே ஆட்டிஉட்டுடுங்க. தூங்கிடுவான். முழிச்சிக்னாண்ணா அவ்வளோதான். ஒரே கூத்து. நான்சாப்டுட்டு வந்து பாத்துக்கறேன்.’

அவன் புகையை இழுத்து விட்டான். “ஆமா அந்த புதுப்பாயில் எங்க அவள் ஒண்ணகாணோம்“e y கையைக் கழுவிக் கொண்டு எழுந்தாள்.

அதுவாபக்கத்து ஊட்ல கேட்டாங்கன்னு ஒண்ணு வெலைக்கி குடுத்துட்டேன்.”

அவன் நேராய் நின்றான், ”வெலைக்கி குடுத்தியா

அவள் சாமான்களை ஏறக் கட்டினாள். “ஏன்

என்னா பாய் நல்லா டிசைனா இருக்குது. யார்னா வந்தா போனா போட்டு ஒக்காரச்சொல்லலாம். எல்லா பாயும் பழசாய்ப் போச்சி. ஒண்ணு எனக்கு குடுத்துடேன்வெலைக்கின்னாங்க குடுத்துட்டேன்

அவன்

பூரா பணமும் கையிலியே குடுத்துட்டாங்க

ஏணையை ஆட்டி விட்டு நாற்காலியில் உட்கார்ந்தான். “எதுனா இருக்குதா ஒனக்கு. என்னஎதுனா கேட்டியா நீ அவள் தண்ணீர்த் தவலையை மூடினாள். “ஏன்?

அவன் சிகரெட்டைத் தட்டி புகையை உறிஞ்சினான். “எவ்வளோவுக்கு குடுத்த. ரெண்டர்ரரூபாய்க்கா

அவள் துடைப்பம் எடுத்து எல்லாம் தள்ளினாள்.

ஆமா ரெண்டார்ர ரூபாதான சொன்னீங்க

அவன் அவளுக்கு பெருக்க இடம் விட்டு நாற்காலியை விட்டு எழுந்தான், ‘ஆமாசொன்னேன் அது என்னா வெல தெரியுமா

ப்

அவள் பெருக்கி முடித்து துடைப்பத்தை மூலையில் வைத்தாள். என்னா வெலஅவள்சிகரெட்டை அணைத்து ஜன்னலில் போட்

டான். மூணே முக்கால் . நூல்

ரூபா. நூல் பாயி. இங்க

எங்கியும் கெடைக்காது அந்த மாதிரி. நல்லாருக்குது.

கெடக்கட்டுமேன்னு ரெண்டா வாங்கிப் போட்டேன்

அவள் பழைய ரெட்டாள்பாயை விரித்தாள். “பின்ன எங்கிட்ட ஏன் ரெண்டார் ரூபாய்ன்னுசொன்னீங்க. காலம் பூறா இதே மாதிரி பொய் சொல்லிக்னே இருங்க நீங்க“.

அவன் புழுங்கிற உடம்பை துண்டால் விசிறிக் கொண் டான். “நீ போறதெல்லாம் இந்தமாதிரி தெண்டத்துக் குத்தான் போவ

அவள் நீட்டு தலையணையை எடுத்து பாயில் போட்டாள். ”மூணே முக்கால் ரூபாய்னுஎனக்கென்னா தெரியும். நீங்க எதிலியும் எங்கிட்ட உண்மையை சொன்னாத்தானபுளுவு, புளுவு. உங்களுக்கு உடம்பெல் பெல்லாம் புளுவு.

அவன் படுக்கை விரிப்பை உதறி அவளிடம் கொடுத் தான். “எங்களுக்கு ஜோசியம். இந்தமாதிரி நீ எடுத்து பக்கத்து ஊட்டுக்கு வியாபாரம் பண்ணுவேன்னுஅவள் செம்பும்க்ளாஸும் எடுத்துக் கொண்டு தவலையை நெருங்கினாள். “ஏதோ ஆசப்பட்டு கேட்டாங்கபோவட்டும் போங்க. நீங்க மொதல்லியே உண்ம வெலய சொல்லிருக்கறத்தான. சொல்லியிருந்தா

ஏன் இப்படி வருது

அவன் வாசலில் வாயைக் கொப்பளித்து துப்பினான். ‘நீ எது வேணும்னாலும் செய்துடலாம். அதுல ஒண்ணும் எதுவும் தப்பு கெடையாது. நான் எதுனா செய்துட்டா மட்டும்தம்புடிச்சிக்கினு கத்துவ.” அவள் கிளாஸை வாங்கி சொம்பைப் போட்டு மூடி

தலை மாட்டுப் பக்கமாய் வைத்தாள். “இப்ப என்னா

செய்யச் சொல்றீங்க. குடுத்தது குடுத்தாச்சிஅவன் தெருக்கதவை தாழ்ப்பாள் போட்டுத்திரும்பி

னான். “உன்ன என்னா செய்யச் சொல்றேன். அறிவ மெச் அறிவமெச்சிக்கவேண்டியதுதான்உன்

அவள் தோட்டக் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்தாள். ”இப்ப போயி பாயி இதுமூக்கால் ரூபாயாம் மாரி மூணே இன்னும் ஒண்ணே கால் ரூபா குடுங்கன்னுசொல்லிவாங்கியாரச் சொல்றீங்களா

ங்கன்னு சொல்லிவாங்கியாரச் சொல்றீங்களா

அவன் தலையணையில் படுத்தான். “உன்ன யாரு விக்யக் சொன்னதுன்னேன்

அவள் பாயிலே படுத்தாள். ஆமா ஒண்ணோடஆமா ஒண்ணு பழகறது ஒரு பொருளுஆசப்பட்டு கேட்டா எப்டி இல்லண்றது.”

அவன் கையை எட்டி விளக்கை அடக்கினான்.

கேட்டா அவரு வரட்டும். கேட்டு சொல்றேன்னு சொல்றது.”

அவள் முந்தானையை இழுத்து அப்பால் போட்டாள். “ஆமா போங்களேன். எவ்வளோசெலவு பண்ணிட்டுப் போறோம். இப்ப இதுலதான் குடி முழுவிடப் போவுதா. போவட்டும்போங்க

அவன் அவள் மார்பில் கையைப் போட்டான். “நீ

செஞ்சத மட்டும் தப்புன்னு ஒத்துக்க மாட்டியே. மூச்ச

புடிச்சிக்னுதான பேசுவ

அவள் ஒருக்களித்து அவன் முதுகை வளைத்தாள். “நீங்க செய்துட்ட தப்புக்கு எம்மேலபழியப் போடறீங் களா. நான் என்னா பண்ணுவேன் அதுக்கு

அவன் கொஞ்சம் சரிந்து படுத்தான். “போதும் போதும். அதோட உடு நீ. அதியே பேசிக்னுகெடப்ப. உடாதபப்இ

அவள் தாலியை ஒரு புறமாக இழுத்து ஒதுக்கினாள். “இப்ப நான் பேசறனா இல்ல நீங்கபேசறீங்களா. எதிலி யும் நீங்க எங்கிட்ட உண்மைய சொல்றது கெடையாது. கட்டனவளாச்சே பொண்டாட்டியாச்சேன்னு ஒரு இது இல்லாம வேலக்காரி மாரி இல்லவச்சிக்னு இருக்கறீங்க.”

அவன் இருளில் அவள் முகத்தை ஆராய்ந்தான். “நான் அப்பவே சொல்லியிருப்பேன் மூணேமுக்கா ரூபா தான்னு. நீ நான் எதுக்கெடுத்தாலும் கத்தறியே.”

அவள் மார்பிலிருந்த அவன் கையை விலக்கினாள். ‘ஆமா நான் கத்தறத்தான் தெரியும்உங்களுக்கு ஒண்டிக் காரி புள்ளைய வச்சிக்னு பொழுதனைக்கும் லோல் பட்டுக்னுகெடக்கறாளேன்னு கொஞ்சமாவது நெனைக்க றீங்களா நீங்க, சமைக்கறதும். பாத்தரம்தொலக்கறதும், துணி தொவைக்கறதும், மாவு ஆட்றதும் ஊடு பெருக் சுறதும்னு ஒருநாளைக்கி எவ்வளோ வேல. உங்களுக் கென்னா ஜாலியா ஆபீஸ் சுத்திட்டு ஊருகதபேசிட்டு ஊடு வந்ததும் வேளைக்கி பொண்டாட்டியும் சாப்பாடும் இருந்துட்டா போதும்னுநெனைக்கிறீங்க; இங்க நான் ஊட்ல பட்ற கஷ்டம் தெரியுதா உங்ககளுக்கு. ஒருநாளைக்கு இருந்து பாத்தீங்கன்னா தெரியும்…”

அவன் கையை எடுத்துக் காத்திருந்தான். “எல்லாம் எனக்கு தெரியாமலா இருக்குது. ஆனாஎன்னா பண்றது சொல்லு. வேற யார் இருக்கா செய்யறதுக்கு…”

அவள் தலைமுடியை எடுத்து பின்னால் விட்டுக் கொண்டாள். “ஆமா ரொம்பதெரிஞ்சவர்தான் போங்க. கொஞ்சம் கூட பச்சாதாபம் இல்லாம எப்பப் பாத்தாலும் சொடசொடன்னிக்குனுகொஞ்சம் இருங்கஇந்த கொக்கி வேற. எங்கியோ போய் மாட்டிக்னு இருக்குது வகத்தொக இல்லாம.”

***

 

நன்றி- தமிழினி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *